பார்வை
தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்விடம் எனக்கு
சுகமளிக்கு மாறு பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று தெரிவித்தார். "நீ
விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்)
கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை
செய்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.
யா அல்லாஹ்!
உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத்
(அவர்களின் பிரார்த்தனை)யை முன் வைத்து உன்னிடம் முன்னோக்கு கின்றேன்.
முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக
உங்கள் (பிரார்த்தனை)யை முன் வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி
விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை
ஏற்றுக் கொள்வாயாக!
அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு ஹுனைஃப் (ரலி) நூல்: இப்னுமாஜா 1375, அஹ்மத் 16604
மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் காட்டி மகான்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என பரேலவிகள் வாதிக்கின்றனர்.
ஆனால்
மேற்கண்ட நபிமொழியை நன்றாகப் படித்து சிந்தித்துப் பார்த்தால் பரேலவிகளின்
வாதத்திற்கு இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து
கொள்ளலாம்.
"பார்வையற்ற நபித்தோழர் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று தான் நபியவர் களிடம் கோரிக்கை வைக்கிறார்.
நபியவர்கள்
வாழும் போது எத்தனையோ நபித்தோழர்கள் தங்களது இன்னல்கள் நீங்குவதற்காக
இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நபியவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இன்றைக்கும் நமக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் போது "எனக்காக துஆச் செய்யுங்கள்'' என்ற நாம் மற்றவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு தான் அந்த நபித்தோழர் நபியவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்.
நபியவர்கள்
அவருக்காகப் பிரார்த்தனை செய்து விட்டு. அவருக்காக நபி செய்த துஆவின்
காரணத்தினால் தமது நோயை நீக்குமாறு பிரார்த்திக்குமாறு அந்த கண் தெரியாத
நபித்தோழருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
நபியவர்கள்
தமக்காகச் செய்த பிரார்த்தனையின் பொருட்டால் தமது இன்னலை நீக்குமாறு தான்
அந்த நபித்தோழர் பிரார்த்தித்தாரே தவிர நபியின் பொருட்டால் தமது இன்னலை
நீக்குமாறு அவர் பிரார்த்திக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது, "வ ஷஃப்பிஃனீ ஃபீஹி' என்ற வார்த்தையாகும்.
இதன் பொருள்:
என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை (துஆ)
செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை (துஆவை) ஏற்பாயாக, நான் செய்கின்ற
பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக
இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280) இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.
நபி (ஸல்)
அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையே, ஒரு
ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.
இதில் வேதனை
என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது
தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்கு, அமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும்
என்பதைத் தவிர்த்து வேறு எந்த அர்த்தமும் கொடுக்க முடியாது என்பதால் தான்
இதை அவர்கள் மறைக்கின்றனர்.
மகான்களைக்
கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான
வாதங்கள், நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த
இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்து, தரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப்
போய் விடுகின்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்