"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஷிர்க் (இணைவைத்தல்) பரவியது எப்படி ?


பூமியில் எப்படி ஷிர்க் பரவியது என நீங்கள் சிந்தித்தால், நல்லடியார்கள் மீது கொண்ட அளவு கடந்த மரியாதையும், பக்தியும் அவர்களது அந்தஸ்துகளை பெரியளவிற்கு உயர்த்தியதுதான் இதற்குக் காரணம் என்பதை தெளிவாக உணர முடியும். நூஹ் (அலை)யின் சமுதாயத்தினர் அனைவரும் ஏகத்துவ வாதிகளாக இருந்தனர், அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்கி வழிப்பட்டனர். பூமியில் எங்கும் அப்போது ஷிர்க் நிலைகொண்டு இருக்கவில்லை.

அவர்களிடையே ஐந்து நல்லடியார்கள் காணப்பட்டனர். அவர்கள், 'வுத், ஸுவாஉ, யஊஸ், யஊக், நஸ்ர்" அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள், மக்களுக்கு மார்க்கத்தை போதித்தார்கள். அவர்கள் இறந்து விட்ட பொழுது மக்கள் கவலை அடைந்தனர். வணக்க வழிபாடுகளை நமக்கு நினைவூட்டக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுமாறு நமக்கு ஏவக்கூடியவர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்று விட்டனர் எனக் கவலையோடு கூறினர்.

அவ்வேளை ஷைத்தான் அச்சமுதாயத்தவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்த ஆரம்பித்தான். அவர்களின் உருவங்களை சிலை வடிவில் அமைத்து உங்களது மஸ்ஜித்களுக்கு அருகில் நிறுத்தினால் அவர்களைக் காணும்போது வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ஓர் புத்துணர்வு ஏற்படும் எனச் சொன்னான். அவர்கள் ஷைத்தானுக்கு வழிப்பட்டார்கள்,

சிலைகளைச் அடையாளச்சின்னங்களாக, வணக்க வழிபாடுகளுக்கும் நல்ல காரியங்களுக்கும் எடுத்தார்கள். உண்மையிலே அவர்கள் அதை பார்க்கும் போது வணக்க வழிபாடுகள் செலுத்துவதற்குரிய ஞாபகம் அவர்களுக்கு ஏற்பட்டது. பல வருடங்கள் கழிந்தன, அந்தத் தலைமுறையினர் உலகத்தை விட்டுச் சென்று விட்டனர். அதற்கு பின் அவர்களது சந்ததிகள் உருவானார்கள், அவர்களது மூதாதையர்கள் அச்சிலைகளைப் புகழ்வதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்;. எனவே அவர்களும் அதை கண்ணியப்படுத்தினார்கள், பெருமைப்படுத்தினார்கள் அவர்களுக்கு, அச்சிலைகள் நல்லடியார்கள் எனச் சொல்லப்பட்டிருந்தது.

அதன் பின் அவர்களது சந்ததிகள் உருவானார்கள் அவர்களுக்கு இப்லீஸ் கூறினான், 'உங்களுக்கு முன் சென்றவர்கள் இதை வணங்கி வந்தனர். உங்களுக்கு ஏதாவது இன்னல்கள் சோதனைகள் வரும்போதும், தேவைகள் ஏற்படும் போதும் அவைகளை நாடுங்கள் அவைகளிடம் உதவி தேடுங்கள் அவைகளை வணங்குங்கள் என்று கூறினான். நூஹ் (அலை) அவர்களை அவர்களுக்கு இறைத் தூதராக அனுப்பப்படும் வரை அச்சிலைகளை வணங்கினர்

அவர்கள் 950 வருடங்கள், அவர்களை ஏகத்துவத்தின் பால் அழைத்தார்கள். எனினும் சொற்பனமானவர்களேயன்றி ஏனையோர் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் சாபமும் கோபமும் இறை நிராகரிப்பாளர்கள் மீது இறங்கியது. அவர்களை 'தூபான்" எனும் பெரும் வெள்ளத்தைக் கொண்டு அல்லாஹ் அழித்தான். இது நூஹ் நபியின் சமூகத்துக் ஏற்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையாகும்;.

