நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா
பதில்;
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது என்பது நமது கொள்கை
இல்லை. அப்படி கூறுபவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்றே நாம் கூறி வருகிறோம். பாடல்களைப் பொறுத்தவரை இசையும் தவறான கருத்தும் இல்லாத பாடல்களுக்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது.
மவ்லூது கூடாது என்பதற்கு இவற்றையெல்லாம் நாம் காரணங்களாகக் கூறவில்லை. பெரும்பாவங்களில் முதல் நிலையில் இருக்கின்ற இணைவைப்பு மவ்லூத் வரிகளில் இருப்பதாலே அது கூடாது என்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறல்ல. ஆனால் அல்லாஹ்வுடைய இடத்தில் வைத்து வரம்பு மீறி புகழ்வது மாபெரும் தவறாகும். மவ்லூதில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுடைய இடத்தில் வைத்து வரம்பு மீறி புகழப்படுகின்றது. இதன் காரணத்தாலே மவ்லூத் ஓதுவது ஹரமான செயலாக உள்ளது.
மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல்.
இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
வாழ்க்கையில் வளம் பெற, மன நோய் விலக, காணாமல் போன பெருட்கள் கிடைக்க மற்றும் இன்ன பிற நோக்கங்கள் நிறைவேற வீடுகளில் இதைப் பாடி வருகின்றனர். அதுவும் கூலிக்கு ஆள் பிடித்துப் பாடச் செய்து வருகின்றனர்.
ஒரு மனிதனுடைய வார்த்தைகளைப் பாடுவதால் இத்தகைய பயன்கள் கிடைக்கும் என நம்புவது அந்த மனிதனுக்கு இறைத் தன்மை வழங்குவதாகும்.
நம்மைப் போன்ற ஒரு மனிதன் எழுதிய பாடலுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது? அதை யார் வழங்கியது? அதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் சிந்திக்க மறந்ததால் புர்தாவைப் புனிதமாகக் கருதி வருகின்றனர்.
புர்தா என்பது முழுக்க முழுக்க நல்ல கருத்துக்கள் நிறைந்த கவிதை என்று வைத்துக் கொண்டால் கூட அதை ரசிக்கலாமே தவிர அதற்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக ஒப்புக் கொள்ள முடியாது.
ஆனால் புர்தா என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்க்கக் கூடிய நச்சுக் கருத்துக் கொண்ட பாடலாக இருக்கிறது. இதனால் அதைப் பாடுவதே குற்றமாகும்.
உதாரணத்துக்கு புர்தாவில் இடம் பெற்ற சில
கருத்துக்களைக் காண்போம்.
லவ்ஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டைப் பற்றி நாம் அறிவோம்.
நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தும் ஒன்று விடாமல்
அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு இலை கீழே விழுந்தாலும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே விழுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன் 6:59)
லவ்ஹுல் மஹ்பூல் என்பது அனைத்து ஞானங்களின் மொத்தத் தொகுப்பு என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஆனால் புர்தா என்ன சொல்கின்றது தெரியுமா?
فان من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم
(நபியே!) இவ்வுலகமும் மறு உலகமும் உங்களின் அருட்கொடையாகும். லவ்ஹுல் மஹ்பூலில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தில் சிறு பகுதி தான்.
அதாவது லவ்ஹூல் மஹ்ஃபூலில் உள்ள ஞானத்தை விட நபிகள் நாயகத்தின் ஞானம் அதிகம் என்று இந்த வரியில் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் ஞானத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஞானம் அதிகம் எனக் கூறும் இந்த நச்சுக் கருத்தைப் பாடியவனும், நம்புபவனும் முஸ்லிமாக இருக்க முடியுமா?
அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.
கஃபாவின் மேல் ஆணையாக என ஒரு மனிதர் கூறுவதை இப்னு உமர் (ரலி) செவியுற்ற போது, "அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யாதே! ஏனெனில் யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்து விட்டார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃது பின் உபைதா. நூல் : திர்மிதீ.
இதற்கு முரணாக
أقسمت بالقمر المنشق إن له
என்று புர்தா கூறுகிறது. பிளவுண்ட சந்திரன் மேல் நான்
சத்தியம் செய்கிறேன் என்பது இதன் பொருள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இணை வைத்தல்
என்று இனம் காட்டினார்களோ அதை நியாயப்படுத்தும்
இந்தக் கவிதையை உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியுமா?
ஒருவர் இவ்வுலகில் எந்த அளவு நன்மையான காரியங்களைச் செய்கிறாரோ அதற்கேற்பவே மறுமை நாளில் இறைவனது அருளைப் பெறுவார். இது சாதாரண முஸ்லிமுக்கும் தெரிந்த உண்மையாகும். இந்தச் சாதாரண உண்மையையும் புர்தா மறுக்கின்றது.
மனிதர்களைப் பாவம் செய்யத் தூண்டுகின்றது.
