"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது

 அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதை நிரூபிக்கும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள்.

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

عهدا له ات لا يموت مريده *الا غلى ما تاب من مستاثم

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது இறைவனின் அனுமதியின்றி ஒரு போதும் எந்தச் செயலையும் செய்ததில்லை. அவரது சீடராக இருப்பவர் தமது பாவத்துக்காக மன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்பது (அல்லாஹ்) அவரிடம் செய்த உடன்படிக்கையாகும்.

மவ்லிதை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்தக் கையாளும் மலிவான தந்திரத்தை இந்தக் கவிதை அம்பலப்படுத்துகின்றது.


அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டக்கூடிய கற்பனைக் கதைகளை உண்மையான மூஃமீன்கள் நம்ப மாட்டார்கள் என்பதை மவ்லிதை உருவாக்கியவர்கள் நன்றாக அறிவார்கள். ஏகத்துவத்தையே தகர்க்கக்கூடிய வகையில் மவ்லிதில் கூறப்படும் கதைகள் அமைந்துள்ளனவே என்று ஆட்சேபனை வரும் என்பதையும் நன்றாக அறிவார்கள். அத்தகைய ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதற்காகத் தான் அப்துல் காதிர் ஜீலானி செய்த யாவுமே அல்லாஹ்வின் அனுமதியோடு தான் செய்யப்பட்டன. அவனுக்குப் போட்டியாகச் செய்யப்படவில்லை என்ற கருத்தை மேற்கண்ட கவிதையில் வலியுறுத்தியுள்ளார்கள். இப்படிச் செய்வதால் ஏகத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது அவர்களின் வாதம்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வின் அனுமதியோடு தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான காரியங்களைச் செய்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன?

எவற்றை அல்லாஹ் தனக்கு மட்டுமே உரித்தானது என்று திருக்குர்ஆனில் உரிமை கொண்டாடுகின்றானோ அவற்றைச் செய்ய மற்றவர்களுக்கு எப்படி அனுமதியளிப்பான்?

அப்படியே அனுமதிப்பது என்றால் இறைவனுடன் வஹீ என்னும் தொடர்புடைய நபிமார்களுக்குத் தான் அனுமதிப்பான். அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் நேரடியாக பேசி அனுமதி தந்தானா? அல்லது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவரிடம் அனுப்பி அனுமதியளித்தானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு மார்க்கம் முடிந்து விட்டது என்பதன் பொருள் என்ன? நானே இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் இல்லை என்ற நபிமொழியின் பொருள் என்ன? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்று அந்த அறிவீனர்கள் சிந்திக்கவில்லை.

அபத்தமான கருத்துக்களைக் கூறுவோர். அதை நியாயப்படுத்த முடியாத போது மதிப்பு மிக்க பெரியார் இவ்வாறு கூறினார் என்று கூறி அப்பாவிகளை வாயடைக்கச் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அல்லாஹ்வின் பெயரிலேயே இட்டுக்கட்டக் கூடியவரை ஜாஹிலிய்யாக் காலத்துக்குப் பின் இந்த மவ்லிதில் நாம் சந்திக்கிறோம்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?  என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 7.28)

மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டு அல்லாஹ்வின் மீது பழி போட்டவர்களை அல்லாஹ் இங்கே எச்சரிக்கிறான். மானக்கேடுகளிலெல்லாம் மிகப் பெரிய மானக்கேடான ஷிர்க்கையே அல்லாஹ்வின் மீது பழிபோட்டு மவ்லிதை எழுதியவர் நியாயப்படுத்த முயல்கிறார். இந்த வசனம் இவருக்காகவே அருளப்பட்டது போல் இல்லையா? இதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அதே வரியில் கூறப்படும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள். அப்துல் காதிர் ஜீலானியிடம் சீடராக இருந்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தானாம்.

அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இத்தகைய உறுதி மொழியை அல்லாஹ் வழங்கவில்லை. அவர்களிடம் சீடராக இருந்தவர்களில் பலர் மறுமையில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன.