இப்றாஹிம் நபியின் சமுதாயத்தில் எவ்வாறு ஷிர்க் பரவியது?
அவர்கள் நட்சத்திரங்களையும், தாரகைகளையும் வணங்கி வழிப்பட்டார்கள். உலகை அவைகள் ஆட்சி செய்கின்றன என்றும், கஷ்டங்களை போக்கக்கூடியன எனவும், பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியன எனவும், தேவைகளை நிறைவேற்றக்கூடியது எனவும் நம்பிவந்தனர்.

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் உள்ள இடைத்தரகர்களாக நட்சத்திரங்களை அவர்கள் எண்ணி வந்தனர். நிச்சயமாக உலகத்தின் ஆட்சி அனைத்தும் அவைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைத்தனர். பின் அவர்கள் நட்சத்திரங்கள் மற்றும் வானவர்கள் வடிவில் சிலைகளை அமைத்தனர்.

இப்றாஹிம் நபியின் தந்தை சிலைகளை செய்து தனது பிள்ளைகளிடம் விற்று வருவதற்காகக் கொடுப்பார். இப்றாஹிமும் சிலைகளை விற்பதற்கு செல்லக்கூடியவராக இருந்தார், இப்றாஹிம்

நபி அதை விற்கும் போது 'உங்களுக்கு எந்தத்தீங்கோ நன்மையோ செய்ய முடியாத இச்சிலைகளை வாங்குபவர் யார்? என்று கூறி விற்பனைசெய்தார்கள்.

மேலும் 'இதை வாங்குபவருக்கு இது எந்தத்தீங்கும் பயனும் அளிக்காது" என்றும் சொல்வார்.

அவரது ஏனைய சகோதரர்கள் அனைத்து சிலைகளையும் விற்று விட்டு வருவார்கள். இப்றாஹீமோ கொண்டு சென்ற சிலைகளோடு மீண்டும் வருவார். பின் அவரது தந்தையையும், சமுதாயத்தையும், சத்தியத்தின் பால் அழைத்தார்கள்.

இந்தச் சிலைகள் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில்லை என்று எடுத்துக் கூறி ஏகத்துவத்தை நிலைநாட்டினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. பின்னர் சிலைகளை உடைக்கிறார்கள், அதன் காரணமாக அவரை நெருப்பில் இட்டு எறிக்க முனைந்தனர், ஆனால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைப் பாதுகாத்தான்.

ஷிர்க் (இணைவைத்தல்) பரவியது எப்படி ?


குழம்பிவிட்ட உள்ளங்கள்
சமாதிகளில் அடக்கப்பட்டவர்கள் தங்களுக்கே எந்த ஒரு நன்மையும் செய்து கொள்ள இயலாதவர்களாக, சக்தியற்றவர்களாக இருக்கும்போது, பிறருக்கு எப்படி உதவி புரிய முடியும்? சமாதிகளை, சிலைகளை புனிதப்படுத்துபவர்கள், அதற்கு பயந்து வாழக்கூடியவர்களின் நிலமையைப் பார்க்கும் போது, 'ஸகீப்" கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது அவர்களிடம் இருந்த சிலைக்கு பயப்படும் நிலமையை ஒத்துள்ளதை அறிய முடியும். அது எந்த ஒரு நன்மையோ தீமையோ செய்வதற்கு சக்தியற்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான விஷயம்.

ஓர் உண்மைச் சம்பவம் :
மூஸா பின் உக்பா கூறுகிறார், மனிதர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஒளி பரவிய பொழுது பல்வேறு கோத்திரத்தினர் தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை அறிவிப்பதற்காக தங்களது கூட்டங்களை நபியிடம் அனுப்பினார்கள். இவ்வாறே ஸகீப் கோத்திரத்தாரைச் சேர்ந்த பத்துப்பேர் கொண்ட ஒருஜமாஅத் நபியவர்களிடம் வந்தனர்.

