"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா ?

இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா? M.சம்சுதீன் 

பதில் : 
முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.
اللآلي المصنوعة - (1 / 249) وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات
الموضوعات لابن الجوزي - (1 / 290)

ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة.
وقال الدارقطني: متروك. 
இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர்.

تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37)

195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا

قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة 

இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.
 இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த செய்தியின் கருத்து குர்ஆனுடன் முரண்படுகிறது. அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த உலகத்தை படைத்ததற்கான காரணத்தை பற்றி கூறும் போது அவனை வணங்குவதற்காகத் தான் இந்த உலகத்தை படைத்ததாக குறிப்பிடுகிறான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51 
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் (51:56) 

இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.
******************************************************************************


  1. ஆமினா கண்ட அற்புத ஒளி. காண  இங்கே கிளிக் செய்யவும் 
  2. மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
  3. அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா


كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!

'யா நபி (நபியே!)' என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.

يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ

 குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.

சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!'
சல்லூ அலாகைரில் இபாத்' என்ற பாடலின் சில வரிகள் இல்லை.

وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ
 உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

யாஸையிதீ' என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்.

இதனால் தான் எத்தனையோ நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த போது, சிறிய தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்து விட்ட போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால் தாங்கள் பெரு நஷ்டம் அடைய நேரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை அவர்களும் அவர்களின் மனைவியும் இறைக்கட்டளைக்கு மாறு செய்த பின்
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.  (அல்குர்ஆன் 7:23)

இறைவன் தம்மை மன்னிக்காவிட்டால் தாம் பெரு நஷ்டம் அடைய நேரும் என்று இருவருமே ஒரே குரலில் கூறியுள்ளனர்.

நூஹ் (அலை அவர்கள் தமக்கு ஞானமில்லாத விஷயம் பற்றிப் பிரார்த்தனை செய்த போது இறைவன் அவர்களைக் கடிந்து கொள்கிறான். அவர்களும் கூட ஆதம் (அலை அவர்களைப் போலவே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 11:45, 46, 47)

மூஸா (அலை அவர்கள் ஒருவரைக் கொலை செய்து விட்டு வருந்தும் போது அதற்காகவும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புத் தேடினார்கள்.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடி னார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்
(அல்குர்ஆன் 28:15, 16, 17.

மூஸா (அலை அவர்களின் சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போது மூஸா (அலை அவர்களிடம் பாவ மன்னிப்புக் கோராமல் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கேட்டுள்ளனர். தாங்கள் வழி தவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்ட மடைந்தோராவோம் என்றனர். (அல்குர்ஆன் 7:149)

நபிமார்களில் எவருக்கும் வழங்கப்படாத ஆற்றலும் அதிகாரமும் வழங்கப்பட்ட சுலைமான் (அலை அவர்களும் கூட தமது தவறுக்காக அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோரியுள்ளனர். ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் எனக் கூறினார்.  (அல்குர்ஆன் 38:34, 35)

திருக்குர்ஆனில் மிகவும் உயர்வாக இறைவனால் பாராட்டப்பட்ட இப்ராஹீம் (அலை அவர்களும் அல்லாஹ் தான் தமது தவறுகளை மன்னிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர் பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
(அல்குர்ஆன் 26:78, 79, 80, 81, 82)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரணமின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர் களின் குற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவில்லை. இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் விலக்கி வைத்தனர். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 9:118 (புகாரி 4418, 4677 ஆகிய ஹதீஸ்களில் முழு விபரம் காணலாம்.)

மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்ப தால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களைத் தான் மன்னித்து விட்டதாக (அல்குர்ஆன் 48:2 இறைவன் கூறுவதும்,

'இறைவா! என்னை மன்னித்து அருள்புரி' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 23:118)

என்று இறைவன் கட்டளையிடுவதும் மன்னிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றன.

'அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அல் அகர் (ரலி) நூல்: முஸ்லிம் 4870

பாவமன்னிப்பு வழங்குவது அல்லாஹ்வின் தனி அதிகாரம் என்பதற்கு இவை உறுதியான சான்றுகள்! இத்தனை சான்றுகளுடனும் மேற்கண்ட மவ்லிது வரிகள் நேரடியாக மோதுவதால் மவ்லிது ஓதுவது பாவம் என்பதை அறியலாம்.
-----onlinepj.com----
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண  இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சலாத்துன் நாரியா ?   வை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும் 
கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!! காண இங்கே கிளிக் செய்யவும் 

கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!!

25/12/2017 அன்று உலகெங்கிலும் வாழும் கிருஸ்தவர்கள் அனைவரும் இயேசு
கிறுஸ்த்துவின் பிறந்த தினமான கிருஸ்மஸ் பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடுவர். அதாவது எமது பாஷையில் நபி ஈஸா(அலை) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

சரி அதுதான் வருடா வருடம் நடைபெற்று வரும் வழமைதானே! இதில் புதிதாக என்ன இருக்கிறது? என வினா எழுப்பும் வாசகர்கள்,
‘வருடாந்தம் மீலாத் விழா என்ற பெயரில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் இன்னும் சில நாட்களில் ரபீஉல் அவ்வல் வரும்போது மீலாத் விழா கொண்டாட ஆயத்தம் ஆகும் முஸ்லிம்கள் ஏன் நபி ஈஸா (அலை) அவர்களது பிறந்த நாளான கிருஸ்மஸை கொண்டாடுவதில்லை’ என ஒரு கனம் சிந்திக்க வேண்டும்.!!

அத்துடன் முஸ்லிம்களின் மேற்படி வினோதமான நிலைப்பாடு ‘அத்தூதர்களில் எவருக்கு மத்தியிலும் நாம் பிரிவினை காட்டமாட்டோம்’ எனும் அல்குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் முரனானது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மாத்திரமின்றி கிருஸ்தவர்கள் கொண்டாடும் கிருஸ்மஸ் பண்டிகையாக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் கொண்டாடும் மீலாத் விழாவாக இருந்தாலும் சரி பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெளிவாக அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும்; அது தான் இக்கட்டுரையின் நோக்கமுங் கூட… .

 மீலாத் விழா  (பிறந்த நாள் கொண்டாட்டம் 
                                       ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்.

மீலாத் எனும் அறபு வினையடிக்கு பிறத்தல் பிறந்த நேரம் பிறந்த இடம் என்பது போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. எனினும் சமுதாய வழக்கில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுவாக ரபீஉல் அவ்வல் மாதத்தில் கொண்டாடப்படும் விழாக்களுக்கே நாம் ‘மீலாத் விழா’ என அழைக்கின்றோம்.

மேற்படி ஒருவரது பிறந்தநாளை (அவர் எவ்வளவு பெரியாராக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலுங் கூட) கொண்டாட வேண்டும் என்பதற்கோ அல்லது குறைந்த பட்சம் கொண்டாடலாம் என்பதற்கோ எந்த ஒரு ஆதாரத்தையும்  இஸ்லாத்தின் உன்மை மூலாதாரங்களான அல்குர்ஆனிலோ நபிவழியிலோ எம்மால் காணமுடியவில்லை.

மாறாக நபி (ஸல்) அவர்கள் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபிமார்களின் பிறந்த நாளைக் கொண்டாடியதாகவோ அல்லது தான் வாழும் காலத்தில் மரணித்து விட்ட நல்லடியார்களான தனது கண்மணியான மனைவி கதீஜா(ரழி) அவர்களதோ அல்லது தனது ஆருயிர்ப் புதல்விகளான றுகையா உம்மு குல்தூம் (ரழி) அவர்கள‌தோ பிற‌ந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதை நுனுக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு உண‌ர்த்துகிறது.

அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளின் போது உயிரோடிருந்த அன்பு மனைவி ஆயிஸா அருமை மகள் பாதிமா பாசப் பேரர்கள் ஹஸன்இஹுஸைன் (ரழி) ஆகியோரது பிறந்த நாளை ஒரு தடவையேனும் கொண்டாடவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

மாத்திரமின்றி நபி (ஸல்) அவர்களது ‘யார் இந்த மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அவரது அச்செயல் நிராகரிக்கப்படும்’ என்ற அறிவுறுத்தலும் ‘புதிதாக உருவாக்கப்படும் அனைத்து விடயங்களும் நூதனங்களாகும்; நூதனங்கள் அனைத்தும் வ்ழிகேடுகளாகும், வழிகேடுகள் அனைத்தும் அவைகளை செய்பவர்களை நரகிலே கொண்டு போய்ச் சேர்க்கும்’ என்ற எச்சரிக்கையும் இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கான பலமான ஆதாரங்கள் என்பதை எமது முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டாமா?!!

இவ்வாறான இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகளை புரிந்து கொள்ளாத சகோதரர்கள் கூட ‘பிறப்பு என்பது அல்லாஹ்வின் நியதி உலகில் மனிதர்கள் மாத்திர‌மின்றி ஏனைய ஜீவராசிகளும் பிறக்கின்றன. பிறப்பால் யாரும் உயர்வதில்லை மாறாக அல்லாஹ்வை விசுவாசித்து அவனை அஞ்சி நடப்பதனாலேயே மனிதன் உயர்வடைகிறான். எனவே ‘பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒரு விடயமே அல்ல’  என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்தாலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் பகுத்தறிவுக்கு முரணானது என்பதை உணர வேண்டாமா?!!

                             மீலாது விழா- ஓர் வரலாற்றுப் பார்வை

நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் மீலாத் விழா (பிறந்த நாள் கொண்டாட்டம்) கொண்டாடவில்லை என்பதையும் மாறாக அது தொடர்பாக பொதுவான எச்சரிக்கைகளை வழங்கியுள்ளார்கள் என்பதையும்  ஏலவே நாம் கவனித்தோம். இப்போது கிருஸ்தவர்களது மத அனுஷ்டானமான பிறந்த நாள் கொண்டாட்டம் (மீலாது விழா) எப்போது யாரால் எமது சமுதாயத்திற்குள் புகுத்தப்பட்டது என்பதை அவதானிப்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் பக்தாதை தலைமையகமாகக் கொண்ட அப்பாஸிய ஆட்சிக்கெதிராக எகிப்திலே ‘பாத்திமிய்யாக்கள்’ கிளர்ச்சி செய்து ஒரு ஆட்சியை உருவாக்கினார்கள்.

உபைதுல்லாஹ் பின் மைமூன் அல்கத்தாஹ் எனும் யூதனின் பரம்பரையினரான பனூ உபைத் கோத்திரத்தாரே தங்களை பாத்திமா (ரழி) அவர்களது சந்ததியினர் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறு கிளர்ச்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய (போலி)பாத்திமிய்யாக்களின் அக்கால ஆட்சியாளர் ‘அல் முஇஸ்ஸு லிதீனில்லாஹ் என்பவரால் தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மக்கள் தமக்கெதிராகப் புரட்சியில் ஈடுப்டாமல் இருக்கவும் ஹிஜ்ரி 362ம் ஆண்டு ‘மௌலிதுன் நபி’ ‘மௌலிது அலி’ மௌலிது ஹஸன்’ மௌலிது ஹுஸைன்’ மௌலிது பாதிமா’ மௌலிது கலீபதுழ் ழாஹிர்(ஷீஆக்களின் ஹிஜ்ரி 230இல் பிறந்து இன்றுவரை மறைந்து வாழும் இமாம்!!!) என ஆறு பிறந்த நாள் கொண்டாட்ட விழாக்களை கிருஸ்தவர்களை அடியொற்றி முஸ்லிம் சமூகத்திலே உருவாக்கினார்.

