"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கப்ரு வணங்கிகள், நபியவர்களே ஜியாரத் செய்யச் சொல்லியிருக்கிறார்கள், ஜியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள்! நபியவர்கள் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் உயிரில்லாத ஒருவரையா சந்திக்கச் சொல்வார்கள்? உயிருடன் உள்ளவர்களைத்தானே சந்திக்க சொல்வார்கள்? எனவே கப்ரைச் சந்தியுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்தே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நாம் சொல்வதைச் செவியேற்பார்கள். நமக்கு உதவியும் செய்வார்கள் என்று பைத்தியக்காரத்தனமான ஒரு வாதத்தை வைக்கின்றார்கள்.

ஜியாரத் என்ற சொல்லுக்கு மனிதரைச் சந்திப்பது என்ற குறுகிய அர்த்தம் கிடையாது. அதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி, எக்மோர் சந்திப்பு என்று சொல்கிறோம். இதிலும் சந்திப்பு என்று வந்திருக்கிறது. அதனால் இரயிலை போய் சந்தித்து விட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கொள்வோமா! ஆனால் இந்தச் சந்திப்புக்கும் அரபியில் ஜியாரத் என்று சொல்லப்படும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகனத்திலும் நடந்தும் குபாவை சந்திக்கச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் 2705

 நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் (கஅபாவை) தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 1732

மேற்கண்ட ஹதீஸ்களில் நபியவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று குபாவைச் சந்திக்கச் செல்வார்கள் என்றும், மினாவில் தங்கும் நாட்களில் கஅபாவை ஸியாரத் செய்தார்கள் என்றும் வந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு இவர்கள் கொடுக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் நபியவர்கள் குபாவிற்கோ, அல்லது கஅபாவிற்கோ சென்று அங்குள்ள பள்ளிவாசலிடம் உரையாடுவதற்குச் சென்றார்கள். அதனிடம் துஆச் செய்தார்கள் என்று அர்த்தம் கொடுப்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விட்டது. துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதற்கு நேரடியாகக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கபுருக்குச் சென்று நாம் சலாம் சொல்வது அவர்களுக்குக் கேட்கும். நபியவர்கள் கப்ரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம். நமது கோரிக்கையை வைக்கலாம் என்று குருட்டுத் தனமான வாதங்களை வைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
யாரேனும் ஒருவர் என் மீது சலாம் சொல்வாரேயானால், அவருடைய ஸலாமுக்கு நான் பதில் சலாம் சொல்வதற்காக வேண்டி அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை (உயிரை) திருப்பித் தருகிறான்.
நூல்: அபூதாவூத் 2043

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இது சரியான ஹதீஸா என்பது ஒருபுறமிருக்க. இதை சரி என வாதிடக்கூடியவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு உரையாற்றும் போது கூறுவார்கள். ஆனால் இந்த ஹதீஸில் ஆழமாகச் சென்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிப்பார்கள்.

இந்த ஹதீஸ் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையின் பிரகாரம் நபியவர்கள் மரணிக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வருகின்றது.

நாம் சலாம் சொல்லும் போது மட்டும் அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுக்கிறான் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் நபியவர்கள் பதில் சலாம் சொன்னவுடன் மீண்டும் அல்லாஹ் அவர்களுடைய உயிரைக் கைப்பற்றிக் கொள்கிறான்.

இதில் அவர்கள் பாதியை மறைத்துக் கொண்டு அரையும் குறையுமாக மக்களுக்குச் சொல்வார்கள். பார்த்தீர்களா! நபியவர்கள் உலகில் உள்ள எல்லா மக்களுடைய சலாமிற்கும் பதில் சலாம் சொல்வார்கள். எனவே நபியவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக நம்முடைய நிலைபாடு என்னவென்றால், மேற்கண்ட ஹதீஸ் பல நம்பகமான சரியான ஹதீசுக்கு முரணாக உள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அதாவது வேறு ஹதீஸ்களில், நபியவர்களுக்குச் சொல்லப்படும் சலாமையும் சலவாத்தையும் மலக்குமார்கள் எடுத்துக் காட்டுவார்கள் என்று வருகின்றது. ஆனால் இந்த ஹதீஸில் சொல்லப்படும் அனைத்து சலாமிற்கும் இறைவனால் உயிர் கொடுக்கப்பட்டு பதில் சலாம் சொல்வார்கள் என்று வருகின்றது. அப்படியானால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொருவரும் நபிகள் நாயகத்தின் மீது சலாமும், சலவாத்தும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நபியவர்கள் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் என்றால் அவர்கள் மரணிக்காமல் இருக்கிறார்கள் என்ற அர்த்தம் வந்து விடும்.

