ரபியுள் அவ்வல் மாதம் என்பதால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாடுவது கடமை என்று மக்களிடத்தில் ஆகிவிட்டது. இன்றும் சில முஸ்லிம் அமைப்புகள் மிPலாது விழா எனும் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வருவதைப் பார்க்கிறோம்.
இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்கு சொல்லித் தராத ஒன்று !
பின் யாரால் சொல்லப்பட்டது ?
சொல்லப்பட்டவர்களுக்கு வஹீ வந்ததா ?
இனி யாரும் தூதர்கள் வரமாட்டார்கள் என்பதால் தான் உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன் அதை பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி பேருரையில் குறிப்பிட்டார்கள், அந்த இரண்டிலும் இதைப்பற்றி சொல்லவல்லை என்பதுடன் இதை வன்மையாக தடுக்கப்பட்டும் இருக்கிறது.
பின் எந்த மேதாவிகள் இதை நமக்கு கட்டளையிட்டார்கள் ?
அவ்வாறு மார்க்கம் என்ற பெயரில் நமக்கு கட்டளையிட எவருக்கு அதிகாரம் இருக்கிறது ?
இருந்தது ஒருக் கூட்டத்திற்கு அதிகாரம் !
யார் அந்த கூட்டத்தினர் ?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப்பிறகு ஆட்சி செய்த (கலீபாக்ளைத் தவிர்த்து) ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட போட்டியும் பூசலும், பொறாமையின் காரணத்தால் மார்க்கத்தை தூரப்படுத்தி விட்டு தான்தோன்றித் தனமான ஆட்சி செய்தார்கள் அதனால் மார்க்கத்திற்கு விரோதமான பல செயல்கள் மார்க்கம் என்ற பெயரில் உட்புகுந்தன அதில் ஒன்று தான் மீலாது விழா ?
இறுதி கலீஃபா அலி(ரலி) அவர்களுடைய காலத்தில் நடந்த இருமுனை ( அலி ரலி, முஆவியா ரலி அவர்கள் ) நிர்வாகத்தால் இருதரப்பில் கடும் போட்டிகள் நிலவியது, அதிலிருந்து ஏற்பட்ட போட்டி பொறாமை என்பது அதற்குப் பிறகு ஒரு நிர்வாகமே நடந்தாலும் அந்த நிர்வாகம் முடிந்து வேறொரு நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டப்பின் முன்னவர் மீது இருந்த பொறாமை காரணத்தால் அவரது ஆட்சி காலத்தின் செயல் திட்டங்கள் முழுமயாக மாற்றப்படும் அது நல்ல திட்டங்களாக இருந்தாலும் சரியே !
இவ்வாறு உமையாக்களுடைய ஆட்சிகாலத்தில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப் பட்டவர்களில் பல ஆட்சியாளர்கள் ஷியாக்களாகவும், ஸூஃபி களாகவும், அல்லது ஷியா கொள்கையாலும், ஸூஃபித்துவ கொள்கையாலும் கவரப்பட்டிருந்தார்கள்.
அவர்களுடைய அடிப்படை கொள்கை துறவரம் மூலமும், திக்ருகள் மூலமும் அல்லாஹ்வுடனும், அவனது தூதருடன் உலகில் ஒன்றர கலந்து விடலாம் என்பதாகும்.
நபியவர்கள் மரணித்தாலும் அவர்களுடைய ஆத்மா பூமியில் உலவுகிறது அவர்கள் புகழப்படுவதால் தரிசனம் தருவார்கள் என்ற அத்வைத கொள்கை வேரூன்றி இருந்ததால்
நபிகள் நாயகத்தை எங்கள் அளவுக்கு நேசிப்பவர் உலகில் எவருமுண்டோ ? எனும் அளவுக்கு புகழ்ந்து இணைவைப்பில் தாங்களும் மூழ்கி மொத்த சமுதாயத்தையும் மூழ்கடித்தனர். மேற்கானும் புகழ் மாலையின் பரினாம வளர்ச்சியே மௌலூதில் கொண்டு சேர்த்தது.
மொலூது பிறந்த கதை ?
