ஸூபிய்யாக்களால் புணையப்பட்டு நபி (ஸல்) அவர்களின் பெயரால் பரப்பப் பட்டு வரும் மற்றுமொரு செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:
"தன்னை அறிந்தவன், தன் இறைவனை அறிந்தான்"
குறித்த செய்தி ஒரு இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும் என்பதற்கு இந்த செய்தியை எந்த இமாம் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார் என்ற தகவலோ எந்த நபித்தோழர் அறிவித்தார் என்ற விபரமோ கிடையாது என்பதே போதிய சான்றாகும்.
எனினும் வழி கெட்ட ஸூபிகள் இதை ஒரு அடிப்படையாகக் கொண்டு சில விரிவுரை நூல்களை எழுதியுள்ளனர். இதில் எல்லாம் கடவும் என்ற அத்வைத கோட்பாட்டை போதித்த இப்னு அறபி என்பவர் "அர்ரிஸாலதுல் வுஜூதிய்யா என்ற நூலும் முஹம்மத் அல் ஹமரி என்பவர் "ஸூபிய்யாக்களின் அடிப்படை என்ற புத்தகத்திலும் இச் செய்திக்கு விரிவுரை செய்துள்ளனர். அத்துடன் ஸூபிய்யாக்களின் வரலாற்றுப் பட்டியலைத் தொகுத்த ஷ அரானி என்பவரும் இச் செய்தியை தனது "தபகாத்" என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்.
குறித்த செய்தி நபி மொழியல்ல இட்டுக் கட்டப்பட்டது என்பதை முல்லா அலி காரி , இமாம் இப்னு தைமிய்யாஹ், இமாம் ஸஹாவி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இமாம் ந வ வி அவர்களும் இது உறுதியான செய்தியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இச்செய்தி தொடர்பாக மேற்படி இப்னு அறபி என்பார் " அறிவிப்பாளர் வரிசை ரீதியாக இச்செய்தி உறுதியில்லாதாததாக இருந்தாலும் "கஷ்ப்" ரீதியில் எம்மிடத்தில் உறுதியானது!!?? எனக் கூறியுள்ளார்.
ஹதீஸ்களை தேடி, அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து, படித்து, விளங்க சோம்பல் கொண்ட ஸூபிக்கள் இமாம் புஹாரி, முஸ்லிம், அபூ தாவுத், திர்மிதி போண்ற ஆயிரக்கணக்கான ஹதீஸ்கலை அறிஞர்களது பணியை கொச்சைப் படுத்தும் விதமாக இவ்வாறு கூறியுள்ளது கண்டனத்துக்குரியதாகும்.
நாம் ஏற்கனவே கூறியவாறு ஒரு வாதத்திற்காக "கஷ்ப்" அடிப்படையில் இச் செய்தி எம்மிடத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்றும் ஏற்கனவே இப்னு அறபி என்பாருக்கு "கஷ்ப்" அடிப்படையில் இச் செய்தி உறுதி செய்யப்பட வில்லை அவர் பொய் கூறினார் என்பது எமக்கு "க்ஷ்ப்" மூலம் தெளிவுபடுத்தப்பட்டது என நாம் கூறினால் ஹதீஸ் கலையின் அரிச்சுவடி தெரியாத ஸூபிகள் என்ன பதில் கூற முடியும்?!! என்ற ரீதியில் சிந்தித்தாலே ஹதீஸ்களை சரி பிழை காண "கஷ்ப்" ஒரு அலவு கோல் கிடையாது என்பதை நாம் அழகாக புரிந்து கொள்ள முடியும்.
எனவே ஸூபிகளால் நபிகளாரின் பெயரில் பரப்ப பட்டு வரும் செய்தி இட்டுக் கட்டப் பட்டது என்பதால் கண்டிப்பாக நாம் இதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்