கப்ர் வழிபாட்டை நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ர் கட்டப்படக் கூடாது, இடிக்க வேண்டும் என்றெல்லாம்
கூறவில்லை. மாறாக கப்ரை சீராக்கி, அழகாக்குமாறுதான் நமக்கு
உத்தரவிடுகிறார்கள்.
1674 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ، - قَالَ يَحْيَى : أَخْبَرَنَا ، وَقَالَ الْآخَرَانِ : - حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ ، قَالَ : قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ
: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ وحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ، حَدَّثَنَا سُفْيَانُ ، حَدَّثَنِي حَبِيبٌ ، بِهَذَا الْإِسْنَادِ ، وَقَالَ : وَلَا صُورَةً إِلَّا طَمَسْتَهَا
உயரமான எந்தக் கப்ரையும் அழகுபடுத்தாமல் விட்டு விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நபிமொழி)
இதனைத்தான் தவ்ஹீத் கொள்கையில் இருப்பவர்கள் மாற்றி, மறைத்து கப்ர்
கட்டப்படக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ரை இடிக்க வேண்டும்
என கூறுகிறார்கள்.
உயரமான கப்ர்களைக் கண்டால் சீராக்க வேண்டும் என்ற மேற்கண்ட தீஸில் ஸவ்வா
எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அழகுபடுத்தல், சீராக்குதல் என்பதுதான்
பொருள். குர்ஆனில் இச்சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் சீராக்குதல்
என்ற பொருளில்தான் வருகிறது. எங்கேயும் இடித்தல் என்ற பொருளில் வரவேயில்லை.
هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي
الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ
سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [البقرة : 28 ، 29
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை
நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும்
அறிந்தவன். (அல்குர்ஆன் 2:29)
ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا
تَشْكُرُونَ [السجدة : 9]
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச்
செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள்
குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (அல்குர்ஆன் 32:9)
உதாரணமாக இந்த இடங்களில் எல்லாம் ஸவ்வா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு
இடித்தல் என்று பொருள் செய்யவே இயலாது. அப்படி பொருள் செய்தால் வசனத்தின்
கருத்தே அனர்த்தமாகி விடும்.
எனவே உயரமான கப்ருகளைச் சீர்படுத்துமாறுதான் அலி அவர்களுக்கு நபிகள் நாயகம்
உத்தரவிட்டுள்ளார்கள். இடிக்குமாறு உத்தரவிடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர்
தவறாக பொருள் செய்து கப்ருகளை நபிகள் நாயகம் இடிக்கச் சொன்னார்கள் என்று
கூறிவருகிறார்கள்.
பதில்:
இது தான் அவர்களின் மற்றுமொரு வாதமாகும். இதன் மூலம் சமாதி வழிபாட்டை மார்க்க அடிப்படையில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
சவ்வா என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் தரைமட்டமாக்குதல் என்பது கிடையாது.
சீர்படுத்துதல் என்பதுதான் பொருள். சீர்படுத்துதல் என்பதோடு எதைக்
கூறுகிறோமோ அதைக் கவனித்து தான் சவ்வா என்பதற்கு பொருள் செய்ய வேண்டும்.
கிழிந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஆடையைத் தைக்க வேண்டும் என்பது அர்த்தம்.
உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம்.
மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.
உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம்.
மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.
எதுவும் கூறாமல் சீர்படுத்துங்கள் என்றால் அழகுபடுத்துங்கள் என்று பொருள்.
உயரமாக உள்ளதைச் சீர்படுத்து என்று கூறினால் தரைமட்டமாக்க வேண்டும்
என்பதுதான் அர்த்தம்.
இதனைப் பின்வரும் தீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا
عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ
فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو
بْنِ عَوْفٍ فَأَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي
النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ كَأَنِّي أَنْظُرُ إِلَى
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو
بَكْرٍ رِدْفُهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى
بِفِنَاءِ أَبِي أَيُّوبَ وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ
أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَنَّهُ
أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي
النَّجَّارِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ
هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ
فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ قُبُورُ الْمُشْرِكِينَ
وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخَرِبِ
فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ
الْمَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا
يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا
خَيْرُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து)
மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் "பனூ அம்ர் பின்
அவ்ஃப்' என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே
பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு
(அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார்
(நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க,
அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார்
கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை
(இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு
முற்றத்தில் அவர்களை இறக்கியது. தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும்
தொழுவார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி
பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி)
ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்தபோது), "பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின்
இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு
அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள்
அல்லாஹ்விடமே கோருவோம்'' என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.
நான் உங்களிடம் கூறும் கீழ்க்கண்டவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன:
அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில
பேரீச்சை மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல்
கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு
உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி
உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில்
பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டனர்.
பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர்.
"ரஜ்ஸ்' எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை
எடுத்து வரலாயினர்.
"இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின்
நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முாஜிர்களுக்கும் நீ
மன்னிப்பிப்பாயாக!''என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன்
(சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள். நூல் :புகாரி -
428
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி இருந்த
இடத்தில் கப்ருகள் இருந்தன எனவும், சின்னஞ்சிறு சுவர்கள் இருந்தன எனவும்,
அதனைத் தரைமட்டமாக்கத் தான் நபி (ஸல்) அவர்கள் உத்தவிட்டார்கள் எனவும்
வந்துள்ளது. இதில் தரைமட்டமாக்க சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?
இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?
அதுபோலத்தான் கப்ருகளைச் சீர்படுத்துதல் என்பதன் பொருள்,
நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை
செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச்
சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான்
பொருள்.
மேலும் ஸவ்வா என்று குர்ஆனில் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் அழகுபடுத்தல்
என்பது தான் பொருள் எனும் கப்ர் வணங்கிகளின் வாதமும் முற்றிலும்
தவறானதாகும்.
கீழ்க்காணும் வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
يَوْمَئِذٍ يَوَدُّ
الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ
وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]
(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் "தம்மை பூமி விழுங்கி
விடாதா?'' என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச்
செய்தியையும் மறைக்க முடியாது. (அல்குர்ஆன் 4:42)
மேற்கண்ட வசனத்திலும் சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு
பூமியில் எங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எனப் பொருள்
செய்ய முடியுமா?
எனவே சவ்வா என்பதற்கு, அது எதோடு சேர்ந்து வருகிறதோ அதைக் கவனித்தே பொருள் செய்ய வேண்டும்.
கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிற காரணத்தால்
உயரமாகக் கட்டப்பட்ட கப்ரை சமமாக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸின்
பொருள் என்பதை எளிதாக உணரலாம்.
கப்ர் கட்டுவது கூடாது; ஆனால் கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள்
செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின்
வார்த்தைகளில் கேலிப்பொருளுக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த தீஸுக்கு மட்டும்தான் இப்படி
கிறுக்குத்தனமாக உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும்,
கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் தீஸ்களைப் பற்றி வாய்
திறப்பதில்லை. கப்ரைக் கட்டக் கூடாது என்றால் கட்டலாம் என்று பொருள். பூசக்
கூடாது என்றால் பூசலாம் என்று பொருள் என்று பதில் சொன்னாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி ;- தீன்குலப் பெண்மணி /2015 - ஜுலை
நன்றி ;- தீன்குலப் பெண்மணி /2015 - ஜுலை