இவரே உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமைச் சின்னமான ‘அதான்’னில் (பாங்கு) ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் பலாஹ்’ எனும் வாசகங்களை மாற்றி ‘ஹய்ய அலா ஹய்ரில் அமல்’ எனும் வார்த்தையை கொண்டு வந்தவருமாவார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி (போலி)பாத்திமிய்யாக்களே வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களின் ஆட்சிக்கெதிராக சூழ்ச்சிகள் செய்து வந்த ‘பாதினியாக்கள்’ எனும் பாதாள ராஜ்யத்தை ஸ்தாபித்தவர்கள் என்பதையும் இவர்கள் ‘உள்ளத்திலே இறை நிராகரிப்பையும் வெளியிலே ஷீஆயிஸத்தையும் கொண்டவர்கள்’ என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

(பார்க்க : அல் மவாஇழ் வல் இஹ்திபார்- அல் மிக்ரீஸி 1ஃ490
                                அர்ரவ்ழதைன்- அல்மக்திஸி 1ஃ201
                          அல் முஇஸ்ஸு லிதீனில்லாஹ்- கலாநிதி ஹஸன்
                            இப்றாஹீம் ஹஸன் கலாநிதி தாஹா அஹ்மத் 284)

                                  இரு சாராரை அடையாளங் காண்போம்.

இப்போது  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு யூதர்களின் பேரர்களான சில புல்லுருவிகளால் எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை ஐயமின்றி அறிந்து கொண்டோம்.

இனி இவ்வளவு தெளிவான ஒரு வழிகேட்டை பகிரங்கமான பாவத்தை எமது சமுதாயத்தில் யார் இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகிறார்கள்? யார் அதற்கு  அதற்கு ஆதரவு வழங்குகிறார்கள்? என்பதை அடையாளங் காட்ட வேண்டிய அடையாளங் காண வேண்டிய தேவை எமக்கு உண்டல்லவா?.

இவ்வகையில் நோக்கும் போது  பிறந்த நாள் கொண்டாட்டம் எனும் மீலாது விழாவுடன் தொடர்புபட்ட இரு சாரார் எம் மத்தியில் காணப்படுகின்றனர்.அவர்களைத் தனித்தனியாக நோக்குவோம்.

முதலாம் சாரார் :-

இவர்கள் தங்களை ‘அவ்லியாக்களின் நேசர்கள்’ என அடையாளப்படுத்திக் கொண்டு கப்ரு வணக்கம் கந்தூரி வியாபாரம் போன்ற ஏராளமான அனாச்சாரங்களை செய்துவருபவர்கள்.

நபிகளார் மீதுள்ள நேசம் என்பது அன்னாரது கட்டளைகளையும் வழிமுறைகளையும் அனுவனுவாகப் பின்பற்றுவது என்றிருக்க வருடத்திற்கொரு முறை மேடை போட்டு நபிகளாரைப் பற்றிய உன்மை பொய்களை உரைத்துவிட்டு காலமெல்லாம் நபி(ஸல்) அவர்களது வழிமுறைக்கு மாற்றமாக செயற்பட்டு வருபவர்கள்.

எனினும் அல்லாஹ்வின் அருளால் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவை மாத்திரம் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்களாகக் கொண்டு செயற்படும் ஏகத்துவப் பிரச்சாரகர்களது இடைவிடாத உழைப்பின் காரணமாக இச்சாராரின் மீலாது விழாக் கொண்டாட்டங்கள் சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உன்மையாகும். அல்ஹம்து லில்லாஹ்.

இரண்டாம் சாரார்:‍-

இவர்கள் தங்களை ‘இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபடுபவர்கள்’ என அடையாளப்படுத்திக் கொண்டு மேற்படி கிருஸ்தவ மத அனுஷ்டானமான யூதர்களின் வம்சாவழியினரால் உருவாக்கப்பட்ட மீலாது விழா எனும் பிறந்த நாள் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு நவீன காலத்தில் உயிரூட்டிவருபவர்கள்.

