"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா?

நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும், ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதையையும் அந்தந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்தக் கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படிப் பாடுவது என்று தடுமாறிய போதும் நபி(ஸல்) அவர்கள் அடுத்த அடியை எடுத்துக் கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்தக் கவிதைகளில் எவரும் குறை கண்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர். காசிம் புலவர் “திருப்புகழ்” பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும் போது, நபி(ஸல்) அவர்கள் “நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தனர்” என்று கூட  எழுதி வைத்துள்ளனர். (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை, அது அவருக்குத் தகுமானதுமல்ல. (அல்குர்ஆன் 36 : 69)
திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு கவிதையைக் கற்றுத்தரவில்லை என்று தெளிவாகச் சொல்லி இருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் கவிதைக்குத் திருத்தம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமாகக் கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூற மாட்டார்கள். எதுகை, மோனைகளைக் கவனிக்க மாட்டார்கள்.
“பிறர் கவிதையில் எதையாவது நபி(ஸல்) அவர்கள் உவமையாகக் குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது, அதன் ஆரம்பத்தைக் கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!” அந்தக் கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான் கவிஞனல்ல. அது எனக்குத் தகுதியானதுமல்ல.” என்று குறிப்பிட்டார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: இப்னுஜரீர், இப்னு அபீஹாதம்

அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி, “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ்(ரழி) நூல்: பைகஹீ (தலாயில)

பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட, “யாப்பிலக்கண” அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் கூற மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. அப்பாஸ் என்ற கவிஞர் பற்றிய ஹதீஸில் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை” என்ற குர்ஆன் வசனத்திற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டு கவிதை இலக்கண விதிகளின்படி இயற்றினார்கள் என்று கருதக் கூடாது.
கிராமப் புறத்தில் உள்ள மொழியிலக்கணம் அறியாத சிலரது பேச்சுக்கள் கூட சில சமயங்களில் கவிதை அமைப்பில் அமைந்துவிடுவதை இன்றும் நாம் காண்கிறோம். அதனால் அவருக்குக் கவிதை ஞானம் உண்டு என்ற முடிவுக்கு வரமுடியாது. இதை நபி(ஸல்) அவர்களே தெளிவு படுத்தியுள்ளனர்.
நான் என் புறத்திலிருந்து அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் சில கவிஞர்களுக்குக் கவிதையைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம்.
இது கனவில் தானே நடந்துள்ளது. கனவில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே! என்ற ஐயம் சிலருக்கு இங்கே தோன்றலாம். அது உண்மை என்றாலும், கனவில் எது வேண்டுமானாலும் தோன்றலாம். நபி(ஸல்) அவர்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் என்பதற்கு ஆதாரமுண்டு.
“யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்” (நபிமொழி)அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரழி) நூல்: புகாரி: முஸ்லிம்
மற்றவர்கள் தோற்றத்தில் ஷைத்தான் விளையாடுவது போல் நபி(ஸல்) அவர்களுடைய தோற்றத்தில் விளையாட முடியாது. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எந்த போதனைகளைச் சொன்னார்களோ, அதற்கு மாற்றமாகக் கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
அந்த அப்பா பாடலில் அடியெடுத்துக் கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் வடிகட்டிய – உண்மை கொஞ்சமும் கலக்காத பச்சைப் பொய்களாகும்.

கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கு முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு என்பதையும் இதுவரை நாம் கண்டோம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இதை இரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள்.
கவிதையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக் கொள்! கெட்டதை விட்டுவிடு!”அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: புகாரி இமாமின் அல்அதபுல் முஃபரத்

மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அடி எடுத்துக் கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணானவை காணப்படுகின்றன. இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட, இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி(ஸல்) அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.
“சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.
புலவர் உமறு, நபி(ஸல்) அவர்களின் அருமைமகள் பாத்திமா(ரழி) அவர்களுக்கும். அலி(ரழி) அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்ததைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறதாம்! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள்! தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்களாம்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்களாம்! ஒவியம் வரைந்தார்களாம்! தோரணம் கட்டினார்களாம்! பந்தல்கள் போட்டார்களாம்! அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்களாம்! தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்களாம்!
பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களாம்! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்களாம்! உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்களாம்! அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்களாம்! இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்களாம்!
இப்படி எல்லாம் கதைவிடுகிறார் உமறுப்புலவர். எந்த வரலாற்று நூலில் இதைப் படித்தாறோ நாமறிவோம். மார்க்கம் அனுமதிக்காத தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை மதீனா மாநகர மக்கள் (அதாவது சஹாபாக்கள்) பயன்படுத்தியதாக பழி சுமத்துகிறார். கடைக்கண்களால் அன்னிய ஆடவரின் அழகைப் பருகியதாக சஹாபாப் பெண்மணிகள் மீது களங்கம் கற்பிக்கிறார். இசைக் கருவிகளைத் தடை செய்த இஸ்லாத்தில், சஹாபாக்கள் விண்ணும் மண்ணும் அதிர இசைக்கருவிகளை முழங்கச் செய்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்துக்களை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பார்களா? தம் வாழ்நாளில் எந்தத் தீமைகளை ஒழிக்க நபி (ஸல்) அவர்கள் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை நபி(ஸல்) அவர்களின் பெயராலேயே அரங்கேற்றம் செய்கிறார்.

“தமிழ்க் கலாசாரத்தைக் தழுவி இப்படிப் பாடிவிட்டார்” என்றெல்லாம் சிலர் சமாதானம் கூறலாம். கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அவர் இப்படிப் பாடி இருந்தால் இந்த சமாதானத்தை ஏற்கலாம்! கற்பனை என்று ஒதுக்கி விடலாம், பாதுகாக்கப்பட்டட வரலாறாகத் திகழ்கின்ற அல்லாஹ்வின் திருத் தூதரின் வரலாறு தானா இவரது கற்பனைக்கு வடிகாலாக வேண்டும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை முஸ்லிம் சமுதாயம் முழுவதும் பின்பற்றி நடக்கக் கடமைப்பட்டு உள்ளனர். அவர்களின் பெயரால் இப்படி எல்லாம் கதைவிடுவதை ஒரு முஸ்லிம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நல்ல வேளை! அவர் இருபதாம் நூற்றாண்டில் வாழவில்லை. இப்போது இருந்திருந்தால் அந்தத் திருமண நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்து உலகில் உள்ள எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பியதாகவும் பாடி இருப்பார். குதிரையில் பவனி வரச் செய்திருக்க மாட்டார், சொகுசுக் காரில் பவனி வரச் செய்திருப்பார். உலகின் பல பாகங்களிலிருந்தும் மன்னர்கள் விமானம் மூலம் வந்து மதீனாவில் நடைபெற்ற திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தனர் என்று பாடி இருப்பார். உலகின் எல்லா நாளிதழ்களும் அந்த திருமணச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன என்றும் பாடி இருப்பார்.

இதை விடவும் மோசமான பல கவிதைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கவிதைகளை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளனர் என்று கூறி இந்தத் தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன. சொன்னதைச் செய்து காட்டிய நபி(ஸல்) இந்தப் பொய் புராணத்தை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பதே திண்ணம்.
சில தமிழ்க் கவிஞர்கள் இந்த இடத்தில் நம்மீது ஆத்திரப்படலாம். நாம், உமறுப் புலவரின் தமிழறிவையோ, அதன் இலக்கியத் தரத்தையோ விமர்சனம் செய்யவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் போதித்த போதனைகளுக்கு மாற்றமாக சித்தரித்துக் காட்டியதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். நபி(ஸல்) அவர்களின் வாழ்வு கூடுதல், குறைவின்றி உள்ளபடி மக்கள் முன் வைக்கப்பட வேண்டும், அவ்வாறு வைக்கப்படவில்லை என்கிறோம்.

உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.
காசிம் புலவர் என்பவர் நபி(ஸல்) அவர்களின் பெயரில் திருப்புகழ் பாட எண்ணிய போது எப்படித் துவக்குவது என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி “பகரும்” என்று முதலடியைத் துவக்கி கொடுத்தார்களாம்! உடனே அவர் “பகருமுருவிலி அருவிலி வெருவிலி” என்று தன் திருப்புகழைத் துவக்கினாராம்!
இவ்வாறு பாடிக் கொண்டு வரும்போது, ஒரு செய்யுளின் இறுதியடியில் “மக்கப்பதிக்கும்” என்று சொன்னாராம்! அடுத்த வார்த்தை அவரது நாவில் வரவில்லையாம்! திரும்பத் திரும்ப “மக்கப்பதிக்கம் மக்கப்பதிக்கும்” என்று புலம்பிக் கொண்டே ஒரு குளத்தில் இறக்கி விடுகிறாராம்! தண்ணீர் தொண்டை அளவுக்கு வந்துவிட்டதால் இனி ஓரடி எடுத்து வைத்தால் அவர் மூழ்கி விடுவார் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கி “மக்கப்பதிக்கும் உணர் சொர்க்கம் பதிக்கும் மா இரசூலே” என்று அதனை முடித்துக் கொடுத்தார்களாம்!
இது உமறுப் புலவரின் பெயரால் கூறப்படும் பொய்யைவிட பயங்கரப் பொய்யாகும். உமறுப் புலவருக்கு கனவில் மட்டும் தான். நபி(ஸல்) அவர்கள் வந்ததாக கதை விடப்பட்டது. இவருக்கு கனவில் தோன்றி ஆரம்பித்துக் கொடுத்ததோடு நேரடியாகவும் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கினார்கள் என்று பச்சைப் பொய் சொல்லப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் நேரடியாகவே இவருக்குத் திருக்காட்சி நல்கியதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்குவார்கள் என்றால், இந்த சமுதாயத்தில் பல பிளவுகள் போர்க்களங்கள் ஏற்பட்ட போது திருக்காட்சி நல்கி சமுதாய ஒற்றுமைப் படுத்தி இருக்க மாட்டார்களா? (“நபி(ஸல்) அவர்கள் எவருக்கும் நேரடியாக திருக்காட்சி நல்க மாட்டார்கள்” என்பதற்கு விரிவான ஆதாரங்களுடன்  முன்னர் நாம் விளக்கினோம்.)
கொஞ்சம் சிந்தித்தாலே இது பச்சைப் பொய் என்பதை எவரும் உணரலாம்! இவர் நபி(ஸல்) அவர்களை “மக்கப்பதிக்கு ரசூல்” என்கிறார். ஆனால் அல்லாஹ், தன் திருமறையில் “உலக மக்கள் அனைவருக்கும் ரசூல் என்கிறான்.
(உலக) மக்கள் அனைவருக்குமே நாம் உமமைத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 34 : 28) அகில உலகுக்கும் அருட்கொடையாக உலக மாந்தர் அனைவருக்கும் அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மக்கப்பதிக்கு மட்டும் தூதர் என்று ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
அடுத்து “சொர்க்கம் பதிக்கும் ரசூல்” என்கிறார். சொர்க்கத்தில் ஏவல், விலக்கல் எதுவும் கிடையாது. உள்ளம் விரும்பக் கூடியதெல்லாம் சொர்க்கத்தில் உண்டு (அல்குர்ஆன் 43 :71)
அல்லாஹ்வை நேரடியாகவே காணுகின்ற பெரும் பேறு சுவனத்தில் உண்டு (அல்குர்ஆன் 75 : 23) என்பது திருக்குர்ஆன் மூலம் நிருபணமாகின்றது. அங்கே ஏவல், விலக்கலைச் சொல்லித்தர தூதர்கள் இல்லை. விரும்பியபடி நடந்து கொள்ளலாம்! இவரோ “சொர்க்கப் பதிக்கும் இரசூலே” என்கிறார். ‘மக்கப்பதிக்கு ரசூல்’ என்று சொன்னதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் குறுகிய வட்டத்துக்குத் தூதராக்குகிறார் “உயர் சொர்க்கப் பதிக்கும் இரசூல்” என்று இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறார். அந்தப் புலவர், தானே இப்படிப் பாடியதாகக் கூறப்பட்டால், அவரது அறியாமை என்று ஒதுக்கி விடலாம். அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே இந்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய பழியை நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்துகிறார்.
அதே திருப்புகழில், இவர் செய்த விபச்சாரத்துக்கும், மது அருந்தியதற்கும், கொலை செய்ததற்கும், களவு செய்ததற்கும். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்ட இவர், அக்குற்றங்களையெல்லாம் மன்னிக்கும்படி அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டுகிறார்.
