கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் தங்களுடைய வணக்கத்
தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன.
தலங்களிலே தங்களுடைய கடவுளாகிய கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரைப் புகழ்ந்து பஜனைகளைப் பாடுகின்றனர். இந்த பஜனைகள் அனைத்துமே இறைவனுடைய பண்புகளை இறைவனின் அடிமைகளுக்கு வழங்கி அவர்களைக் கடவுளாக வழிபடக்கூடிய பாடல்களாகவே அமைந்துள்ளன.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக அனைவரும் அறிந்த யாகுத்பா என்ற பஜனையில் இடம்
பெற்ற ஒரு கருத்தைக் கூறலாம். அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து
பாக்தாத்தில் மரணமடைந்த முஹைதீன் அவர்களை, யார், எங்கிருந்து, எந்த
மொழியில், எந்த நேரத்திலும் "முஹைதீனே! வந்து விடுங்கள்!' என்று ஆயிரம்
தடவை அழைத்தால் அவர் கண் முன்னே காட்சி தருவார் என்று பாடுகின்றனர்.
நபிமார்களின் உடல்களைத் தவிர மற்றவர்களின் உடல்களை மண் சாப்பிட்டு விடும்
என்று நபியவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மண்ணோடு மண்ணாகி விட்ட முஹைதீன்
என்பவர் இறைவனைப் போன்று ஆற்றலுள்ளவர் என பரேலவி மதத்தினர் பஜனை
பாடுவதாலும் இவர்களுடைய பஜனைகள் அனைத்தும் இவ்வாறு அமைந்துள்ளதாலும்,
இந்தப் பஜனைகளை இறந்தவர் கேட்கிறார் என்ற நம்பிக்கை வைத்திருப்பதாலும்
பஜனைகள் பாடுவது இணை கற்பிக்கின்ற காரியமே!
இது போன்றே நாம் எந்த ஒன்றைச் செலவு செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செலவிட
வேண்டும். இறைவனைத் தவிர மற்றவர்களின் திருப்திக்காகவோ அவர்கள் தனக்கு
அருள்புரிய வேண்டும் என்ற நம்பிக்கையிலோ ஒருவன் மக்களுக்கு
வாரியிறைத்தாலும் உண்டியலில் போட்டாலும் அக்காரியம் இணை கற்பிக்கின்ற
காரியமே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக
அல்லாஹ் அவனுக்காக மனத்தூய்மையுடனும் அவனுடைய திருமுகத்தை நாடியும்
செய்கின்ற செயலைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) நூல்: நஸயீ 3089
ஆனால் பரேலவி மதத்தினர் தங்களுடைய கப்ருக் கடவுளின் திருப்திக்காகவும்,
அருளுக்காகவும் உண்டியல் வைத்து வசூலித்து கொள்ளையடிப்பதால் தர்ஹாக்களில்
வைக்கப்பட்ட உண்டியல்களில் காசு போடுவதும் இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
பரேலவி மதத்தினர் கப்ரை வணங்குகிறார்கள் என்பதற்கு இன்னும் பல சான்றுகள்
உள்ளன. யூத, நஸராக்களின் கலாச்சாரமாகிய இந்தச் சமாதி வழிபாட்டை
ஒழிப்பதற்காகத் தான் நபியவர்கள் பின்வரும் எச்சரிக்கைகளைக்
கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்