இவர்களில் சிலர் ‘மீலாது விழா இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல’ என கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும் ‘இன்று இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான நல்லொதொரு வாய்ப்பு எனக் கூறி அனாச்சாரத்தின் முதுகிலேறி தமது புரட்சிக்கருத்துகளை!!  மக்கள் மத்தியிலும் குறிப்பாக பாடசாலை மட்டங்களில் மாணவர்கள் மத்தியிலும் விதைக்க முற்படுகின்றனர்.

இவ்வாறு ‘இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் புறப்பட்டவர்கள்’ இஸ்லாம் என்றால் என்ன? அன்னியர்களின் மத அனுஷ்டானம் என்றால் என்ன? என்ற அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் ப‌ரிதாப நிலையில் காணப்படுகிறார்கள் என்றால் இவர்களால் மதிக்கப்படும் மாபெரும் தலைவராகக் கருதப்படும் ஹஸனுல் பன்னா அவர்கள் கூட இந்த பகிரங்க வழிகேட்டிற்காக‌ பாடுபட்டார்கள் என்பது இதைவிடப் பரிதாபம் அல்லவா?!!

                               ஹஸனுல் பன்னாவும் மீலாது விழாவும்!!!

ஆம் ஹஸனுல் பன்னா அவர்கள் எகிப்தில் 1945 ம் ஆண்டு ‘இஹ்வானுல் முஸ்லிமீன்’ இயக்கத்தை ஆரம்பித்து படிப்படியாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்தார்கள்.
பின்பு தான் தேர்தலிலே போட்டியிடப் போவதாக அறிவிக்கிறார்கள்.

ஹஸனுல் பன்னா அவர்கள் தேர்தலிலே போட்டியிடுவது த‌ங்களுக்கு ஆபத்து என அப்போதிருந்த ஆளும்கட்சியினர் கருதியதால் ஹஸனுல் பன்னா அவர்களைச் சந்தித்து ‘ஹஸனுல் பன்னா அவர்களே! தாங்கள் என்ன நோக்கத்திற்காக போட்டியிடுகிறீர்களோ அதை நாம் நிறைவு செய்கிறோம் எனவே தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் வாங்குங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர்.

ஆளுங்கட்சியினரின் வாக்குறுதியை அப்பாவித்தனமாக நம்பிய ஹஸனுல் பன்னா அவர்களும் ‘தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்றால் இரு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்’ எனக் கூறி தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக் கொண்டார்.

அவ்விரு கோரிக்கைகளில் ஒன்று ‘(கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை பின்பற்றி யூதர்களின் அடிவருடிகளால் இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடான) மீலாது விழாவை தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டும்’ என்பதுதான் !!?

மேற்படி சம்பவம் எமது கற்பனைக் கதையல்ல. இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உத்தியோக பூர்வ வரலாற்றுப் பதிவான கலாநிதி மஹ்மூத் அப்துல் ஹலீம் அவர்களால் பதிவுசெய்யப்பட்ட ‘அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’ எனும் நூலின் (இஹ்வானுல் முஸ்லிமீன் வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!

எனவே யார் எப்படியிருந்தாலும் மீலாது விழா எனும் பிறந்த நாள் கொண்டாட்ட விழா கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தைப் பின்பற்றி யூத வம்சாவழியினரால் இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட வ்ழி கேடு  என்பதையும் அது எமது சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டிய அனாச்சாரம் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்வோமாக!

வல்ல அல்லாஹ் எமது தனித்துவமான இஸ்லாத்தையும் தனித்துவமான முஸ்லிம்களின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் என்றென்றும் பாதுகாப்பானாக என்ற பிரார்த்தனையுடன் முடித்துக் கொள்கிறேன்.

---Nowfer Moulavi ---  www.nowfermoulavi.com

*******************************************************************************
மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்  என அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

மீலாது விழாவின் பரினாம வளர்ச்சி காண  இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
தூதரை எவ்வாறு மதிப்பது ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சலாத்துன் நாரியா ?   வை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும்