"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அபூதாலிப் அவர்கள் சொர்க்கவாதியா நரகவாதியா ?

கேள்வி :
அபூதாலிப்    صلى الله عليه و سلم  அவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். அவர் நபியவர்கள் உண்மையான நபிதான் என்பதை நன்கு அறிந்திருந்தார். நபியவர்களுக்குப் பல வழிகளிலும் உதவினார். எதிரிகளின் தாக்குதலுக்கு இடம் கொடுக்காமல் அரணாக நின்றார். மரணிக்கும் வேளையில் நபியவர்களைப் பின்பற்றுவதில்தான் நிச்சயம் மறுமையின் வெற்றியுண்டு என்று தனது ஹாஷிம் கோத்திரத்தார்களுக்கு வஸிய்யத் செய்தார். நபிகளாரைப் புகழ்ந்து பல கவிதைகளை இயற்றினார்.

அபூதாலிபின் மேற்கண்ட நடவடிக்கைகள் அவர் பெருமானாரை உள்ளார ஈமான் கொண்டிருந்ததற்கு சான்றாக அமைந்துள்ளது என்று கூறி அவர் முஃமினாகவே மரணித்தார் என்று ஒருவர் கூறுகின்றார். அதே நேரத்தில், மரணிக்கும் வேளையில் நபியவர்கள் அபூதாலிபுக்கு கலிமா சொல்லிக் கொடுத்தும் அவர் ஏற்க மறுத்தார். இந்த நிலையில்தான் அவர் மரணித்தார். அதனால் அவர் காபிராகவே மரணித்தார் என்று வேறு ஒருவரும் கூறுகின்றார்.

இவ்வாறு எதிரும், புதிருமாக வாதிக்கும் இருவரும் மௌலவிமார்கள்தான். அதனால் இருவரில் எவர் கூற்று சரியானது? ஆதாரத்துடன் விளக்கம் தருக?

விடை :
அபூதாலிப் தனது பிள்ளைகளை விட கண்மணி நாயகத்தை கண்ணின் கருவிழி போன்று கவனித்தார்,பாதுகாத்தார். எதிரிகளின் அனைத்து இடர்களையும் முறியடித்தார். நபியவர்களின் நபித்துவத்தை ஐயமற அறிந்திருந்தார். மரண வேளையில் நபியவர்களைப் பின்பற்றுமாறும் வஸிய்யத் செய்தார். அவர்களைப் பின்பற்றுவதில்தான் மறுமையின் பூரண வெற்றியுண்டு என்று உறுதிப்படக் கூறினார். பெருமானாரைப் புகழ்ந்தும், வியந்தும் பல கவிதைகளைப் பாடினார். இவற்றில் சில புகாரியிலும் வந்துள்ளன.

முஹம்மத் இப்னு இஸ்ஹாக் என்பவர், “ஸியர், வமஙாஸி” என்ற நூலில், அபூதாலிபின் 110 கவிதைகளையும் முழுமையாகவே பிரசுரித்துள்ளார். அஷ்ஷெய்கு முஹக்கிக் அல்லாமா அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “ஷரஹ் ஸிறாத்துல் முஸ்தகீம்” என்ற தனது நூலில்,

அபூதாலிபின் இக்கவிதை அபூதாலிப்  நபிகள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பேரில் பூரண மஹப்பத் வைத்திருந்தார் என்பதையும், அன்னாரின் நுபுவ்வத் பற்றி நன்கு ஆழமாக அறிந்திருந்தார் என்பதையும் புலப் படுத்துகின்றது. என்றும் வரைந்துள்ளார்கள்.

மேற்கண்ட அனைத்தும் உண்மைதான். ஆனால், இவையனைத்தும் அவர் ஈமான் கொண்டதற்கு ஆதாரமாகாது! இவையனைத்தும் அவர் ஈமான் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் அவரின் சகோதரர்களான ஹளரத் அப்பாஸ், ஹளரத் ஹம்ஸா (ரழி)ஆகியோரைவிட முதன்மை பெற்றிருப்பார். அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவன் விதியின் இரகசியத்தையும் நாமறியோம்!

நபித்துவத்தைப் பற்றி ஒருவர் பூரணமாக அறிந்திருத்தல் மட்டும் அவர் முஃமினாவதற்கு சான்றாகாது. அறிதலும், புரிதலும் என்பது ஒரு விடயம். ஏற்று நிர்ணயம் கொள்ளுதல் என்பது வேறு விடயம். இரண்டும் ஒன்றாகாது.

நபியவர்களின் உண்மையான நுபுவ்வத்தை உறுதிபட அறியாதிருந்த காபிர்கள் சொற்பம். அன்னார் நபி என்பதை மிகத் தெளிவாக அறிந்தும் மனதால் வெறுத்த காபிர்கள்தான் அதிகம்.

நுபுவ்வத்தை அவர்கள் நிராகரித்தார்கள். இன்னும் அவர்களின் மனங்கள் அதை உறுதி செய்தன.”   அல்குர்ஆன் -  59 : 2

(வேதக்கார, யூத, நஸாறா அறிஞர்கள்) தங்களது பிள்ளைகளை அறிந்திருந்தது போன்று நபியவர்களை தெரிந்து வைத்திருந்தனர்.  அல்குர்ஆன் - 2 : 146

அவர்கள் அறிந்திருந்தவர் அவர்களிடம் வந்தபோது அவரை நிராகரித்தார்கள். அல்லாஹ்வின் சாபம் காபிர்கள்மீது உண்டாகட்டும். அல்குர்ஆன் - 2 : 146   என்று திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.

அபூதாலிப் உயிர் பிரியும்வரை ஈமான் கொள்ளவில்லை. அவர் குப்ரியத்தில்தான் மரணித்தார் என்பதை திருக்குர்ஆன், ஸஹீஹான ஹதீதுகள் தெளிவாக தெரிவிக்கின்றன. அதனைத் தொகுத்து சுருக்கமாகத் தருகின்றேன்.
01. “நபியே! நீங்கள் விரும்பியவரை நல்வழிப்படுத்த முடியாது. எனினும், அல்லாஹ் அவன் நாடியவர்களை நல்வழிப்படுத்துகின்றான். இன்னும் நல்வழி பெற்றவர்களை அவன் நன்கு அறிவான்.  அல்குர்ஆன் - 28 : 56

இந்த திருவசனம் அபூதாலிப் விடயத்தில்தான் இறங்கியது என்று அனைத்து முபஸ்ஸிரீன்களும் இஜ்மாவாகக் கூறியுள்ளனர். எடுத்துக் காட்டாக,
1. தப்ஸீர் பகவி            பாகம் - 03      பக்கம் - 307
2. தப்ஸீர் ஜலாலைன்       பக்கம் - 332     இந்தியப் பதிப்பு
3. தப்ஸீர் நஸபி           பாகம் - 03      பக்கம் - 240
4. தப்ஸீர் கபீர்              பாகம் - 25      பக்கம் - 02

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷரஹு முஸ்லிம் ஈமான் பற்றிய பாடத்தில் அபூதாலிப் விடயத்தில் (இந்த ஆயத்) இறங்கியது என்று அனைத்து முபஸ்ஸிரீன்களும் இஜ்மாவாகக் கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷரஹு முஸ்லிம் பாகம் : 01, பக்கம் - 41 (இந்தியப் பதிப்பு)
மிர்காத் பாகம் - 09, பக்கம் - 640

ஸஹீஹ் முஸ்லிம் கிதாபுல் ஈமானிலும், ஜாமிஉத் திர்மிதி கிதாபுத் தப்ஸீரிலும் ஹளரத் அபூஹுறைரா ரழியல்லலாஹு அன்ஹுவைத் தொட்டும் பின்வரும் ஹதீது பதிவாகியுள்ளது.

