"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

புகாரி தர்ஹாவில் புனித முடியா?


இந்த வழிகெட்ட கூட்டத்தினர் இன்னொரு மவ்ட்டீகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழும் இந்தக் கருத்துக் குருடர்கள் தற்போது புதிதாக முடி கலாச்சாரத்தையும் தூக்கி இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் முடி தங்களிடம் இருப்பதாகவும் அதைப் பாலில் நனைத்து பொதுமக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் புளுகியிருக்கின்றார்கள்.

தமது முடியைப் பாலில் நனைத்துக் குடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்களா? அவ்வாறு குடித்தால் புனிதம் கிடைக்குமா? என்பதையெல்லாம் விட்டு விடுவோம்.

இது விஞ்ஞான யுகம். ஒரு முடியை வைத்து குளோனிங் முறையில் அந்த ஆளையே உருவாக்கி விடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. அது போல் ஒரு முடியைக் கொடுத்தால், அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருடைய முடி என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். கார்பன் டேட்டிங் என்ற முறையில், புஹாரி தர்ஹாவில் உள்ள அந்த முடியை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம். அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியா? என்பதை ஆய்வு செய்வோம்.

ஒரு வேளை அது 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முடியாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் முடி என்றாகி விடாது.

நம்முடைய மார்க்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பொருளாக இருந்தாலும், போதனையாக இருந்தாலும் அதற்கு ஸனது எனும் சங்கிலித் தொடரான ஆதாரம் வேண்டும்.

இன்று இவர்கள் குறிப்பிடக்கூடிய இந்த முடி விவகாரத்திற்கும், ஹதீஸ் கலை அறிஞர்கள்  வகுத்திருக்கும் அடிப்படையிலான சங்கிலித் தொடர் வரிசை இருக்க வேண்டும். அதாவது அந்த முடி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, நபித்தோழர், பிறகு அவரிடமிருந்து தாபிஃ, பிறகு தாபிஃயிடமிருந்து தபவுத் தாபிஃ லி இப்படித் தலைமுறை தலைமுறையாக வந்து புஹாரி தர்ஹாவுக்கு எப்படி வந்தது என்று நிரூபிக்க வேண்டும். இதை ஓர் அறைகூவலாகவே விடுக்கின்றோம். இவ்வாறு நிரூபிக்கவில்லையெனில் இது சரித்திர நாயகரான நபி (ஸல்) அவர்களின் முடியல்ல, ஏதோ தரித்திரம் பிடித்தவனின் முடி என்றாகி விடும்.

நபிஸல்அவர்களின் திரு முடி என்று மக்களை ஏமாற்றும் இவர்களுக்கு சகோதரர் pj விடுக்கும் சவால்⬇


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்