"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஷிர்க் (இணைவைத்தல்) பரவியது எப்படி ?


குழம்பிவிட்ட உள்ளங்கள்
சமாதிகளில் அடக்கப்பட்டவர்கள் தங்களுக்கே எந்த ஒரு நன்மையும் செய்து கொள்ள இயலாதவர்களாக, சக்தியற்றவர்களாக இருக்கும்போது, பிறருக்கு எப்படி உதவி புரிய முடியும்? சமாதிகளை, சிலைகளை புனிதப்படுத்துபவர்கள், அதற்கு பயந்து வாழக்கூடியவர்களின் நிலமையைப் பார்க்கும் போது, 'ஸகீப்" கோத்திரத்தார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது அவர்களிடம் இருந்த சிலைக்கு பயப்படும் நிலமையை ஒத்துள்ளதை அறிய முடியும். அது எந்த ஒரு நன்மையோ தீமையோ செய்வதற்கு சக்தியற்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான விஷயம்.

ஓர் உண்மைச் சம்பவம் :
மூஸா பின் உக்பா கூறுகிறார், மனிதர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஒளி பரவிய பொழுது பல்வேறு கோத்திரத்தினர் தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை அறிவிப்பதற்காக தங்களது கூட்டங்களை நபியிடம் அனுப்பினார்கள். இவ்வாறே ஸகீப் கோத்திரத்தாரைச் சேர்ந்த பத்துப்பேர் கொண்ட ஒருஜமாஅத் நபியவர்களிடம் வந்தனர்.

நபியவர்கள்;- குர்ஆனை செவிமடுப்பதற்காக அவர்களை மஸ்ஜிதுக்குள் சென்று அமருமாறு கூறினார்கள். அவர்கள் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கப் படுத்த நாடிய போது அவர்களின் சிலர் சிலரை பார்க்க ஆரம்பிக்கின்றனர் அவர்கள் வணங்கி வந்த சிலையை நினைவு கூறுகின்றனர் அவர்களின் கடவுளுக்கு 'றப்பா" எனும் பெயர் கூறி அழைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் வட்டி, விபச்சாரம், மது போன்ற பெரும் பாவங்களைப் பற்றி கேட்டு அவைகள் அனைத்தையும் தவிர்ந்து கொள்வதாக உறுதியளித்தனர். பின் அவர்களின் சிலையான 'றப்பா" வின் விஷயம் பற்றி-அதன் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிக் கேட்டார்கள்,

அதை உடைத்தெறியுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.

அதற்கவர்கள் ஐயய்யோ.. அது ஒருபோதும் நடக்காது நீங்கள் 'றப்பாவை" உடைக்கச் சொன்னதை அது அறியுமானால் அதனை உடைக்க வந்தவர்களையும் அதைச்சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் அது அழித்து விடும் என்று கூறினர்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த உமர் (ரலி)அவர்கள் 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்" ஏன் இந்தளவுக்கு மூளையை அடகு வைத்த மூடர்களாயிருக்கின்றீர்கள்? அது என்ன கடவுளா? வெறும் கல் தானே? என்று சற்று ஆத்திரத்துடன் கூறினார்கள்.

இதைக் கேட்ட அவர்களும் சற்று ஆத்திரமுற்றவர்களாக உமரே! நாம் உம்மிடம் எதுவும் கேட்டு வரவில்லை எனக் கூறினார்கள். சொல்லிவிட்டு அல்லாஹ்வின் தூதரே! அதனை உடைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் நாம் அதை உடைக்க மாட்டோம் என்று ஒரே முடிவுடன் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உங்களிடம் அதனை உடைக்கக்கூடியவர்களை அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார்கள். அவர்கள் அங்கிருந்து விடைபெறுவதற்கு நபியிடம் அனுமதி கோரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தங்கள் கூட்டத்தினரை இஸ்லாத்தின்பால் அழைத்தார்கள். அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவ்வாறே நாட்கள் சில நகர்ந்தன. என்றாலும் அவர்களின் உள்ளத்தில் சிலைபற்றி அது ஏதும் செய்து விடுமோ என ஒருவித அச்சம் குடிகொண்டிருந்தது .


பின்னர் நபியவர்கள் சிலையை உடைத்தெறிவதற்காக ஹாலித் இப்னு வலீத் (ரலி), முயீரதுப்னு ஷுஃபா (ரலி) ஆகியோருடன் சில நபிதோழர்களையும் அனுப்பி வைத்தார்கள். உடனே இதனைப் பார்ப்பதற்காக அங்குள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். அவர்களிடத்தில் ஒரு வகையான பீதி, இவர்களால் இச்சிலையை உடைக்கமுடியாது அதை தொட்டவர்கள் அழிந்து போவார்கள் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர்.

முயீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் சிலையின் பக்கம் நெருங்கிக் கோடரியை எடுக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் சிரிக்க வைக்கிறேன் எனச் சொல்லி ஆயுதத்தால் அடிக்கிறார். என்ன ஆச்சரியம்!! அவரது காலை மேலே தூக்கியடித்தவராக கீழே விழுந்து விடுகின்றார்.

இதனைக் கண்ட மக்கள் கூச்சிலிட்டனர் அச்சிலை அவரை கொன்று விட்டது என எண்ணி விட்டார்கள் பின்பு காலித் இப்னு வலீதுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் நீங்கள் முடியுமானால் சிலையை நெருங்குங்கள், பார்க்கலாம் என்று சவால் விட்டு உங்களால் ஒரு போதும் அதனை உடைக்க முடியாது எனச் சூழுரைத்தனர்.

அவர்களது சிலை தம்மைப் பழிவாங்கி விட்டதாக நினைத்து அவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதை முயீரா பார்க்கிறார், எழுந்து சொன்னார், ஸகீப் கூட்டத்தாரே! நிச்சயமாக அது வெறும் கல்லாகும், அல்லாஹ்வின் மன்னிப்பின் பால் நெருங்குங்கள், அவனை மாத்திரம் வணங்குங்கள், நான் இதைக் கல் என்று நிரூபிப்பதற்காகவே வேண்டுமென்று இவ்வாறு கீழே விழுந்தேன் என்று கூறினார்கள்.

பின்பு கோடரியை எடுத்து சிலை மீது ஓங்கி அடித்தார்கள் சிலை உடைந்து விட்டது. பின்பு ஸஹாபாக்கள் அதன் மேல் இருந்து கொண்டே ஒவ்வொரு கல்லாக உடைத்தெறிந்து அதனைத் தரை மட்டமாக்கினார்கள். தற்காலத்தில் கூட கட்டப்பட்டுள்ள அனைத்து தர்ஹாக்களையும், தவ்ஹீத்வாதிகள் முயற்சிசெய்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களை அங்கு அடங்கப்பட்டவர்களால் ஒருபோதும் ஒன்றுமே செய்ய முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்