எனது சமுதாயத்தில் சிலர் இடப்புறமாகக் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் என் தோழர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். அதற்கு இறைவன் நீ அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் புகாரி 3349, 3447

மற்றொரு அறிவிப்பில்

ஹவ்ல் அல் கவ்ஸர் தடாகத்திலிருந்து சில மக்கள் தடுக்கப்படுவார்கள். என் தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். அப்போது முஹம்மதே உனக்குப் பின் இவர்கள் புதிதாக உருவாக்கியவைகளைப் பற்றி நீர் அறிய மாட்டீர் எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி, 4625, 4740, 6526, 6576, 6582

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நல்லறத் தோழர்கள் கூட பாவமன்னிப்புப் பெற்றவர்களாக மரணிக்கவில்லை. அத்தகைய உத்தரவாதத்தைப் பெறவில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பாவமன்னிப்புப் பெற்றிருந்தால் அவர்கள் இடப்புறமாகப் பிடிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதருடைய சீடர்களுக்கு வழங்காத உறுதிமொழியை அப்துல் காதிர் ஜீலானியுடைய சீடர்களுக்கு அல்லாஹ் வழங்கி விட்டான் என்று கூறும் இந்தக் கவிதையைப் படிக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் இத்தகைய கவிதைகளைத் தீயிலிட்டுப் பொசுக்க வேண்டாமா? நபிகள் நாயகத்தை உண்மையாகவே நேசிக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும்.

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் சிலர் மற்ற சிலரை விட தமது வாதத்தை அழகுற எடுத்து வைக்கக்கூடும். நான் கேட்கும் வாதத்தினடிப்டையில் அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்து விடுவேன். பிறரது உரிமையை ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதியை வழங்குகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்குகளைக் கொண்டு வர முடியும். அவர்களைத் தமது வாதத் திறமையால் ஏமாற்றி தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று விட முடியும். ஆனால் மறுமையில் நரக நெருப்பை அடைவார் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற காரணத்துக்காக செய்த பாவம் அனைத்துக்கும் மன்னிப்பை நபித் தோழர்கள் பெறவில்லை. பெறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் போது இவர் நரகிலிருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் சென்று தேடிப்பார்த்த போது அவர் மோசடி செய்த ஒரு ஆடையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 3074

கைபர் போல் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உடனே மக்களின் முகங்கள் மாறுதலடைந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்து விட்டார் என்றார்கள். அவரது பொருட்களை மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் பெறுமதியில்லாத ஒரு மாலையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933,

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குriயவராக இருந்துள்ளார். மற்றொருவர் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல் மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான் மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு இத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?

கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?

ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் எண்ணற்ற நபிமொழிகள் மற்றும் தர்க்க ரீதியான அறிவிப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றின் துணையுடன் முஹ்யித்தீன் மவ்லிதின் அபத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினோம்.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கும் மேலும் சில வரிகளைப் பாருங்கள். இவை இஸ்லாத்திற்கு முரணானவை என்பதற்கு நாம் இதுவரை எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும்.

يا قدوة الاخيار *اكشف لنا الاسرار

  நல்லோர்களால் பின்பற்றப்படுபவரே இரகசியங்களை எங்களுக்குத் திறந்து காட்டுங்கள்.

தெளிவான மார்க்கத்தில் என்ன இரகசியம் உள்ளது? பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்தவர் இதை எப்படித் திறந்து காட்டுவார்? அறிவுடையோரே சிந்தியுங்கள்.

انتم غياث الناس *عن خطفة الخناس

بالحفظ للانفاس *فارفع لنا الاستار

  ஆத்மாக்களை காப்பதன் மூலம் ஷைத்தானின் தாக்குதலை விட்டும் மக்களை இரட்சிப்பவர் நீங்களே எனவே எங்களுக்குத் திரைகளை விலக்குங்கள்.

ஆத்மாக்கள் அல்லாஹ்வின் கைவசம் உள்ளன. மற்றவர்களின் ஆத்மாக்களைக் காப்பது கிடக்கட்டும். தமது ஆத்மாவையே ஒருவரால் காத்துக் கொள்ள முடியாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படை. உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்தி வை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் துஆச் செய்ததிலிருந்து இதை அறியலாம்.

