"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ருவிய' என்று வந்திருக்கும் அவியல்கள்

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்றுஅமர்க்களப்படு
ம்
மவ்லிது கிதாபுகள்குர்ஆன்ஹதீஸ் அடிப்படையில் அமைந்தவை என்ற மாயையைஏற்படுத்து

வதற்காக"ருவிய'"ருவியஎன்று கூறி புட்டுக் குழல்களில் பொய்களைப்போட்டு அவித்துத் 
தள்ளியிருக்கின்றார்கள்
."ருவியஎன்றால் அறிவிக்கப்பட்டது என்று அர்த்தம்பலப் பல 
மெட்டுக்களில்
 தங்கள்பிழைப்புப் பாட்டிற்காக இந்த அரபிப் பாட்டுக்களைப் பாடும் ஆலிம் மற்றும் லெப்பைபஜனைப் பாடகர்கள்இரு பாடல்களுக்கு இடையே வரும் "ருவியஎன்ற 
பொய்
அவியல்களை ஒரு நீண்ட இழுப்பு ராகத்தில் ஓதித் தள்ளுவார்கள்.
"உங்களுக்கு இன்று ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று செயல்பாட்டு வினையில் ஓர்
ஆலிமிடம்
சொல்லப்பட்டால் அவர் என்ன சொல்வார்? "இப்படி மொட்டையாகச்சொன்னால் எப்படியார் தருவார்கள்என்று விபரமாகச் 
சொல்ல
 வேண்டாமா?'' என்றுகேட்பார்ஆனால் நபி (ஸல்அவர்களைப் பற்றி "ருவிய'' என்று
 
கூறி ஒரு செய்திசொல்லப்பட்டால் அது என்னவென்று சிந்திக்க மாட்டார்காரணம் நபி (ஸல்
அவர்கள்
மீது பொய் சொன்னால் நரகம் தான் பரிசு என்று வந்திருப்பதால் அதில் அவருக்கு 
அப்படி
ஓர் அலட்சியம்இதனால் தான் மவ்லிதுக்கு இவர்கள் இப்படியொரு மகத்துவத்தையும்
மரியாதையையும்
 அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்இந்த மாயத் தோற்றத்தை,
போலிமரியாதையை அடித்து உடைப்பதற்குத் தான் குர்ஆன்ஹதீஸ் என்ற ஆயுதத்துடன்ஏகத்துவம் களமிறங்கி உள்ளது.
இப்போது "ருவிய'' என்ற அவியலுக்கு வருவோம்.
அல்லாஹ் படைப்பினத்தை இரு பங்குகளாகப் பிரித்தான்அல்லாஹ் அவ்விரண்டில்சிறந்த
 
பங்கில் என்னை ஆக்கினான்இது தான் சூரத்துல் வாகிஆவில் வலப்புறத்தில்இருப்பவர்கள்,
 இடப்புறத்தில் இருப்பவர்கள் என்ற அல்லாஹ்வின் சொல்லாகும்எனவேநான் வலது புறத்தில் உள்ளவனாவேன்மேலும் வலது புறத்தில் உள்ளவர்களில்சிறந்தவனாவேன்.
 
பிறகு அல்லாஹ் அந்த இரு பங்கினரைப் பிரித்து மூன்றுவகையினராக்கினான்.
 
இம்மூன்று வகையினரில் சிறந்த வகையில் அல்லாஹ் என்னைஆக்கினான்இது,
(முதல் வகையினர்வலப்புறத்தில் இருப்போர்வலப்புறத்தில் இருப்போர் என்றால்என்ன? (இரண்டாம் வகையினர்இடப்புறத்தில் இருப்போர்இடப்புறத்தில் இருப்போர்என்றால் என்ன? (மூன்றாம்வகையினர்)முந்தியோர்(தகுதியிலும்முந்தியவர்களே...
என்ற
 (56:8,9,10) அல்லாஹ்வின் சொல்லாகும்எனவே நான் முந்தியோரில்உள்ளவனாவேன்
அந்த
 முந்தியோர்களிலும் சிறந்தவர்களில் உள்ளவனாவேன்பிறகுஅல்லாஹ் மூன்று 
வகையினரைப்
 பல கிளை களாக ஆக்கினான்அந்தக் கோத்திரங்களில் சிறந்ததாக எனது கோத்திரத்தை அமைத்தான்இது தான்,
நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்உங்களில் (இறைவனைஅஞ்சுவோரேஅல்லாஹ்விடம்  சிறந்தவர்... என்ற (49:13) அல்லாஹ்வின் சொல்லாகும்.
ஆதமுடைய மக்களில் நான் மிக இறையச்சம் உள்ளவனும் அல்லாஹ்விடம்மரியாதைக்கு  உரியவனும் ஆவேன்பெருமை அல்லபிறகு கோத்திரங்களை பலவீடுகளாக ஆக்கினான்அவர்களில் சிறந்த வீட்டாராக என்னை ஆக்கினான்இது தான்,இவ்வீட்டினராகிய உங்களை  விட்டும் அசுத்தத்தை நீக்கவும்உங்களை முழுமைப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகின்றான்  என்ற அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி(ஸல்அவர்கள் கூறியதாக அறிவிக்கப்  படுகின்றது.
இவ்வாறு சுப்ஹான மவ்லிதில் இடம் பெறுகின்றதுஇந்தச் செய்தி இலல் இப்னுஅபீஹாத்தம்  என்ற நூலில் 395வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸைப் பற்றி என்னுடைய தந்தை அபீஹாத்தமிடம் கேட்ட போதுஇதுபோலியானது  என்று தெரிவித்தார் என்று இந்நூலின் ஆசிரியர் இப்னு அபீஹாத்தம்தெரிவிக்கின்றார்.
இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் இபாயா பின் ரிப்ஈமூஸா பின் தரீப் ஆகியஇருவரும்  ஷியாவின் வெறியர்கள் ஆவர். (நூல்மீஸானுல் இஃதிதால்)
இபாயா பின் ரிப்ஈமூஸா பின் தரீப் ஆகிய இருவரும் ஷியா வெறியர்கள்கடவுள்கொள்கை  மறுப்பாளர்கள் ஆவர். (நூல்உகைலீயின் அல்லுஅஃபா)
இந்த ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் கைஸ் பின் அர்ரபீஉ என்பவர்ஹதீஸ்  கலையில் விடப்பட்டவராவார். (நூல்நஸயீயின் அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்)
எனவே இந்த விமர்சனங்களின் படி இது மவ்லிதில் அச்சேறிய ஆபத்தான ஹதீஸாகும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்