நபிகள் நாயகம்
صلى الله عليه و سلم   அவர்கள் தங்களது பெரிய தந்தை(யான அபூதாலிபின்) மரண வேளையில் லாஇலாஹ இல்லல்லாஹ்! என்று கூறுங்கள். மறுமையில் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன் என்றார்கள். அதற்கு, மரண வேதனையின் கடுமையால் முஸ்லிமாகி விட்டார் என்று குறைஷிகள் என்னை ஏளனம் செய்வார்கள் என்றில்லாவிட்டால் உங்கள் கண்களை குளிர்ச்சியடையச் செய்திருப்பேன் என்று அபூதாலிப் கூறியபோதுதான்,

நீர் விரும்பியவரை நல்வழிப்படுத்த உம்மால் முடியாது. அல்லாஹ் நாடியவர்களை அவன் நல்வழிப்படுத்துகின்றான்“ என்ற திருவசனம் இறங்கியது.
ஸஹீஹு முஸ்லிம் : பாகம் - 01, பக்கம் - 40 (இந்தியப் பதிப்பு)

02. இணை வைத்து வணங்குவோருக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள் தாம் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்காக மன்னிப்புக் கோரலாம்) அல்குர்ஆன் - 9 : 113

மேற்கண்ட திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது.

01.  அபூதாலிபுக்காக பாவமன்னிப்புத் தேட றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாடினார்கள். அப்போது இணைவைத்து வணங்குவோருக்காக... என்ற (மேற்படி) திருவசனம் இறங்கியது.
தப்ஸீர் நஸபி : பாகம் - 02, பக்கம் - 148

02.  அபூதாலிபுக்காக றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேட முனைந்தபோது இத்திருவசனம் இறங்கியது.
தப்ஸீர் ஜலாலைன் : பக்கம் 167

03. இத்திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது என்பதில் முபஸ்ஸிரீன்கள் இஜ்மாவாகக் கூறியுள்ளனர்.
 உம்தத்துல்காரி (ஐனி) புகாரி ஷரீப் விரிவுரை

04. அபூதாலிப் மரணத்தின் நெருக்க வேளையில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அங்கு சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்ல், அப்துல்லாஹ் பின் உமையா ஆகியோர் இருந்தனர். நபியவர்கள் கூறினார்கள்.

பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள். அதன் மூலம் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடுவேன் என்றபோது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமைய்யாவும், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டும் பிறழப் போகின்றீரா? என்று தொடர்ந்து அபூதாலிபிடம் கூறிக் கொண்டேயிருந்தனர்.

இறுதியாக அபூதாலிப் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயேதான் இருக்கின்றேன் என்றார். இதுதான் அவர் மொழிந்த இறுதி வார்த்தையாகும். மறுப்பு வராமலிருக்கும் வரை நிச்சயம் உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன் என்று நபிகள் நாதர் صلى الله عليه و سلم மவர்கள் நவின்றார்கள். அப்போதுதான்,

“இணை வைத்து வணங்குவோருக்காக...“ என்ற திருவசனம் இறங்கியது.
ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி (கிதாபுல் ஜனாயிஸ்) பாகம் - 01, பக்கம் - 181

அபூதாலிப் மரணிக்கும்போது புனித கலிமாவை நிராகரித்தார் என்பதும், மறுப்பு வராதிருக்கும் வரை அபூதாலிபுக்காக இஸ்திஃபார் செய்வேன் என்று நபியவர்கள் கூறியதும், பின் முஷ்ரிக்கீன்களுக்காக இஸ்திஃபார் செய்வது அவர்,

உறவினராக இருப்பினும் சரி என்று திருமறை இறங்கியதும், அபூதாலிப் அவர்கள் காபிராகவே மரணித்தார் என்பதை ஐயமற தெளிவுபடுத்துகின்றது.

அன்றி, அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக் கேட்ப)திலிருந்து தடுத்து தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள் (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.  அல்குர்ஆன் - 6 : 26

ஹளரத் இப்னு அப்பாஸ், மகாதில் ஆகியோர் கூறுகின்றனர் இத்திருவசனம் அபூதாலிப் விடயத்தில் இறங்கியது. இவர், காபிர்கள் நபியவர்களுக்கு துன்பம் செய்வதிலிருந்து விலக்கினார். இன்னும் அவர்களைத் தடுக்கவும் செய்தார். மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை ஈமான் கொள்வதிலிருந்து அவர் தூர நின்றார்.
தப்ஸீர் பஙவி : பாகம் - 02, பக்கம் - 75

அவர் (அபூதாலிப்) மனிதர்கள் நபியவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் தடுத்தார். இன்னும், அவரே பெருமானார் صلى الله عليه و سلم மவர்களை ஈமான் கொள்வதிலிருந்து தூர விலகி நின்றார்.
ஆதாரம் : தப்ஸீர் பைழாவி பாகம் - 02, பக்கம் - 401

ஹளரத் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
உங்கள் சாச்சாவுக்கு என்ன உபகாரம் செய்தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் தங்களைப் பாதுகாத்தார். தங்களுக்காக மக்களோடு சண்டை பிடித்தார் என்றதும் நபியவர்கள் நவின்றார்கள்.

“நரகின் நெருப்பில் மூழ்கிக் கிடந்தவராக அவரைக் கண்டேன். அவரை இழுத்து வந்து கால் மட்டும் நெருப்புப்படும் வரை நரகத்தின் கரைக்கு அவரைக் கொண்டு சேர்த்தேன். நான் இல்லாதிருப்பின் நரகத்தின் அடியில் மூழ்கிப் போயிருப்பார்.
ஆதாரம் : புகாரி முஸ்லிம், முஸ்னத், அஹ்மத், ஸஹீஹு முஸ்லிம்,
கிதாபுல் ஈமான், பாகம் -01 பக்கம் -115

ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். அபூதாலிப் ஈமான் கொள்ள மறுத்தார். இருப்பினும், நபியவர்களின் ஷபாஅத்தின் மூலம் மற்றவர்களின் வேதனையை ஒப்பிடும் போது அவருக்கு வேதனை மிக இலகுவாக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : பத்ஹுல்பாரி, பாகம் - 10 பக்கம் - 123

நபியவர்களிடம் அபூதாலிப் பற்றிக் கூறப்பட்டதும், நபியவர்கள் கூறினார்கள்.
மறுமையில் எனது ஷபாஅத் அவருக்கு பயனளிக்கக் கூடும். நரகத்தில் கால் அளவு கரைக்குக் கொண்டு வரப்படுவார். அதனால் அவர் மூளை கொதிக்கும்.
ஆதாரம் : புகாரி முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், பகாகம் - 03 பக்கம் - 50

அபூதாலிபின் தண்டனை கால்பாதம் வரை மட்டுப்படுத்தப்பட்டதின் நுட்பம் ஹிக்மத் யாதெனில், அபூதாலிபின் உடற்பகுதிகள் எல்லாம் பெருமானாரைப் பின்பற்றியது. அவர் பாதம் மாத்திரம் அவர் சார்ந்த சமூகத்தின் மார்க்கத்தில் உறுதியோடு நின்றது. அதனால் பாதம் நரகத்தின் தண்டனைக்கு பாத்திரமாகியது.
ஆதாரம் : உம்தத்துல்காரி, பாகம் - 17, பக்கம் - 24
இர்ஸாதுஸ்ஸாரி, பாகம் - 08, பக்கம் - 351
மவாஹிபுல்லதுன்னியா, பாகம் - 01, பக்கம் -  264

காபிர்களி்ன் அமல்கள் வீசப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும். அதனால் எதுவித பயனும் கிடையாதே என்று நீர் கேட்பீராயின்,

இது றஸுலுல்லாஹி صلى الله عليه و سلم மவர்களின் பறக்கத்தினாலும் அவர்களின் தனித்துவத்தி னாலுமாகும் என்று நான் கூறுவேன்.   ஆதாரம் : உம்தத்துல்காரி - (புகாரி ஷரீப் விரிவுரை) பாகம் - 17, பக்கம் - 23

உம்முல் முஃமினீன் உம்மு ஸல்மா அறிவிக்கின்றார்கள் ஹாரீத் பின் ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜத்துல் விதாவில் நபியவர்களைச் சந்தித்துக் கேட்டார்.

அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் குடும்ப உறவைப் பேணுகின்றேன். அண்டை அயலவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன். அநாதைகளுக்கு இருப்பிடம் வழங்குகின்றேன். விருந்தாளிகளுக்கு உணவளிக்கின்றேன். ஏழைகளுக்கும் உணவு பரிமாறுகின்றேன். எனது தந்தையான ஹிஷாம் பின் முஙிறாவும் இதே நற்காரியங்களைச் செய்தார். அல்லாஹ்வின் திருத்தூதரே! அவர் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அதற்கு,

நபியவர்கள் நவின்றார்கள்,
“லாஇலாஹ இல்லல்லாஹ்“ என்ற திருக்கலிமாவை மொழியாத அனைத்து கபுறாளிகளும் நரகத்தின் விறகுகள்தான். எனது பெரிய தந்தை அபூதாலிப் உச்ச நெருப்பில் இருந்தார். எனது உறவாலும், எனக்கு அவர் உதவி ஒத்தாசை புரிந்ததனாலும் அங்கிருந்து அவரைக் கரையேற்றி கால் அளவு உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டது.
ஆதாரம் : முஃஜமுல் கபீர், பாகம் - 23,பக்கம் - 405


நரக வாசிகளில் மிகக் குறைந்த தண்டனை அபூதாலிபுக்காகும். நெருப்பிலான இரு பாதணிகள் அவருக்கு வழங்கப்படும். அதனால், சாடியில் நீர் கொதிப்பதுபோன்று அவரின் மூளை கொதிக்கும். நரகத்தில் கடுமையான தண்டனை இவருக்குத்தானே என்று அதனைப் பார்ப்பவர் எண்ணுவார். ஆயினும், நரகவாசிகளில் ஆகக் குறைந்த வேதனை அபூதாலிபுக்குத்தான்.
ஆதாரம் : ஸஹீ முஸ்லிம், பக்கம் - 115 (இந்தியப் பதிப்பு)

அபூதாலிப் மரணித்தபின் நபியவர்கள் அபூதாலிபின் உடலைத் தடவினார்கள். காலை மறந்து விட்டார்கள். அதனால்தான் அவரின் கால்களுக்கு நெருப்பாலான காலணி அணிவிக்கப்படும் என்று ஒரு கூற்றும் உள்ளது.
ஆதாரம் : தாரீகுல் கமீஸ் பீ அஹ்வாலி அன்புஸின் நபீஸ் பாகம் - 01, பக்கம் - 30

அலி றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்
நான் நபியவர்களிடம் வந்து, உங்களது வழிகெட்ட கிழட்டுச் சாச்சா, நிச்சயமாக மரணித்து விட்டார் என்றதும், சென்று புதையும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : நஸ்புர் ராயா பக்கம் - 289, 290
ஸுனன் அபூதாவுத் பாகம் - 02, பக்கம் - 102
ஸுனன் குப்றா பாகம் - 02, பக்கம் - 398


மற்றுமொரு அறிவிப்பி்ல்,
அலி ரழியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம் வந்து, காபிரான கிழட்டு உங்களது சாச்சா மரணித்து விட்டார். அவரின் விடயத்தில் தங்களின் அபிப்பிராயம் என்ன? என்றதும், அவரை குளிப்பாட்ட வேண்டும் என்று கருதுகின்றேன் என்று கூறிவிட்டு குளிப்பாட்டுமாறு அலி ரழியல்லாஹு அன்ஹுவைப் பணித்தார்கள்.
ஆதாரம் : முஸன்னப் அபீஷைபா பாகம் -03, பக்கம் - 348

அபூதாலிப் அவர்கள் முஸ்லிமாக மரணித்திருந்தால் நிச்சயமாக நபியவர்கள் அவரின் ஜனாஸாவில் கலந்திருப்பார்கள். அலியே! சென்று அவரைப் புதையும் என்று கூறியிருக்க மாட்டார்கள். அலி ரழியல்லாஹு அன்ஹு தந்தையின் மரணத்தைப் பற்றி நபியவர்களிடம் கூறும்போது “கிழட்டு வழிகேடன்” “கிழட்டு முஷ்றிக்” போன்ற வார்த்தைகளை நிச்சயம் பிரயோகித்திருக்க மாட்டார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஹளரத் உஸாமா பின் ஸைத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நபியவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! மக்காவில் உங்கள் வீட்டில் எந்த வீடடில் தங்குவீர்கள்? என்று கேட்டதற்கு, உகைல் எமக்காக ஏதாவது ஓர் இடத்தையோ, வீட்டையோ விட்டு வைத்தாரா? என்று நபியவர்கள் திருப்பிக் கேட்டார்கள்.

அபூதாலிபின் சொத்துக்கு தாலிபும், உகைலுமே அனந்தரர்களானார்கள். ஜஃபர், அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வாரிசாக வரவில்லை. காரணம், இவ்விருவரும் அப்போது முஸ்லிமாகியிருந்தனர். உகைலும், தாலிபும் அப்போது காபிராக இருந்தனர்.

உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
“ஒரு முஃமின் காபிருக்கு வாரிசாக வர முடியாது“
ஆதாரம்:  புகாரி,  முஸ்லிம், இப்னு மாஜா

 அமீறுல் முஃமினீன் அபூபக்கர் ரழியல்லல்லாஹு அன்ஹுவின் தந்தை மக்கா வெற்றியின்போது அபூகுஹாபா என்பவர் இஸ்லாத்தை தழுவிய பின் பைஅத் செய்வதற்காக நபியவர்களிடம் கையை நீட்டியதும், அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். அழுகைக்கான காரணத்தை விசாரித்தபோது, “தந்தையின் கரத்திற்குப் பதிலாக தங்களின் பெரிய தந்தை அபூதாலிபின் கரம் இருந்திருந்தால் அவர் இஸ்லாமானதினால் தங்களின் கண்கள் குளிர்ச்சியடைந்திருக்கும். அது எனது தந்தை இஸ்லாமானதில் ஏற்படும் மகிழ்வை விட எனக்கு அதிக விருப்பமாக இருந்திருக்கும் என்றார்கள்.
ஆதாரம் : அல் இஸாபா, பாகம் - 04, பக்கம் - 116


மக்கா வெற்றியின்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அபூகுஹாபாவை அழைத்து வந்ததும் வயது முதிர்ந்த இக்கிழவரை வீட்டிலேயே விட்டு வந்திருக்கலாமே. அவர் இருப்பிடம் நாம் சென்றிருக்கலாம் என்றதும் அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்க வேண்டும் என்பதற்காகவே அழைத்து வந்தேன்.

உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய நாயன் மீது ஆணையாக! என் தந்தை இஸ்லாமானது எனக்கு சந்தோஷமாக இருப்பினும் அபூதாலிப் இஸ்லாமாயிருந்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்கள் கலீபா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் - 117

அபூதாலிப் மரணத்தருவாயில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி, தனக்கு உமது சொர்க்கத்தின் திராட்சையை புகட்டுமாறு வேண்டினார். காபிர்களுக்கு அது ஹறாமாக்கப்பட்டுள்ளது என்று அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு பதிலிறுத்தார்கள்.
ஆதாரம் : அல் இஸாபா, பாகம் - 04, பக்கம் - 116

அபூதாலிபின் இறுதி முடிவை அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் விட அதிகம் தெரிந்தவர் யார்? அபூதாலிப் காபிராகவே மரணித்தார் என்று திருமறையும், திருநபி மொழியும் தெளிவாகத் தெரிவிக்கும்போது அவர் உள் ஈமான் கொண்டிருந்தார் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இமாமுல் அஃழம் அபூஹனீபா றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,   “அபூதாலிப் காபிராகவே மரணித்தார்“
ஆதாரம் : அல்பிக்ஹுல் அக்பர், பக்கம் - 217

புகாரி ஷரீபின் விரிவுரை நூலான “இர்ஸாதுஸ்ஸாரி“ யில் இமாம்  கஸ்தலானி அவர்கள் எழுதுகின்றார்கள்,

