"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

அடக்கத்தலத்தை கட்டக் கூடாது

 அடக்கத்தலத்தை கட்டக் கூடாது

سنن النسائي2027 - أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه - قال الشيخ الألباني : صحيح

கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)   நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807

حدثنا أبو بكر بن أبى شيبة حدثنا حفص بن غياث عن ابن جريج عن أبى الزبير عن جابر قال نهى رسول الله -صلى الله عليه وسلم- أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه.

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1610

நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

  நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?  யாஸிர்

பதில்:

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு முடிவை டுத்துவிட்டு அந்த முடிவை ஒருவர் மீறினால் அதற்கு என்ன பரிகாரமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறிக்கும் போதும் செய்ய வேண்டும்.

3103 و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَ يُونُسُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ الْيَمِينِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சத்தியத்தை முறிக்கும்போது செய்யும் பரிகாரமே நேர்ச்சையை நிறைவேற்றாமல் போவதற்கும் பரிகாரமாகும்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல் : முஸ்லிம் 3379

சத்தியத்தை முறிக்கும்போது செய்ய வேண்டிய பரிகாரத்தை பின்வரும் வசனம் கூறுகிறது.

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (89)5

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.    திருக்குர்ஆன் 5 : 89

தன்னை அறிந்தவன், தன் இறைவனை அறிந்தான்

ஸூபிய்யாக்களால் புணையப்பட்டு நபி (ஸல்) அவர்களின் பெயரால் பரப்பப் பட்டு வரும் மற்றுமொரு செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:

"தன்னை அறிந்தவன், தன் இறைவனை அறிந்தான்"

குறித்த செய்தி ஒரு இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும் என்பதற்கு இந்த செய்தியை எந்த இமாம் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார் என்ற தகவலோ எந்த நபித்தோழர் அறிவித்தார் என்ற விபரமோ கிடையாது என்பதே போதிய சான்றாகும்.

எனினும் வழி கெட்ட ஸூபிகள் இதை ஒரு அடிப்படையாகக் கொண்டு சில விரிவுரை நூல்களை எழுதியுள்ளனர். இதில் எல்லாம் கடவும் என்ற அத்வைத கோட்பாட்டை போதித்த இப்னு அறபி என்பவர் "அர்ரிஸாலதுல் வுஜூதிய்யா என்ற நூலும் முஹம்மத் அல் ஹமரி என்பவர் "ஸூபிய்யாக்களின் அடிப்படை என்ற புத்தகத்திலும் இச் செய்திக்கு விரிவுரை செய்துள்ளனர். அத்துடன் ஸூபிய்யாக்களின் வரலாற்றுப் பட்டியலைத் தொகுத்த ஷ அரானி என்பவரும் இச் செய்தியை தனது "தபகாத்" என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்.

குறித்த செய்தி நபி மொழியல்ல இட்டுக் கட்டப்பட்டது என்பதை முல்லா அலி காரி , இமாம் இப்னு தைமிய்யாஹ், இமாம் ஸஹாவி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இமாம் ந வ வி அவர்களும் இது உறுதியான செய்தியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.