6 மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன்
وعاش خضر سلاما
*بضعا وتسعين عاما
مع ما حباه الغلاما
*حفاظ خير الكلام
لسن سبع كميل
*سبع شهور قليل
கிள்று என்பார் தொண்ணுறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த குழந்தைகள் ஏழு ஆண்டுகள் ஏழு மாதங்களை அடைந்த போது குர்ஆனை மனனம் செய்தவரானார்.
முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்ற இந்த மூன்று வரிகளின் பொருள் இது. இதில் விபரீதமாகவோ, மார்க்கத்திற்கு முரணாகவோ ஏதும் இல்லையே என்று தோன்றலாம். இந்த வரிகளுக்கு விளக்கமான ஹிகாயத் எனும் பகுதியை வாசித்தால் இதில் உள்ள விபரீதங்கள் தெய வரும்.
وروي انه قال رضي الله عنه لخادمه خضر اذهب الى الموصل وفي ظهرك ذرية اولهم ذكر اسمه محمد يعلمه القران رجل اعجمي اسمه علي بغدادي في سبعة اشهر ويستكمل حفظه وهو ابن سبع سنين بلا نظر وتعيش انت اربع وتسعين سنة وشهرا وسبعة ايام بلا خطر وتموت بارض بابل فكان جميع ذلك بلا تفاوت
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஊழியர்களிடம் கூறியதாவது. நீ மூஸில் என்ற ஊருக்குச் செல்! உன் முதுகில் பல சந்ததிகள் உள்ளனர். அவர்களில் முதல் குழந்தை ஆண் குழந்தை. அக்குழந்தையின் பெயர் முஹம்மத். கண் தெரியாதவரும் பாக்தாத்தைச் சேர்ந்தவரும் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவருமான அலி என்பார் ஏழு மாதங்களில் அக்குழந்தைக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார். ஏழு வயதில் பாராமல் குர்ஆனை மனனம் செய்வார். நீ தொண்ணுற்று நான்கு வருடங்கள். ஒரு மாதம் ஏழு நாட்கள் சந்தேகமின்றி உயிர் வாழ்வாய். பாபிலோன் என்னும் ஊரில் நீ மரணிப்பாய். அப்துல் காதிர் ஜீலானி கூறியது ஒன்று கூட விடாமல் அப்படியே நடந்தேறியது.
* கிள்று என்பவருக்குப் பல குழந்தைகள் பிறக்கும் என்பதும்
* அவரது முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் என்பதும்
* அக்குழந்தையின் பெயர் முஹம்மத் என்பதும்
* அக்குழந்தைக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர் யார் என்பதும்
* எத்தனை வயதில் அக்குழந்தை குர்ஆனை கற்றுக் கொள்ளும்? எத்தனை வயதில் மனனம் செய்யும் என்பதும்
* கிள்று என்பார் இவ்வுலகில் வாழக்கூடிய நாட்கள் எவ்வளவு என்பதும்
* அவருக்கு மரணம் எப்போது? எங்கே? ஏற்படும் என்பதும்
அப்துல் காதிர் ஜீலானிக்கு முன்னமே தெரிந்திருந்ததாக இந்தக் கதை கூறுகின்றது.
இந்த மறைவான செய்திகளை அப்துல் காதிர் ஜீலானியால் அறிந்திருக்க இயலுமா? இஸ்லாமிய அடிப்படையில் இதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? நிச்சயமாக இல்லை. மாறாக இந்தக் கதையை மறுக்கக் கூடிய வகையில் ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் கிடைக்கின்றன.
மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அறிய முடியும் என்றால் மனிதனை விட இறைவனுடன் மிக நெருக்கமாக உள்ள மலக்குகள், மனிதனை விட அதிக ஆற்றல் வழங்கப்பட்ட ஜின்கள், மனிதர்களில் சிறந்தவர்களான நபிமார்கள், அவர்களிலும் மிகச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகியோர் மறைவான செய்திகளை அறிந்திருக்க முடியும். இவர்களெல்லாம் மறைவானவற்றை அறிய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது.
மலக்குகளால் அறிய முடியாது
ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைக்க நாடிய போது மலக்குகள் அதில் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். இறைவன் ஆதம் (அலை) அவர்களின் அறிவுத் திறனை நிரூபித்த பின் மலக்குகள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர்.
(திருக்குர்ஆன் 2:31, 32)
மலக்குகளால் மறைவானவற்றை அறிய முடியவில்லை. அறிய முடியாது என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.
