"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label மௌலூத்.. Show all posts
Showing posts with label மௌலூத்.. Show all posts

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

  பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள்

மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் தட்டி எழுப்பி விடும் என்று நம்புவதால் தான். அதனால் குளிர் காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் இது போன்ற பாடல்களைப் பாடுகின்றனர்.

இதற்கு இணையாக முஸ்லிம்களும் சில பாடல்களின் மூலம் தாங்கள் நம்பியிருக்கும் நாயகர்களை வழிபாடு செய்கின்றனர்.

ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்: 2

 பறவைக்குக் கடிதம்

மவ்லிதுகள் கட்டுக் கதைகளின் தொகுப்பாகவும், இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்த்தெறியும் நச்சுக் கருத்துக்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இந்த வரிசையில் ஷாகுல் ஹமீது மவ்லிதில் இடம் பெற்றுள்ள கட்டுக் கதைகளின் பெரும் பகுதியை ஏகத்துவம் மே 2009 இதழான நாகூர் கந்தூரி விமர்சன இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

ஒரு பறவையின் இறைச்சியை உண்பதற்காக ஒரு மனிதர் அதன் மீது (ஒரு கல்) எறிந்தார். அதனால் அந்தப் பறவை ஓடிவிட்டது. ஷாகுல் ஹமீது ஒரு சொல்லால் அதை அழைத்தார். அப்பறவை உடனே வந்து சேர்ந்தது.

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) பெயரில் பொய்யான கதைகள்

ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

       “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்”என்றும்,

       “எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன” என்றும்,

       “உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை” என்றும்

அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது. 

       இவையும், இன்னும் பல இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவைகளும் அவர்கள் பெயரால் ஓதப்பட்டு வருகின்ற மவ்லிதுகளிலும், யாகுத்பாவிலும் காணப்படுபவை.

       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.

       அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, “அவர்கள் இப்படிச் சொன்னதாக” எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.

       மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில் தான் அவர்களே எழுதிய “குன்யதுத்தாலிபீன்” என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய “ஃபு தூஹுல் கைப்” “அல்ஃபத்ஹுர்ரப்பானி” ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

       அவர்கள் தனது கைப்பட எழுதிய உண்மைகளை ஏற்பதா? அல்லது அவர்கள் பெயரால் மிகவும் பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்களை ஏற்பதா? என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.

       அவர்களது நூலிலிருந்தும் ,அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் ,அவர்களின் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளோம்.

       இதன் பிறகாவது உண்மையை உணராதோர், தனது தவறான முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லாஹ் ,தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.

இரண்டு போதுமே!

       நாம் பின்பற்றிச் செல்ல, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி நமக்கு இல்லை. நாம் செயல்பட குர்ஆனைத் தவிர வேறு வேதம் எதுவுமில்லை. எனவே அவ்விரண்டை விட்டும் அப்பாற்பட்டு விடாதே! அவ்விரண்டையும் நீ விட்டுவிட்டால் நீ நாசமடைந்து விடுவாய்! ஷைத்தானும், உன் மனோ இச்சையும் உன்னை வழி கெடுத்து விடும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

          திருக்குர்ஆனையும், நபி வழியையும் உனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அவ்விரண்டிலும் ஆழமாகச் சிந்தனை செய்து, அவ்விரண்டின்படி நீ செயல்படு! அவர் அப்படி சொல்லி இருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது போன்ற உளரல்களைக் கண்டு ஏமாந்து விடாதே! ஏனெனில் “ரசூல் எதைக்கொண்டு வந்தாரோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். குர்ஆனிலும், நபி வழியிலும் தான் (ஈமானுக்குப்) பாதுகாப்பு உண்டு. அந்த இரண்டைத் தவிர மற்றவைகளில் நாசம் தான் உண்டு. குர்ஆன், நபி வழி இவ்விரண்டின் மூலமாக மட்டும்தான் ஒரு அடியான் இறை நேசனாக முடியும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

     குர் ஆனையும், நபி வழியையும் பின்பற்றாத வரை உனக்கு (மறுமையில்) வெற்றி கிட்டாது.  ஃபத்ஹுர்ரப்பானி, 39வது மஜ்லிஸ்                                   

பித்அத் செய்யாதீர்கள்!

       நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள்! ‘பித்அத்’களை உருவாக்கி விடாதீர்கள்! இறை உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள்! மனமுரண்டு பிடிக்காதீர்கள்! இறைவனை ஏகத்துவப்படுத்துங்கள்! அவனுக்கு இணை வைக்காதீர்கள்!  ஃபுதூஹுல்கைப், பக்கம் 180

       பித்அத்களை உருவாக்குபவனை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். “எவன் பித்அத்தை உரு வாக்குகிறானோ, அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், நல்லடியார்கள் அனைவரின்  சாபமும் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  குன்யதுத் தாலிபீன், பக்கம் 81  

ஏகத்துவ முழக்கம்

       எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை; நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும், கொடுப்பதும் கொடுக்க மறுப்பதும், திறப்பதும் திறந்ததை மூடுவதும், வாழ்வும் மரணமும், இழிவும் மதிப்பும், வறுமையும் செல்வமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உண்டு.  ஃபுதூஹுல்கைப், 2வது சொற்பொழிவு

       படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதை விட்டுவிடு! அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்து! அத்தனை பொருள்களையும் படைத்ததும் அவனே! அவன் அதிகாரத்திலேயே அத்தனையும் உண்டு. அல்லாஹ் அல்லாதவர்களிடம் தேடுபவனே! நீ அறிவுடையவன் அல்ல. அவன் கஜானாவில் இல்லாதது ஏதும் உண்டோ? ஃபத்ஹுர்ரப்பானி, முதலாவது மஜ்லிஸ்

        மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காது மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா? படைப்பினங்களிடம் கேட்கத்தேவை எதுவும் ஏற்பட்டு விடாதபோது, படைப்பினங்களிடம் கேட்கின்றாயே!  ஃபத்ஹுர்ரப்பானி, 38வது மஜ்லிஸ்

         அனைத்தையும் படைத்தவனிடமே அனைத்தையும் கேள்! நான் அல்லாஹ்வின் பாதையில் தான் உங்களை அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. முனாஃபிக் தான் தன்பக்கம் மக்களை அழைப்பான்.  ஃபத்ஹுர்ரப்பானி, 8வது மஜ்லிஸ்

         “உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவனைத் தவிர எவரும் அகற்ற முடியாது” என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உன் துன்பத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் முறையிடாதே!

       யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டானோ அவன் தான் பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, அவன் தண்ணீரை இறுகப் பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். ஃபத்ஹுர்ரப்பானி, 15வது மஜ்லிஸ்

       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த போதனைகளின்படி செயல்பட்டு நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக!

readislam,net



கைக்குழந்தை நோற்ற நோன்பு

 (தொடர் ௦2 )
முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள அற்புதக் கதையைப் (?) பார்ப்போம்.

اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام
لم يلقم اليوم الغلام * ثديا لها اهل المراد

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்து, ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானியின் தாயாடம் சென்று விளக்கம் கேட்டனர். அதற்கவர் எனது மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினாராம்.
அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப்பால் அருந்தாமல் அந்தக் குழந்தை நோன்பிருந்ததாம். மக்களும் இதை ஆதாரமாகக் கொண்டு அந்த நாள் ரமளானின் முதல் நாள் தான் என்று முடிவு செய்தார்களாம்.
நோன்பின் தலைப் பிறை மேகத்தில் மறைந்த போது அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் மக்களை நோக்கி எனது மகன் எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினார்.
மவ்லிதின் இந்த வரிகளுக்கு ஹிகாயத் என்னும் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.
என் மகன் ரமளான் மாதம் முழுவதும் ரமளானின் தலைப்பிறை மேகத்தில் மறைந்தது. இது குறித்து மக்கள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம் என் மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை எனக் கூறினேன். பின்னர் அது ரமளானின் முதல் நாள் என்பது தெளிவாயிற்று என்று அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் ஃபாத்திமா கூறினார்.
இந்தக் கதையில் ஏராளமான அபத்தங்களும், மார்க்க முரண்களும் மலிந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சர்யமான(?) நிகழ்ச்சியை அன்றைய மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் காலத்திலோ, அதற்கடுத்த காலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் மரணித்து பல ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மவ்லிது போன்ற ஆதாரமற்ற நூற்களில் மட்டுமே இந்த விபரம் குறிப்பிடப்படுகின்றது.
நோன்பு உள்ளிட்ட சட்டங்கள் பருவ வயது வந்தவருக்குரியவை. அந்த வயதுக்கு முன் எவ்விதமான கடமையும் கிடையாது. நோன்பைப் பொறுத்தவரை, பருவ வயதை அடைந்தவர்களிலும் சிலருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், பயணிகள், பாலுட்டும் அன்னையர், கர்ப்பிணிகள் போன்றோர் நோன்பைப் பின்னர் நோற்கலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைக்குழந்தைக்கு நோன்பு என்பது கற்பனை செய்ய முடியாததாகும்.
அப்துல் காதிர் ஜீலானி பிறவியிலேயே இறை நேசராகத் திகழ்ந்தார் என்று வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இந்தக் கதையை ஏற்க முடியாது. இறை நேசர் என்பவர் இறைவனின் மார்க்கத்தை நன்றாக அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோன்பு இல்லை என்ற சட்டத்தைக் கூட அறியாதவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்? இவ்வாறு சிந்திக்கும் போதும் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறியலாம்.
முதல் பிறையை மேகம் மறைத்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
நீங்கள் பிறை கண்டு நோன்பு இருங்கள். (அடுத்த) பிறை கண்டு நோன்பை விடுங்கள். மேகம் மூடிக் கொள்ளுமானால் (முதல் மாதத்தை) முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்பது நபி (ஸல்) காட்டிய வழிமுறை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1909
மேக மூட்டம் காரணமாகப் பிறை தென்படாவிட்டால் அந்த நாளை முதல் மாதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; ரமளான் என்று முடிவு செய்யக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.
மவ்லிது அபிமானிகளாகிய மத்ஹப் வாதிகள் உட்பட அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்ட உண்மை இது. மார்க்கத்தில் ஈடுபாடும் மற்றும் மார்க்க அறிவும் குறைந்து காணப்படும் இந்தக் காலத்து மவ்லவிகள் கூட அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தச் சட்டம் மார்க்க அறிவு நிறைந்திருந்த அந்தக் காலத்து மக்களுக்குத் தெரியவில்லையாம்! பிறவியிலேயே(?) இறை நேசராகத் திகழ்ந்த அப்துல் காதிர் ஜீலானிக்கும் இந்தச் சட்டம் தெரியவில்லையாம்!.
மேகத்திற்குள் மறைந்திருந்த பிறையைக் கண்டுபிடித்த அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை தெரியவில்லை என்பது அப்துல் காதிர் ஜீலானிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
இந்தக் கதையை நம்பினால் ஏற்படும் விளைவுகளை மவ்லிது அபிமானிகள் சிந்திப்பார்களா?
அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் வாழ்ந்த மக்கள் மார்க்க அறிவற்ற மூடர்களாக இருந்துள்ளனர். (இத்தகைய மூடர்களிடம் தான் பிற்காலத்தில் அப்துல் காதிர் ஜீலானி கல்வி கற்றதாகவும் கதை உள்ளது)
அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிவழி தெயவில்லை;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு நேர் முரணான வழியை மக்களுக்குக் காட்டி மக்களை அவர் வழிகெடுத்தார்
அவரது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இவ்வாறு நம்பத் தயாராக இல்லாவிட்டால் இந்தக் கதையையும் அதைக் கூறுகின்ற முஹ்யித்தீன் மவ்லிதையும் தூக்கி எறிய வேண்டும்.
மவ்லிது அபிமானிகளே! இந்த மவ்லிதைத் தூக்கி எறிந்து விட்டு அப்துல் காதிர் ஜீலானிக்குப் பெருமை சேர்க்கப் போகிறீர்களா? அல்லது இந்த மவ்லிதைத் தூக்கிப் பிடித்து அப்துல் காதிர் ஜீலானி அவர்களை இழிவுபடுத்தப் போகிறீர்களா?

