"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே

நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.
பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “
பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நல்ல பித்அத்துக்கள் எனப் பேச முற்படுவது ஆச்சரியமாக உள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இல்லை இல்லை நல்ல பித்அத்துக்களும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்த முற்படுகின்றனரா?
பித்அத்துக்கள் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் இருக்கும். குடி, களவு, விபச்சாரம் போன்று கெட்டதாக இருக்காது. மார்க்கம் விதித்த நல்ல அம்சங்களில் தான் பித்அத் உருவாகும். எனவே “நல்ல பித்அத்” அதாவது “நன்மையின் பெயரில் மக்களை வழிகெடுக்கக்கூடியது” என்று வேண்டுமானால் இதற்கு அர்த்தம் செய்யலாம்.
மற்றும் சில மெத்தப் படித்த மேதாவிகள் உள்ளனர். இவர்கள் “குல்லு” என்ற அரபுச் சொல்லுக்கு “எல்லாம்” என்று அர்த்தம் இருப்பது போன்றே சிலது என்றும் அர்த்தம் இருக்கிறது. எனவே எல்லா பித்அத்தும் வழிகேடு என்று இதற்கு அர்த்தம் செய்வது தவறு “குல்லு பித்அதின் ழழாலா” என்பதற்கு சில பித்அத்துக்கள் வழிகேடு என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும். என்று கூறுவர். இவர்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டு அவர்கள் கூறுவது போன்று அர்த்தம் செய்து பார்ப்போம்.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! எல்லா வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச் செல்லும்” இது ஹதீஸாகும். இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு எல்லாம் என்று பொருள் செய்யாமல் சிலது என்று பொருள் செய்ய வேண்டும் என்பது இவர்களது வாதம். அதன்படி,
சில பித்அத்துக்கள் வழிகேடுகளே! இவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வர். ஹதீஸின் அடுத்த பகுதியை இவர்கள் கூறுவது போன்று “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “சிலது” என்று அர்த்தம் செய்து மொழிபெயர்த்தால்,
“சில வழிகேடுகள் நரகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அர்த்தம் செய்ய நேரிடும்.
சில வழிகேடுகள் நரகத்திற்;;கு இட்டுச் செல்லும் என்றால் சில வழிகேடுகள் சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்று அர்த்தமாகிவிடும். அதாவது தாம் செய்யும் பித்அத்தை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இவர்களது இந்த வாதம் எடுத்துக்காட்டுகிறது.
எனவே “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “எல்லாம்” என்றுதான் அர்த்தம் செய்ய முடியும். “சிலது” என்று அர்த்தம் செய்ய முடியாது. எனவே, நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! என்று கூறியிருக்கும் போது சில பித்அத்துக்கள் வழிகேடுகள் என அர்த்தம் செய்ய எவருக்கும் எள்ளளவும் எள்ளின் முனையளவும் அருகதையோ அதிகாரமோ கிடையாது.

யார் இந்த பக்கீர்ஷாக்கள்?

பச்சக்குழந்தை பாதம் பட்டதும்
பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை
பாவிகள் நாங்கள் பதறுகிறோம்
போக்கிடு எங்கள் கண்ணீரை

நாயனே யா அல்லாஹ்…
நாயனே யா அல்லாஹ்…

என்று மக்களின் மனம் கவர பாட்டு பாடும் இவர்கள்

ஒட்டிய கன்னம்.
குழி விழுந்த கண்.
பச்சை தலைப்பாகை. காதில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் பீடி. கழுத்தில் பெரிய பாசி மாலை.
கையில தப்ஸ்
விரலுல கலர் கலராக பெரிய கல் பதிச்ச மோதிரம்.

நம் ஊரில் கூட இன்றும் இரண்டொருவர் உளாவுகிறார்கள்....

இந்த கெட்டப்பும் பாத்ரூமில் நிண்ணாக் கூட காதுல கேட்கிற மாதிரி புரியாத பாஷையில

(காபாலி இசை அதாங்க
A.R ரஹ்மான் பாடுவாறுல வந்தே..தே..தே..தே..

இல்லாட்டி யாதும் ஊரே...ரே...ரே...ரே... அப்புடியின்னு இழுப்பாறுல்ல

அதுதான் காபாலி ராகம்

ரஹ்மான் பாடினா மட்டும் புரியுமே)

சத்தமாக பாடிக்கிட்டு அம்மா முஸாபர் வந்துருக்கம்மா அப்படியின்னு கூவுகிற குரலும் உங்கள் மனக்கண் முன் வந்து மறைகிறதா?

ஆமா யார் இவர்கள் ?

எங்கிருந்து வருகிறார்கள்? இப்படி ஒரு கூட்டம் எப்படி உருவானார்கள்?

நபிகளாரை உக்காஷா பழி தீர்த்தாரா ?