வறுமையென்னும் படர் தீயாலே
எனதுடலினுறும் பிணி நோயாலே – பசி
வலியடுமின் சுவை ஊணாலே – இடை
புனையாடை வகையது ஒன்றும் இலாதாலே
கொலை களவு பொய் குண்டுணி கோளாலே -தினம்
வறிதில் நிறைந்திடு தாழ்வாலே – விலை
மடமானார் உறவு செய்தின்புறுமாலாலே
கொடுமறநெறி வஞ்சனை சூதாலே -தனி
உலகில் உழன்று அவமே வாழ்நாளில்
உறைவேனோ உறுபகையின் கொடியேனானாலும்
நின்னடிமையை நின்கைவிடாதோமா மனம்
உருகி இரங்கிவினோர்மேல் வீடினி – அருள்வாயே!
என்று பாடி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கருத்தை உதிர்க்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை எப்படி அங்கீகரித்திருப்பார்கள்? எந்த ஷிர்கை வேரறுக்க அனுப்பட்டார்களோ அதே ஷிர்கை ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள்.
இதுபோல் ஆலிப்புலவர் என்பவர் ‘மிராஜ் மாலை’ என்று ஒரு காப்பியம் இயற்றி அதைக் கோட்டாறு என்ற ஊரில் அரங்கேற்றினாராம். பாடிக் கொண்டே பின்வரும் வரிகளைச் சொன்னாராம்!
நாலாம் வானமிலங்கும் ஞானரத்ன மஃமூரில்
வாலாயமாய் வீற்ற வான்பரியை – கோலத்தூண்
தான் துளைத்துக் கட்டியரோ தாஹா
சென்றாரைந்தாம் வானகத்தின் உள்ளே மகிழ்ந்து
என்ற வெண்பாவைப் பாடினாராம்.
(கருத்து :- புராக் வாகனத்தின் மிஃராஜ் செல்லும் போது மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் உள்ள ஒரு தூணில், தம் விரல்களால் துளையிட்டு அதில் புராக் வாகனத்தைக் கட்டிவிட்டு ஐந்தாம் வானம் சென்றார்கள்.)
இதைப் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் உடனே விஜயம் செய்து “புலவரே! அந்தச் செய்தி எனக்கும், என்னுடன் வந்த ஜிப்ரீலுக்கும் தானே தெரியும்! உமக்கெப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்களாம்; அதற்கு அவர் “அண்ணலே! இயல்பாகவே, என்வாயில் அப்படி வந்து விட்டது” என்று சொல்லி உடனே மூர்ச்சையுற்று கீழே விழுந்து விட்டாராம்.
இதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மில் எவரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன் ஜாக்கிரதையாக அணை போடுகின்றனர். இந்தப் பொய்யை அல்லாஹ்வின் தூதர் அவர்களே அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி விட்டால் எல்லோருடைய வாயையும் அடைத்து விடலாம் என்று திட்டமிட்டு இப்படிக் கதை கட்டியிருக்கிறார்கள்.
இன்றவளவும் கோட்டாறு மக்களில் சிலர் “நபி(ஸல்) அவர்கள் கோட்டாறுக்கு விஜயம் செய்ததாக நம்புகின்றனர். மிஃராஜ் மாலையைப் புனிதமாகக் கருதி, அங்கே விழாக்களும் நடத்தி பக்திபரவசமாகப் பாடுகின்றனர்.
ஆக, கடந்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம் கவிஞர்களில் விரல்விட்டு எண்ணப்படும் சிலரைத்தவிர, பெரும்பாலோர் தங்கள் கற்பனையில் தோன்றியதை எல்லாம் இஸ்லாத்தின் பெயரால் கவிதைகளாகத் தந்துள்ளனர்.
அந்தத் தவறுகளை மக்களும் மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, நபி(ஸல்) அவர்களே இவற்றை அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி வாயடைத்தனர்.
இந்தக் கவிதைகளின் கருத்துக்களைக் காணும்போது, நபி(ஸல்) இவற்றைக் கனவிலோ நேரிலோ அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு. நபி(ஸல்) அவர்களுக்குக் கவிபாடத் தெரியாது என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் நாம் ஏற்கனெவே நிரூபித்ததன் அடிப்படையிலும் இவை பொய்யேயன்றி வேறில்லை என்று உணரலாம்.
மவ்லிதுகள், கவிதை என்ற காரணத்துக்காக மறுக்கப்படவில்லை என்பதை இதுவரைக் கண்டோம். இனி மவ்லிது மறுக்கப்படுவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். (வளரும்)
நன்றி இப்னு மர்யம்