ஒரு காபிர் புனைப் பெயரால்தான் அறிமுகமாகியிருப்பாராயின் அப்புனைப் பெயரால் அவரை அழைப்பதை அறிஞர்கள் அனுமதித்துள்ளனர். உதாரணமாக அபூதாலிபை (முஷ்ரிக் என்ற பெயரால் நபியவர்கள்) அழைத்தது போன்று. இவ்வாறு அழைப்பது அவர் இஸ்லாத்திற்கு வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அல்லது அவரிடமிருந்து உதவியைப் பெறுவதற்காக தவிர, கண்ணியத்திற்காக அல்ல. காபிர்கள் விடயத்தில் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.
ஆதாரம் : இர்ஸாதுஸ்ஸாரி பாகம் - 23, பக்கம் - 207-210 ஹதீது எண் 6208


ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல் இஸாபா என்ற நுலில், அபூதாலிபை ஸஹாபியின் பட்டியலில் சேர்ப்பது தவறானதும், வீணானதும், நிராகரிக்கத் தக்கதுமாகும் என்று எழுதியுள்ளார்கள். மேலும், இதே நூலில்,

இஸ்லாம் பரவுவதற்கு முன் மரணித்தவர்கள் அல்லது பைத்தியம் பிடித்த நிலையில் பிறந்தவர்கள் அல்லது பைத்தியத்திலேயே வாழ்க்கையை முடித்தவர்கள் பற்றி அதிகமான ஸனதுகளுடன் ஹதீதுகள் வந்துள்ளன. இவர்களுக்கு நபியவர்களின் அழைப்புக் கிட்டவில்லை என்று மறுமையில் இவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ் விடம் இவ்வாறு காரணம் கூறுவர்.


இறைவா! எனக்குப் புத்தியிருந்தால் அல்லது நபிகளாரின் அழைப்புக் கிட்டியிருந்தால் ஈமான் கொண்டிருப்பேன். அப்போது இவர்களுக்கு ஒரு சோதனையாக கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஏற்பாடு செய்யப்படும். பின் நெருப்புக்குள்ளே செல்லுமாறு பணிக்கப்படும். கட்டளைக்குப் பணிந்தவர்கள் நெருப்புக்குள் குதிப்பர். நெருப்பு அவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அவர்கள் விடுதலை (வெற்றி) பெறுவர். கட்டளைக்குப் பணியாதவர்கள் நிர்ப்பந்தமாக நெருப்பில் போடப்படுவர்.

எமது பூரண நம்பிக்கை அப்துல் முத்தலிபும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்லாம் வெளி வரமுன் மரணித்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குப் பணிந்து நெருப்புக்குள் சென்று வெற்றியோடு வெளியேறியவர்களில் இருப்பர்.

ஆனால், அபூதாலிப் விடயத்தில் சூறா தௌபாவிலும், ஸஹீஹான ஹதீதிலும் அவர் நரகவாதி என்றும், அவரின் கால் கரண்டை வரையுள்ள பகுதி நரக நெருப்பில் இருக்கும் என்றும் வந்துள்ளது. இந்நிலை காபிராக மரணித்தவரின் நிலைக்கே ஏற்படும். ஆனால், இறுதி நேரத்தில் இஸ்லாத்தை ஏற்று அவர் மரணித்திருந்தால் நரகத்திலிருந்து முழுமையாகவே அவர் வெற்றி பெற்றிருப்பார். ஏராளமான ஸஹீஹாக ஹதீதுகள் அபூதாலிப் குப்றில் மரணித்ததாக வந்துள்ளது.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் -04, பக்கம் - 118

இமாம் கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். அப்துல் முத்தலிபும், அவரது குடும்பமும் சொர்க்கம் புகுவர் என்று நாம் ஆதரவு வைக்கின்றோம், ஆபூதாலிபைத் தவிர. அவர் நபித்துவத்தின் காலத்தில் இருந்தும் ஈமான் கொள்ளவில்லை.
ஆதாரம் : மவாஹிபுல்லதுன்னிய்யா பாகம் - 01, பக்கம் - 183


அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் பத்ஹுல் பாரியில் எழுதுகின்றார்கள்,
ஆச்சரியமான ஒற்றுமைதான் இது. நபியவர்களின் பெரிய தந்தைகளுள் இஸ்லாத்தின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நால்வர். இவர்களுள் இருவர் இஸ்லாமாகவில்லை. இருவர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்காதவர்களி்ன் பெயர்களும் ஆரம்பத்திலிருந்து இஸ்லாத்திற்கு எதிராகவே உள்ளன.
1. அபூதாலிப். இவரின் பெயர் அப்துல் மனாப்
2. அபூலஹப். இவரின் பெயர் அப்துல் உஸ்ஸா


இஸ்லாத்தை ஏற்ற இருவரின் பெயரும் தூய்மையானது. 1.ஹம்ஸா 2. அப்பாஸ்
ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் - 08, பக்கம் - 196
ஸர்கானி, பாகம் - 01, பக்கம் - 296

அல்லாமா ஸர்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். பிடிவாத குப்று என்பது உள்ளத்தால் உணர்ந்து. அறிந்து, நாவால் அதனை விண்ணப்பித்தும், அதனை மனதால் நிர்ணயம் கொள்ளாமலும், வழிப்படாமலிருப்பதுமாகும். அபூதாலிபைப்போல,
ஆதாரம் : ஸர்கானி பாகம் - 01, பக்கம் - 295

ஷைய்கு முஹக்கிக் அல்லாமா அப்துல் ஹக்  முஹத்தித் திஹ்லவி கூறுகின்றார்கள். ஸஹீஹான ஹதீதுகள் மூலம் அபூதாலிப் குப்றில் மரணித்ததாக ஊர்ஜிதமாகியுள்ளது.
ஆதாரம் : மதாரிஜின் நுபுவ்வத் பாகம் - 02, பக்கம் - 49

இமாம் ஸுயூத்தி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள் “எனது தந்தையும், உனது தந்தையும் நரகத்திலேதான்“ என்ற ஹதீதில் எனது தந்தை என்பது அபூதாலிபையே குறிக்கும். அபூதாலிப் நபியவர்களின் தந்தை என்ற பெயரால் பிரபல்யமடைந்திருந்தார்.
ஆதாரம் : அல்ஹாவி பாகம் 02, பக்கம் - 227, 228


மிஷ்காத்தின் விரிவுரையாளரான அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.

ஹதீதுத்துறை ஷைய்குமார்களும், சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களும் முடிவாகக் கூறுவது, அபூதாலிப் ஈமான் கொண்டதற்கு சான்றில்லை. ஸஹீஹான ஹதீதுகளி்ன் மூலம் அபூதாலிபின் மரண வேளையில் நபியவர்கள் நேரில் சென்று இஸ்லாத்தை ஏற்குமாறு கூறியும் அவர் மறுத்து விட்டார்.
ஆதாரம் : ஷறஹு ஸபறுஸ்ஸஆதா பக்கம் - 249

அல்லாமா இப்னு ஹஜர் மக்கி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
வியக்கத்தக்க வகையில் நபிகளாரைப் புகழ்ந்து, அபூதாலிப் பாடிய கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு றாபிழி (ஷீயாக்)கள் அபூதாலிபை முஸ்லிம் என்று முடிவெடுத்துள்ளனர்.
ஆதாரம் : அப்ழலுல் குறா பாகம் - 01, பக்கம் - 286

இதே நூல் இதே பக்கத்தில், தெளிவானதும், ஸஹீஹானதும் என்று அனைவரும் ஒப்புக்கொண்ட ஹதீதுகள் மூலம் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாகவே வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாமா கபாறி அவர்கள் தப்ஸீர் பைளாவியின் ஹாஷியாவில், றாபிழிகள் சிலர் அபூதாலிபை முஸ்லிம் என்று கூறுகின்றனர்.
ஆதாரம் : இனாயத்துல் காழி, அல்குர்ஆன் - 28  :  56
ஆயத்தின் விரிவுரையில்...பாகம் 07, பக்கம் - 309


றாபிழிகளில் ஒரு கூட்டம் அபூதாலிபை முஸ்லிம் என்று கூறுகின்றது.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் 116

ஸஹீஹான கருத்தின்படி அபூதாலிப் இஸ்லாமாகவில்லை. றாபிழிகளில் ஒரு கூட்டம் அவரை முஸ்லிம் என்கிறது. இதற்கு அவரின் கவிதைகளையும், புராணக் கதைகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆதாரம் : ஸாகானி பாகம் - 02, பக்கம் - 274