எமது முஸ்லிம் சமூகத்தில் புளக்கதில் உள்ள தவறாக விளங்கப்பட்ட அல்குர் ஆன் வசனங்கள்,ஆதாரபூர்வமான செய்திகள்,மற்றும் ஆதாரபூவமான முறையில் அறிவிக்கப்படாத ஹதீஸ்கள், பதிவு செய்யப்படாத வரலாற்று சம்பவங்கள் என்பதை நாம் அறிந்து அவைகளை எமது பேச்சுகளிலும் எழுத்துகளிலும், கருத்துப் பரிமாற்றங்களிலும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவதாக உமர் (ரழி) அவர்கள் மஹர் தொகைய வரையறை செய்ய முற்பட்ட வேளையில் ஒரு பெண் எழுந்து ஆட்சேபித்த செய்தி ஆதாரபூவமானதல்ல என்பதை நேக்கினோம்.
இத்தொடரிலும் அவ்வாறே மிகவும் பிரபல்யமான மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய ஒரு சம்பவத்தை நோக்கவுள்ளோம்.
சம்பவம் இதுதான்:
"அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்தால், மக்கள் கூட்டங்கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதைப் பார்த்தால்................." எனும் சூறா அந்நஸ்ர் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலே "எனது மரணச்செய்தி அறிவிக்கப்பட்டு விட்டது" எனக் கூறினார்கள் அதற்கு ஜிப்ரீல் "மறுமை இம்மையை விட உங்களுக்கு சிறந்தது, உமது இரட்சகன் உமக்கு அருட்கொடைகளைக் கொடுப்பான் நீர் அதனைப் பொருந்திக் கொள்வீர்" என்றார்கள்.
பின்பு நபியவர்கள் பிலால் (ரழி) அவர்களை "தொழுகைக்காக தயாராகுங்கள்" என அழைப்பு விடுக்குமாறு கட்டளையிட்டார்கள். முஹாஜிர்கள் அன்ஸார்கள் மஸ்ஜிதுன் நபவியிலே ஒன்று திரண்டார்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலே ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து உள்ளங்கள் நடுங்க வைக்கும் கண்களைக் கலங்க வைக்கும் ஒரு உரையை நிகழ்த்தினார்கள்.
நான் எப்படியான நபியாக உங்கள் மத்தியில் இருந்தேன் என நபியவர்கள் கேட்ட கேட்ட போது மக்கள் சிறந்த நபியாக இருந்தீர்கள்......" என சிலாகித்துக் கூறினார்கள்.
பின்பு நபியவர்கள் "உங்களில் யாருக்காவது ஏதாவது அநியாயம் நான் செய்திருந்தால் அதற்காக நீங்கள் உலகிலேயே பழிதீர்த்துக் கொள்ளுங்கள் என தோழர்களிடம் வேண்டினார்கள்.
தோழர்களில் யாரும் எதுவும் சொல்லவில்லை,ஆனால் பின்னால் இருந்து உக்காஷா என்ற ஒரு முதியவர் மக்களைக் கடந்து நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து நின்று "நபியவர்களே!! நான் உங்களுடன் ஒரு யுத்தத்திற்கு வந்து திரும்பும் வழியில் எனது ஒட்டகமும் உங்கள் ஒட்டகமும் அருகருகே வந்த போது நான் உங்கள் தொடையை முத்தமிட முயற்சித்தேன். அப்போது நீங்கள் கம்பால் என்னை அடித்தீர்கள். நீங்கள் என்னைத்தான் அடிக்க வேண்டும் என்று அடித்தீர்களா அல்லது ஒட்டகத்தை அடிக்கும் போது எனக்குப் பட்டதா எனத் தெரியவில்லை." எனக் கூறினார்.
அதற்கு நபியவர்களோ நான் உன்னை வேண்டுமென்றே அடிக்கவில்லை எனக் கூறிவிட்டு "பிலாலே பாத்திமாவின் வீட்டுக் சென்று அந்தக் கம்பைக் கொண்டுவாருங்கள்" என்றார்கள்.
"நபியவர்கள் தன்னைப் பழிவாங்கும் படி கூறிவிட்டார்கள்" என சத்தமிட்டவாறே பிலால் (ரழி) அவர்கள் பாத்திமா (ரழி) அவர்கள் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி கம்பைத் தரும் படி கேட்டார்கள். "கம்பை வைத்து எனது தந்தை என்ன செய்யப் போகிறார்கள்? இது ஹஜ் காலமோ யுத்த காலமோ அல்லவே? என பாத்திமா (ரழி) அவர்கள் கேட்க "நபியவர்கள் உலகை விட்டு விடை பெறப்போகிறார்கள், அதனால் தான் அநியாயாம் இழைத்திருந்தால் பழிதீர்க்கச் சொல்லிவிட்டார்கள்" என பிலால்(ரழி) அவர்கள் விடையளித்தார்கள்.
