"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ஏடு சுமக்கும் கழுதைகள்

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச்சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச்சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக்கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்குஅல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.   (அல்குர்ஆன் 62 : 5)

கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றிவைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதை சிந்திக்காமல் கழுதை சுமந்து செல்லும்.*

அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அது அழுக்கு மூட்டையைப் போல் சுமந்துதான் செல்லும்*

அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம்தான் கழுதை.

அது போன்றுதான் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த சமுதாயத்தை அல்லாஹ் ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.*

இந்த வசனம் இன்றும் நம்மில் பலருக்கு ஒத்துப்போவதை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது

நம்மில் பலர் குர்ஆனை நன்கு படித்திருப்பார்கள்.

நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளையும் நன்கு உள் வாங்கியிருப்பார்கள்.

ஆனால் மத்ஹப் என்ற மாயையில் வீழ்ந்து கிடப்பார்கள்.

இறந்தவர்களின் சமாதியில் தங்களின் தலையை சாய்ப்பார்கள்.

அப்படி செய்தால் என்ன தவறு என்றும் கேட்பார்கள்.

குர்ஆனின் ஒரு பகுதியை சொல்லி விட்டு மறு பகுதியை மறைத்து விடுவர்.

இவர்களைப் பார்த்தே இறைவன் குர்ஆனிலே 'ஏடு சுமக்கும் கழுதைகள்' என்கிறான்.

ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம்

ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி குர்ஆனில் வந்துள்ள சம்பவத்தை தவிர்த்து பல தவறான நம்பிக்கைகள் நமது சூபி தரீக்கத்து சகோதரர்களிடம் உள்ளது. இவர் ஒரு "ஹயாத்து நபி ' என்றும் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றும் பல கட்டு கதைகளும் உள்ளன.
இது இவ்வாறு இருக்க……

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவத்துக்குள் நூழைவோம்.
முதலில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏன் சந்திக்க நேர்ந்தது ?

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அன்று வாழ்ந்தவர்களில் மூஸா (அலை) ம் தான் பூமியில் எல்லாம் அறிந்தவர் என்ற பதிலை கூறுகிறார்கள். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.
மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் என்ன கூறுகிறான் என்றால் :'அப்படியல்ல நம் அடியார் 'களிர்' உங்களை விட அறிந்தவராயிருக்கிறார்' என்று கூறினான்.

இதில் நாம் தெளிவாக பாடம் பெறுவது என்னவென்றால்:

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. மனிதர்களில் ஒருவருக்கு தெரியாத விடையம் இன்னுமொருவருக்கு அல்லாஹ் அறிவித்து கொடுத்து இருப்பான் என்பதாகும் எல்லவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதாகும். அவ்வாறு சொல்லாததால் தான் அல்லாஹ் மூஸா அலை அவர்களை கண்டித்தான்.

அடுத்த பாடம் நாம் பெறுவது என்னவென்றால் :

அல்லாஹ் இவ்வாறு கூறியதும் மூஸா(அலை ) அவர்கள் தனக்கு அவற்றை ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அறிந்ததை வஹி மூலம் கற்று தரும்படி கேட்க வில்லை மாறாக அவர்கள் கேட்டது அந்த நபர் எங்கு உள்ளார் நான் அவரிடம் சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள்.
இது ஒரு நல்ல பாடம் :
அறிவை நாம் தேடி செல்ல வேண்டும் அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரியே இப்பொது தொழில் நுட்பம் காரணாமாக குறைந்த காலத்தில் பல இடத்துக்கு பிரயாணம் செய்யும் வசதி உள்ளதால் கற்று கொள்வதும் முன்னைய காலத்தை விட பல மடங்கு இலகுவாக உள்ளது.

அடுத்து மூஸா (அலை ) அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காண செல்கிறார்கள் அவர்களை காணும் முன் சில சம்பவம்கள் நடக்கிறது
அந்த சம்பவத்தின் பின் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள், இருவருக்கும் இடையில் உரையாடல் நடை பெறுகிறது இதை அல்லாஹ் கூறும் போது என்ன சொல்கிறான் என்றால்:

18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
அதாவது ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதை செய்ய உள்ளாரோ அதை அவர்களுக்கு அல்லாஹ் கற்று கொடுத்து விட்டான்,

அவராக எதையும் செய்ய வில்லை என்பதாகும்.
அத்துடன் மூஸா (அலை ) அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி கேட்டது :
18:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.

