"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

வஸீலாவினால் மழை பெய்ததா ?

எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!

இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.
அனஸ்(ர­) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது உமர்(ர­), அப்பாஸ்(ர­)லி அவர்கள் மூலம்(அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர்(ரலி­) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல் : புகாரி(1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான கருத்தாகவே அமைந்துள்ளது .
அதாவது, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள்தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.
அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி(ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை.
இவர்கள் வாதப்படி, இந்த ஹதீஸ் தான் வசீலா தேடுவ்வதற்கு ஆதாரம் என்றால், சஹாபாக்கள் அனைவரும், ரசூல் (ஸல்) அவர்கள் இறந்த பின்னரும் கூட அவர்களையே அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இதி­ருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலாவாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர்(ரலி­) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர்(ர­லி) அவர்கள் அப்பாஸ்(ர­லி) அவர்களை முன்னிருத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
அப்பாஸ்(ர­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர்(ரலி­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.
நாம் சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ்(ர­) அவர்களை விட உமர்(ரலி­) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர்(ர­) அவர்கள் முன்னிருத்தப்படவில்லை. இதி­ருந்தே மகான்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.
இதி­ருந்தே இந்த செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனவே, வசீலா என்றால் நல்லறங்கள் தானே தவிர, வேறெந்த மகான்களோ, இறந்து போன நல்லடியார்களோ இல்லை என்பதை அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் மூலமாகவே தெளிவாக அறியலாம்.
மேலும் சில பயனுள்ள கட்டுரைகள்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்