"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஆலிம்களின் சிறப்புகள்

ஆலிம்'களின் முகத்தை பார்ப்பது வணக்கமா.?
ஆலிம்களின் சிறப்புகள் என்ற பழைய நூல் ஒன்றில் கண்ட செய்தி.!

ஆலிம்களின் முகத்தை பார்ப்பது வணக்கமாகும் - என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த நூலில் எழு
தப்பட்டுள்ள இந்த ஹதீஸ் பலவீனமானது. இப்படி ஒரு ஹதீஸ் - அல் இலலுல் முத்தனாஹியா -1373- என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள ஹம்மாம் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாதவர் (மஜ்ஹூல்) என்று
இமாம் கத்தீபுல் பஃதாதீ அவர்களும் - கைவிடப்பட்டவர் (மத்ரூக்) என்று
இமாம் தாரகுத்னீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள சுலைமான் பின் அர்ரபீவு என்ற அறிவிப்பாளர் - பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸின் இறுதியில் - சுலைமான் பின் அர்ரபீவு என்ற அறிவிப்பாளர் - பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ கூறிய செய்தி'யை இந்த நூலின் ஆசிரியர் இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்‌.

* மேலும் இதே ஹதீஸ் தஃப்ஸீர் ரூஹுல் பயான் என்ற நூல் - இந்த ஹதீஸை அறிவித்த நபித்தோழர் யார் - இதனை அறிந்த அறிவிப்பாளர்கள் யார் என்ற எந்த விபரங்களும் இல்லாமல் - ஹதீஸில் வந்துள்ளது என்று இடம்பெற்றுள்ளது .

அறிவிப்பாளர் வரிசை (ஸனது) இல்லாத ஹதீஸ்களை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது - எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

தஃப்ஸீர் ரூஹுல் பயான் என்ற நூல் - பல கட்டுக்கதைகள் இடம் பெற்றுள்ள நூலாகும் . இதே ஹதீஸை அனஸ் ரலி அவர்கள் அறிவித்ததாக இமாம் தைலமீ அவர்கள் தனது முஸ்னது அல்ஃபிர்தவ்ஸ் என்ற நூலில் கூறியுள்ளார்கள் -

இதற்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை என்பதனால் - இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அல்ல என்று அல்மகாஸிதுல் ஹஸனா என்ற நூலில் - இமாம் அஸ்ஸகாவீ அவர்கள் கூறியுள்ளார்கள். இதே போன்று இமாம் ஷவ்கானீ அவர்களும் அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ என்ற நூலில் கூறியுள்ளார்கள்

. . இதே ஹதீஸ் - முறையான அறிவிப்பாளர்கள் வரிசை இன்றி ஷீஆ'க்கள் எழுதிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது . பலவீனமான ஹதீஸ் மூலம் தங்கள் இமேஜை ஆலிம்கள் தக்க வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்கள். எனவே ஆலிம்களின் முகத்தை பார்ப்பது வணக்கமாகும் என்ற - இந்த ஹதீஸ் பலவீனமானது. * அலீ (ரளி) அவர்களின் முகத்தை காண்பது வணக்கமாகும் என்ற ஹதீஸின் தரம் குறித்தும் - ஆலிம்களின் முகத்தை பார்த்து சந்தோஷப்படுவோருக்கு கிடைக்கும் நன்மைகள் - என வந்துள்ள ஹதீஸின் தரம் குறித்தும் - அடுத்த அடுத்த பதிவுகளில் காணலாம். இன்ஷாஅல்லாஹ். :-

அன்புடன் :- M.யாசிர் அரஃபாத் இம்தாதி.


எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!


