"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மலக்குகளும் மறைவான ஞானமும்

 மலக்குகளும் மறைவான ஞானமும்

மலக்குகள் என்பவர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை என்றதுமே சிலர், மலக்குமார்களை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி பல்வேறு தவறான விஷயங்களை பரப்புவதற்கு தயாராகிவிடுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், அல்லாஹ்விற்கு மறைவான ஞானம் இருப்பது போன்று மலக்குகளுக்கும் இருக்கிறது என்று சொல்வது. 

ஆனால் மறைவான ஞானம் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே இருக்கும் ஆற்றல். அது அவனுக்குரிய தனித்தன்மை. அந்த ஆற்றல் அவனைத் தவிர எவருக்கும் எந்த படைப்பினத்திற்கும் இல்லை என்பதுதான் உண்மை. அவ்வகையில் மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பதை பின்வரும் ஆதாரங்கள் நமக்கு சொல்கின்றன. 

 வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 16 : 77) 

சில முஸ்லிலிம்கள் பின்வரும் வசனத்தை வைத்து கொண்டு மலக்குகளுக்கு மறைவான ஞானம் இருப்பதாக சொல்கிறார்கள். அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? என்று மலக்குகள் கேட்டதை வைத்துக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்கள். 

இந்த வாதம் தவறானது என்பதற்கு அந்த வசனத்திலேயே சான்று இருக்கிறது. பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன் என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது  அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 2 : 30 லி 32) 

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அல்லாஹ கூறிவதிலிலிருந்தும், “”நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை என்று வானவர்கள் வாக்குமூலம் கொடுப்பதிலிருந்தும் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாருக்கும் மறைவான ஞானம் அறவே இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். 

ஒருவேளை, பூமியில் மனித இனத்தை படைக்கப்போகிற தகவலுடன் சேர்த்து அவர்களின் தன்மையையும் வானவர்களுக்கு அல்லாஹ் தெரிவித்திருக்கலாம். அதனால் அவர்கள் அவ்வாறு கேள்வியை கேட்டிருக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ளும் போது எந்த கேள்வியும் எழாது.  இல்லையேல் மறைவான ஞானம் எனும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான தன்மையில் அவனுக்கு இணைகற்பித்தவர்களாக ஆகிவிடும் அபாயம் நிகழ்ந்துவிடும். 

மேலும் மலக்குகளுக்கு மறைவான ஞானம் இல்லை என்ற இக்கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில்  கீழ்க்காணும் ஹதீஸ் இருக்கிறது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான் எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், திறங்கள் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், யார் இவர்? எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? எனக் கேட்டார். அவர்கள், ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர்,(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார். (நீண்ட ஹதீஸ்) அறிவிப்பவர் : அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (349) (3207) 

வானவர்களுக்கு மறைவான ஞானம் இருந்தால் வானத்தின் காவலராக இருக்கும் வானவர்கள் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் வானுலகத்தின் கதவை திறந்திருப்பார்கள். மாறாக, யார் இவர்? என்றும், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா? என்றும், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா? என்றும் வானத்தின் காவலர்களாக இருக்கும் வானவர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதிலிலிருந்து அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை விளங்க முடிகிறது. இதுபோன்று விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும் மற்றொரு செய்தியை இங்கு காண்போம். 

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம். திடீரென்று நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுங்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள். ஒருவன் உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் (சக்கராத்தின்) நேரத்தில் சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் சொர்க்கத்தின் கபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும் சொர்க்கத்தின் நறுமணங்களிலிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலிலிலிலிருந்து வெளியேறிவிடு என கூறுவார். தோல்பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும். அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க அருகாமையில் அந்த உயிரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இவ்வாறு ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்யீனில் பதிவு செய்யுங்கள். அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான். (நீண்ட செய்தியின் ஒரு பகுதி)                                                             ஆதாரம் : அஹ்மத் (17803)

 நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல அவனுடைய உடலிலிலிலிருந்து உயிர் கைப்பற்றப்படும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்கமாட்டார். உடனே கம்பளி துணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தைவிட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறினார்கள்.                                                  ஆதாரம் : அஹ்மத் (17803) 

நன்மை மற்றும் தீமை செய்த ஆத்மாக்கள் வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் இது யாருடைய உயிர்? என்று வானவர்கள் கேட்கிறார்கள் என்பதிலிலிருந்து  வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை;  அவ்வாறு இல்லாததாலேயே யாருடைய உயிர் கொண்டு வரப்படுகிறது? என்று அவர்களுக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். 

வளரும் இன்ஷா அல்லாஹ்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்