"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அத்தஹிய்யாத் சலாமுக்கு நபிகளார் பதில் சொல்வார்களா ?

அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்தும் ஸலாமும்
சொல்வதால் நபியவர்கள் உயிரோடு இருந்து அதைச் செவியுறுகிறார்கள்
என்று பரேலவிகள் முன்வைக்கும் வாதத்திற்கான பதிலைக் கண்டோம்.

நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது பதிலுக்கு அவர்கள் இப்போதும்
 (இறந்த பிறகும்) நம் மீது சலாம் சொல்வார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது தொழுகையில்
அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்ற துஆவை எத்தனை ஸஹாபாக்கள்
நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள். அத்தனை ஸஹாபாக்
களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?

அது மட்டுமல்லாமல் ஹி்ஜ்ரி 10-களிலெல்லாம் இஸ்லாம் மக்கா மதினா
மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியிருந்தது. பல இலட்சக்
கணக்கான மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். அத்தனை இலட்ச
 மக்களும் தங்களுடைய தொழுகையில் மேற்கண்ட அத்தஹிய்யாத்
 துஆவை ஓதும் போது நபிகளார் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக்
கொண்டிருந்தார்களா?

தொழுகை நேரம் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். உலகம் முழுவதும் 24 மணி
 நேரமும் கடமையான, சுன்னத்தான தொழுகைகள் என்று நடந்து கொண்டுதான்
 இருக்கும். அவர்கள் அனைவரும் தொழுகையில் சலாம் கூற நபியவர்கள்
 பதில் சலாம் சொன்னார்களா?

நபியவர்கள் பதில் சலாம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அதுதான்
24 மணி நேர வேலையாக இருந்திருக்கும். வேறு எந்த வேலையும் பார்த்திருக்க
 மாட்டார்கள். அவர்கள் உயிருடன் உலகில் வாழும் போது தொழுகையில்
ஸலாம் கூறிய பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கும் பதில் சலாம்
 கூறவில்லை என்று இருக்கும் போது இப்போது எப்படி நாம் சலாம் சொன்னால்
 பதில் சொல்வார்கள்?

ஆக, திருக்குர்ஆனின் 33:56 வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம்
தவறானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்திற்கான விளக்கத்தை நபியவர்கள்
அன்றே சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே நாம் குழம்ப வேண்டிய
தில்லை.

நாம் சலாம் சொன்னால் நபிகளார் பதில் சலாம் கூறுவார்கள் என்று ஆரம்பித்து
கடைசியில் நபிகளார் மட்டுமல்ல அனைத்து நல்லடியார்களும், கபுரில்
 அடக்கம் செய்யப்பட்டவர்களும் நாம் சலாம் சொல்வதைச் செவியுறுவார்கள்.
 பதில் சலாம் சொல்வார்கள் என்ற அளவிற்குச் சென்று விட்டனர்.

இதற்கும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகின்றனர்.

மண்ணறைகளைச் சந்திக்கும் போது ஓத வேண்டிய கீழ்க்காணும் துஆவை
நபிகளார் கற்றுத் தருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ”அஸ்ஸலாமு
 அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும்
லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது
 இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும்
 உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1773

இந்த ஹதீஸைக் கொண்டு இறந்து போன அனைவரும் நாம் பேசுவதையும்,
சலாம் கூறுவதையும் கேட்கிறார்கள் என்று வாதிடுகின்றனர். “அடக்கம் செய்யப்பட்டவர்களே என்று அழைத்து நாம் சலாம்
சொல்வதிலிருந்தே அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதைக்
காட்டுகின்றதா இல்லையா?” என்று கூறுகின்றனர்.