நபியவர்கள்;- குர்ஆனை செவிமடுப்பதற்காக அவர்களை மஸ்ஜிதுக்குள் சென்று அமருமாறு கூறினார்கள். அவர்கள் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கப் படுத்த நாடிய போது அவர்களின் சிலர் சிலரை பார்க்க ஆரம்பிக்கின்றனர் அவர்கள் வணங்கி வந்த சிலையை நினைவு கூறுகின்றனர் அவர்களின் கடவுளுக்கு 'றப்பா" எனும் பெயர் கூறி அழைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் வட்டி, விபச்சாரம், மது போன்ற பெரும் பாவங்களைப் பற்றி கேட்டு அவைகள் அனைத்தையும் தவிர்ந்து கொள்வதாக உறுதியளித்தனர். பின் அவர்களின் சிலையான 'றப்பா" வின் விஷயம் பற்றி-அதன் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிக் கேட்டார்கள்,

அதை உடைத்தெறியுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.

அதற்கவர்கள் ஐயய்யோ.. அது ஒருபோதும் நடக்காது நீங்கள் 'றப்பாவை" உடைக்கச் சொன்னதை அது அறியுமானால் அதனை உடைக்க வந்தவர்களையும் அதைச்சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் அது அழித்து விடும் என்று கூறினர்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த உமர் (ரலி)அவர்கள் 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்" ஏன் இந்தளவுக்கு மூளையை அடகு வைத்த மூடர்களாயிருக்கின்றீர்கள்? அது என்ன கடவுளா? வெறும் கல் தானே? என்று சற்று ஆத்திரத்துடன் கூறினார்கள்.

இதைக் கேட்ட அவர்களும் சற்று ஆத்திரமுற்றவர்களாக உமரே! நாம் உம்மிடம் எதுவும் கேட்டு வரவில்லை எனக் கூறினார்கள். சொல்லிவிட்டு அல்லாஹ்வின் தூதரே! அதனை உடைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் நாம் அதை உடைக்க மாட்டோம் என்று ஒரே முடிவுடன் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உங்களிடம் அதனை உடைக்கக்கூடியவர்களை அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார்கள். அவர்கள் அங்கிருந்து விடைபெறுவதற்கு நபியிடம் அனுமதி கோரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தங்கள் கூட்டத்தினரை இஸ்லாத்தின்பால் அழைத்தார்கள். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவ்வாறே நாட்கள் சில நகர்ந்தன. என்றாலும் அவர்களின் உள்ளத்தில் சிலைபற்றி அது ஏதும் செய்து விடுமோ என ஒருவித அச்சம் குடிகொண்டிருந்தது .


பின்னர் நபியவர்கள் சிலையை உடைத்தெறிவதற்காக ஹாலித் இப்னு வலீத் (ரலி), முயீரதுப்னு ஷுஃபா (ரலி) ஆகியோருடன் சில நபிதோழர்களையும் அனுப்பி வைத்தார்கள். உடனே இதனைப் பார்ப்பதற்காக அங்குள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். அவர்களிடத்தில் ஒரு வகையான பீதி, இவர்களால் இச்சிலையை உடைக்கமுடியாது அதை தொட்டவர்கள் அழிந்து போவார்கள் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர்.

முயீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் சிலையின் பக்கம் நெருங்கிக் கோடரியை எடுக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் சிரிக்க வைக்கிறேன் எனச் சொல்லி ஆயுதத்தால் அடிக்கிறார். என்ன ஆச்சரியம்!! அவரது காலை மேலே தூக்கியடித்தவராக கீழே விழுந்து விடுகின்றார்.