انا لك الغلمان *راجوك للاحسان

  நிச்சயமாக நாங்கள் உங்கள் அடிமைகள். பேருபகாரம் செய்ய உங்களை எதிர்பார்க்கிறோம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் அடிமையாக இருக்க முடியாது என்ற இஸ்லாத்தின் அடிப்படை அப்பட்டமாகத் தகர்க்கப்படுகிறது. என்றோ மரணித்தவர் பேருபகாரம் செய்வார் என்று சித்தரிக்கப்படுகின்றது.

رزقا لنا الرضوان *رفقا بنا مختار

  தேர்ந்தெடுக்கப்படுபவரே உங்கள் திருப்தியை எங்களுக்கு வழங்கி விடுங்கள். எங்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

மரணித்துவிட்ட அப்துல் காதிர் இந்தக் கேடுகட்ட கவிஞன் மேல் ஏன் திருப்தியுற வேண்டும்? இப்படி ஒருவன் பிதற்றுவான் என்பதை அறிய முடியாத நிலையில் உள்ள அப்துல் காதிர் ஜிலானி எப்படி இவர் மீது திருப்தியுற முடியும்? அவர் திருப்தியுற்றால் என்ன? திருப்பதியுறாவிட்டால் என்ன? அவரது திருப்தியைப் பெற்றால் தான் மறுமையில் வெற்றி பெற முடியுமா? அப்துல் காதிர் ஜீலானி இந்தக் கவிஞனிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் அப்துல் காதிர் ஜீலானி தான் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியா? இவர் மென்மையாக நடக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும்? இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பக் கூடிய அளவுக்கு அபத்தங்கள்.

بل نحن كالاشجار *انتم لها الامطار

  நாங்கள் மரங்களைப் போன்றவர்கள். நீங்கள் மழை போன்றவர்.

மழையின்றி மரங்கள் வாழ முடியாதது போல் அப்துல் காதிர் ஜீலானியின்றி மக்கள் வாழ முடியாதாம். எல்லா அதிகாரமும் பெற்று இவர் விளங்கும் போது அல்லாஹ் என்று ஒருவன் எதற்காக?

ومسنا الحاجات *جئناك بالمزجات

فاوف كيل نجاة *لنا اولى الاعسار

  எங்களுக்குத் தேவைகள் ஏற்பட்டுள்ளன. பைகளுடன் உங்களிடம் வந்து விட்டோம். வெற்றியை நிறைவாக சிரமப்படும் எங்களுக்கு அளந்து போடுங்கள்.

இப்படி அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய அனைத்தையும் இறந்தவர்களிடம் கேட்கிறார். அல்லாஹ்வின் அதிகாரங்களனைத்தையும் அப்துல் காதிருக்கு வழங்குகிறார்.

بشرى لمن قد زار *روض الولي البار

بالحفظ للاخطار *بل عن عذاب النار

  இந்த நல்ல இறைநேசரை ஸியாரத் செய்தவர்கள் துன்பங்களை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும பாதுகாப்புப் பெறுவதற்காக நல்வாழ்த்துக்கள்.

அவரது கப்ரை ஸியாரத் செய்தவர்கள் எந்தத் துன்பமும் அடைய மாட்டார்கள் என்று யார் உத்தரவாதமளித்தது? அவரது கப்ரை ஸியாரத் செய்த ஏராளமானோர் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனரே? இதையெல்லாம் அறியாமல் இந்தக் கவிஞன் உளயிருக்கிறான்.

لولاه لا افلاح *للجن والابشار

  இவர் இல்லை என்றால் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் எந்த வெற்றியும் கிடையாது.

என்று பிதற்றியுள்ளான். இவர் பிறப்பதற்கு முன் எத்தனையோ நபிமார்கள், அவர்கள் வழி நின்ற மூஃமின்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர் மரணித்த பின்பும் எத்தனையோ நன்மக்கள் உலகில் தோன்றியுள்ளனர். இவரைப் பற்றி அறிந்திராத இவரது போதனைகளைப் படித்திராத எத்தனையோ மக்கள் நல்வழியில் செல்கின்றனர். இந்த உண்மைகளை உணராமல் இவரால் தான் மனித இனமும் ஜின்கள் இனமும் வெற்றியடைய முடியும் என்கிறான்.

இதன் மூலம் எல்லா நபிமார்களையும் நபித்தோழர்களையும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துகிறான்.

