பொருள் புரியாமல் நாம் கூறும் ஆமீன்! ஆமீன்!
முஹைய்யத்தீன் மெளலூதின் 10வது – “தூபாலிதுல்லாபில் ஜனாஃபில்…” என்ற பைத்தை ஓதி முடிந்ததும் “சின்னதுஆ” என்று தொடரும் உரை நடை ஒன்றை ஓதுவார்கள். ஓதுபவரின் குரல் நயத்திற்கொப்ப எதுகை, மோனையுடன் அழகிய அமைப்பில் ஓதுவார்கள். இது மெளலூது கிதாபில் ஏறத்தாழ இரண்டு பக்கங்களைக் கொண்டது. இதில் 49 வசனங்கள் போல் காட்டப்பட்டுள்ளது. குர்ஆனில் “O” குறியுடன் ஒரு ஆயத்து என நினைக்கும்படி குறியிடப்பட்டுள்ளது. மேற்படி பத்தாவது பைத்தை ஓதி முடித்ததும் மெளலூது ஹாபிழ்களின் தலைவர் அல்லது மெளலிது மஜ்லிஸிலுள்ள கண்ணியமிக்க அறிஞர் இந்த துஆவை ஓதுவார். இதுவரை மெளலிது மஜ்லிஸில் கவனம் செலுத்தாமலிருந்தவர்கள் கூட “சின்ன துஆ”, “சின்ன துஆ” என நினைவூட்டப்படுவார்கள். திறந்த தலைகளில் அவரவர் கைக்குட்டைகள் கண்ணியத்துடன் அமரும். ஆடி, ஓடி விளையாடிய சிறுவர்கள் கண்ணியத்துடன் மண்டியிட்டு கையேந்தி சின்ன துஆவிற்கு ஆயத்தமாவார்கள்.
சின்ன துஆ அழகிய ராகத்துடன் ஓதப்படும். ஊசி விழும் சப்தம் கேட்கும்படியான அமைதியில் சின்ன துஆ மட்டும் கேட்கும். ஓதுபவர் மூச்சுவிடும் இடமெல்லாம், மெளலிது ஓதியவர்களும், கேட்டவர்களும், கலந்து சிறப்பிப்பவர்களும் பக்திப் பரவசத்தில் ஆமீன்! ஆமீன்! என உரத்தக் குரலில் ஒத்த நிலையில் கோரசாக கூறுவார்கள். அந்த துஆவில் என்ன ஓதப்படுகிறது: நாம் எதற்காக ஆமீன்! (ஏற்றுக் கொள்வாயாக!) எனச் சொல்கிறோம் என்பது எவருக்கும் தெரியாது. ஹஜ்ரத் அரபியில் துஆ ஓதுகிறார். ஆமீன் சொல்வது நல்லது தானே! சிறப்புத்தானே! எனப் பொருளறியாமல் அவர் மூச்சுவிடும் இடமெல்லாம் ஆமீன்! ஆமீன்! என பொருள் புரியாமல் அனைவரும் கூறுவார்கள். சிலர் தலையையும், உடலையும் அசைத்து, ஆட்டி சிறப்பிப்பதும் உண்டு.
அப்படி அந்த துஆவில் என்ன தான் இருக்கிறது? என்பதை எவரும் சிந்திப்பதில்லை. தெரிந்தவர்கள் தங்களுக்கு மெளலிது மூலம் வரும் வருவாய் பாதிக்கப்படுமே! என வெளிப்படுத்துவதுமில்லை. அது பெரிய சிதம்பர இரகசியமாக இருக்கிறது. அந்த ரகசியத்தை உங்கள் முன்னால் எடுத்துவைக்கிறோம். உங்களிடமுள்ள மெளலூது நூலை விரித்து, உங்களது மெளலவிகள் மூலமே இது சரியா? என்பதைப் பாருங்கள்! சிந்தியுங்கள்! சீர்தூக்கி செயல்படுங்கள்!
இந்த சின்ன துஆ “வஸீலா”வைக் கொண்டு கேட்கப்படும் ஒரு துஆ, இதில் 49 வசனங்கள் போன்றவற்றில் முதலிரண்டு வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் மனிதர்களின் அவர்கள் வாக்குப்படி அவ்லியாக்களின் – பெயர்கள், முதலிரண்டு வாக்கியங்களில்: யா அல்லாஹ்! கண்ணியமிக்க உனது அன்பியாக்களை வஸீலாவாக்கி கேட்கிறோம். உனது சிறப்புமிக்க அவ்லியாக்களை கொண்டு கேட்கிறோம் என்கிறார். இப்படி அவ்லியாக்களையும், அன்பியாக்களையும் வஸீலாவாக்கி பிரார்த்திப்பது கூடுமா? என்பது வேறு விஷயம். (குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பெரியோர்களை வஸீலாவாக்கி கேட்கக் கூடாது என்பதை நாம் பல தடவை குறிப்பிட்டுள்ளோம். உண்மை வஸீலா எது? என்பதையும் விளக்கியுள்ளோம். அது இங்கு பிரச்சனையாக நாம் கொள்ளவில்லை என்பதை அறியவும்.)
