பூமியில்
எப்படி ஷிர்க் பரவியது என நீங்கள் சிந்தித்தால், நல்லடியார்கள் மீது கொண்ட
அளவு கடந்த மரியாதையும், பக்தியும் அவர்களது அந்தஸ்துகளை பெரியளவிற்கு
உயர்த்தியதுதான் இதற்குக் காரணம் என்பதை தெளிவாக உணர முடியும். நூஹ்
(அலை)யின் சமுதாயத்தினர் அனைவரும் ஏகத்துவ வாதிகளாக இருந்தனர்,
அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்கி
வழிப்பட்டனர். பூமியில் எங்கும் அப்போது ஷிர்க் நிலைகொண்டு இருக்கவில்லை.
அவர்களிடையே
ஐந்து நல்லடியார்கள் காணப்பட்டனர். அவர்கள், 'வுத், ஸுவாஉ, யஊஸ், யஊக்,
நஸ்ர்" அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள், மக்களுக்கு
மார்க்கத்தை போதித்தார்கள். அவர்கள் இறந்து விட்ட பொழுது மக்கள் கவலை
அடைந்தனர். வணக்க வழிபாடுகளை நமக்கு நினைவூட்டக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு
வழிப்படுமாறு நமக்கு ஏவக்கூடியவர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்று
விட்டனர் எனக் கவலையோடு கூறினர்.
அவ்வேளை
ஷைத்தான் அச்சமுதாயத்தவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்த
ஆரம்பித்தான். அவர்களின் உருவங்களை சிலை வடிவில் அமைத்து உங்களது
மஸ்ஜித்களுக்கு அருகில் நிறுத்தினால் அவர்களைக் காணும்போது வணக்க
வழிபாடுகள் செய்வதற்கு ஓர் புத்துணர்வு ஏற்படும் எனச் சொன்னான். அவர்கள்
ஷைத்தானுக்கு வழிப்பட்டார்கள்,
சிலைகளைச்
அடையாளச்சின்னங்களாக, வணக்க வழிபாடுகளுக்கும் நல்ல காரியங்களுக்கும்
எடுத்தார்கள். உண்மையிலே அவர்கள் அதை பார்க்கும் போது வணக்க வழிபாடுகள்
செலுத்துவதற்குரிய ஞாபகம் அவர்களுக்கு ஏற்பட்டது. பல வருடங்கள் கழிந்தன,
அந்தத் தலைமுறையினர் உலகத்தை விட்டுச் சென்று விட்டனர். அதற்கு பின்
அவர்களது சந்ததிகள் உருவானார்கள், அவர்களது மூதாதையர்கள் அச்சிலைகளைப்
புகழ்வதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்;. எனவே அவர்களும் அதை
கண்ணியப்படுத்தினார்கள், பெருமைப்படுத்தினார்கள் அவர்களுக்கு, அச்சிலைகள்
நல்லடியார்கள் எனச் சொல்லப்பட்டிருந்தது.
அதன்
பின் அவர்களது சந்ததிகள் உருவானார்கள் அவர்களுக்கு இப்லீஸ் கூறினான்,
'உங்களுக்கு முன் சென்றவர்கள் இதை வணங்கி வந்தனர். உங்களுக்கு ஏதாவது
இன்னல்கள் சோதனைகள் வரும்போதும், தேவைகள் ஏற்படும் போதும் அவைகளை நாடுங்கள்
அவைகளிடம் உதவி தேடுங்கள் அவைகளை வணங்குங்கள் என்று கூறினான். நூஹ் (அலை)
அவர்களை அவர்களுக்கு இறைத் தூதராக அனுப்பப்படும் வரை அச்சிலைகளை வணங்கினர்
அவர்கள்
950 வருடங்கள், அவர்களை ஏகத்துவத்தின் பால் அழைத்தார்கள். எனினும்
சொற்பனமானவர்களேயன்றி ஏனையோர் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் சாபமும்
கோபமும் இறை நிராகரிப்பாளர்கள் மீது இறங்கியது. அவர்களை 'தூபான்" எனும்
பெரும் வெள்ளத்தைக் கொண்டு அல்லாஹ் அழித்தான். இது நூஹ் நபியின் சமூகத்துக்
ஏற்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையாகும்;.
இப்றாஹிம் நபியின் சமுதாயத்தில் எவ்வாறு ஷிர்க் பரவியது?
அவர்கள்
நட்சத்திரங்களையும், தாரகைகளையும் வணங்கி வழிப்பட்டார்கள். உலகை அவைகள்
ஆட்சி செய்கின்றன என்றும், கஷ்டங்களை போக்கக்கூடியன எனவும்,
பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியன எனவும், தேவைகளை
நிறைவேற்றக்கூடியது எனவும் நம்பிவந்தனர்.
அல்லாஹ்வுக்கும்
அடியார்களுக்கும் மத்தியில் உள்ள இடைத்தரகர்களாக நட்சத்திரங்களை அவர்கள்
எண்ணி வந்தனர். நிச்சயமாக உலகத்தின் ஆட்சி அனைத்தும் அவைகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைத்தனர். பின் அவர்கள் நட்சத்திரங்கள் மற்றும்
வானவர்கள் வடிவில் சிலைகளை அமைத்தனர்.
இப்றாஹிம்
நபியின் தந்தை சிலைகளை செய்து தனது பிள்ளைகளிடம் விற்று வருவதற்காகக்
கொடுப்பார். இப்றாஹிமும் சிலைகளை விற்பதற்கு செல்லக்கூடியவராக இருந்தார்,
இப்றாஹிம்
நபி அதை விற்கும் போது 'உங்களுக்கு எந்தத்தீங்கோ நன்மையோ செய்ய முடியாத இச்சிலைகளை வாங்குபவர் யார்? என்று கூறி விற்பனைசெய்தார்கள்.
மேலும் 'இதை வாங்குபவருக்கு இது எந்தத்தீங்கும் பயனும் அளிக்காது" என்றும் சொல்வார்.
அவரது
ஏனைய சகோதரர்கள் அனைத்து சிலைகளையும் விற்று விட்டு வருவார்கள். இப்றாஹீமோ
கொண்டு சென்ற சிலைகளோடு மீண்டும் வருவார். பின் அவரது தந்தையையும்,
சமுதாயத்தையும், சத்தியத்தின் பால் அழைத்தார்கள்.
இந்தச்
சிலைகள் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில்லை என்று எடுத்துக் கூறி
ஏகத்துவத்தை நிலைநாட்டினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
பின்னர் சிலைகளை உடைக்கிறார்கள், அதன் காரணமாக அவரை நெருப்பில் இட்டு
எறிக்க முனைந்தனர், ஆனால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைப்
பாதுகாத்தான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்