"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

பிறந்த தின விழாவா? இறந்த தின விழாவா?


மனித குலத்துக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்து  மரணமடைந்த மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை நாம் நெருங்கி கொண்டிருக்கின்றோம். ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டாலே அதிகமான முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம் என்ற பெயரில் பிறந்த தின விழா கொண்டாடுவதையும், மௌலித் பாடல்கள் ஓதுவதையும் வணக்கமாக வழக்கமாக செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வது மார்க்க ரீதியாக குற்றமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தது மாத்திரமின்றி இம்மாதத்தில் தான் மரணித்துமுள்ளார்கள்.
நபியின் மரண அறிகுறி
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல்இ செயல்களிலிருந்து அவர்களின் மரணம் நெருங்கிவிட்டதற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.
1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப் பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம்.

கண்ணிய நபியின் கடைசி வாரம்
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் (மற்ற) துனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.. அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட அப்பாஸ் (ரழி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று பதிலளித்தேன். அவர்தாம் அலீ பின் அபீதாலிப் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னார்கள். மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க் காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள் வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியினால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும் என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரழி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமரவைத்தோம். பிறகு அவர்கள் மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள் (சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்) என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள். பிறகு உபதேசமும் செய்தார்கள்.” (புஹாரி-4442)

அண்ணலாரின் சகராத் நேரம்

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறையில் தங்க வேண்டிய) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களது இறப்பின் போது அவர்களது எச்சிலையும் எனது எச்சிலையும் அழ்ழாஹ் ஒன்று சேர்த்தான். இவை அழ்ழாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தனது கரத்தில் பல்துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக் கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். ஆகவே, உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா என்று நான் கேட்க, அவர்கள் தம் தலையால் ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான் பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா என்று கேட்டேன். அவர்கள் தம் தலையால் ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரம் ஒன்று அல்லது பெரிய மரக் குவளையொன்று இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட அவர்களின் கரம் சரிந்தது.” (புஹாரி-4449)

நெஞ்சை உருக்கும் நிறைவான விடைபெறல்
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “உலக வாழ்வு மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ய்பு வழங்கப்படாமல் எந்த இறைத் தூதரும் இறப்பதில்லை என்று நான் (நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய கரகரப்பான குரழில்) அழ்ழாஹ் அருள்புரிந்துள்ள இறைத்தூதர்கள் உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன் எனும் (4-69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்று நான் எண்ணிக்கொண்டேன்.” (புஹாரி-4435)
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன் அவர் பல்துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த நான் அந்தப் பல்துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் தம் கையை அல்லது தம் விரலை உயர்த்தி பிறகு, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேரத்தருள்) என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள். அறிவிப்பாளர் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். என் மு
கவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்.” (புஹாரி-4438)
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை அல்லாஹ்வின் தூதர் மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சிந்திக்க சில வரிகள்
இதுவரை நபியவர்களின் மரணச் செய்தியை படித்தீர்கள், அதைக்கேட்ட நபித்தோழர்கள் துடியாய்த் துடித்தார்கள். ஆனால் இன்று நாம் அவர்கள் மரணித்த நாளை கொண்டாடும் நாளாக எடுத்துக்கொண்டோமா இல்லையா? இது இறைவிசுவாசியின் பண்பாக இருக்க முடியுமா?

நபியவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12ம் திகதி பிறந்தார்களா? என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனால் ரபீஉல் அவ்வல் 12ம் திகதி மரணித்தார்கள் என்பது ஊர்ஜிதமானதே. ரபீஉல் அவ்வல் பிறை 12இல் மீலாத் விழா இன்று கொண்டாடப்படுவது நபியவர்களின் பிறந்த நாளுக்காகவா அல்லது இறந்த நாளுக்காகவா? சிந்திக்க மாட்டீர்களா?

நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது நபியவர்களைப் புகழ்வதென்றால் அல்லது இஸ்லாத்திலுள்ள நற் கருமமாக இருந்தால் நபியவர்களே ஒவ்வொரு வருடத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல் அதைச் செய்திருப்பார்கள். ஸஹாபாக்கள் அதைப் பின்பற்றி இருப்பார்கள். இவர்களில் யாரும் இதைச் செய்யவே இல்லை. ஹிஜ்ரி 300க்குப் பிறகு   இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஷீஆக்களின் ஒரு பிரிவினரான பாத்திமிய்யீன்கள் அரசியல் இலாபத்திற்காக செய்த வேலையே மீலாத் மேடைகள். இதேபோன்றுதான் நபியவர்களின்  பெயரில் பாடப்படும் ஷிர்க்குகள் நிறைந்த மௌலூத் பாடல்களும். இதற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளலவும் சம்மந்தம் இல்லை. மாறாக இவைகள் இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் எனும் வழிகேடுகளாகும்.
மேலும், முஸ்லிம்களில் அதிகமானோர் ரபீஉல் அவ்வல் பிறை 12இல் புத்தாடை அனிந்து, விதவிதமான சாப்பாடுகள் சமைத்து பெருநாள் தினம் போல் கொண்டாடி வருகின்றனர். இவ்வாரு செய்வோர் இஸ்லாத்தின் அடிப்படையில் பாவிகளாவார்கள். மேலும், நபிகள் நாயகம் மரணித்தது தமக்கு மகிழ்ச்சிக்குறிய விடயம் என சொல்லாமல் சொல்கின்றனர். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தபோது வாய் விட்டு அலுது ஒப்பாரி வைத்த ஷைத்தான்,    
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறந்தபோது சந்தோசப்பட்டு பெருநாள் தினம் போல கொண்டாடி  வாய்விட்டு கூட்டம் கூட்டமாக சிரிக்காமல் இருந்திருக்கமாட்டான்

நபிகள் நாயகம் (ஸல்)   இறந்த ரபியுல் அவ்வல் மாதம் வரும்போது இன்றும்
கச்சேரி என்றும் ஊர்வலம் என்றும் ஆட்டம் பாட்டம் போட்டு       வீழா என்கிற பெயரில்   கொண்டாடி புத்தாடைகள்  அணிந்து நல்ல நல்ல உணவுகளை உண்டு மகிழ்ந்து  கொண்டு இன்றும் சிலர் இருப்பதனால் இவர்களையும் இப்லீஸ் கூட்டங்கள் என  நாம் இனம் கண்டு கொள்ளலாம்.

கொண்டாடுங்கள்.....!!!! கொண்டாடுங்கள்.....!!! விடிய விடிய கொண்டாடி இப்லீஸின் வாரிசுகள் தான் என்பதை வருடத்துக்கு ஒருமுறை நிருபியுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------

மீலாத் விழா பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் மௌலூத் 

கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!! காண இங்கே கிளிக் செய்யவும்

மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  காண  இங்கே கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்