அல்லாஹ்வின்
பெரும் கிருபையினால் பல வருடங்களாக ஏகத்துவப் பிரச்சாரம் நடைபெற்று
வருகிறது. இந்தப் பிரச்சாரங்களில் இணை வைப்பு காரியங்களையும், மூடப் பழக்க
வழக்கங்களையும் கண்டித்து தெளிவுபடுத்தியதன் விளைவாக மக்கள் விழிப்புணர்வு
பெற்று வருகின்றனர். இதில் தாயத்து என்ற இணை வைப்பு காரியத்தையும்
கண்டித்து அதன் விளைவுகளையும் நாம் கூறி வருகின்றோம்.
உக்பா
பின் ஆமிர் (ரலி ) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்து
பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத்
செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக்
கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில்
மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையினால்
நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார்
தாயத்தை தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று
கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781) இந்த நபிமொழியையும் அடிப்படையாகக் கொண்டு தாயத்தை யாரும் அணியக் கூடாது. அது இணை வைப்பாகும் என்று கூறுகிறோம்.
மேலும்
நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய நபிகளார் கட்டளையிட் டார்கள். இறைவனிடம்
பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஆனால் தாயத்தை அணியச் சொல்லவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர), நூல் : புகாரி (5678)
அல்லாஹ்வின்
அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய
மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரரி), நூல் : திர்மிதீ (1961), அபூதாவூத் (3357)
நானும்
ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ அவர்களும் அனஸ் பின் மாக் (ரலி) அவர்களிடம்
சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் "அபூஹம்ஸாவே! நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்”
என்று சொல்ல, அனஸ் (ரலி ) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப்
பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), "சரி (அவ்வாறேஓதிப்
பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி ) அவர்கள், "அல்லாஹும்ம ரப்பன்னாஸ்!
முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன்
லா யுஃகாதிரு சகமன்” என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்:
இறைவா!
மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமப்பாயாக! நீயே
குணமப்பவன். உன்னைத் தவிர குணமப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய்
இல்லாதவாறு குணமப்பாயாக.)
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ், நூல் :புகாரி (5742)
நபிகளாரின்
இந்தக் கட்டளையை மதிக்காமல் தாயத்து, தட்டு, தகடு என்று மூடநம்பிக்கையில்
சில முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மூடநம்பிக்கையைத்
தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில ஆலிம்கள் நம்முடைய
ஆதாரங்களுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளனர். அந்த மறுப்பு சரியானதா?
இல்லையா? என்பதைக் காண்போம்.
தமீமா என்றால் என்ன?
தாயத்து அணிவதைத் தடுத்தார்கள் என்ற செய்தியில் தாயத்து என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில்
தமீமா என்ற அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது.
இந்த
தமீமா என்றவார்த்தையை வைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டுகளை ஆலிம்கள்
என்று சொல்பவர்கள் விளையாடி தாயத்து அணியலாம் என்று கூறி வருகிறார்கள்.
தமீமா
என்பது கருப்பும் வெள்ளையும் சேர்ந்த மணியாகும். வாரியில் இதை
கோர்க்கப்படும் பின்னர் கழுத்தில் போடப்படும். (அல் காமூஸுல் முஹீத், பாகம்
: 1, பக்கம் :1400)
தமீமா
என்பது கறுப்பும் வெள்ளையும் கலந்த மணியாகும். அதை வாரியில்
கோர்க்கப்படும் பின்னர் கழுத்தில் போடப்படும் என்று அபூ மன்ஸூர் கூறுகி
றார். தமீமா என்பது ஒரு மாலையாகும் அதில் வாரும் பாதுகாப்பு பொருளும்
இருக்கும் ஒன்றாகும் என்று இப்னு ஜின்னீ கூறுகிறார். (ரிஸானுல் அரப், பாகம்
: 12, பக்கம் : 67)
தற்போது போடப்படும் தாயத்து என்பது
தகடால் செய்யப்பட்டுள்ளது. நபிகளார் தடுத்தது இந்தத் தாயத்தை இல்லை. எனவே
அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸை வைத்து தற்போது போடப்படும் தாயத்தை தடை செய்ய
முடியாது என்று கூறுகிறார்கள்
இது விநோதமான விளக்கமாகும். எந்த
அறிவாளியும் இதுபோன்ற விளக்கத்தைக் கூறத் துணிய மாட்டான். நபி (ஸல்)
அவர்கள் காலத்தில் தாயத்து என்பது அவர்களுக்குக் கிடைத்த மூலப்பொருள் மூலம்
செய்திருப்பார்கள். அதனால் அந்த மூலப்பொருளில் இருந்தால்தான் தடை செய்ய
முடியும் என்று சொன்னால் நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் எதனால் செய்யப்
பட்டிருக்கும்? அவர்கள் காலத்தில் இருந்த கல், மண், மரம் போன்ற பொருள்
களால் செய்யப்பட்டிருக்கும். நபிகளார் காலத்திற்குப் பிறகு
கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருளால் ஒருவர் சிலையை செய்து வைத்துக்
கொண்டு இந்தச் சிலையை வணங்கலாம். ஏனெனில் நபிகளார் காலத்தில் இருந்த
சிலைகள் கல்லால் மண்ணால் செய்யப்பட்டது அதைத்தான் தடுத்தார்கள் என்று
கூறினால் அறிவுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா? நபிகளார் காலத்தில் கல்
மண்ணால் செய்திருந்தால் அன்றைய கால மக்க ளின் நம்பிக்கை என்ன? அந்தச்
சிலைக்கு கடவுளின் ஆற்றல் உள்ளது என்பதுதான். இந்த நம்பிக்கை பிளாஸ்டிக்
சிலைகளுக்கு உள்ளது என்று நம்புவதால் இதுவும் கூடாது என்று கூறுவோம்.
