இந்த மீலாது விழாவை ஆதரிக்கக் கூடியவர்கள் , இந்த ஒரு செயல் ரசூளுல்லாவிர்க்கு பின்னால் ஏற்படுத்தப் பட்டது தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால் அவர்கள் எடுத்து வைக்கக் கூடிய வாதம் , /// ரசூளுல்லாவை புகழ்வது தவறா ? ///
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ஷபாஅத்' எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், மகாமுன் மஹ்மூத்' என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.
அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.
இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
"ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.(நூல்: அஹ்மத் 12093, 13041)
"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!(நூல்: புகாரி 3445)
நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.
இவர்கள் மவ்லிது எனும் பாடல் வரிகளை வைத்தே அல்லாஹ்வின் தூதரை புகழ்வதாக கூறுகிறார்கள்.அந்த மவ்லிது வரிகள் நிச்சயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்வதாகவே அமைந்திருக்கின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை,அவர்களின் ஒழுக்கம்,தூய்மையான அரசியல்,சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு, அவர்களின் அருங்குணங்கள் ,அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை, அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,
பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!
மிலாது விழாவில் உள்ள மேலும் சில அனாச்சாரங்கள்
மீலாது நபி அன்று மட்டும் தான் உலமாக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் பொது பயான் நடத்துவதை காண முடியும்.மார்க்க பயான் என்று தான் பெயரே தவிர கூறுவது அனைத்தும் உண்மைக்கு புரம்பானதாகவே இருக்கும். மார்க்கத்திற்கு எதிரான இந்த விழாவைதான்
பட்டாசு கொளுத்தியும் ,
இனிப்பு வழங்கியும்,
இஸ்லாம் தடுத்துள்ள இசை கருவிகளை பயன்படுத்தி பாட்டு கச்சேரி நடத்துவதும்,
புது ஆடை அணிந்தும் இன்னொரு பெருநாளாக கொண்டாடுகிறார்கள்.
கொண்டாடுவதர்கென்று நமக்கு அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட நாட்கள் நோன்புப் பெருநாளும் ஹஜ் பெருநாளும் தவிர வேறில்லை.
عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْأَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ (أبو داود /1134)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் இரு நாட்களை ஓதுக்கி விளையாடுவதைக் கண்டார்கள். இந்த இரு நாட்களும் என்ன (எதற்காக விiளாடுகின்றீர்கள்) என கேட்ட போது அதில் "ஜாஹிலிய்யா" அறியாமைக்காலத்தில் விளையாடும் வழக்கமுடையோரக இருந்தோம் எனக் கூறினர். அவ்விரு நாட்களைவிட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு பகரமாக தந்துள்ளான். (அவைதாம்) ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்பு பெருநாளும் எனக் கூறினார்கள். (அபூதாவூத். ஹதீஸ் இல: 1134).
எனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் பின்பற்றி நேரான பாதையில் செல்லுங்கள். இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை புறக்கணியுங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
விழாவை கண்டு பிடித்தது யார் என்று அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
முஹைய்யத்தீன் மெளலூதின் சின்ன துஆ காண இங்கே கிளிக் செய்யவும்
அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழா ஒரு பார்வை கான இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்