ஆனால் நாம் இந்த ஹதீஸை சற்று சிந்தித்துப் பார்க்கும் போது இந்த
துஆவை நபியவர்கள் ஏன் செய்தார்கள்? எதற்காக நம்மையும் செய்யச்
 சொன்னார்கள் என்பது விளங்கும். வேறொரு ஹதீஸை நாம் பார்க்கும்
போது இதற்கான விளக்கம் தெரியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை
நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதீ 974

நபியவர்கள் மண்ணறைகளைச் சந்திக்கச் சொன்னது இறந்தவர்களிடத்தில்
பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காவோ அவர்களிடத்தில் உதவி தேட
வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக மனிதர்களுக்கு மரண பயம்
 ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மறுமையைப் பற்றிச் சிந்திக்க
வேண்டும் என்பதற்காகவும் தான் மண்ணறைகளுக்குச் சென்று வர வேண்டும்
என்று நபியவர்கள் கூறினார்கள்.

நபியவர்கள் அனுமதித்த கப்ர் ஜியாரத் என்பது இறந்தவர்கள் அனைவரும்
அடக்கம் செய்யப்பட்ட பொது மையவாடிக்கு செல்வதுதான். ஆனால் இ்ந்த
 கப்ரு வணங்கிகள் பொது மையவாடிக்குச் செல்வதில்லை. மாறாக ஸியாரத்
 என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரை நல்லடியார் என்று இவர்களாகக்
கற்பனை செய்து கொண்டு அவரது கப்ரில் மார்க்கம் தடை செய்த பல
காரியங்களை செய்து வருகின்றனர்.

அங்கு போய் இறந்து போன மனிதர்களிடத்தில் பிரார்த்தனையும் செய்து
இறைவனுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலையும் செய்து வருகின்றனர்.
 ஆனால் நபியவர்களோ இறந்து விட்ட நல்லடியார்களது கப்ருகளுக்கு நாம்
சென்றால் நாம் தான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று
கற்றுத் தந்திருக்கிறார்கள்.

உயிரோடு இருப்பவர்கள்தான் இறந்து விட்டவர்களுக்காக ஏதேனும் உதவி
செய்ய முடியுமே தவிர, இறந்து விட்டவர்களால் உயிரோடு இருப்பவர்களுக்கு
எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை நபியவர்களின் இந்தக்
கட்டளையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபிகளார் மட்டுமல்ல எந்த
மனிதருக்கும் நாம் பேசுவதும் சலாம் சொல்வதும் கேட்காது என்பதை
நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

நபிகளார் மீது சலாம் சொல்வதை அவர்கள் நேரடியாகக் கேட்க முடியாது
 என்றாலும் மலக்குமார்கள் நம்முடைய சலாமை நபியவர்களுக்கு எடுத்துச்
 சொல்வார்கள் என்று ஹதீஸ்களில் வருகின்றது. உலகத்தின் எந்த
 இடத்திலிருந்து யார் நபியின் மீது ஸலவாத் சொன்னாலும் அதை வானவர்கள்
எடுத்துச் சொல்வார்கள்.

அல்லாஹ் சில மலக்குமார்களை நியமித்து வைத்திருக்கிறான். நீங்கள்
என்மீது சொல்கின்ற சலாமை அவர்கள் எனக்கு எடுத்துக் காட்டுவார்கள்
என்று நபியவர்கள் கூறியதாக வரும் செய்தி நஸாயியில் 1265வது செய்தியாக
 இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியில் நபியவர்கள் நாம் சலாம் சொன்னால் நேரடியாக கேட்பார்கள்
 என்றால் அல்லாஹ் ஏன் மலக்குமார்களை நியமிக்க வேண்டும்? என்பதை
நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்  எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

பிறந்த தின விழாவா? இறந்த தின விழாவா?


