இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இலங்கை காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபிகளைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா? –
முஹம்மது ஃபஹ்மி, இலங்கை. \
பதில்: இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை நினைவு கூர்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நபித்தோழருக்கும் இத்தகைய நினைவுத்தூண்களை எழுப்பவில்லை. கீழ்க்கண்ட நபிகளாரின் எச்சரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
صحيح البخاري435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا
யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816.