தொடரும் ..........
(
p j எழுதிய 'முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு' நூலிலிருந்து )

காய்ச்சலுக்கு இடமாற்றம்
https://shirkinethiri.blogspot.com/2021/11/6.html

கைக்குழந்தை நோற்ற நோன்பு
https://shirkinethiri.blogspot.com/2021/11/kai-kulandai-notra-nonpu.html

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்
https://shirkinethiri.blogspot.com/2021/11/abdulcaderum-shariyathum.html

அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
https://shirkinethiri.blogspot.com/2021/11/4.html

மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/6_6.html

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்த முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/7.html


சூம்பிய ஹம்மாதின் கை
https://shirkinethiri.blogspot.com/2021/11/8.html

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/9.html

கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கிய முஹ்யித்தின்அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/10.html

அப்துல் காதிர் ஜீலானி பார்த்தாலே நேர்வழி?
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post.html

அப்துல் காதிர் ஜீலானியிற்கு கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2021/11/11.html

கனவில் நடந்த கொலை!

https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_6.html

ஜின்னிடமிருந்து மீட்ட அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_16.html

எல்லா நேரமும் இரட்சகர் (?) அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_79.html

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர் அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/11_6.html

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_58.html

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2017/05/yaar-intha-abdul-cader.html

முஹைதீனும் முட்டாள்களும்
https://shirkinethiri.blogspot.com/2016/03/muhiyaddeenum-muttalkalum.html

அப்துல் காதிர் வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார்
https://shirkinethiri.blogspot.com/2015/10/abdulcader-varamattar-nirupikka-thayaar.html

யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க்கா ?
https://shirkinethiri.blogspot.com/2015/10/yaa-muhiyaddeen-entru-alaikkalaama.html

முஹைய்யத்தீன் மெளலூதின்சி ன்ன துஆ
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-sinna-duvaa.html

மார்க்கம் மரணப் படுக்கையில்  உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே
https://shirkinethiri.blogspot.com/2021/11/5.html

அப்துல் காதிர் ஜீலானி  அவர்களுக்கு 
இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-part-01.html



பஜனை பாடுவதும் உண்டியல் வைப்பதும் இணை கற்பித்தலே!

உண்டியல்  தர்கா  கபுறு
கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத்
தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன. 
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம் பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த மொழியில், எந்த நேரத்திலும் "முஹைதீனே! வந்து விடுங்கள்!' என்று ஆயிரம் தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்.