மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!
வஸீலா என்றால் என்ன?
எதன் மூலம்
மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா
என்று கூறப்படும். அதாவது தமிழில் "துணைச் சாதனம்" என்று கூறலாம். கடலில்
பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று
கூறுவர்.
நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா
நம்பிக்கை
கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத்
தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி
பெறுவீர்கள்.
(அல்குர்ஆன் 5:35)
மேற்கண்ட வசனத்தில் தன்னை நோக்கி ஒரு வஸீலாவை தேடிக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
நாம்
நல்வழியில் நடக்கத் தேவையில்லை, எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை, எந்தத்
தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை, ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக்
கொண்டால் போதும் கடவுளை நெருங்கிடலாம் என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல
மதங்களில் இருக்கிறது.
ஆனால்
இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப் பவர்கள்
நல்லறங்கள் எனும் வஸீலா என்ற துணைசாதனத்தை தேடிக் கொள்ள வேண்டும்
என்றுதான் நபி (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.
நாம்
இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களும், நற்செயல்களும், நல்ல சொற்களும்தான்
வஸீலா என்பதை நபிமொழிகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்
கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு விருப்பமான செயல்களில்
நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன்
நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான)
வணக்கங் களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை
நான் நேசிப்பேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி நூல்: புகாரி (6502)
நபி (ஸல்)
அவர்கள் தனது நேசத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒரு துஆவை
கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் "அல்லாஹ்வே, நான் உன்னிடத்தில்
சொர்க்கத்தையும், அதன் பக்கம் என்னை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய
நல்லறங்களையும், நல்ல வார்த்தைகளையும் கேட் கிறேன்'' என கேட்குமாறு
சொல்லிக் கொடுக்கிறார்கள்.
நூல் அஹ்மது ( 23870)
நாம் செய்யக் கூடிய நல்லறங்களும், நல்ல வார்த்தைகளும் தான் நம்மை சுவர்க்கத்தின் பக்கம், அதாவது இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியவை ஆகும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நேசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவற்றை அல்லாஹ்விடம் கேட்குமாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.
இறைவனின்
பக்கம் நெருங்குவ தற்குத் தன்னை வஸீலாவாக எடுத்துக் கொள்ளலாம் என நபி (ஸல்)
அவர்கள் ஒரு போதும் கூறவேயில்லை. அப்படியிருக்க வேண்டுமென்றால் தன்னுடைய
பாசத்திற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்க
வேண்டும். ஆனால் அவர்களுக்கும் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.
திருமறைக் குர்ஆனில் அல்லாஹ், நல்லறங்களின் மூலமாகத்தான் தன்னிடத்தில் உதவி தேட வேண்டும் என்று கற்றுத் தருகிறான்.
பொறுமை, மற்றும் தொழுகை யின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் 2:45)
பல்வேறு ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடியதாக நல்லறங்களைத்தான் கூறியிருக்கிறாôகள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
1.
குகைக்குள் மூன்று நபர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்கள் ஒவ்வொருவரும்
தாங்கள் செய்த நல்லறங்களின் மூலமாகத்தான் இறைவனுடைய உதவியைக்
கோருகின்றார்கள்.
(பார்க்க: புகாரி 2272)
2. ஜும்ஆத்
தொழுகைக்கு வருபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, முதல்
நேரத்தில் வருபவர் ஒட்டகத்தை நெருக்கமாக்கியர் போன்றவராவார். இரண்டாவது
நேரத்தில் வருபவர் மாட்டையும் மூன்றாவது நேரத்தில் வருபவர் கொம்புள்ள
ஆட்டையும் நான்காவது நேரத்தில் வருபவர் கோழியையும் ஐந்தாவது நேரத்தில்
வருபவர் முட்டையையும் நெருக்க மாக்கியவர் போன்றவராவார் என்று
கூறியுள்ளார்கள்.
(பார்க்க புகாரி 881)
அதாவது ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை இவற்றைத் தர்மம் செய்து அதன் மூலம் இறை நெருக்கத்தைத் தேடியவர் போன்றவராவார்.
இந்தச்
செய்தியிலும் தர்மம் செய்தல், ஜும்ஆவிற்கு வருதல் போன்ற நல்லறங்கள் தான்
இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடிய காரியங்களாகக் கூறப்படுகிறது.