لعل رحمة ربي حين يقسمها تأتي على حسب العصيان في القسم
"அல்லாஹ் தனது அருளைப் பங்கிடும் போது பாவங்களுக்குத்
தக்காவறு வழங்கக் கூடும்''.
ஒருவர் எந்த அளவுக்குப் பாவம் செய்கிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் எனக் கூறும்
இந்த உளறலை நம்ப முடியுமா?
ஒவ்வொரு மனிதனும் அவனவனது செயல்களுக்குத் தான் கூலி கொடுக்கப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒருவன் சிறந்த பெயர் சூட்டப்படுகிறான். இதில் பெயர் சூட்டப்பட்டவனுக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எத்தனையோ கயவர்களுக்கு அழகான பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் புர்தா என்ன சொல்கிறது தெரியுமா?
فإن لي منه ذمة بتسميتي محمداً وهو أوفى الخلق بالذمم
என் பெயர் முஹம்மத் என்றிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் மீது பொறுப்பு உண்டு. படைப்புக்களிலேயே அவர்கள் தாம் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்கள்.
முஹம்மத் என்ற பெயருள்ளவருக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? முஹம்மத் என்று பூசிரிக்குப் பெயர் சூட்டியது அவரது குடும்பத்தினர் தாம்.
இந்தப் பெயருக்கும் பூசிரிக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. இவரது பெயர் முஹம்மத் என்று இருப்பதால் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பாற்றி விடுவார்களாம். இது எவ்வளவு அபத்தம் என்று சிந்தியுங்கள்.
புர்தாவின் அபிமானிகள் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்னம் சீர்திருத்தவாதியைக் கடுமையாகக் குறை கூறுகின்றனர். முஹம்மத் என்ற பெயர் அவருக்கு இருப்பதால் அவர் ஈடேற்றம் அடைவார் என்று பூசிரி கூறுவதில் இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரைக் குறை கூறலாமா?
முஹம்மத் எனும் பெயர் பெற்ற ஒருவர் இவர்களின் பொருட்களை அபகரித்துக் கொண்டால் பொறுத்துக் கொள்வார்களா? நிச்சயமாக பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத இந்த புர்தாவை புனிதமாகக் கருதுவதில் கடுகளவாவது நியாயம் உள்ளதா என்று சிந்தியுங்கள்.
يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث العمم
படைப்புகளில் சிறந்தவரே! எனக்குத் துன்பம் ஏற்படும் போது
நான் சரணடைய உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை
என்று நபிகள் நாயகத்தை அழைத்து இந்தக் கவிஞன் பாடுகிறான். அல்லாஹ்வை மட்டுமே வணங்குமாறும், அவனிடமே முறையிடுமாறும் போதிக்க வந்த நபிகள் நாயகத்தின் போதனைக்கு எதிராக புர்தாவை இயற்றியவன் புது மார்க்கத்தை உண்டாக்குகிறான்.
சலாத்துன் நாரியா என்ற சொல் நம் தமிழக மற்றும் இலங்கை முஸ்லீம்களுக்கு ,மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். சலாத்துன் நாரியா என்றால் நரகத்து சலவாத்து என்று பொருளாகும்.அதாவது நரகம் செல்ல விரும்பக் கூடியவர்கள் இந்த சலவாத்தை ஓதினால் எந்த சிரமும் இன்றி நேரிடையாக நரகம் செல்லலாம் ஏன்னென்றால் இந்த நரகத்தின் ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ர வாசகங்கள் தான் .
இதனை 4444, தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும், திருடர்கள் பயம் இருக்காது இன்னும் பல நன்மைகள் உண்டு என்ர நம்பிக்கையில் இஸ்லாமிய ? பெருமக்கள் தாங்கள் வீடுகளில் ஹஜ்ரத்மார்கலை வைத்து மிக விமர்சியாக ஓதி வருகிறார்கள் ஓதியவருக்கு ரூபாய் கிடைக்கும்.
இந்த சலவாத்தை நபிகள் நாயகம் (சல்) அவர்களோ ! ஸகாபாக்களோ, யாரும் ஓதியது இல்லை மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்தக் கூடிய சில முல்லாக்கலால் பிழைப்புக்காக உருவாக்கப் பட்ட ஒன்றுதான் இதன் காரணமாகதான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரனமாக யாரும் என்ன இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர்.இந்த சலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதை பாருங்கள்,,,,,,,,,,
சலாத்துன் நாரியாவின் பொருள்;; அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மர்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து என்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும், முழுமையான சாந்தியையும் பொழிவாயாக ! அந்த முஹம்மது எப்படிப்பட்டவர் என்ரால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேறுகின்றன அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவுகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன,அவருடைய திருமுகத்தின் மூலம் தான்மேகத்திலிருந்து மழை பெறப்படுகின்றது, மேற்கண்ட சலவாத்தில் நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல்கள் அவிழ்க்கப்படுகின்றன துன்பங்கள் நீங்குகிறது தேவைகள் நிரவேறுகிறது என்றும் வருகிறது.
