"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)
Showing posts with label மூட நம்பிக்கைகள். Show all posts
Showing posts with label மூட நம்பிக்கைகள். Show all posts

தன்னை அறிந்தவன், தன் இறைவனை அறிந்தான்

ஸூபிய்யாக்களால் புணையப்பட்டு நபி (ஸல்) அவர்களின் பெயரால் பரப்பப் பட்டு வரும் மற்றுமொரு செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:

"தன்னை அறிந்தவன், தன் இறைவனை அறிந்தான்"

குறித்த செய்தி ஒரு இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும் என்பதற்கு இந்த செய்தியை எந்த இமாம் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார் என்ற தகவலோ எந்த நபித்தோழர் அறிவித்தார் என்ற விபரமோ கிடையாது என்பதே போதிய சான்றாகும்.

எனினும் வழி கெட்ட ஸூபிகள் இதை ஒரு அடிப்படையாகக் கொண்டு சில விரிவுரை நூல்களை எழுதியுள்ளனர். இதில் எல்லாம் கடவும் என்ற அத்வைத கோட்பாட்டை போதித்த இப்னு அறபி என்பவர் "அர்ரிஸாலதுல் வுஜூதிய்யா என்ற நூலும் முஹம்மத் அல் ஹமரி என்பவர் "ஸூபிய்யாக்களின் அடிப்படை என்ற புத்தகத்திலும் இச் செய்திக்கு விரிவுரை செய்துள்ளனர். அத்துடன் ஸூபிய்யாக்களின் வரலாற்றுப் பட்டியலைத் தொகுத்த ஷ அரானி என்பவரும் இச் செய்தியை தனது "தபகாத்" என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்.

குறித்த செய்தி நபி மொழியல்ல இட்டுக் கட்டப்பட்டது என்பதை முல்லா அலி காரி , இமாம் இப்னு தைமிய்யாஹ், இமாம் ஸஹாவி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இமாம் ந வ வி அவர்களும் இது உறுதியான செய்தியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கறுப்பு நிறம் தரித்திரமா

கறுப்பு நிறமும், தரித்திரமும்

முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா?


பதில்

صحيح مسلم 451 - (1358) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وقَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ، " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ - وَقَالَ قُتَيْبَةُ: دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ - وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்காவில் பிரவேசித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 2638


صحيح مسلم 452 - (1359) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَا: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ»


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.  நூல்: முஸ்லிம் 2639