இந்த குர்ஆண் வசனமும் கூறுவது ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் சில விடையத்தை செய்யுமாறு அறிவை கொடுத்துள்ளான் என்பதாகும். அது என்ன விடயம் என்ற அறிவுதான் மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இந்த இடத்தில் நடக்கும் சம்பவத்தில் பொறுமை சோதிக்கப்படுகிறது அதாவது ஒருவருக்கு ஒரு விடயத்தில் முழுமையான அறிவு இருக்கும் போது அந்த குறிப்பிட்ட விடயத்தில் எந்த அறிவும் இல்லாத ஒருவர் கூடவே சென்றால் மற்றவர் அந்த விடையத்தை செய்யும் போது ஏன் ? செய்கிறார் என்ற கேள்வி எழுப்புவது மனித இயல்பு அதனால் தான் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்கிறார்கள் :

18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
தட்காலத்தில் கூட நாம் ஏகத்துவத்தை சொல்லும் போது நாம் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக கேட்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை எடுத்த எடுப்பில் எதிர்ப்பதை கூட பார்க்கலாம். எதையும் முழுமையாக அறிந்த பின் கேள்விகளை கேட்பது சிறந்தது.
ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சில விடையங்கள் செய்யப்போவதாகவும் அதட்கான காரணத்தை கடைசியாக கூறுவதாகவும் இடையில் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றும் சொன்னார்கள்.

முதலாவது சம்பவம் :

(ஸஹீஹ் புகாரியில் 122)
இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள்.

சுபஹானல்லாஹ், அல்லாஹ்வின் அறிவு எம்மாத்திரம் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடும் போது இந்த நல்லடியார்களின் அறிவு சிறு துளி.
அல்லாஹ் ஒருவனே எல்லாம் அறிந்தவன்.
அடுத்து இன்னுமொருவிடயம் நாம் எவ்வளவு கற்று அறிந்தாலும் நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு இல்லாமல் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் போல் பேச்சில் பணிவு இருக்க வேண்டும்.

அடுத்து இந்த சம்பவத்தின் தொடரை பார்ப்போம்:
(சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து).

குர்ஆண்: 18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

இரண்டாவது சம்பவம்:

மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள்

மூன்றாவது சம்பவம்:

மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.'

இந்த முதல் சம்பவத்தில் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் மரக்கலத்தின் பலகையை உடைத்தார்கள் என்றால் அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக் கொண்டிருந்தான். அவன் இந்த மார்க்கலத்தை இந்த மக்களிடம் இருந்து அபகரிக்காமல் இருக்கவே அந்த செயலை செய்தார்கள்


(குர்ஆண் :18:79.)  “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
இரண்டாவது அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில் அவன் இறை மறுப்பாளனாக இருந்தான். அவனுடைய தாய் தந்தையார் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தனர்'