மனித குலத்துக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்து  மரணமடைந்த மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை நாம் நெருங்கி கொண்டிருக்கின்றோம். ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டாலே அதிகமான முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம் என்ற பெயரில் பிறந்த தின விழா கொண்டாடுவதையும், மௌலித் பாடல்கள் ஓதுவதையும் வணக்கமாக வழக்கமாக செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வது மார்க்க ரீதியாக குற்றமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தது மாத்திரமின்றி இம்மாதத்தில் தான் மரணித்துமுள்ளார்கள்.
நபியின் மரண அறிகுறி
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல்இ செயல்களிலிருந்து அவர்களின் மரணம் நெருங்கிவிட்டதற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.
1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப் பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம்.

கண்ணிய நபியின் கடைசி வாரம்
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் (மற்ற) துனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.. அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட அப்பாஸ் (ரழி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று பதிலளித்தேன். அவர்தாம் அலீ பின் அபீதாலிப் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னார்கள். மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க் காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள் வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியினால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும் என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரழி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமரவைத்தோம். பிறகு அவர்கள் மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள் (சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்) என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள். பிறகு உபதேசமும் செய்தார்கள்.” (புஹாரி-4442)

அண்ணலாரின் சகராத் நேரம்

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறையில் தங்க வேண்டிய) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களது இறப்பின் போது அவர்களது எச்சிலையும் எனது எச்சிலையும் அழ்ழாஹ் ஒன்று சேர்த்தான். இவை அழ்ழாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தனது கரத்தில் பல்துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக் கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். ஆகவே, உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா என்று நான் கேட்க, அவர்கள் தம் தலையால் ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான் பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா என்று கேட்டேன். அவர்கள் தம் தலையால் ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரம் ஒன்று அல்லது பெரிய மரக் குவளையொன்று இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட அவர்களின் கரம் சரிந்தது.” (புஹாரி-4449)

நெஞ்சை உருக்கும் நிறைவான விடைபெறல்
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “உலக வாழ்வு மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ய்பு வழங்கப்படாமல் எந்த இறைத் தூதரும் இறப்பதில்லை என்று நான் (நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய கரகரப்பான குரழில்) அழ்ழாஹ் அருள்புரிந்துள்ள இறைத்தூதர்கள் உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன் எனும் (4-69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்று நான் எண்ணிக்கொண்டேன்.” (புஹாரி-4435)
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன் அவர் பல்துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த நான் அந்தப் பல்துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் தம் கையை அல்லது தம் விரலை உயர்த்தி பிறகு, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேரத்தருள்) என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள். அறிவிப்பாளர் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். என் மு
கவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்.” (புஹாரி-4438)
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை அல்லாஹ்வின் தூதர் மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சிந்திக்க சில வரிகள்
இதுவரை நபியவர்களின் மரணச் செய்தியை படித்தீர்கள், அதைக்கேட்ட நபித்தோழர்கள் துடியாய்த் துடித்தார்கள். ஆனால் இன்று நாம் அவர்கள் மரணித்த நாளை கொண்டாடும் நாளாக எடுத்துக்கொண்டோமா இல்லையா? இது இறைவிசுவாசியின் பண்பாக இருக்க முடியுமா?

நபியவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12ம் திகதி பிறந்தார்களா? என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனால் ரபீஉல் அவ்வல் 12ம் திகதி மரணித்தார்கள் என்பது ஊர்ஜிதமானதே. ரபீஉல் அவ்வல் பிறை 12இல் மீலாத் விழா இன்று கொண்டாடப்படுவது நபியவர்களின் பிறந்த நாளுக்காகவா அல்லது இறந்த நாளுக்காகவா? சிந்திக்க மாட்டீர்களா?

நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது நபியவர்களைப் புகழ்வதென்றால் அல்லது இஸ்லாத்திலுள்ள நற் கருமமாக இருந்தால் நபியவர்களே ஒவ்வொரு வருடத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல் அதைச் செய்திருப்பார்கள். ஸஹாபாக்கள் அதைப் பின்பற்றி இருப்பார்கள். இவர்களில் யாரும் இதைச் செய்யவே இல்லை. ஹிஜ்ரி 300க்குப் பிறகு   இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஷீஆக்களின் ஒரு பிரிவினரான பாத்திமிய்யீன்கள் அரசியல் இலாபத்திற்காக செய்த வேலையே மீலாத் மேடைகள். இதேபோன்றுதான் நபியவர்களின்  பெயரில் பாடப்படும் ஷிர்க்குகள் நிறைந்த மௌலூத் பாடல்களும். இதற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளலவும் சம்மந்தம் இல்லை. மாறாக இவைகள் இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் எனும் வழிகேடுகளாகும்.
மேலும், முஸ்லிம்களில் அதிகமானோர் ரபீஉல் அவ்வல் பிறை 12இல் புத்தாடை அனிந்து, விதவிதமான சாப்பாடுகள் சமைத்து பெருநாள் தினம் போல் கொண்டாடி வருகின்றனர். இவ்வாரு செய்வோர் இஸ்லாத்தின் அடிப்படையில் பாவிகளாவார்கள். மேலும், நபிகள் நாயகம் மரணித்தது தமக்கு மகிழ்ச்சிக்குறிய விடயம் என சொல்லாமல் சொல்கின்றனர். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தபோது வாய் விட்டு அலுது ஒப்பாரி வைத்த ஷைத்தான்,    
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறந்தபோது சந்தோசப்பட்டு பெருநாள் தினம் போல கொண்டாடி  வாய்விட்டு கூட்டம் கூட்டமாக சிரிக்காமல் இருந்திருக்கமாட்டான்

நபிகள் நாயகம் (ஸல்)   இறந்த ரபியுல் அவ்வல் மாதம் வரும்போது இன்றும்
கச்சேரி என்றும் ஊர்வலம் என்றும் ஆட்டம் பாட்டம் போட்டு       வீழா என்கிற பெயரில்   கொண்டாடி புத்தாடைகள்  அணிந்து நல்ல நல்ல உணவுகளை உண்டு மகிழ்ந்து  கொண்டு இன்றும் சிலர் இருப்பதனால் இவர்களையும் இப்லீஸ் கூட்டங்கள் என  நாம் இனம் கண்டு கொள்ளலாம்.

கொண்டாடுங்கள்.....!!!! கொண்டாடுங்கள்.....!!! விடிய விடிய கொண்டாடி இப்லீஸின் வாரிசுகள் தான் என்பதை வருடத்துக்கு ஒருமுறை நிருபியுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------

மீலாத் விழா பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் மௌலூத் 

கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!! காண இங்கே கிளிக் செய்யவும்

மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  காண  இங்கே கிளிக் செய்யவும் 

மத்ஹப்_மார்க்கத்தில்_அனுமதிக்கப்பட்டதா?