********************************************************************************* 
மீலாதும் மவ்லிதும்  எனும் வீடியோ உறைய காண  இங்கே கிளிக் செய்யவும் 
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண  இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

முஹ்யித்தீன் மவ்லித் ஓர்ஆய்வு -அற்புதங்களா? அபத்தங்களா?

காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும்அல்லாஹ்வின்தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது.
 'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதைஉயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்றுநாம் அவரை மதிக்கிறோம்அவரது சேவையை மெச்சுகிறோம்ஆயினும் முஹ்யித்தீன்மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில்அமைந்திருக்கின்றனஅப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில்கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன்ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில்அமைந்திருக்கின்றன.
இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.

1  இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்

وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا
له متى جا مكتبا * أملاك حفظ للعباد
இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை.
பொருள் வருமாறு
இவர் நபி (ஸல்அவர்களின் விளக்காவார்இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போதுசிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சகமாணவர்களிடம் கூறினார்கள்.
இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது.அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் நேசருக்கு இடமளியுங்கள் என்றுஎன்னைச் சூழ இருந்த மாணவர்களிடம் அல்லாஹ்வின் அனுமதியுடன் வானவர்கள் கூறியதைநான் கேட்டேன் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார்.
இவ்வாறு உரை நடைப் பகுதியில் கூறப்படுகிறது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே இதைக் கூறினார்கள் என்றால் அவரது காலத்தில் எழுதப்பட்டஎந்த நூலில் இந்த நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கிறதுஎந்த நூலிலும் கூறப்படவில்லைஅப்துல் காதிர்ஜீலானி அவர்கள் மரணித்த பின்னரே அவர்கள் பெயரால் இந்தக் கதை புனையப்பட்டதுஇதுஒன்றே இது பொய்க் கதை என்பதற்குப் போதுமான சான்றாகும்இந்தக் கதையில் மறைந்துகிடக்கும் மற்றும் சில அபத்தங்களாலும் இது பொய் என்பது மேலும் உறுதியாகின்றது.

மலக்குகளை மனிதர்கள் காண முடியுமா?

மலக்குகள் மக்களுக்குத் தென்படும் வகையில் சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கமாட்டார்கள்நபிமார்களின் காலத்தில் மலக்குகள் சில வேளை மனித வடிவில் வந்துள்ளனர்.வந்தவர்கள் மலக்குகள் தாம் என்பதைத் தெளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.
ஒரு முறை ஜிப்ரீல் (அலைஅவர்கள் மனித வடிவில் வந்தனர்வந்தவர் ஜீப்ரீல் தாம் என்று நபி(ஸல்அவர்கள் விளக்குவதற்கு முன்னர் நபித்தோழர்கள் யாரும் அவர் ஜிப்ரீல் என அறியமுடியவில்லை என்பதை ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன.      பார்க்கபுகாரி 50, 4777

இந்தச் சமுதாயத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே ஒரு வானவர் வந்ததைஅறிய முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்அவருக்குஇறைவனிடமிருந்து இது பற்றி வஹீ (இறைச் செய்திஏதும் வந்ததா?
நபிமார்கள் அல்லாதவர்கள் ஏதேனும் பிரமையில் மலக்கு நடமாடுவதாகக் கருதி விடலாம்.
அல்லது ஷைத்தான்களின் நடமாட்டத்தைக் கண்டு மலக்குகள் என்று முடிவு செய்துவிடக்கூடும்.
அல்லது தனக்கு மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ள இவ்வாறு ஒருவர் பொய் கூறவும் கூடும்.
அல்லது தமது தவறுகளை நியாயப்படுத்திட மலக்குகள் இவ்வாறு தம்மிடம் கூறியதாக ஒருவர்கதையளக்கவும் கூடும்.
வஹீயின் தொடர்பு இருப்பவர்கள் மட்டுமேவந்தது மலக்குகள் தாம் என்பதை உறுதிப்படுத்திடமுடியும்வஹீ (இறைச் செய்திஎன்னும் தொடர்பு இல்லாதவர் இவ்வாறு கூறும் போது அதைநம்பக் கூடாது.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதேசெவிபார்வைஉள்ளம் ஆகிய அனைத்துமேவிசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17.36) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மலக்குகளின் பணிகள்

வஹீயைக் கொண்டு வரவும்அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றவும்நன்மைதீமைகளைப் பதிவு செய்யவும் மற்றும் பல பணிகளுக்காகவும் மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்அந்தந்த மலக்குகள்  இறைவனால் நியமிக்கப்பட்ட பணிகளை மட்டுமேசெய்வார்கள்எந்தப் பணிக்காக அவர்கள் நியமிக்கப்படவில்லையோ அதைச் செய்யமாட்டார்கள்.
அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள்அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.(அல்குர்ஆன் 21.27)

நம்பிக்கை
 கொண்டோரேஉங்களையும்உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக்கொள்ளுங்கள்அதன் எபொருள் மனிதரும்கற்களுமாகும்அதன் மேல் கடுமையும்கொடூரமும்கொண்ட வானவர்கள் உள்ளனர்தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்
.(அல்குர்ஆன் 66.6)