3. இரவு நேரங்களில் நின்று தொழுவது அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகும். (திர்மிதி 3472)
இந்த ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை என்ற நல்லறத்தைத் தான் இறைநெருக்கத் திற்குரியதாக கூறுகிறார்கள்.
மேற்கண்ட
ஹதீஸ்களிலிருந்து நாம் நல்லறங்கள் தான் இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி
வைக்கக்கூடிய "வஸீலா" துணைச் சாதனம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள
முடிகிறது.
மகான்களின் பொருட்டால் வஸீலா இணைவைப்பே!
மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணை வைத்தல் ஆகும். ஏனெனில் இறைவனை நிர்பந்திப்பவர் யாரும் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள்
இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது
அருள் புரிவாயாக என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை
வ-யுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத் துவதாகாது.)
ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6339)
நபிமார்களாக இருந்தாலும், மலக்குமார்களாக இருந்தாலும், மகான்களாக இருந்தாலும் இறைவனை யாரும் நிர்பந்திக்க முடியாது.
இதன்
காரணமாகத் தான் நபியவர்கள் "நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது
வலியுறுத்திக் கேளுங்கள். தந்தால் தா, தராவிட்டால் போ'' என்ற ரீதியில்
பிரார்த்திக்கக் கூடாது என்று வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் இறைவனை யாருமே
நிர்பந்திக்க முடியாது. யாருக்காகவும் செய்ய வேண்டும் என்ற இழிவை விட்டும்
இறைவன் பரிசுத்தமானவன்.
மகான்கள்
மூலம் வஸீலா தேடினால் இறைவன் தருவான் என்று கூறுவது இறைவனை இழிவுபடுத்தும்
குஃப்ரான காரியம் ஆகும். இணை வைத்தல் எனும் பெரும் பாவம் ஆகும்.
குர்ஆன், சுன்னாவின் அடிப் படையில் கூறப்படும் இந்தச் சட்டத்தை இமாம் அபூஹனீஃபாவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருவன்
"இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின்
பொருட்டால்'' என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரிய தாகும்.
ஏனென்றால் படைத்தவனிடத் தில் படைக்கப்பட்ட பொருளுக்கு எந்த அதிகாரமும்
இல்லை
ஹனஃபி மத்ஹப் நூல்: ஹிதாயா
பாகம்: 4, பக்கம்: 459
நபி (ஸல்)
அவர்களின் பொருட் டாலும், மகான்களின் பொருட்டாலும் இறைவனிடம் வஸீலா தேடலாம்
என்று கூறுபவர்கள். அதற்கு ஆதாரமாக "இறைநம்பிக்கை யாளர்களே! அல்லாஹ்வின்
பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:35) என்ற வசனத்தை
ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
இடைத்
தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
இவ்வசனத்தின்
துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே! என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில்
மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். "மகான்களும் வஸீலா தேட
வேண்டும்'' என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.
நம்பிக்கையாளர்களே
என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது.
இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன.
1. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
2.அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.
3. அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்.
இறைவனை
அஞ்சுவதும் அறப் போர் செய்வதும் எப்படி நபி (ஸல்) அவர்களுக்கும் கடமையோ
அதைப் போன்றுதான் அல்லாஹ்வின் பக்கம் ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்வதும்
அவர்கள் மீது கடமையாகும். எனவே, நபி(ஸல்) அவர்கள் வஸீலா தேடுவதற்கு எந்த
மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி உளற மாட்டார்கள்.
மகான்கள் கூட வஸீலா தேடு கிறார்கள் என்று பின்வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.
இவர்கள்
யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும்
நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை
எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை
அச்சப்பட வேண்டியதாகும்.
(திருக்குர்ஆன் 17:57)
மகான்களே
அல்லாஹ்விடம் நெருக்கத்திற்காக வஸீலாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனும்
போது, அவர்களை வஸீலாவாகக் கொள்ள லாம் என்பது முட்டாள்தனமாகும். தன்னுடைய
வயிற்றுக்கே சோறு இல்லாதவனிடம் எனக்கு பிச்சை போடு என்று கேட்பது
போன்றதாகும்.கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்