அபூதாலிப் காபிராகவே மரணித்தார். ஷீஆக்களில் சிலர் அவர் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறுகின்றனர். இது அடிப்படை அற்றது.
ஆதாரம் : நஸீமுர்ரியாழ் ஷரஹ்ஷிபா - பாகம் - 03, பக்கம் - 484


அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி கூறுகின்றார்கள்.
நான் ஒரு றாபிழி - ஷீஆவின் - ஒரு நூலைப் பார்த்தேன். இதில் அபூதாலிப் இஸ்லாமானதாக சில அறிவிப்புக்களைப் பதிவு செய்திருக்கிறார். அனைத்து அறிவிப்புக்களும் இப்னு இஸ்ஹாக்குக்குரியதாகும். இவையனைத்து றிவாயத் துக்களும் புரட்டுக்களாகும்.
ஆதாரம் : அல் இஸாபா பாகம் - 04, பக்கம் - 116

மேற்கண்ட ஆதாரங்கள் தவிர்த்து இன்னும் ஏராளமான ஆதாரங்கள் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாக வந்துள்ளன. ஷீஆக்கள் மாத்திரமே அபூதாலிப் முஸ்லிமாக மரணித்ததாக குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக முன் வைக்கப்படும் அனைத்து ஹதீஸ் ஆதாரங்களும் பலவீனமானதும், புரட்டுத்தன்மையுள்ளதுமாகும் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒட்டு மொத்தமாக கூறியுள்ளனர். இப்படி தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் - வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறை அறிஞர்களும் அபூதாலிப் காபிராகவே மரணித்ததாக எழுதியிருக்கும்போது ஷீஆக்களின் கற்பனையான கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு வாதிடுவது பொருத்தமில்லாததாகும்.

றஸுலுல்லாஹ்வின் நேசம், அஹ்லுல் பைத்களின் நேசம் என்ற ஆயுதத்தால் ஷீஆக்கள் சுன்னத் வல் ஜமாஅத்துக்குள் ஊடுருவுகின்றனர். , ஷீஆக்கள் நபிகளார் மீதும் அன்னாரின் குடும்பத்தார் மீதும் அளவு கடந்த நேசத்தைக் காட்டிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் வழி தவறியவர்களே. அதனால், ஷரீஅத் விதித்த எல்லையில் நின்றும் சுன்னத் வல்ஜமாஅத் இமாம்கள் காட்டித்தந்த வழியில் நடந்தும் சீரிய பாதையில் செம்மையாக சென்றிட முனைவோமாக!
((இது சமாதி வலிபாட்டினரின் majlismuhibburrasool.com எனும் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையாகும் ))

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன்


வாதம்:  இறை நேசர்களைப் பற்றி நபிகளார் அவர்கள் இறைவன் கூறுவதாக இவ்வாறு சொல்கிறார்கள்:
அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு சிறப்பு இருக்கும் அவ்வலியாக்களால் ஏன் பன்னிரண்டு வருடங்கள் தூங்காமல் இருக்க முடியாது?


நமது பதில்: 
நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா? ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?


சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?

அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அ
ளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.

கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.

அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?

இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.

அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.

இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?

மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.  நூல்: முஸ்லிம் 5021


இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.

இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.


வஸ்ஸலாம் 


  

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா?

மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
நூல் : புகாரி 6502

இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டி, பார்த்தீர்களா! நபிமார்களுக்குக் கூட வழங்காத அற்புதத்தை அவ்லியாக்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்கிறார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்றும் சொல்கின்றனர்.

நாம் இதற்கு எதிராக உள்ள ஏராளமான வசனங்களைக் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கு நேரடிப் பொருள் கொள்ளலாமா? மற்ற ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ள வேண்டுமா? நேரடிப் பொருள் கொண்டால் ஏற்படும் விபரீதங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்தித்தால் இதன் சரியான பொருள் தெரியவரும்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?” என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?” என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்” என்று கூறுவான்.
பார்க்க: முஸ்லிம் 5021

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா?
அவர்களிடம் பிரார்த்தனை செய்வார்களா?
பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா?
நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா?
நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா?
நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா?
அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா?
அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்?

இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல்லப்பட்டவைகளும் உள்ளன. நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்கவைகளும் உள்ளன.
எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?

இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.
இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீசின் இறுதிப் பகுதியே இதன் பொருளைத் தெளிவாக்கி விடுகிறது.

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்பது தான் இறுதி வாசகம்.

அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்காது; அவர்களிடம் அற்புதம் ஏதும் நிகழாது; அவர்கள் என்னிடம் துஆச் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் இதன் பொருளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அனுமதி பெறாமல் யாரும் அற்புதம் செய்ய முடியாது என்ற வசனங்களுக்கு முரணாக இதன் நேரடிப் பொருள் அமைந்துள்ளது.

அல்லாஹுவின் நேசர்கள் என்றால் யார்


"அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? - குர்ஆன் 2:170
அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் அன்பியாக்கள், சஹாபாக்கள் போன்று வலிமார்கள் எனப்படுவோரும் உள்ளனர். இப்படியான இறைநேசர்கள் தான் தர்காவில் அடங்கப்பட்டுள்ளனர் என்று சிலரை குறிப்பிட்டு வருகின்றனர். இவ்வலிமார்களைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் அவ்லியாக்கள் என்று குறிப்பிடுகின்றான். அவர்களை நினைவு கூருமுகமாக விழாக்கள் எடுக்கின்றோம் என கூறிவருவோரை பார்க்கின்றோம்.
அல்குர்ஆனில் கூறுப்படும் அவ்லியாக்கள் என்றால் யார் ..? என்பதினை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

"அல்லாஹுவின் நேசர்கள் " என்றால் யார்?
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அல்குர்ஆனில் "أَوْلِيَاءَ" என்ற வார்த்தை 36 இடங்களில் பயன்ப்படுத்தப்பட்டுள்ளன. "பாதுகாவலர்கள்", "நண்பர்கள்", "நேசர்கள்" என பொருள் படுத்தப்பட்டுள்ளது.

"வலீ" என்ற வார்த்தையின் பன்மைதான் அவ்லியாவாகும். "வலீயுல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர், "அவ்லியா அல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர்கள் என்பது பொருளாகும்.
அல்லாஹுவின் நேசர்களின் பண்புகளையும் அவர்கள் யார் என்பதினையும் அல்லாஹ் பின்வரும் வசனங்களின் மூலம் அறிய தருகின்றதைப் பாருங்கள்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம். (2;38)

ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (7:35)

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை)அஞ்சுவோராக இருப்பார்கள். (10:62,63)

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள்.மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (2:2,3,4)

யார் அல்லாஹுவின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கைக் கொண்டு, அவன் தூதர்களின் மூலம் காட்டிய நேர்வழியை முழுமையாக பின்பற்றி அல்லாஹுவை அஞ்சி நடக்கின்றாரோ அவரே அல்லாஹுவின் நேசரகளாவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற)நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். அத்தகைய அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் காட்டிய நேர்வழியை பின்பற்றி நடக்கின்ற அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆறாம் நூற்றாண்டில் இறக்கப்பட்ட வசனங்கள் ஏதோ சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து மரணித்த சிலரை குறிப்பதாக சொன்னால் இவர்களின் கூற்றை என்னவென்று சொல்வது...!

முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை பின்பற்றி நடந்தவர்களையும் அல்லாஹ் நேசர்கள் என்றே பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர் களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2:62),(5:69)
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ இந்த வசனத்தின் நோக்கம் எல்லோரும் அல்லாஹ்வின் நேசர்களாக மாறவேண்டும் என்பதைப் பற்றிதான் குறிப்பிடுகின்றன என்பதினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

1. நல்வழியில் செலவிட்டு , நல்லறங்கள் புரிபவர்களுக்கு கூலி உண்டு,

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2:274)
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்குஎந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2;277)

2. நல்வழியில் செலவிட்டதை சொல்லிக்காட்டாதவர்களுக்கு கூலி உண்டு
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2: 261)

3. அல்லாஹுவின் பாதையில் உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு கூலி உண்டு
தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். (3:170)

4. தூதர்களை நம்பி, தவறை திருத்திக் கொள்வோருக்கு கூலி உண்டு

நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (6:48)

5. அல்லாஹுக்கு மட்டுமே அடிப்பணிந்தவருக்கு கூலி உண்டு
அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்குஅவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2: 112)

அல்லாஹ் நேசிக்கின்ற காரியங்களை இன்னும் நிறைய அடிக்கிக்கொண்டே போகலாம் .அல்லாஹுவும், அவனின் தூதர்களும் எந்த வழியை இஸ்லாம் என்று காட்டிதந்தார்காலோ அத்தகைய வழியை பின்பற்றி நடந்தால் தான் நாம் அல்லாஹுவின் நேசர்களாக மாற முடியும்,அல்லாஹ் நேசிக்கின்ற அடியானாக மாற நற்காரியங்களில் போட்டிபோடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றதைப் பாருங்கள்
.

நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர். முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்.போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும். (83:23,24,25,26)

                                                   ****************
இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள் என்பதைகான இங்கே கிளிக் செய்யவும்

 இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியுமா  என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

குகைவாசிகள் பற்றியவசனம் தர்கா கட்ட ஆதாரமா

ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் நிற்க வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனால் கூறப்படும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை, பல தெய்வக் கொள்கையை இஸ்லாத்தில் நுழைத்திடுவதற்குத் துணையாக்கிக் கொண்ட அவலமும் நடந்தேறியது.
    குகைவாசிகளின் வரலாற்றுத் தொடரைக் கூறும் வசனங்களில் 21 வது வசனமும் ஒன்றாகும். இவ்வசனத்தில் 'தங்கள் காரியத்தில் மிகைத்தவர்கள் இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம்' என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்.
    இந்த வார்த்தையைத் தான் சமாதி வழிபாட்டை நியாயப் படுத்துவதற்குரிய ஆதாரமாக இவர்கள் கருதுகின்றனர். அவர்கள் நல்லடியார்களாக இருந்ததன் காரணமாகத் தான் அவர்கள் மீது வழிபாட்டுத்தலம் எழுப்பப் பட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் என்பது இவர்களது வாதம்.
    இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
    அவர்கள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பியதற்கும் அந்த நல்லடியார்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வழிபாட்டுத் தலம் எழுப்பியோர் வலிமை பெற்றவர்களாக மிகைத்தவர்களாக இருந்தார்கள் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
    இவ்வாறு வழிபாட்டுத் தலம் எழுப்பியவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? ஏன் இப்படி எழுப்பினார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் தேவையான விளக்கம் கிடைக்கின்றது.
    'யூதர்களும் கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான் என்பது நபிமொழி.
    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்காவிட்டால் அவர்களது அடக்கத்தலமும் உயர்த்திக் கட்டப் பட்டிருக்கும் என்று வேறு சில அறிவிப்புக்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் பல நூற்களில் பதிவு செய்யப்பட்டதாகும்.
புகாரி - 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் - 529, 530, 531
அபூதாவூது - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393 - 411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
    நல்லடியார்களின் அடக்கத்தலத்தின் மீது வழிபாட்டுத்தலம் எழுப்புவது யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழக்கமாக இருந்ததை இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறிகின்றோம். அந்த வழக்கப் படிதான் அவர்கள் குகைவாசிகள் மீது வழிபாட்டுத் தலம் எழுப்பினார்கள்.
சில நடவடிக்கைகள் முந்தைய சமுதாயங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிந்தைய சமுதாயத்திற்குத் தடுக்கப் படுவதுண்டு. அத்தகைய காரியங்களில் இதைச் சேர்க்கவே முடியாது.
    முந்தைய காலத்திலும் இது தடை செய்யப் பட்டே இருந்தது. அனுமதிக்கப்பட்டதை அவர்கள் செய்து இருந்தால் சாபத்துக்குரியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
    எனவே குகைவாசிகளான நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பியவர்கள் இறைவனின் சாபத்துக்குரியவர்களே தவிர நல்லடியார்கள் அல்ல.
    சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம்)
    கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம்)
    என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத், அபூயஃலா)
    என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள். நானே இறைவன் என்று பிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன் என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.
    அதுபோலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான்.
    இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். 19 வது வசனத்தில் 'வல்யதலத்தஃப்' என்ற வார்த்தையை மட்டும் மிகப் பெரிய எழுத்தாக இந்தியாவில் அச்சிடப்படும் குர்ஆனில் அச்சிட்டுள்ளார்கள். குர்ஆனின் எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் இந்த இடத்தில் சரி பாதி வருகின்றது என்று காரணம் கூறுகின்றார்கள்.
    எழுத்துக்களை எண்ணுவதில் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. ஒவ்வொரு அளவுகோலின் படி சரிபாதியானது வௌ;வேறு இடங்களில் அமையும். சரிபாதியாக அமைவது ஒரு பெரிய ஆராய்ச்சி அல்ல. எழுத்துக்களை எண்ணுவதற்காக குர்ஆன் அருளப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கத்து காபிரும் நாமும் ஒன்றா ?

கேள்வி :
மக்கத்து காஃபிர்களையும், எங்களையும் ஒன்றாக்கி பார்க்கும் உங்கள் வாதம் பலவீனமானது, அவர்கள் நபிகள் நாயகதை எதிர்த்தார்கள், அடித்தார்கள், பைத்தியம் என்றார்கள், நாங்கள் அப்படி இல்லையே

பதில்:
நபிகள் நாயகத்தை மக்கத்து காஃபிர்கள் எதிர்கவில்லை, நபிகள் சொன்ன அந்த தவ்ஹீதிற்காக தான் எதிர்த்தார்கள், நீங்கள் அல்லாஹ்வுடன் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் என்று கூறியிருந்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் துன்புருத்தி இருக்கமாட்டார்கள்.

இப்பொழுது உள்ள கபுறு வணங்கிகள் நபிகள் நாயகத்தை எதிர்க்க வில்லை என்பது உண்மை தான், ஆனால் நபிகள் நாயகம் சொன்ன அந்த தவ்ஹீதை சொன்ன யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி உதை விழாமல் இருந்ததில்லை, அவர்களை பைத்தியம், வழித்தவரியவர்கள் என்று ஏன் சில தவ்ஹீத் சகோதரர்களை கொன்றும் இருக்கிறார்கள். பள்ளிவாயல் களை எரித்தும் அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியும் உள்ளனர்
மக்காவில் இணைவப்பவர்கள் நபிகள் நாயகத்தை எவ்வாறு துன்புறுத்தினார்களோ, அது போல தவ்ஹீதை ஏற்று கொண்ட அனைவரும் கபுறு வணங்கிகளால்  துன்புருத்த பட்டனர்.
துன்புறுத்தப்படுகின்றனர் 
அதை நபிகள் நாயகத்தயும் அல்லாஹ்வையும் எதிர்த்தாகதான் நாம் எடுத்து கொள்ள முடியும்.
எனவே மக்கத் காஃபிர்களும் இவர்களும் ஒன்றில்லை என்று கூறமுடியாது.

மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்

இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கை யிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களை யும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார் களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.
மக்கா வாழ் காஃபிர்கள் , அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழி விப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லா ஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.

தல்கீன் ஓதலாமா ?

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு ஜனாஸாவை விளித்து மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும்.
அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும்.
என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும்.

‘உன்னிடம் வானவர்கள் வருவார்கள்.
உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு!
உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு’
என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படி தல்கீன் என்ற பெயரில், ஜனாஸாவை விளித்து உம்மிடம் கப்றில் வந்து கேள்வி கேட்கும் மலக்குகளிடம் இவ்வாறு, இவ்வாறெல்லாம் விடை சொல் என்று பாடம் நடத்துவது போல் சொல்லிக் சொல்லிக் கொடுத்து,
அது இறந்தவருக்குக் கேட்டு,
அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால்,,,,, இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்
??

இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுப்பானா ?

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.
வாதம் 6
 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி)

 அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான்.
பதில் 6
இறைநேசர்கள் என்போர் திக்ர் அதிகமதிகம் செய்து இறைவன் அளவில் சேர்ந்து விட்டார்களாம். அதனால் அவர்கள் இப்போது மனிதர்கள் இல்லையாம் அல்லாஹ்தானாம்.

அல்லாஹ்விடமிருந்து வெளிப்படும் அத்தனையும் அந்த அவ்லியாவிடமிருந்தும் வெளிப்படுமாம். அதனால் அவரிடம் நாம் துஆ செய்யலாமாம்.

இவர்கள் செய்யும் இருட்டு திக்ர், குருட்டு திக்ர், பாட்டு திக்ர், கைகோர்த்து டான்ஸ் ஆடும் திக்ர், சினிமா பாடல் பாடும் திக்ர் என்று அதிகமாக திக்ர் செய்வதால் அல்லாஹ் ஆகிவிடுவார்களாம்.

அல்லாஹ் தான் இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளிப்படும் ஸ்தலமாக மாறிவிடுகிறார்கள் என்றால் ஒருவரையாவது அப்படி காட்ட முடியுமா?
அல்லாஹ்வின் சக்தி எல்லாம் வெளிப்பட வேண்டாம். அற்ப மனிதர்களின் சக்தியாவாது வெளிப்படுமா?

உயிருள்ள மனிதனிடம் பேசினால் பதிலளிக்கிறான்.
திக்ரின் மூலம் அல்லாஹ்வை தஞ்சமடைந்த இறந்து போன இறைநேசர்களின் ஸ்தலங்களில் அவர்களை அழைத்தால் அவர்கள் பதிலளிப்பார்களா?
மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்பு மனித சக்தியே வெளிப்பட வக்கில்லை; இங்கு அல்லாஹ்வின் சக்தி வெளிப்படுமாம்.
இவர்கள் குறிப்பிடும் செய்திக்கு என்ன விளக்கம் என்பது பிஜே அவர்கள் தமது தர்ஜூமா விளக்க குறிப்பில் விளக்கியுள்ளார்கள்.
அதையே இதற்குப் பதிலாக தருகிறோம்.

யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டாரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவர் கேட்கும் காதாக, அவர் பார்க்கும் கண்ணாக, அவர் பிடிக்கும் கையாக, அவர் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரீ 6502) என்று அல்லாஹ் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்குச் சான்றாகக் காட்டுகிறார்கள்.
"பார்த்தீர்களா? அவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்" என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்" என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.
(பார்க்க: முஸ்லிம் 5021)

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?  
இந்தச் செய்தியை எப்படி புரிந்து கொள்கிறார்களோ அப்படியே (புகாரீ 6502) செய்தியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அல்லாஹ் மட்டுமே பிரார்த்திக்கப்பட தகுதி படைத்தவன்.
அவனை மட்டுமே வணங்குவோம் அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வோம்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72 18

(ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!
அல்குர்ஆன்  40 14

அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற இறைவாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பதை மீண்டும் நினைவு கூர்கிறோம்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 23 117

உங்களுக்கு தெரியாதவைகளை அவ்லியாக்களிடம் கேளுங்கள்'

அவ்லியாக்களான இறைநேசர்களிடம்? நேரடியாக உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தை பாருங்களேன்.
வாதம் 5
அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

 குர்ஆன் கூறுகிறது:

 فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ 

 உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –
அல்குர்ஆன் 16:43
 இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.

பதில் 5
இதைப் படித்ததும் நபிகள் நாயகம் காலத்து இறைமறுப்பாளர்களும் யூதர்களும் தான் நம் சிந்தனைக்கு வருகிறார்கள்.
அவர்கள் தான் இறைவனின் வசனத்தையும் இறைத்தூதரின் போதனையையும் தங்கள் மனோ இச்சைக்கு தகுந்தவாறும் தங்களுக்கு சாதகமாகவும் திரித்து கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அதனாலே இறைவனின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 5 41

இன்றைய கப்ர் வணங்கிகளின் செயல் அச்சரம் பிசகாமல் அன்றைய காஃபிர்கள் - யூதர்களின் செயலை அப்படியே ஒத்திருக்கின்றது.
இருக்கின்ற குர்ஆன் வசனங்களை தங்கள் கருத்திற்கு தோதாக வளைத்து திரிப்பது, இல்லாத நபிமொழிகளை நபிகள் நாயகம் கூறியதாக அபாண்டமாக பொய் சொல்வது இவ்விரண்டுமே கப்ர் வணங்கிகளின் ஆதார செயலாகும். இவ்விரண்டு வழிமுறையை பயன்படுத்தியே தங்களின் அழிந்து போன கொள்கைகளை மக்களிடையே உயிரூட்ட முற்படுகிறார்கள்.
வலீமார்களிடம் உதவி தேடலாம் எனும் இந்தத் தலைப்பிலும் தங்களின் வழக்கமான பாணியில் அதே வழியில் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.
இனி இவர்களின் அளப்பரிய அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரத்திற்கு வருவோம்.
குர்ஆன் கூறுகிறது:

 فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

 உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –  அல்குர்ஆன் 16:43

இது தான் அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பதற்கு கப்ர் வணங்கிகள் குறிப்பிடும் ஆதாரம்.

அது சரி ஏழாம் நாள் பாத்திஹா ஓத அல்ஹம்து சூரா 7 வசனம் உள்ளதை ஆதாரம் காட்டிய மூளையற்ற கூட்டம்தானே.

மண்ணை வணங்கும் மடையர்களிடம் வேறு என்ன ஆதாரத்தை எதிர்பார்க்க இயலும்?

திக்ர் உடையவர்கள் என்றால் அவ்லியாக்களாம். என்னே இவர்களது குர்ஆன் ஞானம்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் செய்த பொருளின் படி திக்ர் செய்பவர்கள் - திக்ரை உடையவர்கள் என்று அர்த்தம் வைத்தாலும் திக்ர் செய்யும் அனைவரையும் தானே அது குறிக்கின்றது.

திக்ர் செய்யும் அனைவரையும் கொண்டு உதவி தேடலாம் என்று சொல்ல வேண்டியது தானே?

ஒரு வார்த்தைக்கு என்ன பொருள் செய்தாலும் அடைப்புக்குறி ( ) போட்டு அதில் அவ்லியா என்று மறக்காமல் எழுதி விட வேண்டும் என்று யார் தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களோ?

இவர்கள் குறிப்பிட்ட வசனத்தை முழுமையாகப் படித்தாலே திக்ர் உடையவர்கள் என்றால் யார்? அவர்கள் அவ்லியாக்களா? என்பதை இலகுவாக புரியலாம்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! அல்குர்ஆன் 16 43

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் என்பது இறைவன் நபிகள் நாயகத்திற்கு சொல்லும் சேதியாகும்.

இதுவரை ஆண்களையே இறைத்தூதர்களாக அனுப்பியதாக அல்லாஹ் நபிகளாரிடம் தெரிவித்து விட்டு வேண்டுமானால் திக்ர் உடையவர்களிடம் கேட்டுப்பார் என்கிறான்.

இவர்கள் செய்த பொருளின் படி அவ்லியாக்களிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அல்லாஹ் சொன்னான் என்றாகி விடும்.
நபிகள் நாயகம் எந்த அவ்லியாவிடம் இதைக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்? முஹ்யித்தீனா? ஷாகுல் ஹமீது பாதுஷாவா? அல்லது வேறு யாருமா?

முதலில் அஹ்லுத் திக்ர் என்றால் அவ்லியா என்று இவர்களுக்கு யார் சொன்னது? என்ன ஆதாரம்? மனம் போன போக்கில் அர்த்தம் வைத்து பழகியதன் விளைவினாலும் திக்ர் மஜ்லிஸ் என்று அவ்லியாக்களின் பெயரால் அதிகம் கூத்தடிப்பதாலும் எங்கே திக்ர் என்று பார்த்தாலும் இவர்களுக்கு அவ்லியாக்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் போலும்.

