"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போண்றவர்கள்

ஆதாரம் அற்ற செய்திகள்: அறிவோம்! தவிர்ப்போம்!! (24)

இஸ்லாத்தின் பெயராலும் இஸ்லாமிய வரலாற்றின் பெயராலும் எமது சமூகத்தில் பரலாக புழ‌க்கத்தில் உள்ள ஆதாரமற்ற செய்திகள் உறுதி செய்யப்படாத தகவல்களை இத்தொடரில் நாம் நோக்கிவருகிறோம்.
அந்த வகையில் இப்போது நபித்தோழர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்பன இஸ்லாத்தின் ஆதாரங்களாக அமையும்மா என்பது தொடர்பான ஒரு செய்தியை நோக்கிவோம்.
செய்தி இதுதான்:
"எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போண்றவர்கள், அவர்களில் நீங்கள் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்."
குறித்த இந்த செய்தி இமாம் இப்னு அதில் பர் (ரஹ்) அவர்களது ஜாமிஉ பாயான் எனும் நூலிலும் இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களது அல் இஹ்காம் எனும் கிரந்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

இச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இரு குறைகள் காணப்படுகின்றன. அவைகளாவன:

1-இதில் இடம் பெறும் ஹாரிஸ் பின் கஸீன் என்பவர் யார் என்று அறியப்படாத அநாமோதய ஆசாமியாவார் என இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2-இதில் இடம் பெறும் ஸல்லாம் பின் ஸுலைமான் என்பவர் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.இமாம் இப்னு கர்ராஸ் (ரஹ்) அவர்கள் இவர் ஒரு பொய்யன் எனக் கூறியுள்ளார்.

ஷஃறானி என்ற சூபி இந்தச் செய்தி "கஷ்ப்" எனப்படும் திரை நீக்கம் மூலம் சரியானது என தனது மீஸான் என்ற நூலில் கூறியுள்ள கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஏனெனில் ஹதீஸ்களை தரம் பிரிக்க ஹதீஸ் கலையையும் ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துகளையுமே கவனத்திற் கொள்ள வேண்டுமே அல்லாமல் ஹதீஸ்களின் வாடையை நுகராத சூபிகளின் நூதன முறையை அல்ல என்பதே சரியான நடைமுறையாகும்.

எனவே குறித்த இந்த செய்தி இட்டுக் கட்டப்பட்டது என்பதால் இதையும் நாம் பயன்படுத்துவதையோ பரப்புவதையோ தவித்துக் கொள்வது அவசியமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்