வானங்களில்
 உள்ளவையும்பூமியில் உள்ள உயினங்களும்வானவர்களும் அல்லாஹ்வுக்கேஸஜ்தாச் செய்கின்றனர்வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்தமக்கு மேலே இருக்கும்தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர்கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.(அல்குர்ஆன் 16.49, 50)

கண்காணிப்புப்
 பணியில் உள்ள மலக்குகள் அப்துல் காதிர் ஜீலானிக்காக பராக் கூறியதாக இந்தக்கதை கூறுகிறதுகண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகளுக்கு இப்படி ஒரு பணிஒதுக்கப்படவில்லை.
மனிதனுக்கு முன்னரும்பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்உள்ளனர்அல்லாஹ்வின்கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக்கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்ஒருசமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லைஅவர்களுக்குஅவனன்றி உதவி செய்பவரும் இல்லை.(அல்குர்ஆன் 13.11)

அவனே
 தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன்அனுப்புகிறான்எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக்கைப்பற்றுகிறார்கள்அவர்கள் (அப்பணியில்குறை வைக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன் 6:61)

ஒவ்வொரு
 ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.(அல்குர்ஆன் 86.4)

நிச்சயமாக
 உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர்அவர்கள் கண்ணியமிக்க எழுத்தர்கள்நீங்கள்செய்பவற்றை அவர்கள் அறிகிறார்கள்.(அல்குர்ஆன் 82.10)

மனிதர்கள்
 செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்வதும்அல்லாஹ்வின் கட்டளைப்படிமனிதர்களைப் பாதுகாப்பதும் ஆகிய இரண்டு பணிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியிலுள்ளமலக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளனஅப்துல் காதிர் ஜீலானிக்கு மட்டுமின்றி ஒவ்வொருமனிதருக்கும் இத்தகைய மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்இதை இவ்வசனங்களிலிருந்துஅறியலாம்.
அப்துல் காதிர் ஜீலானியைக் கண்காணித்து அவரது நன்மை தீமைகளைப் பதிவு செய்யக்கடமைப்பட்ட மலக்குகள் அவருக்கு பராக் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றும்,பள்ளிக்கூடத்தில் இடம் பிடித்துக் கொடுத்தார்கள் என்றும் கூறும் இந்தக் கதை மேற்கண்டவசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதுஇந்தக் கதை பொய் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் நேசர் யார்?

அல்லாஹ்வின் நேசருக்கு இடம் கொடுங்கள் என்று மலக்குகள் கூறியதாக இந்தக் கதையில்கூறப்படுகின்றது.
கவனத்தில் கொள்கஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லைஅவர்கள்கவலைப்படவும் மாட்டார்கள்அவர்கள் (இறைவனைநம்புவார்கள். (அவனைஅஞ்சுவோராகஇருப்பார்கள்.(அல்குர்ஆன் 10.62,63)

இறையச்சத்தின்
 மூலமே ஒருவர் இறை நேசராக முடியும்இறையச்சம் என்பது பருவ வயதைஅடைந்த பின் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்திஅவனது விலக்கல்களிலிருந்துவிலகி நடப்பதால் தான் ஏற்படும்பருவ வயதை அடையாத சிறுவர்கள் குறித்து இறை நேசர்கள் என்றோ இறை நேசர்கள் இல்லை என்றோ கூற முடியாது.
பத்து வயதுப் பாலகரான அப்துல் காதிர் ஜீலானியை இறை நேசர் என்று மலக்குகள் நிச்சயம் கூறியிருக்க முடியாதுஒருவர் விபரமறிந்து தமது நடத்தையின் மூலமாகத் தான் இறை நேசராகஆக முடியும் என்பதற்கு மாறாகபிறப்பால் இறை நேசராகி விட்டதாக இந்தக் கூற்றுதெவிக்கின்றதுஇந்தக் காரணத்தினாலும் இது பொய் என்பது மேலும் உறுதியாகின்றது.
அப்துல் காதிர் ஜீலானியை உயர்த்துவதற்காக மலக்குகளின் பெயரைப் பயன்படுத்திக்கதையளந்துள்ளனர் என்பதே உண்மைஇது போல் இன்னும் பல கதைகள் உள்ளன
தொடரும் ..........
(
p j எழுதிய 'முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு' நூலிலிருந்து )
********************************************************************************
மேலும் விரிவாக தெரிந்துகொள்ள

அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்