அதற்கு பாத்திமா (ரழி) அவர்களோ "நபி (ஸல்) அவர்களிடம் பழி தீர்க்க யாருக்குத்தான் மனம் இடங்கொடுக்குமோ" எனக் கூறி ஹஸன் , மற்றும் ஹுஸைன் (ரழி) அவர்களிடம் நபியவர்களுக்கு பகரமாக பழிதீர்க்க இடமளிக்கும் படி சொல்லுங்கள்" என பிலால் (ரழி) அவர்களிடம் வேண்டிக் கொண்டு கம்பைக் கொடுத்தனுப்பினார்கள்.
பிலால் (ரழி)அவர்கள் மஸ்ஜிதுன் நபவிக்கு கம்பைக் கொண்டு வந்ததும் நபியவர்கள் அதை உக்காஷா (ரழி) அவர்களிடம் கொடுத்து தன்னைப் பழிதீர்க்கும் படி பணித்தார்கள். அப்போது அபூ பக்கர் (ரழி) அவர்களும் உமர்(ர்ழி) அவர்களும் எழுந்து நபியவர்களுக்குப் பதிலாக தங்களை பழிதீர்க்க வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்களோ அதை தடுத்து விட்டார்கள்.
பின்பு அலி (ரழி) அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களைப் பழி தீர்ப்பதற்கு பதிலாக தன்னை நூறு அடி அடித்துக் கொள்ளுங்கள் என உக்காஷா (ரழி) அவர்களிடம் வேண்டினார்கள். அதையும் நபியவர்கள் தடுத்து தன்னையே பழி தீர்க்க அடித்துக் கொள்ளும்படி உக்காஷா (ரழி) அவர்களை வேண்டினார்கள்.
அதற்கு உக்காஷா (ரழி) அவர்களோ "நீங்கள் என்னை அடித்த போது நான் ஆடையில்லாமல் வற்றைக் காட்டிய நிலையில் இருந்தேன். எனக் கூறிய போது நபி (ஸல்) அவர்களும் தனது ஆடையை விலக்கி வயிற்றைக் காட்டினார்கள்.
நபியவர்களின் வயிற்றின் வெண்மையைக் கண்ட உக்காஷா (ரழி) அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் உடனே பாய்ந்து நபியவர்களின் வயிற்றை முத்தமிட்டு "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகுக! யாராவது உங்களிடம் பழிதீர்ப்பார்களா? என்று கூறினார்கள்.
அப்போது நபியவர்கள் "இல்லை நீங்கள் பழிதீர்க்க வேண்டும் அல்லது என்னை மண்ணித்து விட வேண்டும் எனக் கூறவே உக்காஷா (ரழி) அவர்கள் "மறுமையில் என்னை அல்லாஹ் மண்ணிப்பான் என்பதால் நான் உங்களை மண்ணிக்கிறேன்" என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் எனது தோழரைப் பார்க்க வேண்டும் என்றால் உக்காஷாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கூறினார்கள்.
உடனே முஸ்லிம்கள் உக்காஷா (ரழி) அவர்களை முத்தமிட்டு சுவனம் அவருக்கு வாக்களிக்கப்பட்டதையிட்டு சோபனம் கூறினர்.
நபியவர்கள் அன்றைய தினமே நோய்வாய்ப்பட்டு பதினெட்டு நாட்களாக நோயாளியாக இருந்து மரணித்து இறையடி எய்தினார்கள்."
அறபியில் வெகு சில நூற்களில் பதியப்பட்டிருக்கும் இச் செய்தியை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பட்டி தொட்டியெல்லாம் ஒரு நாள் மதினா நகர்தனிலே..... ஓங்கிடும் மஸ்ஜிது நபவியிலே.... என தனது கம்பீரக் குரலால்!! கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை!! ஈ எம் நாகூர் ஹனீபா அவர்களையே சாரும்!!.
இனி இச்செய்தியின் உன்மை நிலையை உற்று நோக்குவோம்.
குறித்த இச்சம்பவம் இமாம் தபறானி அவர்களது "முஃஜமுல் கபீர்" என்ற நூலிலும் இமாம் அபூ நுஐம் அல் அஸ்பஹானி அவர்களது ஹில்யதுல் அவ்லியா என்ற நூலிலும் இமாம் இப்னுல் ஜௌஸி அவர்களது மௌலூஆத் (இட்டுக் கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.!!
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின் ஸினான் என்பவர் பெரும் பொய்யர் என ஹதீஸ் கலை அறிஞர்கள் பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டவர். தனது தந்தையின் பெயரிலும் ஏனைய நம்பகமாக ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பெயரிலும் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் எனவும் அறியப்படுகிறார்.
எனவே இத்தகைய பொய்யன் நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி அறிவிக்கும் செய்தியை நாம் எந்தவகையில் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சமூகத்தில் பரப்ப அனுமதிக்கக் கூடாது.