"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

 நபிகளார் எதற்காக ஓதினார்கள்?
நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள்.
ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்)அவர்கள் கூறினார்கள்: நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்  குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ருகூஉவிற்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள்……. (புஹாரிள் 4096 முஸ்லிம்

 எந்தத் தொழுகைகளில் ஓதினார்கள்?
சுபஹ் உற்பட ஐந்து நேரத் தொழுகையிலும்  ஓதினார்கள்.
صحيح مسلم -
عَنِ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الْفَجْرِ وَالْمَغْرِبِ.
பராஃ பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்.
மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.  முஸ்லிம்
عن أبي هريرة قال
 : لأقربن صلاة النبي صلى الله عليه و سلم . فكان أبو هريرة يقنت في الركعة الأخرى من صلاة الظهر وصلاة العشاء وصلاة الصبح بعد ما يقول سمع الله لمن حمده فيدعو للمؤمنين ويلعن الكفار
அபூ ஹுரைரா ரலி அவர்கள் லுஹரிலும் இஷாவிலும் சுபஹிலும் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று கூற்ய பிறகு முஃமீன்களுக்கு துஆ கேட்டும், காபிர்களை சபித்தும் குனூத் ஓதிவிட்டு, இப்படித்தான் நபிகளார் தொழுகை இருந்தட்து என்று கூறுவார்கள். (புஹாரி: 764, முஸ்லிம் பராஃ பின் ஆஸிப் ரலி வழியாக,அபூதாவுத்:1445)

  சுபஹில் மாத்திரம் நபிகளார் குனூத் ஓதினார்களா?
அதற்கான ஒரே சான்றாக அஹ்மதில் வரும் ஒரு ஹதீஸைப் பார்க்க முடியும்.
مسند أحمد -
12657 حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ يَعْنِي الرَّازِيَّ عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي الْفَجْرِ حَتَّى فَارَقَ الدُّنْيَا
நபி (ஸல்) அவர்கள் உலலகைப் பிறியும் வரை சுபகில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். (அஹ்மத்: 12657)
பதில்:
புஹாரி முஸ்லிமில் அனஸ் ரலி அவர்களைத் தொட்டு வரும் ஹதீஸுக்கு முறன் படுகின்றது.
 957صحيح البخاري -
عاصم قال : سألت أنس بن مالك عن القنوت فقال قد كان القنوت . قلت قبل الركوع أو بعده ؟ قال قبله . قال فإن فلانا أخبرني عنك أنك قلت بعد الركوع ؟ فقال كذب إنما قنت رسول الله صلى الله عليه و سلم بعد الركوع شهرا أراه كان بعث قوما يقال لهم الققراء زهاء سبعين رجلا إلى قوم من المشركين دون أولئك وكان بينهم وبين رسول الله صلى الله عليه و سلم عهد فقنت رسول الله صلى الله عليه و سلم شهرا يدعوا عليهم

ஆஸிம் அறிவித்தார்: குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்’ என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு ‘ருகூவுக்கு முன்பு தான்’ என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.
அனஸ் அவர்கள் வழியாக புஹாரி முஸ்லிமில் வரும் அறிவிப்பை ஏற்பதா? அல்லாது அனஸ் ரலி அவர்களே பொய் என்று சொல்லும் அஹ்மதில் வரும் அறிவிப்பை ஏற்பதா?

*மேலும் புஹாரி முஸ்லிமில் ஸஹீஹான ஹதீஸ்களில் ஐந்து நேரத்திலும் ஓதியதாக வரும் போது இதில் மட்டும் சுபஹில் மாத்திரம் ஓதியதாக வருகின்றது, எனவே ஸஹீஹான பல ஹதீஸ்களுக்கு பல வழிகளில் முறன் படுவது இது பலவீனம் என்பதற்கு காரணமாகும்.

*அடுத்து அந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஜஃபருர் ராசி என்பவர் மிகப் பலவீனமானவரே. இப்படிப்பட்ட அறிவிப்பாளர் செய்தியை வைத்து ஒரு ஸுன்னாவை அமலை உறுவாக்க முடியாது.

