"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

 515. மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (4:115) மூமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூமின்களின் வழியையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.

ஆனால் இந்த வாதத்துக்கு இவ்வசனத்தில் அறவே இடமில்லை.

இரண்டு அர்த்தங்கள் கொடுக்க மூமின்களின் வழி என்ற சொல் இடம் தருகின்றது.

மூமின்களைக் கண்டறிந்து அவர்கள் சென்ற வழியில் செல்லுதல் என்பது ஒரு அர்த்தம்.

மூமின்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அந்த வழியில் செல்லுதல் என்பது இன்னொரு அர்த்தம்.

முமின்கள் சென்ற வழி என்று பொருள் கொள்ளவும்

மூமின்கள் செல்ல வேண்டிய வழி என்று பொருள் கொள்ளவும்

இச்சொல் இடம் தந்தாலும் முதலாவது பொருள் கொள்ள இஸ்லாத்தின் அடிப்படை தடையாக உள்ளது.

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

  511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம் தமிழாக்கம் செய்துள்ளோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வசனங்களில் இஸ்தவா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11:44 வசனத்தில் கப்பல் மலை மீது அமர்ந்தது என்று அனைவரும் மொழி பெயர்த்துள்ள இடத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

23:38 வசனத்திலும் கப்பல் மீது அமர்வீராக என்று சொல்லப்படும் இடத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னோரைப் பின்பற்றலாமா?

 501. முன்னோரைப் பின்பற்றலாமா?

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

இவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.