"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Showing posts with label கேள்வி-பதில். Show all posts

நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

  நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?  யாஸிர்

பதில்:

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு முடிவை டுத்துவிட்டு அந்த முடிவை ஒருவர் மீறினால் அதற்கு என்ன பரிகாரமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறிக்கும் போதும் செய்ய வேண்டும்.

3103 و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَ يُونُسُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ الْيَمِينِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சத்தியத்தை முறிக்கும்போது செய்யும் பரிகாரமே நேர்ச்சையை நிறைவேற்றாமல் போவதற்கும் பரிகாரமாகும்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல் : முஸ்லிம் 3379

சத்தியத்தை முறிக்கும்போது செய்ய வேண்டிய பரிகாரத்தை பின்வரும் வசனம் கூறுகிறது.

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89)5

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.    திருக்குர்ஆன் 5 : 89

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா?  முஹம்மத் ஃபைஸர்

திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

பார்க்க: 1040, 1041, 1042, 1043, 1044

கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை.

விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் கிரகணம் பிடித்த நிலையில் உள்ள சூரியனைப் பார்க்கக் கூடாது; அது கண் பார்வையைப் பாதிக்கும் என்பது மட்டுமே காரணத்துடன் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருட்டறையில் கர்ப்பிணிப் பெண்களை அடைத்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் பொய்யான கட்டுக் கதையாகும்.

வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா?

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்றும், லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா?  விளக்கம் தேவை.  ஷாஹுல் ஹமீது

பதில் :

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள்) ஆகிய வாசகங்களை வீட்டில் தொங்கவிடுவது தவறல்ல. வீட்டுக்கு வருபவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தால் இதை மார்க்கம் தடை செய்யவில்லை.

இதுபோன்ற வாசகங்களை எழுதித் தொங்கவிட்டால் வீட்டுக்கு பரகத் வரும். பேய் பிசாசு வராது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வது கூடாது.

786 என்றால் என்ன?

 786 என்றால் என்ன?

இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா?


பதில்:

நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர்.

ஆலிம்களும் பெரியார்களும் மக்களோடு மக்களாக கலந்து பழகலாமா

  ஆலிம்களும் பெரியார்களும் மக்களோடு மக்களாக கலந்து பழகலாமா

மக்களோடு மக்களாக நபிகள் நாயகம்

2899 و3373عن سلمة بن الأكوع قال مر النبي صلى الله عليه وسلم على نفر من أسلم ينتضلون فقال النبي صلى الله عليه وسلم ارموا بني إسماعيل فإن أباكم كان راميا ارموا وأنا مع بني فلان قال فأمسك أحد الفريقين بأيديهم فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم لا ترمون قالوا كيف نرمي وأنت معهم قال النبي صلى الله عليه وسلم ارموا فأنا معكم كلكم البخاري

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன் என்று கூறினார்கள். உடனே, இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தாங்கள் அவர்களுடன் இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்? என்று சொன்னார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன். நீங்கள் அம்பெய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வவு (ரலி)  நூல் : புகாரி 2889, 3373

இரு கூட்டத்தினர் விளையாட்டுப் போட்டி நடத்தும் போது, விளையாட்டுப் பருவத்தைக் கடந்த வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தும் அவர்களுடன் சேர்ந்து தாமும் அதில் பங்கெடுத்தது எதைக் காட்டுகிறது?

துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

 நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான்.

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அது தவறாகும்.