(குர்ஆண் : 18:80.)  “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(குர்ஆண் 18:81.)“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
மூன்றாவது சம்பவத்தின் காரணம் :
(குர்ஆண்18:82.) “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
மேல் கூறப்பட்ட மூன்று சம்பவங்களும் அவர்கள் அவரின் சொந்த விருப்பு வெறுப்பில் செய்ய வில்லை அத்தோடு மேல் கூறப்பட்ட சம்பவம் யாவும் தொழுகை, நோன்பு இபாதத் சம்பந்தப்பட்டவையும் அல்ல, இவை எல்லாம் உலக சம்பந்தப்பட்டவர்கள் ஆகும்
.
மரக்கலத்தை காப்பாற்றியதும், ஒரு சிறுவனை கொலை செய்து அவர்களின் பெற்றோரை காப்பாறியதும், சுவரை சரி செய்து அவர்களது சொத்தை காப்பாற்றியதும் உலக சம்பந்தப்பட்ட அறிவாகும்.
மார்க்க அறிவில் மேதை என்றால் இன்னுமொருவர் உலக அறிவில் மேதையாக இருப்பர் இந்த உலக அறிவும் ஒருவருக்கு அல்லாஹ் அருளி இருந்தால் அவன் சமூதாயத்துக்கு அதன் மூலம் நலவு செய்வானாக இருந்தால் அதுவும் அல்லாஹ் வழங்கிய அறிவே.
மார்க்க அறிவு மட்டும் அறிவு அல்ல அது அல்லாமல் உலக அறிவை பெறுதலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு அநீதிகளுக்கு குரல் கொடுப்பதும் இறைவன் நமக்கு கொடுத்த கல்விதான்.
அது போல் நம்மில் பலர் உலக அறிவை மட்டும் கற்று கொண்டு மார்க்க அறிவை புறக்கணித்து வாழ்கிறார்கள் அந்த அறிவு மட்டும் இருந்தாலும் மறுமையில் வெற்றி பெற முடியாது ஆகையால்
நமக்கு மார்க்க அறிவோடு உலக அறிவையும் தருவானாக என்று இரண்டு அறிவையும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன் )

முஹைதீன் ஆண்டவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள்

அகில உலகத்தை ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் நித்தியஜீவன் பெருமைக்குச் சொந்தக்காரன் பேரறிவாளனாகிய அல்லாஹ்வுக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ, துக்கமோ, சோர்வோ, மறதியோ, நோயோ, முதுமையோ உள்ளிட்ட எந்தப் பலகீனமும் இல்லை. தாய், மனைவி, மக்கள், அண்ணன், தம்பி என்ற எந்த உறவும் இல்லை என்பன உள்ளிட்ட கடவுளின் தகுதிகளையும் இலக்கணங்களையும் வகுத்து வைத்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பிறமத சகோதரர்கள் கூட ஒப்பு கொள்கின்றனர்.

ஆனால் இஸ்லாமியனாகப் பிறந்த, அல்லாஹ்வின் அடிமை (அப்துல்லாஹ்) என்று பெயர் சூட்டிக் கொண்டு முஹைதீன் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி அடையும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை எள்ளளவும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் கணக்கிலடங்காதவை.

முஹைதீனின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார். யாருடைய ஆப்பிள் என்று தெரியவில்லை என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஓடி வரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்தாராம்.

அந்த மரத்தின் உரிமையாளரிடம் அதைச் சப்பிட்டதை ஹலாலாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார். அவர் என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் ஆக்குகிறேன். ஆனால் அவள் குருடி, ஊமை, நொண்டி, இரண்டு கையும் சூகை என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக் கூடாது. அதை ஹலாலாக்கி விடுங்கள்; அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார் எள்றார்களாம்.

திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தார். ஏனெனில் அழகென்றால் அழகு! அவ்வளவு அழகு!! ஒரு குறையும் இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படிச் சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார். என் தந்தை சொன்னது உண்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.

இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்காதிர் ஜிலானியாம். கடும் பசி நேரத்திலும் ஹராமான உணவை உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய் இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்? என்று கதை விடுகின்றனர் கப்ரு வணங்கிகள்.

சிந்தனையாளர்களே சிந்தித்துப் பாருங்கள் ஓர் ஆப்பிலுக்காக ஆற்றைக் கடந்தாராம் நம்பமுடிகிறதா? நம்பிக்கைக்குரிய நபிகளார் கூறுகிறார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 164(

2431- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள் . இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.  (நூல் புகாரி (2431)

மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக தெருவில் கிடக்கும் அற்பமான பொருளைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது நபிவழிக்கு மாற்றம் செய்கிறார் முஹைதீனின் தந்தை. இவர் எப்படி பரிசுத்த தந்தையாக இருப்பார்?

முஹைதீனைப் பற்றி முட்டாள் தனமான முன்னறிவிப்பு

ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை என் அன்பரும் அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுபசோபனம் கூறினார்கள் என்று கட்டுக் கதையை கட்டவிழ்த்து உள்ளனர்.