அன்பியாக்களையும், அவ்லியாக்களையும் வஸீலாவாக்கி கேட்கப்படும் இந்த துஆவில் ஒரு பெரும் அவ்லியாக்களின் பெயர் பட்டியலைத் தருகிறார் மெளலிது ஆசிரியர். இவ்விரு வாக்கியங்களுக்குப் பின் யஹ்யா பின் அக்தம், வ இப்ராஹீம் இப்னு அத்ஹம், வர் ரபீஉ இப்னு கைய்தம் என வஸீலா தேடப்படும் அவ்லியாக்களின் பெயர் பட்டியலைத் தொடர்கிறார். ஒன்றிரண்டல்ல: சுமார் 45 அவ்லியாக்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஆண் அவ்லியாக்கள், பெண் அவ்லியாக்கள் எனப் பிரித்தும் காட்டுகிறார். இப்பட்டியலில் இடம் பெறும் சிலர் தாபிஈன்கள், பலர் விலாசமற்றவர்கள்: ஒரு சில பெயர்களைத் தவிர பல பெயர்கள் நாம் கேட்டுவரும் அவ்லியாக்கள் லிஸ்டிலும் இல்லாதவை. இந்த துஆவில் தவிர வேறு எங்கும் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள்.
இந்த அவ்லியா பட்டியலில் எந்த நபித்தோழரின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 45 பெயர்களைக் கொண்ட இந்த அவ்லியா பட்டியலில் 37வது பெயராக “வ ஸய்யிதினா வ மெளலானா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி” என ஆண் அவ்லியாக்களின் பெயர்களில் குறிப்பிடவும் தவறவில்லை. விலாசமற்ற பல அவ்லியாக்களின் அரபி பெயர்களைக் குறிப்பிட்ட மெளலிது ஆசிரியருக்கு வேண்டிய அளவு அரபிப் பெயர்கள் கிடைப்பதில் சிறிது கஷ்டம் ஏற்பட்டு விட்டது போலும், காதல் ஜோடிகளான லைலா மஜ்னூன் (சஃதூனில் மஜ்னூன் சஃதூனத்துல் மஜ்னூனா) என்பதையும் சேர்க்க மறக்கவில்லை. (சஃதூனா என்பது லைலாவின் உண்மைப் பெயர், சஃதூன் என்பது மஜ்னூனின் உண்மைப் பெயர்) இவ்விருவரையும் ஆண், பெண் அவ்லியாக்களில் இணைத்திருப்பதைக் காணலாம். மஜ்னூன் பெயர் இப்பட்டியலில் 19வதாக வருகிறது. லைலாவின் உண்மைப் பெயர் சஃதூனா 44வதாக வருவதை நீங்களே உங்களது மெளலிது கிதாபில் பார்க்கவும்.
இது வெளியே தெரியாமலிருக்க சின்ன துஆவின் கடைசி மூன்று வசனங்களை ஹம்து ஸலவாத்தாக, உண்மை துஆ போன்று முடிக்கின்றனர். எல்லோரும் அகம், முகம் மகிழ ஏந்திய இரு கரங்களை முகத்திலும், உடலிலும் தடவிக் கொள்கின்றனர். பெரும் பாக்கியம் கிடைத்ததாக களிப்பு வகை அடைகின்றனர். என்னே முஹைய்யுத்தீன் மெளலிதின் சின்ன துஆ மகிமை! இதுதூன் இந்த சின்ன துஆவின் சிதம்பர ரகசியம். பகுத்தறிவு மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நீங்கள் சொன்ன ஆமீன் அவ்லியாக்களின் பெயர் பட்டியலுக்கு என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். அது போதும்.
---- அந்-நஜாத்
---------------------------------------------------------------------------------
முஹ்யித்தீன் மவ்லித் ஓர்ஆய்வு காண இங்கே கிளிக் செய்யவும் ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
மவ்லூத் மறுப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
---------------------------------------------------------------------------------
முஹ்யித்தீன் மவ்லித் ஓர்ஆய்வு காண இங்கே கிளிக் செய்யவும் ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02 காண இங்கே கிளிக் செய்யவும்
மவ்லூத் மறுப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாதும் மவ்லிதும் எனும் வீடியோ உறைய காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாதும் மவ்லிதும் எனும் வீடியோ உறைய காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா? பதிலை காண இங்கே கிளிக் செய்யவும்
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்