அப்படி இருந்தால் நபியவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் நிலையே ஏற்படாது. எப்போதும் பதில் சலாம் சொல்லிக் கொண்டு உயிருடன் தான் இருந்திருப்பார்கள். எனவே இந்த ஹதீஸ் அர்த்தமற்றதாகி விடுகின்றது.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஸலாமுக்குப் பதில் சொல்வதற்காக உயிரைத் திருப்பித் தருகிறான் என்று சொல்வதிலிருந்தே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது உறுதியாகி விடுகின்றது.

இவர்கள் கூறும் அர்த்தத்தை  நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நபிகளார் மரணிக்கவில்லை. மரணிக்கவும் மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகி மரணிக்காத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதக நிலை ஏற்பட்டு விடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும வணங்கக் கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும்  மறைவான ஞானம் இல்லை. அற்புதம் செய்யும் ஆற்றலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவன் மரணிக்காதவன். நித்திய ஜீவன். அவனைத்த தவிர மற்ற அனைவரும் மரணிப்பவர்களே. அவர்கள் இறைவனின் தூதர்களாக இருந்தாலும் சரியே! இறைநேசர்களாக இருந்தாலும் சரியே! அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விட்டது என்பதைப் பல்வேறு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன்  பார்த்தோம்.

இறுதியாக, இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். நபியவர்கள் பொது மண்ணறைகளைச் சென்று சந்தியுங்கள் என்றார்கள். ஆனால் இவர்கள் இன்று ஒருவரை மகான் என்று தாங்களாகவே சொல்லிக் கொண்டு அவருடைய மண்ணறையைச் சுற்றி ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.

நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களுக்கே இல்லாத ஒரு கட்டடத்தை யாரென்று தெரியாத மனிதர்களுக்குக் கட்டி வைத்திருக்கின்றார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இழிசெயலைத் தான் நபியவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். எந்த அளவிற்கென்றால் தான் மரணிக்கப் போகின்ற கடைசிக் கால கட்டத்தில் கூட இதை (இணை வைப்பை) பற்றித்தான் அதிகமாக எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கைகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்,

பர்ஸக் என்னும் திரை!