ஜின்களால் அறிய முடியாது
ஜின்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புகிறோம். நம்ப வேண்டும். ஜின்கள் எனும் படைப்பினர் மனிதனைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். அதனால் தான் ஜின்களும், மனிதர்களும் தன்னை வணங்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
பகுத்தறிவில் ஜின்கள் மனிதர்களைப் போன்றவர்கள் என்றாலும் மனிதர்களைப் விடப் பன்மடங்கு ஆற்றல் வழங்கப்பட்டவர்கள் என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிகிறோம். கண் இமைக்கும் நேரத்தில் அண்டை நாட்டு ராணியின் சிம்மாசத்தைக் கொண்டு வரும் அளவுக்கு ஜின்கள் ஆற்றல் பெற்றிருந்தனர். மேலும் சுலைமான் நபிக்கு மிகப் பெரும் காரியங்களை அவர்கள் செய்து கொடுத்தனர் என்பதையும் திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன் என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
(திருக்குர்ஆன் 27:39)
அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர் என்று கூறினோம்.
(திருக்குர்ஆன் 34:13
மனிதனை விட ஜின்களின் ஆற்றல் அதிகம் என்றாலும் மறைவானவற்றை அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
(திருக்குர்ஆன் 34:14)
ஜின்களிடம் வேலை வாங்கிய சுலைமான் நபி கைத்தடியில் சாய்ந்த நிலையில் மரணித்து விடுகிறார்கள். சுலைமான் நபி உயிருடன் தங்களை கவனித்துக் கொண்டிருப்பதாக ஜின்கள் எண்ணி, தொடர்ந்து வேலை செய்து வந்தனர். கைத்தடியைக் கரையான்கள் அத்து, அதனால் சுலைமான் நபியின் உடல் கீழே விழும் வரை சுலைமான் நபி மரணித்ததை ஜின்கள் அறிய முடியவில்லை. தங்களுக்கு மறைவான செய்திகளை அறியும் திறன் கிடையாது என்பதையும் ஜின்கள் உணர்ந்து கொண்டனர் என்ற விபரங்களை இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.
மனிதனை விட அதிக ஆற்றல் பெற்ற ஜின்கள் தம் கண் முன்னே நடந்த அதே நேரம் வெளிப்படையாகத் தெரியாத ஒரு நிகழ்வை அறிய முடியவில்லை எனும் போது அப்துல் காதிர் ஜீலானிக்கு இத்தனை மறைவான விஷயங்கள் எப்படி தெரிந்திருக்க முடியும்?
நபிமார்களால் அறிய முடியாது
நபிமார்கள் மறைவான விஷயங்களை அறிவார்களா? என்றால் இறைவனால் அறிவிக்கப்பட்டவைகளைத் தவிர மறைவான எந்த விஷயத்தையும் அறிய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாக அறிவிக்கின்றது.
நபிமார்களில் அதிகமான வசதிகளும் ஆற்றலும் வழங்கப்பட்டவர் சுலைமான் (அலை). பறவைகளின் மொழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தனர். உலகில் எவருக்குமே வழங்கப்படாத வல்லமை மிக்க ஆட்சி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இத்தனை வல்லமைகள் வழங்கப்பட்டிருந்தும் மறைவான செய்திகளை அவர்களால் அறிய முடியவில்லை.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும் (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியது.
(அல்குர்ஆன் 27:20,21,22)
அப்பறவை எங்கே சென்றது என்பதும் சுலைமான் நபிக்குத் தெயவில்லை. அது கொண்டு வந்த செய்தியும் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒன்றை தம் கண்களுக்கு எட்டாத காரணத்தால் சுலைமான் நபி அறிய முடியவில்லை என்றால் வருங்காலத்தில் நடக்கவுள்ள ஏராளமான செய்திகளை அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்திருக்க முடியும்?
ஈஸா (அலை) அவர்கள் ஏராளமான அற்புதங்கள் வழங்கப்பட்டவர். அற்புதமான முறையில் பிறந்து அற்புதமான முறையில் இன்று வரை உயிருடன் இப்பவர். உங்கள் வீட்டில் நீங்கள் சேமித்து வைத்தவற்றை நான் உங்களுக்குத் தெவிப்பேன் என்று அவர்கள் கூறியதிலிருந்து
(அல்குர்ஆன் 3.49)
சில மறைவான செய்திகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதை அறியலாம்.
இத்தகைய சிறப்புகள் வழங்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களை இறைவன் மறுமையில் விசாரிப்பான். உன் சமுதாயத்தினர் உன்னையும் உன் அன்னையையும் வணங்க வேண்டுமென நீர் தான் கூறினாரா? என்று வினவுவான். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார்.
(அல்குர்ஆன் 5.116)
நாம் உயிருடன் இருந்தாலும் இந்த மக்கள் செய்தவை எனக்கு மறைவாக இருந்தன. அதனால் அதை நான் அறிய மாட்டேன். நீயே அறிவாய் என்று ஈஸா (அலை) அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.