هذا ذميم الحال *محمود ذو الاثقال

يرجو نداك البال *خذه عن الاخطار

احفظه من عاهات *واحرسه عن آفات

تقضي له الحاجات *تمحو له الاوزار

ادخله فى الاحزاب *واعدده فى الاصحاب

واقبله من احباب *يا عالي المقدار

 இதோ இழிந்த நிலையில் உள்ள பாவச் சுமைகளைச் சுமந்துள்ள மஹ்மூத் (லெப்பை) இருக்கிறேன். உயர்ந்த அந்தஸ்துடையவரே என்னை துன்பங்களிலிருந்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுங்கள். எனது தேவைகளை நிறைவேற்றுங்கள். என் பாவங்களை அழித்து விடுங்கள். வெற்றி பெற்ற கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுங்கள். தோழர்களில் ஒருவராக என்னைக் கணக்கிடுங்கள். நேசர்களில் ஒருவராக என்னை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்.

இதை எழுதிய மஹ்மூத் லெப்பை இதை எழுதிய ஒரே காரணத்துக்காக இழிந்த நிலையில் இருப்பதும் பாவ மூட்டைகளைச் சுமந்திருப்பதும் உண்மை. இந்த மவ்லிதில் உள்ள வரிகளில் இந்த வரி மட்டுமே நூறு சதவிகிதம் உண்மை. அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

அடுத்து தேவைகளை அப்துல் காதிர் ஜீலானி தான் நிறைவேற்ற வேண்டுமாம். பாவங்களை அவர் தான் அழிக்க வேண்டுமாம். நல்லோர் பட்டியலில் நபித்தோழர்கள் பட்டியலில் நேர்களின் பட்டியலில் அவர் தான் சேர்க்க வேண்டுமாம்.

இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவுக்காவது அறிந்து வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயமே! என்றோ மரணித்துவிட்ட ஒரு மனிதரை எல்லா வகையிலும் கடவுளாக்கி ஏகத்துவத்தைத் தரைமட்டமாக்கி நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் இக்கவிதைகளைப் படிக்கலாமா? வீட்டில் வைத்திருக்கலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருள் தெரியாத காலத்தில் ஏமாற்றப்பட்டவர்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடக் கூடும். மவ்லிதின் பொருள் தெரிந்த பின் குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் முரணாக அமைந்திருப்பது புரிந்த பின் இதை ஓதலாமா? அல்லாஹ் இந்தப் படுபாதகச் செயலை மன்னிப்பானா? இன்றே இப்போதே இதை விட்டொழிக்க வேண்டாமா?

இந்த மவ்லிதுகள் சிலரது வயிற்றுப் பிழைப்புக்காக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. கொடுக்கப்படும் கூலிக்காகவும், சுவையான உணவுக்காகவும் இவை ஓதப்படுகின்றன. இதைத் தவிர இதற்கு வேறு நோக்கம் இல்லை. முஹ்யித்தீன் மவ்லிதே இதை ஒப்புக் கொள்கிறது.

முஹ்யித்தீன் மவ்லிதின் பதினோறு பாடல்கள் உள்ளன, இவற்றில் பத்துப் பாடல்களின் இறுதியில் மறவாமல் உணவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மவ்லிது என்பது வயிற்றுப் பிழைப்புக்காகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள குறுக்கு வழி என்பதை அறியலாம்.

1وسماعه والحاضرين واهلهم *ومطعمهم حبا له كل لحظة

  இதைக் கேட்டவர்களுக்கும் வந்திருப்பவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் அவர் மேல் கொண்ட அன்பால் இவர்களுக்கு உணவளித்தவர்களுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் மன்னிப்புக் கிடைக்கட்டுமாக.