ஹிஜ்ரி 365ல் அல்முஅத்தீனுல்லாஹ் என்ற பாதிமியீன்களின் ஆட்சியாளர் தான் முதன் முதலில் மக்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரால் மொலூது ஓதுவதற்கும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதற்கும் கட்டளைப் பிறப்பித்தார். இது மக்களால் நடைமுறை படுத்தப் பட்டதை அறிந்தவர் அதற்கடுத்த வருடம் ஹஸன்(ரலி), ஹூசைன்(ரலி), பாத்திமா(ரலி) அவர்களுடைய பிறந்த தினத்திலும் மொலூது ஓதிக் கொண்டாடுவதற்கு ஏவினார் இவர் ஷியா காரர் என்பது குறிப்பிட தக்கது.(பார்க்க وأحسن الكلام للمطيعي صـ : 44ஃ45 كتاب المواعظ والاعتبار للمقريزي 1ஃ490
அதன் பிறகு ஹிஜ்ரி 495ல் ஆட்சி பொறுப்பேற்ற அல் அப்லல் பின் அமீர் என்பவர் 130 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்த நபிகள் நாயகத்துடைய குடும்பத்தார் பெயரில் ஓதிவந்த மௌலூத்களை தடை செய்தார்.( இதற்கு காரணம் மார்க்கப் பற்றல்ல கடந்த கால ஆட்சியாளருடைய திட்டங்களை மாற்றுவது )
அதன் பிறகு ஹிஜ்ரி 525ல் ஆட்சி பொறுப்பில் அமர்த்தப்பட்ட அல் ஆமிர் பின் அஹ்காமில்லாஹ் என்ற கலீபா கடந்த கால ஆட்சியாளர் அல் அப்லல் பின் அமீரால் தடை செய்;யப்பட்ட மொலூதை திரும்பக் கொண்டு வந்தார்;.( இதற்கும் காரணம் மார்க்கப் பற்றல்ல கடந்த கால ஆட்சியாளருடைய செயல் திட்டங்களை மாற்றுவது )
ஹிஜ்ரி 570ல் உமர் அல் மலாஇ என்பவர் ஈராக்கின் வடபகுதியில் அல்மவ்லிஸ் என்ற பகுதியின் கவர்னகராக நியமிக்கப் பட்டிருந்தார் இவர் வடிகட்டிய சூஃபித்துவ வாதி நபிகள் நாயகத்துடன் ஒன்றர கலந்து விடவேண்டும் என்ற வெறி உச்சந்தலையில் ஏறவே அவரது சபைக்கு பிரபல கவிஞர்கள் வரவழைக்கப்பட்டு குணங்குடியாரை மிஞ்சும் அளவுக்கு புகழ்மாலை பாடப்பட்டு அவரது அரசவையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது பிறந்த நாளை கொண்டாடினார்.
ஹிஜ்ரி 630ல் முபருதீன் என்ற ஆட்சியாளர் கடந்த ஆட்சியாளருடைய செயல் திட்டமான நபிகள் நாயகத்தின் மீது கவி பாடுவதை நிருத்தி விடாமல் அதைவிட இன்னும் வித்தியாசமாக அதே நேரத்தில் சிறப்பாகவும் செய்ய ஆசைப்பட்டார் அதனால் பிரபல கவிஞர்களின் புகழ் மாலையுடன் நடண திக்ராக மாற்றினார் ( அதாவது வளையம் போல் நின்று கொண்டு '' யாநபி ஸலாமலைக்கும் '' '' யா ரசூல் ஸலாமலைக்கும் '' என்று காட்டுக் கூச்சல் போடுவது ).
ஓவ்வொரு கவிஞராக ஆளுக்கொரு புகழ்மாலை என்றிருந்ததை 633ல் அவருடைய ஆட்சி காலத்தில் வாழ்ந்த பிரபல கவிஞர் இப்னு தஹ்யா என்பவர் அத்தன்வீர் ஃபீ பஸீருன் நதீர் என்ற பெயரில் ஒரே புகழ் மாலையாக ஆக்கிக் கொடுத்து அதற்காக 1000 தீனார்களை பரிசாகவும் பெற்றார்.
இவ்வாறு போட்டி, பொறாமையில் ஆட்சி செய்ததால் ஏகத்துவத்திற்கெதிரான அனைத்து தீமைகளும் மெல்ல, மெல்ல வேர் விட்டு மாபெரும் விருட்சமாகி விட்டது.
கெய்ரோவை ஆக்ரமித்த நெப்போலியன்
பணிரெண்டாம் நூற்றாண்டில் கெய்ரோவை பிரான்ஸ் படைகள் ஆக்ரமமித்ததும் முஸ்லீம்கள் மீலாது விழாவை கொண்டாடாமல் தற்காலிமாக நிருத்தி வைத்திருந்தனர்.
நபிகள் நாயகத்துடைய பெயரால் ஆட்டம், பாட்டு, நடணம் நடப்பது அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்பதால் மன்னர் நெப்போலியன் மக்களை அழைத்து ஏன் மொலூதை நிருத்தினிர்கள் என்று கேட்க ? அவர்களுடைய ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை காரணம் கூற ! இதைக் கேட்டதும் சொந்தப் பணத்திலிருந்து பிரான்ஸ் நாணயங்ளை கொடுத்து மீலாது விழாவை விமர்சையாக நடத்த உத்தரவிடுகிறான்.
இப்பொழுது கிருஸ்தவ நெப்போலியனுடைய பணத்தில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இன்னிசை முழக்கத்துடன் எஜிப்திய முஸ்லிம்களால் பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது.
அல்லாஹ் நாடினால் மீதியையும் எழுதுவோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மௌலூத் சம்பந்தமாக மேலும் சில............
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார் என்று அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்
முஹைய்யத்தீன் மெளலூதின் சின்ன துஆ காண இங்கே கிளிக் செய்யவும்
அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்
ரசூளுல்லாவை புகழ்வது தவறா ? இதற்கான பதிலை காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழா ஒரு பார்வை காண இங்கே கிளிக் செய்யவும்
மீலாது விழா ஒரு பார்வை காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்