நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான்.
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் நமக்காக தனிப்பட்ட முறையில் துஆ செய்தால் நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று கூறலாம். ஏனெனில் இதில் உண்மை உள்ளது. இதில் எந்தக் குற்றமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பொதுவாக துஆ செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் பரக்கத் எங்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இப்படி கூறுகிறார்கள் என்றால் அது தவறாகும்.