"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மீலாதுக்கு ஆதாரம் கேட்டால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு நீங்கள் ஆதாரம் காட்டு

 பார்ப்போம் என்கின்றனர்.

ஆக, மீலாது விழா கொண்டாடுவதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர்கள் திருவாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டனர் என்பது முதல் விஷயம்.

அடுத்து,

இவர்கள் ஆதாரமில்லாமல் மீலாது கொண்டாடுவதும் நாம் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதும் சமம் என்று பேசுவதை விட ஒரு மதியீனம் வேறு இருக்க முடியுமா?
அதை விட ஒரு அரைவேக்காட்டுத்தனம் வேறு இருக்க முடியுமா?
நாங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்றால் அவ்வாறு நடத்துவது மார்க்க காரியம் என்று நாங்கள் சொல்லவில்லை.
மாநாடு நடத்துவது மார்க்கமல்ல, எதற்காக அது நடத்தப்படுகிறதோ, அது மார்க்கம்!
ஷிர்க்கை ஒழிக்க வேண்டும்.
அது மார்க்க காரியம்.
அந்த மார்க்க காரியத்தை நான் என் வசதிக்கேற்ப செய்வேன்.
இக்கால சூழலுக்கு ஏற்ப செய்வேன். 
அது என் வசதியைப் பொறுத்தது.
அதே சமயம் இவர்கள் கொண்டாடும் மீலாது விழா என்பது உலக விஷயமா?
அப்படித்தான் இவர்கள் சொல்கிறார்களா? 
என்றால் இந்த கப்ர் வணங்கி ஜமாஅத் அதை பகிரங்கமாக அறிவிப்பு செய்வார்களா?
அல்லது, நாங்கள் கொண்டாடும் முறை தான் மார்க்க காரியம் இல்லையே தவிர, என்ன நோக்கத்திற்காக கொண்டாடுகிறோமோ அந்த நோக்கம் என்பது மார்க்க விஷயம் தான் என்றாவது இவர்களால் வியாக்கானம் பேச முடியுமா?
நபியின் பிறந்த தினத்தை நினைவு கூருவது என்பது குர் ஆன் ஹதீஸில் இல்லாதது.
ஷிர்க்கை ஒழிப்பது என்பது குர் ஆன் ஹதீஸில் இருப்பது.
குர் ஆன் ஹதீஸில் இருப்பதை நான் செயல்படுத்துவது, குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை செயல்படுத்துவதற்கு எப்படி ஆதாரமாகும்? என்கிற சாதாரண அடிப்படை கூட ஒரு இவர்கள் மூளைக்கு எட்டவில்லை.
ஷிர்கை நபி அவர்கள் பல வழிகளில் ஒழிக்க போராடினார்கள்.
நபித்துவம் கிடைத்த புதிதில் குடும்பத்தாரை அழைத்து கொண்டு சஃபா மலைக்குன்றின் மீதேறி பிரச்சாரம் செய்தார்களே, அது ஒரு வகையான ஷிர்க் ஒழிப்பு மாநாடு. !
ஹிஜ்ரத் மேற்கொண்டது ஒரு வகை ஷிர்க் ஒழிப்பு..!
மதினாவின் அருகில் கூபா பள்ளிவாசலை நிறுவி புரட்சி செய்தார்களே, அது ஷிர்க் ஒழிப்பு மாநாடு..!
மஸ்ஜிதுன் நபவி கட்டி ஒட்டு மொத்த அன்சாரிகளையும் ஒருங்கிணைத்தார்களே, அது ஷிர்க் ஒழிப்பு மாநாடு..!
இறுதி ஹஜ்ஜிலே அரஃபா பெருவெளியிலே சஹாபாக்கள் மத்தியில் அவர்கள் செய்த பிரச்சாரம், இன்னொரு வகையான ஷிர்க் ஒழிப்பு மாநாடு..!
ஷிர்க்கை ஒழிக்கும் முறை தான் வேறுபடுமேயொழிய அது ஒழிக்கப்பட தான் வேண்டும் என்கிற அடிப்படை கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா??
எதை எதனோடு பொருத்துவது என்கிற விவஸ்தை வேண்டாமா??
அப்படியானால் ஷிர்க் ஒழிப்பு என்கிற நோக்கத்தை நாங்கள் காட்டுவது போல நபியின் பிறந்த தினத்தை நினைவு கூருவது என்கிற நோக்கத்தை நபியும் சஹாபாக்களும் கொண்டிருந்தார்கள் என்று காட்டு..
அவர்கள் அந்த முறையில் மீலாது கொண்டாடினார்கள், நாங்கள் இன்று வேறு முறையில் கொண்டாடுகிறோம் என்றாவது எடுத்துக் காட்டு.
ஒருவன் நிர்வாணமாக திரிந்து கொண்டு ரோட்டில் குத்தாட்டம் போட்டானாம்.
இது தான் மார்க்கம் என்று வேறு சொன்னானாம்.
அட லூசுப் பயலே, நிர்வாணமாக திரிவது எப்படிடா மார்க்கமாகும்? இதற்கு ஆராரம் காட்டுப் பார்ப்போம் என்று நாம் கேட்கும் போது, அவன் பதிலுக்கு, இவ்வளவு பேசுறியே, நீ ஜீன்ஸ் பேண்ட் போட்டிருக்குறதுக்கு ஆதாரம் காட்டு பார்ப்போம் என்று எதிர் சவால் விட்டானாம் அவன்.
அந்த கதையாக இருக்கு இந்த சுனா ஜனாவின் மறை கழன்ற சவால்.



நன்றி ;- Abu Asaraf Abusali

********************************************************************************************************************

மேலும் சில பதிவுகள் ....

  1. மீலாதும் மவ்லிதும்  எனும் வீடியோ உறைய காண  இங்கே கிளிக் செய்யவும் 
  2. மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
  3. மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
  4. மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
  5. ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
  6. மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
  7. முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்
  8. அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
  9. மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண  இங்கே கிளிக் செய்யவும்
  10. நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
  11. ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 








No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்