"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label நேர்ச்சை. Show all posts
Showing posts with label நேர்ச்சை. Show all posts

நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

  நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?  யாஸிர்

பதில்:

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு முடிவை டுத்துவிட்டு அந்த முடிவை ஒருவர் மீறினால் அதற்கு என்ன பரிகாரமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறிக்கும் போதும் செய்ய வேண்டும்.

3103 و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَ يُونُسُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ الْيَمِينِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சத்தியத்தை முறிக்கும்போது செய்யும் பரிகாரமே நேர்ச்சையை நிறைவேற்றாமல் போவதற்கும் பரிகாரமாகும்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல் : முஸ்லிம் 3379

சத்தியத்தை முறிக்கும்போது செய்ய வேண்டிய பரிகாரத்தை பின்வரும் வசனம் கூறுகிறது.

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89)5

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.    திருக்குர்ஆன் 5 : 89

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

  பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் தட்டி எழுப்பி விடும் என்று நம்புவதால் தான். அதனால் குளிர் காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் இது போன்ற பாடல்களைப் பாடுகின்றனர்.

இதற்கு இணையாக முஸ்லிம்களும் சில பாடல்களின் மூலம் தாங்கள் நம்பியிருக்கும் நாயகர்களை வழிபாடு செய்கின்றனர்.

நாம் அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கின்றோம்

நேர்ச்சை
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படும் வணக்கங்களுள் மிகப் பிறதானமாக நேர்ச்சை இருக்கின்றது.

நேர்ச்சை


நேர்ச்சை என்றால் ;- தன்மீது கடமையாக இல்லாத ஒன்றை கடமையாக்கிக்கொள்வதாகும். உதாரணமாக ‘எனது நோய் குணமாகினால் அல்லாஹ்வுக்காக இரண்டு மாடுகள் அறுத்துப் பலியிடுவேன்’ என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை வைப்பது போன்று.
(எனது குறிப்பிட்ட தேவை நிறைவேறினால் இந்தப் பெரியாரின் கந்தூரிக்கு ஒரு ஆடு கொடுப்பேன் என்று பெரியார்களுக்கு வைப்பது போல.)
அந்த நேர்ச்சையை பொதுவாக வைக்கவும் முடியும்.
(உதாரணமாக; ‘அல்லாஹ்வுக்காக ஒரு ஆடு கொடுப்பது என் மீது கடமை, அந்த நல்லடியாரின் கந்தூரிக்கு ஒரு மாடு கொடுப்பது கடமை என்று நேர்வது போன்று.)
அது ஒரு வணக்கம் என்பதனால் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்படவேண்டும்.
இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார்கள். (3:35)