உண்மையில் சிக்கல்கள், தேவைகள் நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றலாகும் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு இறந்தவர்களுக்கோ, அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாக கூறுவது இணைகற்பிக்கின்ற காறியமாகும்.அனத்து துன்பங்களில் இருந்தும் காக்கக்கூடுயவன் அல்லாஹ் ஒருவன் தான் அவனைத்தவிர இந்த ஆற்ரல் வேறு யாருக்கும் அணுவின் முனை அலவு கூட கிடயாது.
ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களை காப்பாற்றுகிறான்.அல்குரான்; 6/64..
நபி(ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ, எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமரை குரான் தெளிவு படுத்துகின்றது, அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை
நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகமாக அடைந்திருப்பேன். எந்த தீங்கும் எனக்கு ஏற்பட்டு இருக்காது நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கிறேன், என்று (முஹம்மதே)கூறுவீராக! அல்குரான்;7/188,,,
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன் அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக, நான் உங்களுக்கு தீங்கு செய்யவும் நன்மைசெய்யவும் அதிகாரம் பெர்றிருக்க வில்லை, என்றும் கூறுவீராக அல்லாஹ்விடம் இருந்து எவரும் என்னை காப்பாற்ற மாட்டார் அவனின்றி ஒதுங்கும் இடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக,,,அல்குரான் ;72/20,21,22.,,,,
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைதவிர அதை நீக்குபவன் யாருமில்லை உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளை தடுப்பவன் யாரும் கிடயாது தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான், அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்... அல்குரான்;10/107,,,
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ர இந்த சலவாத்தை நாம் ஓதலாமா ?? மேற்கண்ட ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிரைவேறுகின்றன என்று வருகிறது, இதுவும் இணைகற்பிக்கின்ற வரிகளாகும்..... நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போய் இருக்கின்றது, நாட்டங்கள் நிறை வேற்றுகின்ற ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமேயானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும்,,,,,
நபி(ஸல்) அவர்கல் முனாபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள் ஆனால் அது நிரைவேறவில்லை.அது மட்டும் அல்ல அல்லாஹ் அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான். (முஹம்மதே) அவர்களுக்காக பவமன்னிப்புக் கேளும் அல்லது கேட்காமல் இரும் ! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமண்ணிப்பு கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்கு காரணம் குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குரான் ,,,,9/80...
நபி(ஸல்) அவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபுதாலிப் ஏகத்துவ கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள் அவருடைய மரனத்தருவாயில் அவர்களிடம் லாயிலாக இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறுமாறு மன்ராடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ர வரை பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள், ஆனால், அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை அல்லாஹ் நிறை வேற்றிவில்லை மாறாக, நபிக்கு தான் நாடியதை செய்யும் ஆற்றல் கிடயாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவு படுத்துகிறான்,, முஹம்மதே !நீர் விரும்பியோரைஉம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது,! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்...அல்குரான்;; 28/56,,
மேலும் மக்காவில் வாழ்ந்த அபுஜஹல், உத்பா, ஷைபா போன்ர காபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனை பின் வரும் வசனத்தின் மூலம் விளங்கி கொள்ளலாம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்க்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்..அல்குரான் 26/3,,,,,, நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேர வில்லை நாட்டங்கலை நிரைவேற்றக் கூடியவன்அல்லாஹ் ஒருவன் தான் நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகிறது என்ற இந்த சலவாத்தில் வரக்கூடிய வரிகல் நிரந்தர நரகத்தை தரக்கூடிய வரிகளே அழகிய இறுதி முடிவை தருபவன் யார் ??? நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிரது என சலாத்துன் நாரியாவில்வருகிறது இதுவும் நிறந்தர நரகத்தில் சேர்க்கின்ர இனைகற்பிக்கின்ற வரிகளாகும் ஒருவன் மரணிக்கும் போது ,,, சொர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இரைவனின் நாட்டமே !!ஆக இப்படிப்பட்ட வரிகல் கொண்டு சலாத்துன் நாரியா எழுதப்பட்டது,,,
ஒருமனிதன் இயற்றிய வார்த்தை இதை ஓதுவது என்று ஏமாற்றி சம்பாத்தியம் செய்யும் முல்லாக்களுக்கு எச்சரிக்கை
அல்லாஹ்வை பயந்து கொள் நபி(ஸல்) அவர்கள் சொல்லி தந்த சலவாத்து அல்லாஹும்ம ஸல்லிஅலாமுஹம்மதின் கமாஸல்லைத்த அலாஇப்றாஹீம வாலாஆலி இபுறாகீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வலா முஹம்மதின் காமா பாரக்த்த அலாஇப்ராஹீம வாலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,,,,,,இந்த சலவாத் ஓதினால் நன்மை
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ- முஹம்மதின் கமா பாரக்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்'' என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797 **********************************************************************************