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன் 23: 99-100)
இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன.
இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையான காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கு முன்னே பர்ஸக் என்னும் திரையையும் இட்டுவிடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
இவ்வளவு தெள்ளத் தெளிவாக இறைவன் கூறியிருக்க, இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம்களில் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம், நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதன் திடீரென்று அசாதாரணமான நிலைக்கு மாறி ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால் தான்.
இந்த வகையான காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனின் உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை செய்துக் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும் ஏராளமான போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக நமது சமுதாய மக்களிடம் அதிகம் இருக்கிறார்கள்.
மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்துக் கட்டிய மார்க்கம் நமது இஸ்லாமிய மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவைகள் அனைத்தும் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள்.
மனநோயாளிகளையும், சித்தம் கலங்கியவர்களையும் பேய், பிசாசு பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாக நம்புபவரை, அவரது இந்த நம்பிக்கையானது தமது ஈமானையும் இழக்கச் செய்யும் குப்ரான காரியங்களைச் செய்வதற்குத் தூண்டிவிடும். இதை நம்பக் கூடிய ஒருவன், தனது உயிரினும் மேலான ஈமானை இழந்து, சமாதிகளில் கையேந்தி நிற்கச் செய்து இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பெரும்பாவத்திற்கு ஆளாகி, பூசாரிகளிடமும், மாந்தரிகம் செய்யும் இறைமறுப்பாளாகளிடமும், தட்டு, தாயத்து போன்றவற்றைச் செய்து விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும் போலி ஆலிம்களிடமும் ஏமாந்து தமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் கேவலமான நிலைமைக்கு தள்ளிவிடும்.
மரணித்த ஆத்மா இவ்வுலகில் எவ்வகையிலும் தொடர்பில்லாத பர்ஸக் உலகில் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவற்றையெல்லாம் மீறி இவ்வுகிற்கு பேயாக, ஆவியாக வந்து மனிதனைப் பிடித்தாட்டுகிறது என்பதை நம்புவது, இறைவனின் வல்லமையில் குறை காண்பதாகும். இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்.
இன்னும் சிலர் வேறு வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இறைவனின் நேசர்கள் எனப்படும் வலியுல்லாக்கள் எனப்படுவோர் அவர்களின் சமாதிகளில் உயிரோடு இருப்பதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும் நம்பி அவர்களிடம் பிரார்த்தித்து வருகின்றனர். இது இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணை வைத்தல் எனும் மாபெரும் பாவமாகும்.
மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை என்றும் ஒருவருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும் அதிகாரம் இல்லை என்றும் திருமறையின் பல வசனங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
அல்லாஹ் கூறுகிறான் :
“அல்லாஹ் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை (தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்-குஆன்: 39:42).
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் கூறுகிறாகள்:
“உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திமதி ஹதீஸ் சுருக்கம்)
என் குடும்பத்தாடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க தீய ஆத்மா இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பாகளா? மாட்டார்கள். எனவே “மரணித்த மனிதனின் தீய ஆவி இவ்வுலகில் சுற்றித்திகிறது; அது பிற மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்டுவிக்கிறது” என்று கூறுவது எல்லாம் கற்பனையும், ஏமாற்று வேலையும் ஆகும்.
எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ள மரணித்த ஆத்மா இவ்வுலகில் பேயாக அலைகிறது, மனிதர்களைப் பிடித்தாட்டுகிறது என்று நம்புகின்றவனும், நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புவனும் மேற்கண்ட குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸையும் நிராகரித்தவர் போல் ஆவார்.
அல்லாஹ் இத்தகைய தீய செயல்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.
யார் இந்த அப்துல் காதர் ஜீலானி   அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?  அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?  அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  
           முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் 
அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

  நீண்ட உறக்கத்தில் நல்லடியார்கள் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்  அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி

அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின் நினைவு மாதமாக முஸ்லிம்கள் இந்த ரபியுல் ஆகிர் மாதத்தை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஜீலான் நகரில் அபூஸாலிஹ் எனும் பெரியாருக்கும் பாத்திமா எனும் அம்மை- யாருக்கும் புதல்வனாக ஹிஜ்ரி 47 – ம் ஆண்டு ரமழான் முதல் தேதியில் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். இவர்கள் இல்லறத்தை நல்லறமாகவும் இறைப்பணியையும் செவ்வனே செயல்படுத்தி வந்தார்கள்.

இவரின் மறைவு ஹிஜ்ரி 561-ம் ஆண்டு ரபியுல் ஆகிர் மாதமாகும். இவர் இல்லறத்தை ஏற்று 27 ஆண் பிள்ளைகளையும், 22 பெண் பிள்ளைகளையும் பெற்றார்கள். துறவறம் மேற்கொண்டதில்லை.

இவர்கள் தமது காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் அறப்போருக்குத் தம்மை அற்பணித்தவர். இவரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
துக்க தினமான நாளில் கூடு இழுத்து கும்மாளமிட்டுத்திரியும் இவர்களை உருவாக்கிய கைக்கூலிகள் யார்?

இறந்த தினத்தை சந்தோசமாக கொண்டாடும் இவர்களின் அறிவீனம் தான் என்ன?

