கறுப்பு நிறம் தரித்திரமா
கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? முஹம்மத் ஃபைஸர்
திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பார்க்க: 1040, 1041, 1042, 1043, 1044
கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை.
விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் கிரகணம் பிடித்த நிலையில் உள்ள சூரியனைப் பார்க்கக் கூடாது; அது கண் பார்வையைப் பாதிக்கும் என்பது மட்டுமே காரணத்துடன் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருட்டறையில் கர்ப்பிணிப் பெண்களை அடைத்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் பொய்யான கட்டுக் கதையாகும்.
வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா?
வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்றும், லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா? விளக்கம் தேவை. ஷாஹுல் ஹமீது
பதில் :
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள்) ஆகிய வாசகங்களை வீட்டில் தொங்கவிடுவது தவறல்ல. வீட்டுக்கு வருபவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தால் இதை மார்க்கம் தடை செய்யவில்லை.
இதுபோன்ற வாசகங்களை எழுதித் தொங்கவிட்டால் வீட்டுக்கு பரகத் வரும். பேய் பிசாசு வராது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வது கூடாது.