இதனைக் கண்ட மக்கள் கூச்சிலிட்டனர் அச்சிலை அவரை கொன்று விட்டது என எண்ணி விட்டார்கள் பின்பு காலித் இப்னு வலீதுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் நீங்கள் முடியுமானால் சிலையை நெருங்குங்கள், பார்க்கலாம் என்று சவால் விட்டு உங்களால் ஒரு போதும் அதனை உடைக்க முடியாது எனச் சூழுரைத்தனர்.

அவர்களது சிலை தம்மைப் பழிவாங்கி விட்டதாக நினைத்து அவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதை முயீரா பார்க்கிறார், எழுந்து சொன்னார், ஸகீப் கூட்டத்தாரே! நிச்சயமாக அது வெறும் கல்லாகும், அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் நெருங்குங்கள், அவனை மாத்திரம் வணங்குங்கள், நான் இதைக் கல் என்று நிரூபிப்பதற்காகவே வேண்டுமென்று இவ்வாறு கீழே விழுந்தேன் என்று கூறினார்கள்.

பின்பு கோடரியை எடுத்து சிலை மீது ஓங்கி அடித்தார்கள் சிலை உடைந்து விட்டது. பின்பு ஸஹாபாக்கள் அதன் மேல் இருந்து கொண்டே ஒவ்வொரு கல்லாக உடைத்தெறிந்து அதனைத் தரை மட்டமாக்கினார்கள். தற்காலத்தில் கூட கட்டப்பட்டுள்ள அனைத்து தர்ஹாக்களையும், தவ்ஹீத்வாதிகள் முயற்சிசெய்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களை அங்கு அடங்கப்பட்டவர்களால் ஒருபோதும் ஒன்றுமே செய்ய முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உவைஸ் அல் கர்ணி பற்றிய செய்தி கபுர் கட்ட ஆதாரமா ?

அவுலியாக்களின் கபுருகளை வணங்க கூடாது . இறந்து போனவர்களிடம் உதவிதேடக்கூடாது என்று நாம் கூறும்போது .........

/// கண்மணி நாயகம் (ஸல்)  அன்னவர்கள் கூறினார்கள்:
தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக்கொள்ளுங்கள்.  முஸ்லிம், மிஷ்காத் 582
////
என்று இந்த ஹதீசை காட்டுவார்கள்,   உண்மையில் இவர்கள் கபுரை வணங்குவதற்கு ஆதாரமாக காட்டுவது ஒரு நீண்ட ஹதீஸின் சிறு பகுதியேயாகும்,
அந்த நீண்ட ஹதீஸில்  (இறந்து போன) அவுலியாக்களின் கபுர்களை அலங்கரிக்கவோ கட்டவோ அங்கே சென்று தமது தேவைகளை கேட்கவோ பிரார்த்திட்கவோ எந்த ஆதாரமும் இல்லை

மாறாக உயிரோடு இருப்பவர்களிடத்தில் எமக்காக அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் என்று கூறலாம் அப்படித்தான் சஹாபாக்களும் செய்து இருக்கிறார்கள் 
 இனி அந்த ஹதீஸை முழுமையாக பார்ப்போம்