இதைப்போன்றுதான் தாயத்து என்பது எந்த மூலப் பொருளில் இடம் பெற்றிருந்தாலும் அன்றைய கால மக்களின் நம்பிக்கையைப் போன்றிருந்தால்
எந்தப் பொருளில் தாயத்து செய்திருந்தாலும் அதையும் கூடாது என்றுதான் நாம் கூறுவோம்.
தாயத்து
என்பது மணியாகும். அல்லது தலையில் மாற்றப்படும் மாலையாகும். அறியாமைக்
காலத்தில் ஆபத்துகளிரிருந்து இது காப்பாற்றும் என்று நம்பிக்கை
கொண்டிருந்தார்கள். (பத்ஹுல் பாரி, பாகம் : 10, பக்கம் : 196)
தாயத்து
என்பது ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் சாதனம் என்று நம்பிக்கை அன்றைய
அறியாமைக்கால மக்களிடம் இருந்துள்ளது. எனவே இந்த நம்பிக்கை எந்தப் பொருளில்
இருந்தாலும் அது கூடாது என்றே கூறவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தடை செய்தது
ஷிர்க்கான வாசகம் உள்ள தாயத்தைத்தான். திருக்குர்ஆன் வசனங்கள் உள்ள
தாயத்தை அணிந்தால் அது இணை வைத்ததில் சேராது என்று தாயத்தை அணிவது கூடும்
என்று கூறுபவர்கள் சொல்கிறார்கள்.
தாயத்தைப் பொதுவாக தடை செய்த
நபிகளார். அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் தடையில்லை என்று எங்கும்
கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிக்காத ஒன்றில் நாம்
விதிவிலக்கு அளிப்பது மார்க்கத்தில் கை வைப்பதாகும். ஓதிப் பார்த்ததைத் தடை
செய்த நபிகளார் அவர்கள் ஓதிப் பார்க்கும் வாசகங்களில் இணை வைப்பு
வாசகங்கள் இல்லையானால் கூடும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
நாங்கள்
அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்),
"அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று
கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள்
ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்ரிரிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை
கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்தரில் எந்தக் குற்றமும் இல்லை”
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாரிக் (ரரி), நூல் :முஸ்ரிம் (4427)
இதைப்போன்று
நீங்கள் தாயத்தில் எழுதி வைக்கும் வாசகங்களைக் காட்டுங்கள் என்று கேட்டு
அதில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையா னால் தாயத்தை அணிந்து கொள்ளலாம் என்று
கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எந்தத் தகவலும் இல்லாதபோது எந்த வாசகம்
இருந்தாலும் அது கூடாது என்று கூறுவதே சரியான கருத்தாகும்.
தாயத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் கூடும் என்று சில அறிஞர் கள் கூறியுள்ளார்களே என்று கேட்கிறார்கள்.
இஸ்லாத்தில்
ஒரு விஷயத்தைக் கூடும் என்று சொல்வதற்கும் கூடாது என்று சொல்வதற்கும்
தகுதியானவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமாவார்கள். மற்ற எவரும் ஒன்றைக்
கூடும் என்று கூற அல்லது கூடாது என்று கூறஅனுமதியில்லை இதுதான் இஸ்லாத்தின்
அடிப்படை.
தாயத்து இவ்வாறு இருந்தால் அணியலாம், இவ்வாறு இருந்தால்
அணியக் கூடாது என்று கூறும் நபர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.
அவர்களின் கூற்று மார்க்கமாக ஆகாது எனவே திருக்குர்ஆனோ நபிமொழியோ அல்லாத
இந்த கூற்றுகள் ஆதாரமாக ஆகாது.
ஷிர்க் இல்லாமல் இருந்தால் தயாத்து அனியலாமா ??என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்