நல்லடியார்கள் உலகில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு சக்தி பெறமாட்டார்கள், என்று கூறும் போது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேட்கொண்டபோது மூஸா நபியவர்கள் தொழுகையின் எண்ணிக்கையை குறைத்து உதவி செய்யவில்லையா? என்ற வாதத்தை வைத்து சரிபடுத்த முயல்கின்றனர்.
உண்மையில் நபிகளாருக்கும் ஏனைய நபிமார்களுக்கும் மிஃராஜில் நடந்த நிகழ்வுகள் இந்த உலகிற்கு வெளியே, அல்லாஹ் அவர்களை வைக்க நாடிய இடத்திலே நடந்தது. மேலும் மிஃராஜ் பயணமே ஒரு அற்புதம் எனும் போது அதில் அற்புதத்தையே அல்லாஹ் காட்டுவான். அல்லாஹ் நபிகளாருக்கு காட்டியவற்றையெல்லாம் மரணித்த நல்லடியார்கள் செய்வார்கள் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும்? மாறாக மரணித்தவர்கள் உலகிற்கு வரமுடியாது என்றுதானே கூறினார்கள்.
அங்கு நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபியால் உஹதுக்கு வந்து உதவ முடியவில்லை? அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை? இப்படி ஏராலமான உதாரணங்களை கூற முடியும். அப்படி ஒன்றுக்கு வந்திருந்தாலும் அந்த வாதம் சரியாகலாம்.
மேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா? அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள? இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.
மேலும் நபிகளார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதிலே மூஸா நபி, ஈஸா நபி உற்பட அனைத்து நபிமார்களும் கலந்துகொண்டனர். அதே நபிமார்கள் வானிலும் இருந்தார்கள் என்றால் நபிமார்கள் பல உறுவங்களில் இருக்கின்றார்கள் என்று கூறுவோமா? அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா? எனவே இவை அனைத்தும் சேர்ந்தே அற்புதமாக இருக்கின்றது என்றால், சாதாரணமாக எல்லா நல்லடியார்களும் இந்த அடிப்படையில் நடப்பார்கள் என்றால் மிஃராஜ் என்பது அற்புத பயணம் என்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகின்றது.
மேலும் உயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மறுமையின் அடையாளமாக உலகிற்கு இறங்குவார்கள், என்று குர்ஆன் (நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார் (43:6) கூறும் போது மிஃராஜின் போது இறங்கியது மறுமையின் அடையாளமா? என்றால் இல்லை என்போம். காரணம் அது அல்லாஹ் அற்புதத்திற்காக எடுத்துக் காட்டினான் என்பதே.
இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.
(அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி: 5705, முஸ்லிம்)
எனவே நபிகளாருக்கு மிஃராஜ் பயணத்தின் போது நபி மூஸா (அலை) அவர்கள் உதவியது போன்று இவ்வுலகில் மரணித்த நல்லவர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஓர் ஆதாரத்தை பார்க்கமுடியுமா? என்றால் முடியாது என்பதே பதிலாகும். தாங்கள் செய்யும் ஷிர்க்கான அம்சங்களை சரி படுத்த நபிகளார் கூறாதவைகளையெல்லாம் கூறுவதுதான் வழிகேடர்களின் பழக்கமாக இருந்துள்ளது.
நல்லவர்கள் மரணித்தபின்னறும் உதவி செய்வார்கள் என்று ஷிர்க் வைத்த அனைத்து சமூகத்தவர்களும் கருதி, அவர்களை நெறுங்கி, ஷிர்க்கும் வைத்தனர். அல்லாஹ் அதனையே கண்டித்தான்.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: வத்து, ஸுவா, யகூஸ், யஊக், ஸபா, நஸ்ர், (மக்கத்து காபிர்களால் வணங்கப்பட்ட சிலைகளின் பெயர்கள்) என்ற அனைத்தும் நூஹ் நபியின் கூட்டத்தில் இருந்த நல்லவர்களின் பெயர்கள். அவர்கள் மரணித்த பின் அவர்களிடம் வந்த ஷைத்தான் அந்த நல்லவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஞாபகார்த்த கட்களை நட்டுமாறும், அவர்களது பெயர்களை சூட்டுமாறும் ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வணங்கப்படவில்லை. அவர்களும் மரணித்தபின் அதபற்றிய அறிவு மறக்கடிக்கப்பட்டு, அவைகள் (அந்த ஞாபகார்த்த கட்கள்) வணங்கப்பட்டன. (புஹாரி)
இப்படி நல்லவர்களை ஞாபகப்படுத்தப்போய் காலப் போக்கில் அவை இணைவைப்பிலே கொண்டு சேர்ர்த்துவிடுகின்றது.
அல்லாஹ் எம்மை இந்த அநியாயச் செயலிலிருந்து காப்பானாக.
-அல்லாஹ் மிக அறிந்தவன் -
*****************************************************************************
*************************************************************************************
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
- காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மவ்லூத் மறுப்புக்கான காரணம் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்