கேட்பவன் கேனயனாக இருந்தால் கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல் கேலியாக உள்ளது இந்தச் செய்தி.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பதாக இருந்தால் அண்ணலாரை, அவர் நேரில் கண்டிருக்க வேண்டும். அவர்களின் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் முஹைதீன் தந்தை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்ததுமில்லை. நபியவர்களை நேரில் கண்டதுமில்லை. பிறகு எப்படி அவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டிருப்பது சாத்தியமாகும். இது முற்றிலும் அப்பட்டமான பொய்யே!

எளிய மார்க்கத்தை ஏளனப்படுத்தியவர்

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கிச் சென்றார். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றைக் கொடுப்பார். அதை அணிந்து கொண்டே நாட்களைப் போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும். முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள்.

ஒரு வருடம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல் எதுவும் சாப்பிடாமல் தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் உளூவுடன் சுப்ஹ் தொழுகையையும் தொழுவார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு அருகிலுள்ள ஒரு துணியில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படிச் செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்போது  பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபுஹ் தொழுகையையும் தொழுவார்கள் என்று அடுக்கடுக்கான அபத்தங்களைப் மொழிகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹைதீன் அப்துல் காதிர் ஜிலானி துறவறம் மேற்கொண்டதாக உள்ளது. ஆனால் இஸ்லாம் துறவறத்தை அணுவளவும் அனுமதிக்கவே இல்லை.

ஏனெனில் இதனால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் பாழ்படுத்தப்படுகின்றன.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (4 / 129)

3470 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ قَالَ رَدَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;
துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்கு) அனுமதி அளித்திருந்தால் நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (முஸ்லிம் 2716)

நபி (ஸல்) அவர்களின் கூற்று மூலம் துறவறத்தை இஸ்லாம் தூர வீசுகின்றது எனப் புரியலாம்.

மேலும் முஹைதீன் ஆண்டவர் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதாகவும், ஓர் இரவு முழுவதும் ஒற்றைக் காலில் நின்று வணங்கியதாகவும் உள்ளது. இவரின் செயல் இறைத்தூதரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதைப் பின்வரும் பொன்மொழியில் காணலாம்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (6 / 242)

5052- حَدَّثَنَا مُوسَى ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ مُجَاهِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا فَتَقُولُ نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُذْ أَتَيْنَاهُ فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الْقَنِي بِهِ فَلَقِيتُهُ بَعْدُ فَقَالَ كَيْفَ تَصُومُ قَالَ كُلَّ يَوْمٍ قَالَ وَكَيْفَ تَخْتِمُ قَالَ كُلَّ لَيْلَةً قَالَ صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً وَاقْرَإِ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْجُمُعَةِ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمِ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ الْقُرْآنِ بِالنَّهَارِ وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ ، وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيةَ أَنْ يَتْرُكَ شَيْئًا فَارَقَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَيْهِ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவர் “நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்” என்றார்.

இன்னொருவர் நான் புலால் உண்ண மாட்டேன் என்றார் இன்னொருவர் நான் படுக்கையில் உறங்க மாட்டேன்“ என்றார். இதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றி விட்டு சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால் நான் {இரவில்} தொழுகிறேன்: உறங்கவும் செய்கிறேன் : நோன்பும் நோற்கிறேன்:நோன்பை விடவும் செய்கிறேன், பெண்களை மணந்தும் கொள்கிறேன். என்வழியை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். (புகாரி 5052)

ஒருவர் அயராது தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டோ, தொழுது கொண்டோ இருப்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் பக்தி பரவசமாகத் தெரியலாம். ஆனால் இது இஸ்லாத்தின் பார்வையில் நபிவழியை விட்டு துரத்தி அடிக்கும் பாரதூரமான காரியம்.

அரபி அல்லாத அஜமி

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ஆம் இரவன்று முஹைதீனின் கனவில் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தோன்றி “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்.“ எனக் கேட்டார்கள். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அப்துல் காதிர் {முஹைதீன்} “யா ரசூலல்லாஹ்!! நான் அரபி இல்லையே! அஜமிதானே “ எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபி மொழியில் பேசத் தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அண்ணல் நபி {ஸல்} அவர்கள் சிரித்த முகத்துடன் முஹைதீன் ஆண்டவரின் வாயை திறக்கச் சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலைத் துப்பினார்கள். அதற்குப் பிறகு முஹைதீன் ஆண்டவரின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத் தொடங்கியது என்று கதை அள்ளி வீசுகின்றனர்.

