கேள்வி :
வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து விட்டால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தவர் அதே நிலையில் மரணித்து விட்டால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
பதில் :
நம்முடைய வெளிப்படையான பார்வையில் ஒருவர் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்து அதே நிலையில் மரணித்து விட்டார் என்றால் அவருக்கு ஜனாஷா தொழுகை நடத்துவது கூடாது. அதே நேரத்தில் ஒருவர் மரணிப்பதற்கு முன்னால் இணைவைக்கின்ற காரியங்களிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சாட்சிகளின் மூலம் தெளிவாகிவிடுமென்றால் அவரை முஃமினாகத்தான் நாம் கருதவேண்டும். அது போன்று சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இணைவைத்தவர் என்று நாம் முடிவு செய்யக் கூடாது.
இறுதி வரை இணைகற்பிக்கும்
காரியங்களை செய்து மரணித்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதும்,
பாவமன்னிப்பிற்காக பிரார்த்தனை செய்வதும் கூடாது என்பதற்கான ஆதாரங்களைக்
காண்போம்.
ஆதாரம் : 1
مَا
كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا
لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ
لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (113) وَمَا كَانَ اسْتِغْفَارُ
إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ
فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ
إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ (114)} )التوبة(
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர் (அல்குர்ஆன் 9 : 113, 114)
மேற்கண்ட வசனத்தில் நபியும், இறைநம்பிக்கை கொண்டவர்களும் இணைகற்பிப்போருக்கு பாவமன்னிப்பு தேடுவது கூடாது என அல்லாஹ் தடுக்கின்றான்.
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக கேட்கின்ற பாவமன்னிப்பு பிரார்த்தனைதான். எனவே இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆதாரம் : 2
அப்துல்லாஹ்
பின் உபைபின் சலூல் என்பவன் முனாஃபிக்கீன்களின் தலைவனாக இருந்தான்.
முனாஃபிக்கீன்கள் அனைவரும் காஃபிர்களாகத்தான் மரணிக்கின்றனர். அந்த
அப்துல்லாஹ் மரணித்த நேரத்தில் அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்
اسْتَغْفِرْ
لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ
مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا
بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (80)
التوبة
(முஹம்மதே!) அவர்களுக்காக
பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது
தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம்
புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 :
80)
{وَلَا تُصَلِّ عَلَى
أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ
كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ (84)}
[التوبة]
அவர்களில் இறந்து
விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும்
நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர்.
குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
(அல்குர்ஆன் 9 : 84)
இணைகற்பிக்கும்
காரியங்களைச் செய்து மரணித்தவர்களுக்கு பாவமன்னிப்பு தேடக்கூடாது எனவும்,
அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது கூடாது என்றும் மேற்கண்ட வசனங்களில்
அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஆதாரம் : 3
நபி
(ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிப் இணைகற்பித்த நிலையில் மரணித்த
காரணத்தினால் அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கு அல்லாஹ் தடைவிதித்து
விட்டான்.
صحيح البخاري
4675حَدَّثَنَا
إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ،
أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَعِيدِ بْنِ
الْمُسَيَّبِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ
الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ
أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ فَقَالَ النَّبِيُّ صلى
الله عليه وسلم أَيْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أُحَاجُّ لَكَ
بِهَا عِنْدَ اللهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي
أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ
أُنْهَ عَنْكَ فَنَزَلَتْ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ
يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ
بَعْدِ مَا تَبَيِّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ}.
முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி
(ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிபுக்கு மரணவேளை வந்த போது
அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் இருக்க, நபி (ஸல்)
அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான்
அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று சொன்னார்கள். அப்போது
அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உமய்யாவும், அபூதாலிபே! (உங்கள் தகப்பனார்)
அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து
ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (பெரிய தந்தையே!)
உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை
விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்
கொண்டிருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது தான் , இணை கற்பிப்போர்
நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும்
அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த
நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. எனும் (9:113 ஆவது) இறைவசனம்
அருளப்பட்டது
நூல் : புகாரி (4675)
ஆதாரம் : 4
நபி
(ஸல்) அவர்களின் தாயார் இணைகற்பித்தவர்களாக மரணித்த காரணத்தினால் அல்லாஹ்
அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதை நபியவர்களுக்கு தடைசெய்துவிட்டான்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப்
பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது
அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1776)
மேற்கண்ட
ஆதாரங்களிலிருந்து இணைகற்பித்த நிலையில் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை
நடத்துவது கூடாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்