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சான்றாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் போதனைகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள்!
இவர்களின் நூல்கள் பிரசித்து பெற்றவை.
*ஃபத்ஹுர் ரப்பானி,
*குன்யத்துத்தாலிபீன்,
*புதூஹுல்கைப்
இவைகள் ஏகத்துவத்தின் அற்புத கருவூலங்களாகும்.
இவையன்றி, மற்ற பல நூல்கள் அன்னாரை அவமதிக்கும் படைப்புகளே.
குர்ஆன்- ஹதீஸை மாற்ற – திரிக்க – திணிக்க முடியவில்லை. ஆகவே, மகான்களின் பேரால் தமது ஆதாயத்திற்காக மகான்களைப் பகடையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில அரபி அரை குறை பண்டிதர்கள், இவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளைப் போல் வேறு எவருக்கும் கிடையாது. அவைகளில் சில………

எல்லா நபிமார்களுடன் ஆபத்து காலங்களில் அவர்களுடன் இருந்ததாகவும் ஏன் அல்லாஹ்வின் அருகில் தொட்டிலில் படுத்திருந்ததாகவும், நபியவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது அவர்களை தம் தோள் கொடுத்து தூக்கிவிட்டவர்கள் என்றும்,
அவர் பிறந்த போது அன்றைய நாளில் பிறந்த குழந்தைகள் யாவும் நோன்பு நோற்றன என்றும் அவர்கள் அனைவரும் முடிவில் ‘வலீ’ (இறைநேசர்) ஆக மாறினர் என்றும்;
அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது அனைத்து வானவர்களும் வலீ வருகிறார் வழிவிட்டு நில்லுங்கள்! என்று கூறுவார்கள் என்றும்;
கோழியை தின்று விட்டு எலும்புத் துண்டுகளை வைத்து கோழியை உயிரூட்டினார்கள் என்றும்,

பிரசங்கத்தில் ஒரு பாம்பு இவர்களின் பயானை ஆர்வமுடன் கேட்க அவர் தோளில் தொற்றிக்கொண்டு அவருடன் பேசும் என்றும்;
கபரஸ்தானில் உள்ள மைய்யத்துக்கள் இவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சவக்குழியில் இருந்து வெழி வந்தன என்றும்; உயிரை பறிக்கும் ‘மலக்குல் மவ்த்’ பறித்த உயிர்களை, அவரை அறைந்து வெளியே மீட்டார்கள் என்றும்,
பல நூற்றாண்டுகளாக கடலில் மூழ்கிக் கிடந்த கப்பலையும், பிணங்களையும் மீட்டார்கள் என்றும் இவரின் மீது புனையப்பட்ட பகுத்தறிவுக்கப்பாற்பட்ட அபத்தமான கற்பனை கதைகள் ஏராளம்! ஏராளம்!!

மக்களை விட்டு விலகி – கம்பளி உடை தரித்து- உலகை, மணவாழ்க்கையை வெறுத்து துறவறம் கொள்வது நபிவழியா? நபி (ஸல்) அவர்களும் ஆட்சியாளர்களாக- குடும்பத் தலைவராக இருந்து ஆத்மீகத்தையும் ஆன்மீகத்தையும் போதித்ததைத் தானே இம்மகானும் செய்தார்கள்.

பின்னால் வந்தவர்கள் தான் இஸ்லாத்திற்குப் புறம்பான கட்டுக் கதைகளைப் புனைந்தார்கள். துறவுக் கொள்கையை தெளித்த துறவிகள், அவ்லியாக்கள் ஆனார்கள். இதனை அறியா மக்கள் குர்ஆனையும்- ஹதீஸையும் புறமாக ஒதுக்கிவிட்டு குர்ஆனை மையத்துக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, இக்கதைகளை கவிதைகளாக பாட ஆரம்பித்தனர்.இஸ்லாத்தின் ஆணிவேரை அழித்திட இதுவே முதல் மூல காரணமாயிற்று.

குறைபாடு அபாயம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பான நிலை குர்ஆன் – ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே உள்ளது. இவை அல்லாதவைகளில் நாசம் தான் உண்டு. இந்த இரண்டை மட்டும் கொண்டுதான் ஒரு அடியான் இறை நேசன் எனும் அரிய உயர் பதவியை அடைய முடியும்! (36 வது சொற்பொழிவு நூல் புதூஹுல் கைப்)

அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களை இருட்டில் இருந்து கொண்டு 1000 முறை ‘யா முஹ்யித்தீன்’ என்று கூப்பாடு போட்டால் தம்முன் தோன்றுவார்கள் என்று நம்புகின்றனர். இப்படிக் கூற அனுமதி தந்தது யார்?