இன்று, முஸ்லிம் சமூகத்தில் மதுஹப் என்பது மிகவும் பரவலாக வியாபித்துள்ளது.
ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றால் அவர் கட்டாயம் ஏதேனும் ஒரு மத்ஹபில் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற அளவிற்கு இது நம்மிடையே மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கின்றது.
ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக் ஆகிய நான்கு மத்ஹப்கள் சமுதாயத்தில் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஹனஃபி மத்ஹப் தான் பெரும்பான்மை.
ஒரு சில கடலோரப் பகுதிகளில் தான் ஷாஃபி மத்ஹபை பின்பற்றும் சமூகம் இருக்கின்றன, மற்றபடி, நாட்டின் மற்ற பகுதிகளை எடுத்துக் கொண்டாலும், உலகின் ஏனைய பகுதிகளை எடுத்துக் கொன்டாலும், அதிகமான மக்கள் ஹனஃபி மத்ஹபை பின்பற்றக் கூடியவர்கள் தான் இருக்கின்றனர்.
மத்ஹப் தான் இஸ்லாம் என்று நம்புகின்ற அளவிற்கு இந்த வழிகேட்டு சித்தாந்தம் நம் சமூகத்தில் ஊடுருவியிருப்பதற்கு சில காரணங்களை வரலாற்றில் நமமால் பார்க்க முடிகிறது.
கிபி 1200 க்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். 
இவர்கள் அனைவருமே மத்ஹபை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
மத்ஹப் நூற்களின் படி சட்டங்கள் அமைப்பதையும் நிர்வாகம் செய்வதையுமே அவர்கள் மேற்கொண்டார்கள்.
ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு சித்தாந்ததை திணிக்கும் போது அது அந்த ஆட்சியின் கீழுள்ளவர்களை எளிதில் சென்றடையும்.
இதற்கு உதாரணமாக, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமையாக இல்லாமலிருந்திருந்தால் ஆங்கில மொழி இந்திய நாட்டிற்குள் ஊடுருவியிருக்குமா? நிச்சயம் ஊடுருவியிருக்காது.
பல ஆண்டுகள் இந்தியாவை அவர்கள் ஆண்டதனுடைய விளைவு, அவர்களது ஆட்சி மொழியான ஆங்கிலத்தை இந்தியர்களிடம் எளிதில் அவர்களால் சென்று சேர்க்க முடிந்தது.
அந்த வகையில், மத்ஹப் சட்டம் என்பது சமூகத்தில் எளிதில் பரவியதற்கு முகலாயர்கள் முக்கிய காரணம் என்பதை வரலாற்றின் ஒளியில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் மத்ஹபின் ஊடுருவல் இது தான் என்பது ஒரு பக்கம் இருக்க, நான்கு மத்ஹப் இமாம்களின் காலம் என்னென்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அபு ஹனீஃபா இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 70
இறப்பு ஹிஜ்ரி 150
அதாவது, நபி (சல்) அவர்கள் இறந்து 60 வருடங்கள் கழித்து தான் அபு ஹனீஃபா இமாம் பிறக்கவே செய்கிறார்கள்.
அவர் பிறந்து இளைஞன் ஆன பிறகு தான் மார்க்கத்தை கற்று பிரச்சாரம் செய்யத் துவங்கியிருப்பார்.
அப்படிப் பார்த்தால் கூட, நபியின் காலத்திற்கும் கிட்டத்தட்ட 90 வருடங்கள் கழித்து மார்க்க அறிஞராக உருவானவர் தான் அபு ஹனீஃபா இமாம்.
ஷாஃபி இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 150
இறப்பு 204
அதாவது, அபு ஹனீஃபா இமாம் இறந்த அதே ஆண்டு ஷாஃபி இமாம் பிறக்கிறார்கள்.
இதை கூட, தங்களுக்கு சாதகம் என்று கருதி, எங்கல் அபு ஹபீஃபா இமாம் இருப்பது வரை ஷாஃபி இமாமால் வர இயலவில்லை என்று பெருமைப் பட்டுக் கொள்வர் இந்த ஹனஃபி மத்ஹப் வாதிகள்.
ஆக, ஷாஃபி இமாம், நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கும் 140 ஆண்டுகள் கழிந்து தோன்றியவர்.
மாலிக் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
அஹ்மத் இப்னு ஹம்பல் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு 241
ஆக, நான்கு இமாம்களும் நபி (ஸல்) அவர்களது காலத்திற்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து தோன்றியவர்கள் தான் எனும் போது, அவர்களைப் பின்பற்றுவது எப்படி இஸ்லாமாக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவர்களை பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இருக்குமானால், இவர்கள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட இந்த 100 ஆண்டுகளில் தோன்றிய முஸ்லிம்கள் எந்த மத்ஹபை பின்பற்றினார்கள்?
அவர்களுக்கு எந்த மத்ஹபும் இல்லையே, அப்படியானால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?
என்பதையெல்லாம் நாம் சிந்திக்கும் போது தான் இதிலுள்ள அபத்தத்தை நம்மால் புரிய முடிகிறது.
இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!  நாள் : 14
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்) - #Nashid_Ahmed