*அவரைப் பற்றி இப்னு ஹிப்பான்: மக்கள் அவரது செய்தியிலிருந்து தவிர்ந்து கொண்டனர், காரணம் அவரது செய்திகளில் அதிக குளருபடிகள் இருக்கும். (அஸ்ஸிகாத்)

*மேலும் கூறினார்கள்: அவர் ஆசான்களிடமிருந்து நிறாகரிக்கப்பட்டவைகளை அறிவிப்பதில் தனித்திருப்பார். அவரது செய்தியை ஆதாரமாகப் பிடிப்பது, நம்பகமானவர்களுக்கு நேர்பட்டாலன்றி எனக்கு விறுப்பமில்லை.

*அபூ ஸுர்ஆ கூறினார்கள்: அதிகம் தவறு விடுபவர்.

*அஹ்மத்: அவர் பலமானவர் இல்லை

*இப்படி அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர். எனவே இப்படி விமர்சிக்கப்பட்டவரின் அறிவிப்பு மகப் பலவீனமாகும்.

அடுத்து இவர பலவீனமான செய்திக்கு முறனாக நபித் தோழர்களி தீர்ப்பு.
سنن الترمذي
 402 – حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون عن أبي مالك الأشجعي قال : قلت لأبي يا أبة ! إنك قد صليت خلف رسول الله صلى الله عليه و سلم و ابي بكر وعمر وعثمان وعلي بن أبي طالب [ ههنا ]بالكوفة نحوا من خمسين سنة أكانوا يقنتون ؟ قال أي بني محدثم
قال الشيخ الألباني : صحيح

அபூ மாலிக் என்பவர் தன் தந்தையிடம்: தந்தையே நீங்கள் நபிகளாருக்கும், அபூ பக்ர் உமர் உஸ்மான் அலீ (நலி) ஆகியோருக்குப் பின்னால் தொழுதிருக்கின்றீர்கள், அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கேட்க, மகனே அது புதிதாக உறுவாக்கப்பட்டது. என்று தந்தை கூறினார்கள். (திர்மிதீ: 402, அஹ்மத்) நஸாஇயில் ௰80- அது பித் அத் என்றே வந்துள்ளது.
அதிலும் இன்றைக்கு சுபஹ் குனூத்தில் ஓதப்படும் துஆவைப் பார்த்தால் அது பித்அத் என்பது இன்னும் தெளிவாக விளங்கும். ஏனெனில் அல்லாஹும்மஹ்தினீ என்று ஆரம்பிக்கமு துஆவை சுபஹ் குனூத்தில் ஓத நபிகளார கற்றுக் கொடுக்கவில்லை, மாறாக அது வித்ருக்காக கற்றுக் கொடுக்கப்பட்டது. திர்மிதீ:464 நஸாஇ: 1745

மதுகப் வாதிகளே பதில் தாருங்கள்

ஹனபி மத்ஹப் என்று சொல்லிக் கொண்டு இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் வழியில் செல்வதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹனபி மத்ஹபு என்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப் போதிப்பதும் இமாம் அபூஹனீபா எழுதிய நூற்களையா?
அல்லது அவர்களின் மாணவர்களான இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மத் ஆகியோர் எழுதிய நூற்களையா?
இல்லையே! இந்தியாவின் எந்த மதரஸாவிலும் அந்த இமாம்கள் எழுதிய நூற்கள் போதிக்கப்படுவதில்லையே! இதன் மர்மம் என்ன?

ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்ட ஆலம்கீரி, ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆனது எப்படி? ஹிஜ்ரி 1071ல் எழுதப்பட்ட துர்ருல் முக்தார் எவ்வாறு ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆக்கப்பட்டது? ஏன் ஆக்கப்பட்டது? யாரால் ஆக்கப்பட்டது? ஹிஜ்ரி 745ல் எழுதப்பட்ட ஷரஹ் விசாயா, எப்படி ஹனபி மத்ஹபின் சட்ட நூல் ஆனது? ஹிஜ்ரி 710ல் எழுதப்பட்ட கன்சுத் தகாயிக் என்ற நூல் எவ்வாறு அபூஹனீபா இமாமின் சட்ட நூல் என்று நம்ப வைக்கப்பட்டது? ஹிஜ்ரி 593ல் எழுதப்பட்ட ஹிதாயா என்ற நூல் ஹனபி இமாம் எழுதியதா? ஹிஜ்ரி 428ல் எழுதப்பட்ட குதூரி என்ற நூல் இமாம் அவர்களால் எழுதப்பட்டதா?
இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூற்களாக ஆக்காததன் மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர, இன்று பாடத் திட்டத்தில் இருக்கும் நூற்கள் தான் இடம் தருகின்றன என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? தெளிவுபடுத்துங்கள்.
எந்த ஒரு சிறு மஸ்அலாவுக்கும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றிலிருந்து சான்றுகள் காட்டாமல் விட்டு வைக்கவில்லை என்று மத்ஹபு ஆலிம்கள் கூறுகின்றனர். இதோ இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பைகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம் உள்ளதா? காட்டுங்கள் பார்ப்போம்.
பகுத்தறிவுச் சட்டங்கள்
10
பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 124
இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? தெளிவுபடுத்துவீர்களா?
தொழுகையில் விளையாட்டு
11
ஒரு மனிதனிடத்தில், "நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.
ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447
12
தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
13
ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
14
தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்) தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாகக் காற்றை விடுதல், பேசுதல், நடத்தல், ஸலாம் கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும்.
ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்: 400
15
சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும்துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521
16
கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாக இருந்துவிடலாம். மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81

மத்ஹபு ஆலிம்களே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து இஜ்மாவு, கியாஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?
இமாமுடைய தகுதிகள்
17
அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 259
18
இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய "உறுப்பு' சின்னதாக இருக்க வேண்டும்.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 601
மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது குர்ஆனா? ஹதீஸா? இஜ்மாவா, கியாஸா? சொல்லுங்கள். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இமாமைத் தேர்வு செய்கிறீர்களா?
மோசடிகள்
19
இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது.
துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310
20
போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9
21
திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு தான்.
ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60
இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா?

விசித்திரமான சட்டம்
22
ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர் அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க வேண்டும்)
ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62
நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்துக்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள்.
23
ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 175
இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீஸில் உள்ளவையா? அல்லது இஜ்மா, கியாஸில் உள்ளவையா? விளக்குங்கள்.
குறிப்பு: இதை விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் எங்கள் எழுதுகோல்கள் எழுதுவதற்கு வெட்கப்படுகின்றன
24
அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும்.
ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488
25
பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும்.
ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523
இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா? தெளிவுபடுத்துங்கள்.
26
ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம்.
ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 117
மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன. மத்ஹபு ஆலிம்களே! இது தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டங்களா? சிந்தியுங்கள்.
ஜும்ஆ
27
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும்.
ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 83
மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே! "இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது'' என்று அறிவிக்கத் தயாரா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்றன.
மத்ஹபு மாறினால் தண்டனை
நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று போர்டு வைக்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.
28
ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249
29
ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.
ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565
30
நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது.
துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18
ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில் இருக்கும்படி போர்டு எழுதி வைப்பது ஏன்?
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இமாம்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.
முரண்பாடுகள்
இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் பொய்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடுகளும் மலிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.
31
முஃதஸிலா பிரிவினரை திருமணம் முடித்துக் கொள்வது கூடும். ஏனென்றால் ஒரே கிப்லாவினரில் எவரையும் காஃபிர் என்று நாம் கூறமாட்டோம்.
துர்ருல்முக்தார், பாகம்: 3, பக்கம்: 50
32
முஃதஸிலா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில் திருமணம் செய்வது கூடாது.
ஃபத்ஹ‚ல் கதீர், பாகம்: 6, பக்கம்: 397
33
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லை நிராகரிப்பவன் மீது மணல் எண்ணிக்கைக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும்.
துர்ருல் முக்தார் முன்னுரை
34
இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாக அபூஹனீபா இமாமுக்கு மாறு செய்துள்ளனர்.
ஜாமிஉஸ் ஸகீர், பாகம்: 1, பக்கம்: 8
ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீது லஃனத் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும் என்று கூறுகின்றனர்.
இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கின்ற சட்டங்களைத் தான் இமாம்களின் பெயரால் எழுதி வைத்துள்ளனர்.
மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று போர்டு வைப்பதற்கு முன்னால் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தயாரா?
மத்ஹபு வெறியை ஊட்டி, மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களே!
இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின் பக்கம் வாருங்கள்.
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:32
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
-அல்குர்ஆன் 33:36
*****************************************************************************
சுவனம் செல்ல மத்ஹப் அவசியமா? 