தோழர்களே! உங்களுக்கும் உங்கள் இரட்சகனுக்கு மிடையே தரகர்கள் வேண்டாம் ஏனெனில், நமக்கும் நம் இரட்சகனுக்குமிடயில் இந்தத் தரகர்கள் உபயோகமற்றவர்கள். அந்த மெய்யான ஹக்கு தஆலா ஒருவனே சகல அதிகாரங்களையும் செல்வங்களையும் முழுவதுமாகத் தன் கைவசத்தில் வைத்துக் கொண்டிருப்பவன்! (36 வது சொற்பொழிவு நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)

உமக்கேற்படும் எத்துன்பத்தையும் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் முறையிட வேண்டாம் என்று கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் 10:107 வது வசனத்தையும் ஓதிக் காட்டுகின்றனர் (நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)
தமது போதனைகளுக்குச் சான்றாக அவர்கள் குர்ஆன்-ஹதீஸை மட்டுமே ஏற்று தம் வாழ்க்கையிலும், அவ்வாறே வாழ்ந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள் மறந்து, அல்லாஹ்வை விட்டு அப்துல் காதர் ஜீலானியைப் பிடித்துக் கொண்டது மாபெரும் ஷிர்க் இணைவைத்தலே!
இவர்கள் குர்ஆன் – ஹதீஸ் மற்றும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் போதனைகளை அடியோடு மறந்து மறுத்து அப்பட்டமான வழிகேட்டில் இருக்கும் இந்த நிழலைத் தேடும் நிஜங்களின் திரை விலகட்டும்! அல்லாஹ் போதுமானவன்.

இருட்டில் இருந்து கொண்டு 1000 முறை ‘யா முஹ்யித்தீன்’ என்று கூப்பாடு போட்டால் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார் எனும் கட்டுரையை காண  இங்கே  கிளிக் செய்யவும்


காய்ச்சலுக்கு இடமாற்றம்
https://shirkinethiri.blogspot.com/2021/11/6.html

கைக்குழந்தை நோற்ற நோன்பு
https://shirkinethiri.blogspot.com/2021/11/kai-kulandai-notra-nonpu.html

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்
https://shirkinethiri.blogspot.com/2021/11/abdulcaderum-shariyathum.html

அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
https://shirkinethiri.blogspot.com/2021/11/4.html

மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/6_6.html

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்த முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/7.html


சூம்பிய ஹம்மாதின் கை
https://shirkinethiri.blogspot.com/2021/11/8.html

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/9.html

கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கிய முஹ்யித்தின்அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/10.html

அப்துல் காதிர் ஜீலானி பார்த்தாலே நேர்வழி?
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post.html

அப்துல் காதிர் ஜீலானியிற்கு கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2021/11/11.html

கனவில் நடந்த கொலை!

https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_6.html

ஜின்னிடமிருந்து மீட்ட அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_16.html

எல்லா நேரமும் இரட்சகர் (?) அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_79.html

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர் அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/11_6.html

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_58.html

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2017/05/yaar-intha-abdul-cader.html

முஹைதீனும் முட்டாள்களும்
https://shirkinethiri.blogspot.com/2016/03/muhiyaddeenum-muttalkalum.html

அப்துல் காதிர் வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார்
https://shirkinethiri.blogspot.com/2015/10/abdulcader-varamattar-nirupikka-thayaar.html

யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க்கா ?
https://shirkinethiri.blogspot.com/2015/10/yaa-muhiyaddeen-entru-alaikkalaama.html

முஹைய்யத்தீன் மெளலூதின்சி ன்ன துஆ
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-sinna-duvaa.html

மார்க்கம் மரணப் படுக்கையில்  உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே
https://shirkinethiri.blogspot.com/2021/11/5.html

அப்துல் காதிர் ஜீலானி  அவர்களுக்கு 
இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-part-01.html