நபிகளாரிடம் நேரடியாகப் பாடம் பெற்ற நபித்தோழர்களுக்கு திருக்குர்ஆனை ஒதி அதில் உள்ள சட்டங்களை விளக்கி மார்க்கத்தைச் சொன்னார்களே தவிர, அவர்களின் வாய்களில் எச்சிலைத் துப்பி மார்க்க போதனைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. நபித்தோழர்களுக்கு இவ்வாறு செய்யாதவர்கள் கனவில் வந்து எச்சில் துப்பி மார்க்கத்தைப் போதிப்பார்களா?

மரணம்

முஹைதீன் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு குளித்துவிட்டு இஷா தொழுகையைத் தொழுதார்கள். நீண்ட நேரம் ஸுஜுதிலிருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தகாரர்களுக்கும், தன் முரீதுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள்.

ஸுஜுதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக, என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக“ என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது.

கடைசி நேரம் வந்து விட்டதை உணர்ந்த அவர் தன் வாயால் திருக்கலிமாவைக் கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோட தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள் என்று கதை நீண்டு செல்கிறது.

இவ்வுலகத்தில் மிகச் சிறந்தவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள்.  இந்த இறைத்தூதர்கள் இறந்த போது இது போன்று மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தனவா?. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தனவா?

இறைத்தூதர்களுக்கும் நபித்தோழர்களுக்கு இல்லாத சிறப்பு அப்துல் காதிர் ஜீலானிக்கு எப்படி வந்தது? இந்தக் கதைகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.

ஆலிம் பெருமக்கள்,

அவ்லியாக்களின் நேசகர்கள்,

போலி ஆசாமிகள்,

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டாண்டாய் வழிபடும் கப்ர் வணக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்..!!

இன்ஷா அல்லாஹ்

நன்றி ; தீன்குலப் பெண்மணி மார்ச்  2016


காய்ச்சலுக்கு இடமாற்றம்
https://shirkinethiri.blogspot.com/2021/11/6.html

கைக்குழந்தை நோற்ற நோன்பு
https://shirkinethiri.blogspot.com/2021/11/kai-kulandai-notra-nonpu.html

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்
https://shirkinethiri.blogspot.com/2021/11/abdulcaderum-shariyathum.html

அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
https://shirkinethiri.blogspot.com/2021/11/4.html

மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/6_6.html

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்த முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/7.html


சூம்பிய ஹம்மாதின் கை
https://shirkinethiri.blogspot.com/2021/11/8.html

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/9.html

கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கிய முஹ்யித்தின்அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/10.html

அப்துல் காதிர் ஜீலானி பார்த்தாலே நேர்வழி?
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post.html

அப்துல் காதிர் ஜீலானியிற்கு கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2021/11/11.html

கனவில் நடந்த கொலை!

https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_6.html

ஜின்னிடமிருந்து மீட்ட அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_16.html

எல்லா நேரமும் இரட்சகர் (?) அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_79.html

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர் அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/11_6.html

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_58.html

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2017/05/yaar-intha-abdul-cader.html

முஹைதீனும் முட்டாள்களும்
https://shirkinethiri.blogspot.com/2016/03/muhiyaddeenum-muttalkalum.html

அப்துல் காதிர் வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார்
https://shirkinethiri.blogspot.com/2015/10/abdulcader-varamattar-nirupikka-thayaar.html

யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க்கா ?
https://shirkinethiri.blogspot.com/2015/10/yaa-muhiyaddeen-entru-alaikkalaama.html

முஹைய்யத்தீன் மெளலூதின்சி ன்ன துஆ
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-sinna-duvaa.html

மார்க்கம் மரணப் படுக்கையில்  உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே
https://shirkinethiri.blogspot.com/2021/11/5.html

அப்துல் காதிர் ஜீலானி  அவர்களுக்கு 
இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-part-01.html