அப்துல் காதிர் ஜீலானியோ பல ஆண்டுகளுக்குப் பின் நடக்கவுள்ளதை அறிந்து கொண்டதாக இந்தக் கதை கூறுகிறது. குர்ஆனை நம்பக்கூடிய முஸ்லிம் இந்தக் கதையை எவ்வாறு நம்ப இயலும்?
மறைவானவை யாருக்கேனும் தெரியும் என்றால் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அறிந்திருந்தார்களா? என்றால் இல்லை என்று திருக்குர்ஆன் விடையளிக்கின்றது.
பல்வேறு நபிமார்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இறைவன் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறான்.
(முஹம்மதே!) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.
அல்குர்ஆன் 11:49
இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுது கோல்களை அவர்கள் போட்ட போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்த போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3:44
(முஹம்மதே!) இவை, மறைவான செய்திகள். இதை உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் அனைவரும் (யூஸுஃபுக்கு எதிராக) ஒரு மனதாக சூழ்ச்சி செய்த போது அவர்களுடன் நீர் இருக்கவில்லை.
அல்குர்ஆன் 12:102
மறைவானவற்றை நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அறியக் கூடுமோ என்று மக்கள் எண்ணிவிடக் கூடாது என்பதற்காக எனக்கு மறைவானவை தெரியாது என்று நபியவர்களைத் தெளிவாகவே இறைவன் கூறச் சொல்கிறான்.
அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 6:50)
என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன் (எனவும் கூறினார்.)
(அல்குர்ஆன் 11:31)
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 7.188)
இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர். மறைவானவை அல்லாஹ்வுக்கே உயன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:20)
வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 27:65)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இவ்வாறு அல்லாஹ் கூறச் செய்கின்றான் என்றால் மற்றவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?
மனிதர்களே! நீங்கள் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமாகவும், விருத்த சேதனம் (சுன்னத்) செய்யப் படாதவர்களாகவும் அல்லாஹ்வின் முன்னால் ஒன்று திரட்டப்படுவீர்கள். முதலில் எவ்வாறு படைத்தோமோ அவ்வாறே மீண்டும் உருவாக்குவோம் என்று இதைத் தான் அல்லாஹ் கூறுகிறான். முதலில் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஆடை அணிவிக்கப்படும். அறிந்து கொள்க! எனது சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு இடப்பக்கமாக (நரகத்தின் பக்கமாக) இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவா! அவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். உமக்குப் பின் அவர்கள் செய்ததை நீர் அறியமாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். நான் அவர்களுடன் இருந்த போது அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். என்னை நீர் கைப்பற்றியதும் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாய் நீதான் இருந்தாய். நீதான் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன் என்று நல்லடியார் (ஈஸா) கூறியது போல் நானும் கூறி விடுவேன். இவர்களை விட்டு நீர் பிந்தது முதல் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று என்னிடம் கூறப்படும், என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
புகாரி 3349, 3447, 4625, 4740, 6526
என் கணவருடன் முதலிரவு நடந்த பின் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நீ என்னருகில் எவ்வாறு அமர்ந்துள்ளாயோ அது போல் என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் தஃப் (சலங்கையில்லாத கொட்டு) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தமது தந்தையைப் பற்றி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்கள் என்று பாடினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறாதே! ஏற்கனவே கூறிக்கொண்டிருந்ததைக் கூறு என்றார்கள்.
புகாரி 4001, 5147)
ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்களம் சுமத்தப்பட்டு உண்மை நிலை தெரியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மனைவியைப் பிந்திருந்து இறைவன் ஆயிஷா (ரலி) அவர்களின் துய்மையைப் பற்றி அறிவித்த பின்பே உண்மை நிலவரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது என்ற வரலாற்று உண்மையும்,
(புகாரி 2661)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே மறைவானவை தெரியாது என்பதற்குத் தெளிவான சான்றுகள்.
இவ்வளவு சான்றுகளையும் தூர எறிந்துவிட்டு நபியவர்களுடன் ஒப்பிடும் போது ஒன்றுமற்றவரான அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான செய்திகள் தெரியும் என்று நம்பலாமா? அப்படி ஒருவர் நம்பினால் அவரிடம் கடுகளகாவது ஈமான் இருக்குமா? என்பதை மவ்லிது பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.
எவனோ முகவரியற்றவன் எழுதிய இந்தப் பாடல்களுக்காக மார்க்கத்தைப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டவர்களின் பேச்சை நம்பினால் திருக்குர்ஆனையும் நபிகளாரின் போதனைகளையும் மறுத்த குற்றம் ஏற்படாதா? என்பதைச் சிந்தியுங்கள். குர்ஆனையும், நபியையும் மறுத்த பின் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதையும் சிந்தியுங்கள்.
யூதர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுக் குப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வின் வேதத்தின் பால் வாருங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்