உரை நிகழ்த்துபவர் : அப்துல் ஹமீட் (ஸரயி)

*****************************************************************************

பித்அத்’ ஓரு ஆய்வு'

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு  இருக்கின்றனரா?  மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)  
(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும்  நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம் அவனே அனைத்தையும்   அறிந்தவனாக இருக்கிறான். ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை. அதாவது புதியவை ஒன்றை ஏற்படுத்தி பித்அத்துக்களை  எடுத்து நடப்பவர்கள்  அல்லாஹ்வின்  கட்டளையை  மீறி  செயல்படுகிறார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர் கூறுகிறார்கள்:- எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி صلى الله عليه وسلم அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள்  கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
   
உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப்  பற்றிப் பிடித்திருக்கும்  காலமெல்லாம்  நீங்கள்  வழி தவறவே  மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை.  (மாலிக் இப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா)
   
அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:- “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.  (புகாரீ, முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்:- “வெள்ளை  வெளேர்  என்ற நிலையில்  உங்களை  நான்  விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர  வேறு  யாரும்  வழி தவறவே  மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)

மக்கா மாநகரம் வெற்றிக்  கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக  நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்,திர்மிதீ)
    
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்.  (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது,நஸயீ.)
    
நபி صلى الله عليه وسلم அவர்கள், நபிதோழர் பராஉபின் ஆஜிப்رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்களுக்கு, இரவில் படுக்கப்  போகும் பொழுது ஒதும் துஆ  ஒன்றை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم  அவர்கள்,………..வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த………என்று கற்றுக்கொடுத்ததை,  நபித்தோழர் அதை………வ ரசூலி கல்லதீ…….என்று ஓதிக்காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி صلى الله عليه وسلم அவர்கள், இல்லை”வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த…..” என்று ஒதுமாறு கூறினார்கள். (புகாரீ)

[வ நபிய்யி கல்லதீ என்பதை ரசூலி கல்லதீ என்று சொன்னதையே நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதிக்காமல், அதை கண்டித்து திருத்தி இருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானதுஎன்று கூறிச்செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்ககடமைப் பட்டுள்ளோம்.] மேற்காணும் குர்ஆன் வசனங்களும் நபிصلى الله عليه وسلم அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக ஒன்றை இணைக்க முடியாது, என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.

இனி பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.
 நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான், அல்லாஹ்வுடைய ரஸுல்صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன். என இப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.
  
நான் பின்பற்றுகிறவனே அல்லாமல்,  புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “திக்ரு” ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து இப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், “நான் நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில்  யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித்தராத  பித்அத்தைச்  செய்கிறீர்கள்” என்று  கூறி  அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.
    
ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு” வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் “என்று இணைத்துக்கொண்டார். இதனை பித்அத் என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்.
  
“பித்அத் அணைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.
  
“பின்பற்றுபவனாக இரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே” என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும்  செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். “அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபிصلى الله عليه وسلمஅவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும்,சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இதற்கு மேலும் இது விசயத்தில் சந்தேகிப்பவர்கள் மறியாதைக்குறிய இமாம்கள் கூறுவதைப் பார்ப்போம்.
  
இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள்:-நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

 இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :- “மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபிصلى الله عليه وسلم அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து  விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்……என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-   எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி,  அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-     எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல்صلى الله عليه وسلم அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.  நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

மேற்கூறிய நான்கு இமாம்களின் மணியான உபதேசங்களுக்கு நேர் முரணாக பித்அத்துக்களில் நம்மவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள்.மேலும் பித்அத்துக்களை வகை வகையாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பி போய், மக்களையும் குழப்புகிறார்கள்.

கால மாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, இவையெல்லாம் நபிصلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் இல்லாதவை தானே! புதுமைகள் தானே! பித்அத்து ஹஸனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள்.

உதாரணமாக நவீன வாகனங்களை, கட்டிடங்களை, கடிகாரங்களையெல்லம் பயன்படுவதை பித்அத் என்கின்றனர். இவையெல்லாம் தவிர்க்க முடியாது என கூறி பித்அத்து ஹஸனா என்கின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும். நபிصلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ் விடமிருந்து வஹீ மூலமாகவும், அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நல்லதாகத் தெரியும் விஷயங்களை புகுத்துவதையே பித்அத்து என்று கண்டித்துள்ளார்களே அல்லாமல், இவையல்லாத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தை பெறும், அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளை பற்றி பித்அத் என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைப் அடுத்து பாருங்கள்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில்,அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது விசயம் நபிصلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.  (ராபிஃ இப்னு கதீஜ்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்)

இதே போல் விடுதலைப் பெற்ற பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ தனது அடிமைக் கணவர் முகீஸைرَضِيَ اللَّهُ عَنْهُ வேண்டாம் என்று அறிவித்தபோது, முகீஸின்رَضِيَ اللَّهُ عَنْهُ மண வேதனையைக்கேட்டு, நபி(சல்) அவர்கள் வருந்தி பரீராவைرَضِيَ اللَّهُ عَنْهُ முகீஸோடுرَضِيَ اللَّهُ عَنْهُ வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்க கட்டளையா? என்று பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். நபிصلى الله عليه وسلم அவர்களின் சிபாரிசை பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ ஏற்றுக் கொள்ளவில்லை. நபிصلى الله عليه وسلم அவர்களும் அதற்காக அவர்களை கண்டிக்கவில்லை. (இப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,அபூதாவூத்,நஸயீ,திர்மிதீ)

பத்ருப்போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக்கொள்வது என்ற விசயத்தில், நபிصلى الله عليه وسل அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முன்திர் என்ற நபித்தோழர் தேர்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்ன போது அதை நபிصلى الله عليه وسلم அவர்கள் ஏற்று தன் கருத்தை மாற்றிக்கொண்டார்கள். காரணம் நபிصلى الله عليه وسلم அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபிصلى الله عليه وسلم அவர்கள் தன் கருத்தை மாற்றிக்கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது.

மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலக காரியங்களிலிருந்து நிதர்சனமாக பலனைப்பெறும் விஷயங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

    பித்அத் போல் தோன்றும் காரியங்கள்:-

அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படது. உதுமான்رَضِيَ اللَّهُ عَنْهُ காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டது. குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. உமர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாத்தாக ஆக்கியது. இவற்றை ஆதாரமாக காட்டி, இவற்றிற்கு பிஅத் ஹஸ்னா  என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர். எனவே இவற்றை நுட்பமாக அராய்ந்து விளங்குவோம்.

    குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது:-

நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்திலிருந்து 114 ம் அத்தியாயம் வரை முறையாக நபிصلى الله عليه وسلم அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபிصلى الله عليه وسلم அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும், இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபிصلى الله عليه وسلم அவர்களின் கட்டளைப்படியே எழுதப்பட்டன. 9ம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிடவில்லை.இன்று வரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9ம் அத்தியாயத்திற்கு பிஸ்மி எழுத முற்ப்பட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில்  குர்ஆனில் எவ்வித கூடுதல்,குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.

    நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் நிறைவு செய்யப்பட்டு,  நபித் தோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில வசனங்கள்  அனைத்தயும் அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சி  காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்த்திப்பவர்கள்  இதனை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும்,எழும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன.

இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் இனிமையான குரல்களில் பதிவு செய்யப்பட்டு இன்று இண்டர்நெட்டில் மிக எளிதாக பலமொழிகளில் அதன் விளக்கத்தையும், குறிப்பிட்ட் ஹதீஸ்களை  விபரமாக தெளிவாக பெறலாம். எனவே அவற்றையெல்லாம் பித்அத் எனச்சொல்வது, நபிصلى الله عليه وسلم அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

உஸ்மான்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம்,பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவற்றை அவர்கள் பார்வையிட்டு  விளங்கிச்  செயல்  பட வேண்டும்  என்பதேயாகும்.  அதல்லாமல்,  நபிصلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரகத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல.எனவே இச் செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையாகும்.

 குர்ஆன் நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில், குறிகள் இல்லாமல் எழுதப்பட்டு நடை முறையில் இருந்து வந்தது.நபிصلى الله عليه وسلم அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி,அஜமி  (அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆனை ஓதும் நிலை ஏற்பட்டது.எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர,உகர குறிகள்  இடப்பட்டன. உண்மையில்இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமே யல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல.அரபி தெரிந்தவர்,ஓர் அரபி குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ,அதை எப்படி விளங்கி செயல்படுகிறாரோ,அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார்.எனவே,  நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே இதனையும் பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பின் கலீபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்ப்பட்ட இந்த நடை முறைகளை ஆதாரமாகக் காட்டிபித்அத் ஹஸனாவை நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கம். நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீபாஃக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துகொள்ளுங்கள் என்று கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது.இதில் நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்து என்று குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த நபி صلى الله عليه وسلم அவர்களுடைய சொல், செயல்,அங்கீகாரம் ஆகும்.

நேர்வழி நடந்த கலீபாக்களின் ஸுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி صلى الله عليه وسلمஅவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீபாக்களின் நடைமுறையாகும்.இந்த அடிப்படையில், கலிபாக்களுடைய இச்செயல்களுக்கு நபிصلى الله عليه وسلم அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், அந்த நடவடிக்கைகள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல்,செயல், அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும்.

இந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீபாக்களின் இந்த நடவடிக்கைகளை “பித்அத் ஹஸனாவிற்கு ஆதாரமாக காட்டி, இவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்க (பித்அத்) இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல் இவர்களின் நடைமுறைகளுக்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும்.

மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் பித்அத் ஒன்றை உண்டாக்க  முடியாது! உண்டாக்கக் கூடாது! இதற்கு மேலும், புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு வகை வகையாக பிரித்திக்கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில்  எவ்வித ஜயமும் இல்லை. ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக முக்கியமான பயங்கர ஆயுதங்கள் ஷிர்க்கும், (இணைவைத்தல்) பித்அத்து (மார்க்கதில் புதுமுமை)களேயாகும். எனவே முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,”செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

எனவே, பித்அத்தான (புதுமையான) செயல்களை இவை அழகானவை தானே! என்று இவர்களே, தம்மைதாமே திருப்தி செய்துகொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின்  சூழ்ச்சியேயாகும்.அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும்.

உண்மையான உள்ளச்சத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அறிந்த விஷயங்களில் அல்லாஹ்வை  அஞ்சி  முறையாக  மார்க்க  கடமைகளை நிறைவேற்றி  வருபவர்கள்  மட்டுமே ஷைத்தானின் இந்த மாய வலைகளிலிருந்து, அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்பமுடியும். அந்த பாக்கியம் பெற்ற கூட்டதில் அல்லாஹ், அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ், நம் அனைவரையும் இணைத்தருள்வானாக! ஆமின்!

அபூ ஃபாத்திமா
**********************************************************************
மேலும் சில பதிவுகள் .....
குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
 நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்