"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மத்ஹப்_மார்க்கத்தில்_அனுமதிக்கப்பட்டதா?

இன்று, முஸ்லிம் சமூகத்தில் மதுஹப் என்பது மிகவும் பரவலாக வியாபித்துள்ளது.
ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டுமென்றால் அவர் கட்டாயம் ஏதேனும் ஒரு மத்ஹபில் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற அளவிற்கு இது நம்மிடையே மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கின்றது.
ஷாஃபி, ஹனஃபி, ஹம்பலி, மாலிக் ஆகிய நான்கு மத்ஹப்கள் சமுதாயத்தில் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஹனஃபி மத்ஹப் தான் பெரும்பான்மை.
ஒரு சில கடலோரப் பகுதிகளில் தான் ஷாஃபி மத்ஹபை பின்பற்றும் சமூகம் இருக்கின்றன, மற்றபடி, நாட்டின் மற்ற பகுதிகளை எடுத்துக் கொண்டாலும், உலகின் ஏனைய பகுதிகளை எடுத்துக் கொன்டாலும், அதிகமான மக்கள் ஹனஃபி மத்ஹபை பின்பற்றக் கூடியவர்கள் தான் இருக்கின்றனர்.
மத்ஹப் தான் இஸ்லாம் என்று நம்புகின்ற அளவிற்கு இந்த வழிகேட்டு சித்தாந்தம் நம் சமூகத்தில் ஊடுருவியிருப்பதற்கு சில காரணங்களை வரலாற்றில் நமமால் பார்க்க முடிகிறது.
கிபி 1200 க்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். 
இவர்கள் அனைவருமே மத்ஹபை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
மத்ஹப் நூற்களின் படி சட்டங்கள் அமைப்பதையும் நிர்வாகம் செய்வதையுமே அவர்கள் மேற்கொண்டார்கள்.
ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு சித்தாந்ததை திணிக்கும் போது அது அந்த ஆட்சியின் கீழுள்ளவர்களை எளிதில் சென்றடையும்.
இதற்கு உதாரணமாக, ஆங்கிலேயர்களின் ஆட்சியை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமையாக இல்லாமலிருந்திருந்தால் ஆங்கில மொழி இந்திய நாட்டிற்குள் ஊடுருவியிருக்குமா? நிச்சயம் ஊடுருவியிருக்காது.
பல ஆண்டுகள் இந்தியாவை அவர்கள் ஆண்டதனுடைய விளைவு, அவர்களது ஆட்சி மொழியான ஆங்கிலத்தை இந்தியர்களிடம் எளிதில் அவர்களால் சென்று சேர்க்க முடிந்தது.
அந்த வகையில், மத்ஹப் சட்டம் என்பது சமூகத்தில் எளிதில் பரவியதற்கு முகலாயர்கள் முக்கிய காரணம் என்பதை வரலாற்றின் ஒளியில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் மத்ஹபின் ஊடுருவல் இது தான் என்பது ஒரு பக்கம் இருக்க, நான்கு மத்ஹப் இமாம்களின் காலம் என்னென்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அபு ஹனீஃபா இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 70
இறப்பு ஹிஜ்ரி 150
அதாவது, நபி (சல்) அவர்கள் இறந்து 60 வருடங்கள் கழித்து தான் அபு ஹனீஃபா இமாம் பிறக்கவே செய்கிறார்கள்.
அவர் பிறந்து இளைஞன் ஆன பிறகு தான் மார்க்கத்தை கற்று பிரச்சாரம் செய்யத் துவங்கியிருப்பார்.
அப்படிப் பார்த்தால் கூட, நபியின் காலத்திற்கும் கிட்டத்தட்ட 90 வருடங்கள் கழித்து மார்க்க அறிஞராக உருவானவர் தான் அபு ஹனீஃபா இமாம்.
ஷாஃபி இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 150
இறப்பு 204
அதாவது, அபு ஹனீஃபா இமாம் இறந்த அதே ஆண்டு ஷாஃபி இமாம் பிறக்கிறார்கள்.
இதை கூட, தங்களுக்கு சாதகம் என்று கருதி, எங்கல் அபு ஹபீஃபா இமாம் இருப்பது வரை ஷாஃபி இமாமால் வர இயலவில்லை என்று பெருமைப் பட்டுக் கொள்வர் இந்த ஹனஃபி மத்ஹப் வாதிகள்.
ஆக, ஷாஃபி இமாம், நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கும் 140 ஆண்டுகள் கழிந்து தோன்றியவர்.
மாலிக் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
அஹ்மத் இப்னு ஹம்பல் இமாமின் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு 241
ஆக, நான்கு இமாம்களும் நபி (ஸல்) அவர்களது காலத்திற்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து தோன்றியவர்கள் தான் எனும் போது, அவர்களைப் பின்பற்றுவது எப்படி இஸ்லாமாக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவர்களை பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இருக்குமானால், இவர்கள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட இந்த 100 ஆண்டுகளில் தோன்றிய முஸ்லிம்கள் எந்த மத்ஹபை பின்பற்றினார்கள்?
அவர்களுக்கு எந்த மத்ஹபும் இல்லையே, அப்படியானால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?
என்பதையெல்லாம் நாம் சிந்திக்கும் போது தான் இதிலுள்ள அபத்தத்தை நம்மால் புரிய முடிகிறது.
இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!  நாள் : 14
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்) - #Nashid_Ahmed

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்