அதற்காக குர்ஆனில் திக்ர் என்று வந்தாலும் கூட இறைவனை நினைவு கூராமல் அவ்லியாக்கள் என்று மனிதர்களை நினைவு கூர்வது திக்ர் மஜ்லிஸ் தாக்கம் சற்றே அதிகம் எனத்தோன்றுகிறது.

திக்ர் என்றால் அறிவுரை என்று பொருள்.

குர்ஆனும் திக்ர் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அல்குர்ஆன் 15 6,9

அஹ்லுத் திக்ர் என்றால் அறிவுரை வழங்கப்பட்டவர் எனப்பொருளாகும். எந்த அகராதியிலும் அவ்லியா என்று பொருள் கிடையாது.

உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம் எனக் கூறிவிட்டு வேண்டுமானால் திக்ர் வழங்கப்பட்டவர்கள் அதாவது தவ்ராத் இன்ஜீல் எனும் அறிவுரைகள் வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இது தான் இந்த வசனத்திற்கு விளக்கமாகும்.

இதில் எங்கே அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமுள்ளது?

மனம் போன போக்கில் இறைவசனத்திற்கு அர்த்தம் வைக்க ஆரம்பித்தால் இப்படித்தான் கண்டதையும் உளறும் படி மறை கழன்று போகும் என்பதை அறிவுறுத்துகிறோம்.

---onlinepj

மேலும் சில பதிவுகள்
என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்


எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன் என்பதின் விளக்கத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்

அவ்லியாக்களின் கை அல்லாஹ்வின் கையா?என்பதனை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
அல்லாஹ்வை அதிகமாக நேசித்ததால் அந்த அடியாரின் பார்வையாகவும், செவிப்புலனாகவும் கரமாகவும், காலாகவும் அல்லாஹ் ஆகிவிடுகிறான்
எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்
எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்

காரியங்களில்  திகைப்படைந்து விடுவீர்களேயானால் அவுலியாக்கள் கபுருகளுக்கு சென்று உதவி தேடிக்கொள்ளுங்கள் எனும் செய்தியின் உண்மை நிலையை காண இங்கே கிளிக் செய்யவும்

நபிமார்களின் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

ஹுனைஃப் ரலி)  நபிகளாரின் பொருட்டால்  துஆ செய்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

எவருக்காவது உதவி தேவைப்படுமானால்

அடுத்து  /// எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் // என்று கபுறு வணங்கிகளால் முவைக்கப்படும் ஹதீஸ் பற்றி பார்ப்போம்
வாதம்3
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள்.

 ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني

 எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும்.
(ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)
பதில் 1
தப்ரானியில் (பாகம் 12 பக்கம் 44) சில வாசக மாற்றத்துடன் இவர்கள் கூறும் செய்தி இடம்பெறுகிறது.
இதுவும் பல காரணங்களால் மிகவும் பலவீனமான செய்தியாகும்.
இதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பார் ஹதீஸ் துறையில் மிகவும் மோசமானவர் ஆவார்.
இவ்வாறு அபூஹாதம் விமர்சித்துள்ளார்.
தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 170

இதில் இடம் பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் மீதும் நினைவாற்றல் ரீதியாக விமர்சனம் உள்ளது.
அதுதவிர இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகும்.
ஏனெனில் இதில் ஜைது பின் அலீ என்பவர் உத்பா பின் கஸ்வான் ரலி யிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.
இதில் ஜைது பின் அலீ ஹிஜ்ரி 122ல் மரணமடைகிறார்.
தாரீகுல் கபீர் பாகம் 2 பக்கம் 403

அப்படி எனில் சுமார் ஹிஜ்ரி 20 ல் பிறந்திருப்பார் என்று பார்த்தாலும் கூட உத்பா ரலி யிடமிருந்து ஜைது அறிவிக்க இயலாது. ஏனெனில் உத்பா ரலி ஹிஜ்ரி 20 க்குள் மரணித்து விட்டதாக வரலாறு சொல்கிறது.
எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகவும் இருப்பதால் இது முழுக்க பலவீனமானகும்.

தப்ரானியின் மற்றொரு அறிவிப்பில் (பாகம்9 பக்கம்67) மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பார் இடம்பெறுகிறார்.
இவரது நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அதுவும் பலவீனம் ஆகும்.
(அல்ஜரஹ் வத்தஃதீல்  பாகம் 8 பக்கம் 323)

இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
إن لله ملائكة في الأرض سوى الحفظة يكتبون ما سقط من ورق الشجر فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد : أعينوا عباد الله.
பூமியில் அல்லாஹ்வுக்கென்று நன்மை தீமை பதிவு செய்யும் வானவர்கள் அல்லாத மற்றும் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளைப் பதிவு செய்வார்கள். உங்களுக்கு பாலைவன பூமியில் (மேலேறிச் செல்லும்) சிரமம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள் என்று அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
முஸ்னது பஸ்ஸார் பாகம் 2 பக்கம்  178
இச்செய்தியில் இடம்பெறுகிற உஸாமா பின் ஸைது  அல்லைஸீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.
யஹ்யா அல்கத்தான் இவரை பலவீனமாக்கியுள்ளார்.

இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார் என்று அபூஹாதம் விமர்சித்துள்ளார். இவரது செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது என அஹ்மத் கூறியுள்ளார். இன்னும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.
பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப்  பாகம் 1 பக்கம் 183

இந்த கருத்திலமைந்த அனைத்து செய்திகளும் அறிவிப்பு ரீதியாகவே பலவீனமாக உள்ளன. இதன் கருத்தும் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளது.
(இதன் கருத்து பற்றிய விளக்கம் இறுதியில் உள்ளது.)
வாதம் 4
பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள்.
பதில் 4
நபிகள் நாயகம் மீது இதை விட அபாண்டத்தை அநியாயமாக பரப்பிச் செல்ல முடியாது.
அல்லாஹ் அல்லாதவர்கள் ஒரு காலத்திலும் மனிதர்களின் துஆக்களை அறியமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலளிக்க மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக குர்ஆன் வழியே நபிகள்  நாயகம் நமக்குப் போதித்து விட்டார்கள்.
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 7:197,198
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
அல்குர்ஆன் 7:194
அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிரார்த்திப்பவன் வழிகெட்டவன் என்று குர்ஆன் வர்ணிக்கின்றது.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
அல்குர்ஆன் 46:5
அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிரார்த்திப்பவன் அநீதி இழைத்தவன் என்று குர்ஆன் சாடுகிறது.
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் 10 106
அல்லாஹ் அல்லாத யாரும் மனிதர்களின் பிரார்த்தனையை செவியுற மாட்டார்கள். செவியுற்றாலும் பதிலளிக்க சக்தி பெறமாட்டார்கள் . அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில்1 நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர்ஆன் 35 13,14
தரையானாலும் கடலானாலும் எங்கும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான் என்று இறைவன் கூறுகிறான்
"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து303 உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6 63, 64
இத்தகைய எண்ணற்ற இறைவசனங்களுக்கு மாற்றமாக, தான் கொண்டு வந்த சத்திய வேதத்திற்கு முரணாக பாலைவனத்திலோ எங்குமோ ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து பிரார்த்திக்குமாறு நபிகள் நாயகம் ஒரு போதும் கூற மாட்டார்கள்.

எச்செயலை பயனற்றது, வீணானது, வழிகேடு, இணைவைப்பு என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் போதித்து சென்றார்களோ அச்செயலை அந்த அல்லாஹ்வின் தூதரே செய்யுமாறு சொன்னார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமும் நம்ப மாட்டான்.
அப்படி நம்புபவன், அவ்வாறு சொல்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். அவன் வேண்டும் என்றே நபிகள் நாயகம் மீது பொய்யுரைத்து நரகை முன்பதிவு செய்கிறான்.
இதில் மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?
அவ்லியாக்களான இறைநேசர்களிடம்? நேரடியாக உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தை பாருங்களேன்.
http://shirkinethiri.blogspot.com/2017/03/unkalukku-theriyathavaikalai-dikrai.html