صحيح مسلم - (7 / 189)
دَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِىُّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِى أَبِى عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَتَى عَلَيْهِ أَمْدَادُ أَهْلِ الْيَمَنِ سَأَلَهُمْ أَفِيكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ حَتَّى أَتَى عَلَى أُوَيْسٍ فَقَالَ أَنْتَ أُوَيْسُ بْنُ عَامِرٍ قَالَ نَعَمْ . قَالَ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ قَالَ نَعَمْ.
قَالَ فَكَانَ بِكَ بَرَصٌ فَبَرَأْتَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ قَالَ نَعَمْ. قَالَ لَكَ وَالِدَةٌ قَالَ نَعَمْ. قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ». فَاسْتَغْفِرْ لِى. فَاسْتَغْفَرَ لَهُ. فَقَالَ لَهُ عُمَرُ أَيْنَ تُرِيدُ قَالَ الْكُوفَةَ. قَالَ أَلاَ أَكْتُبُ لَكَ إِلَى عَامِلِهَا قَالَ أَكُونُ فِى غَبْرَاءِ النَّاسِ أَحَبُّ إِلَىَّ. قَالَ فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ حَجَّ رَجُلٌ مِنْ أَشْرَافِهِمْ فَوَافَقَ عُمَرَ فَسَأَلَهُ عَنْ أُوَيْسٍ قَالَ تَرَكْتُهُ رَثَّ الْبَيْتِ قَلِيلَ الْمَتَاعِ. قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « يَأْتِى عَلَيْكُمْ أُوَيْسُ بْنُ عَامِرٍ مَعَ أَمْدَادِ أَهْلِ الْيَمَنِ مِنْ مُرَادٍ ثُمَّ مِنْ قَرَنٍ كَانَ بِهِ بَرَصٌ فَبَرَأَ مِنْهُ إِلاَّ مَوْضِعَ دِرْهَمٍ لَهُ وَالِدَةٌ هُوَ بِهَا بَرٌّ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ يَسْتَغْفِرَ لَكَ فَافْعَلْ ». فَأَتَى أُوَيْسًا فَقَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ اسْتَغْفِرْ لِى. قَالَ أَنْتَ أَحْدَثُ عَهْدًا بِسَفَرٍ صَالِحٍ فَاسْتَغْفِرْ لِى. قَالَ لَقِيتَ عُمَرَ قَالَ نَعَمْ. فَاسْتَغْفَرَ لَهُ. فَفَطِنَ لَهُ النَّاسُ فَانْطَلَقَ عَلَى وَجْهِهِ. قَالَ أُسَيْرٌ وَكَسَوْتُهُ بُرْدَةً فَكَانَ كُلَّمَا رَآهُ إِنْسَانٌ قَالَ مِنْ أَيْنَ لأُوَيْسٍ هَذِهِ الْبُرْدَةُ.

 
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?'' என்று கேட்பார்கள். இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்' என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றிவைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

ஆகவே
, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள். அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித் தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு' என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில் "கரன்' குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.

அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன் வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்' (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்' (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற் பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்'' என்றார்கள்.
ஆகவே
, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்'' என்றார்கள்.
"நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்' என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர்.
பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள். தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பார்கள்.
முஸ்லிம் 4971   Book : 44   உசைர் பின் ஜாபிர் (ரலி

கபுர் வணங்கிகள்  நினைப்பதுபோல  யாரும் அவருக்கு கபுர்கட்டி பச்சை பிடவை போர்த்தி அங்கே பிரார்த்திக்கவில்லை மாறாக   எனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று உயிரோடுள்ள அவரிடம் கேட்டிருக்கிறார்கள் ,
நல்லோர்களுக்கு தர்கா கட்டலாம் என்றிருந்தால் உவைஸ் (ரஹ் )மரணித்ததன் பின்னால் இவர்களுக்கு பென்னாம்பெரிய தர்காவை கட்டியிருப்பார்கள்.   ஆனால் அக்காலத்தில் தர்கா கட்டியதாகவோ அங்கே போய் தமது தேவைகளை கேட்டார்களோ என்று எந்த தகவலும் நாமறிந்தவரை கிடைக்கவில்லை

 இங்கே இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்  உவைஸ் அல் கர்ணி ரஹ் அவர்கள் 100% நல்லடியார் என்று தெரிந்தும் சஹாபாக்களோ தாபிஈன்களோ  அவரின் கைகால்களை முத்தமிடவில்லை காலில் விழவில்லை  அவரின் எச்சிலை மேனியில் பூசிக்கொள்ளவில்லை  ஆனால் இன்று சிலர் ஷேக் என்று சொல்லக்கூடியவர்களின் காலில் விழுவதும் அவர்களை முத்தமிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்

see more :
http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=193887
https://en.wikipedia.org/wiki/Uwais_al-Qarani