2والسامعيه ومن للسمع قد حضروا *ومطعميهم على السم الغوث ذى العظم

  இதைக் கேட்டோரையும் கேட்பதற்காக வருகை புரிந்தோரையும் மகத்துவமிக்க இரட்சிகராகிய இவர் பெயரால் வந்தோருக்கு உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

மூன்றாவது பாடலில்

3وعن حاضري ههنا والذى *يداريهم باسم غوث عظيم

  இங்கே வந்தோரையும் மகத்தான இரட்சகராகிய இவர் பெயரால் வாரி வழங்கியோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

நான்காவது பாடலில்

4والسامعين المطعمين *على البر الجواد

5والسمع المطعمينا *على اسمه بالغرام

  வள்ளலாகிய இந்த நல்லவரின் பெயரால் உணவளித்துக் கேட்டவர்களையும் மறுக்கப்படாத உணவை (அதவாது தரமான சுவையான உணவை) அனைவருக்கும் குருவான இவர் பெயரால் தயாரித்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

8واغفرن للحاضرين هنا *والمضيف باطيب النعم

  இங்கே வருகை தந்தவர்களையும் சுவையான உணவை விருந்தளித்தவர்களையும் மன்னித்துவிடு.

6عفوا عن الذكار والسموع *لمدحه الحضار واتلصنوع

مطعوماناللذ ليس بالمنوع *على اسم شيخ الكل ذى ال

9وعفى عن سامعينا *مدحكم والصانعينا

طعمهم والحاضرينا *ههنا والذاكرينا

  உங்கள் புகழைச் செவியுற்றவர்களையும் இவர்களுக்கு உணவு தயாரித்தவர்களையும் இங்கே வருகை புரிந்தோரையும் (இவரை) திக்ரு செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பாயாக.

 இதைக் கேட்டோர், வருகை தந்தோர், சங்கைக்குரிய இந்த இரட்சகருக்காக இவர்களுக்கு உணவளித்தோர் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

பதினோராவது பாடலில்

10والسامعين له من هو حاضر *مع مطعميهم للغياث الاكرم

11في حلقة الاذكار *والمطعم المدرار

  இந்த திக்ரு சபைக்கு வந்தோரையும் தொய்வின்றி தொடராக உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னிக்கட்டும்.

என்றெல்லாம் மறவாமல் தீனியைக் குறிப்பிடுகிறார். இதை எழுதியவருக்கு அப்துல் காதிர் ஜீலானி மேல் உள்ள அன்பு காரணமன்று.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்க்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட மவ்லிதுகளைப் புறக்கணிக்கவும் ஒழித்துக் கட்டவும் அல்லாஹ் அருள் புரிவானாக.

(p j எழுதிய 'முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு' நூலிலிருந்து )


காய்ச்சலுக்கு இடமாற்றம்
https://shirkinethiri.blogspot.com/2021/11/6.html

கைக்குழந்தை நோற்ற நோன்பு
https://shirkinethiri.blogspot.com/2021/11/kai-kulandai-notra-nonpu.html

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்
https://shirkinethiri.blogspot.com/2021/11/abdulcaderum-shariyathum.html

அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
https://shirkinethiri.blogspot.com/2021/11/4.html

மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/6_6.html

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்த முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/7.html


சூம்பிய ஹம்மாதின் கை
https://shirkinethiri.blogspot.com/2021/11/8.html

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/9.html

கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கிய முஹ்யித்தின்அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/10.html

அப்துல் காதிர் ஜீலானி பார்த்தாலே நேர்வழி?
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post.html

அப்துல் காதிர் ஜீலானியிற்கு கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2021/11/11.html

கனவில் நடந்த கொலை!

https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_6.html

ஜின்னிடமிருந்து மீட்ட அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_16.html

எல்லா நேரமும் இரட்சகர் (?) அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_79.html

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர் அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/11_6.html

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_58.html

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2017/05/yaar-intha-abdul-cader.html

முஹைதீனும் முட்டாள்களும்
https://shirkinethiri.blogspot.com/2016/03/muhiyaddeenum-muttalkalum.html

அப்துல் காதிர் வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார்
https://shirkinethiri.blogspot.com/2015/10/abdulcader-varamattar-nirupikka-thayaar.html

யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க்கா ?
https://shirkinethiri.blogspot.com/2015/10/yaa-muhiyaddeen-entru-alaikkalaama.html

முஹைய்யத்தீன் மெளலூதின்சி ன்ன துஆ
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-sinna-duvaa.html

மார்க்கம் மரணப் படுக்கையில்  உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே
https://shirkinethiri.blogspot.com/2021/11/5.html

அப்துல் காதிர் ஜீலானி  அவர்களுக்கு 
இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-part-01.html



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்