மனித படைப்பான கவிதை தொகுப்புகளுக்கு புனிதம் கற்ப்பிக்க கூடாது, குர்ஆன் தான் நமக்கு புனித நூல்! ஏனைய மனிதப்படைப்புகளில் தவறு இருக்கும் என்று சொல்வது புது மதமா? அல்லது, இறைநேசர்கள் என்று தாங்கள் அடையாளம் கண்டுகொண்ட(?!)
மனிதர்கள் இயற்றிய கவிதைகளில் எந்த தவறும் இருக்கவே முடியாது. இதில் தவறிருந்தால் குர்ஆனிலும் தவரிருப்பதாய் ஆகிவிடும். ஏனென்றால் குர்ஆனில் அப்படி கூறப்பட்டுள்ளதே, குர்ஆனில் இப்படி கூறப்பட்டுள்ளதே, அதுபோல் தானே இந்த கவிதைகளிளுள் கூறப்பட்டுள்ளது, என்றெல்லாம் கூறி, அந்த மனித படைப்புகளை புனிதம் கர்ப்பித்து குர்ஆனுக்கு கூட கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை கொடுப்பது புது மதமா??? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்!
யார் சொன்னாலும், எந்த இயக்கத்தினராக இருந்தாலும், எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள், அல்குர்ஆன், ஹதீஸ்படி ஆராய்ந்து பாருங்கள். ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், அல்லது நிராகரித்து தூக்கி எறியுங்கள்! அதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எல்லா புதிய கண்டுபிடிப்புகளையும் மார்க்கத்திலிருந்து தூக்கி எறியுங்கள் என்று அழைப்பதா புது மதமா? அல்லது, அல்குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது, நம் தமிழ் கலாசாரம் என்ன சொல்கிறது, சைவ வைணவ சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது? அதன் அடிப்படையில், நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக பின்பற்றியவைகளையும் நாம் பின்பற்றவேண்டும் அவை இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமானவைகளாக இருந்தாலும் பராவா இல்லை என்று தன்னிச்சையாக பிடிவாதம் பிடிப்பவர்கள் புது மதத்தினரா? ]

தாயத்து கட்டுவது இஸ்லாம் காட்டிய வழியா?

images (1).jpgதாயத்து கட்டுவதை பெருமையாக நினைக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக சிந்திக்கத் தவறும் முஸ்லிம்களுக்கும் இக்கட்டுரையை சமர்பிக்கிறோம் காரணம் முஸ்லிம்களாகிய நம்மில்தான் இந்த கொடிய அநாச்சாரத்திற்கு அடிமையானவர்கள் அதிகம் இப்படிப்பட்டவர்கள்தான் இறைவனுக்கு இணைவைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
தாயத்து கட்டிக் கொள்வதால் தங்களுக்கு ஜின்கள் மற்றும் காத்து கருப்பு அண்டாது என்றும் மனிதன் பலவீனமானவன் என்றும் அந்த பலவீனத்தை பலப்படுத்தவே மந்திரித்த தாயத்துக்களை வழங்குவதாகவும் ஓரளவுக்கு இஸ்லாத்தை கற்றுணர்ந்த ஹஜரத்துக்கள் கூறிவருகிறார்கள்.
மேலும் தாயத்துக்கள் தா்காஹ் கப்ருகளில் வைத்து கத்தம் ஃபாத்திஹா ஓதி அதை தியானம் செய்து மந்திரித்து கொடுப்பதன் மூலம் அந்த தாயத்திற்கு மகத்துவம் கிடைத்து விடுவதாகவும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
ஏதோ தாயத்தை முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாகவும் ஹஜரத்துக்களின் மந்திர சக்தியின் மூலம்தான் தாயத்திற்கு மகத்துவம் கிடைப்பதாகவும் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்துக்கள் மற்றும் கிருஸ்தவ சகோதரர்கள் கூட நம்பி மோசம் போகிறார்கள்!
தாயத்தின் பின்னனி என்ன? தாயத்து எப்படி எந்த காலத்தில் உருவானது அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிவதற்கு கடந்த கால வரலாற்றில் நாம் பயணிக்க வேண்டும்!