"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

முஹைதீன் ஆண்டவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள்

அகில உலகத்தை ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் நித்தியஜீவன் பெருமைக்குச் சொந்தக்காரன் பேரறிவாளனாகிய அல்லாஹ்வுக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ, துக்கமோ, சோர்வோ, மறதியோ, நோயோ, முதுமையோ உள்ளிட்ட எந்தப் பலகீனமும் இல்லை. தாய், மனைவி, மக்கள், அண்ணன், தம்பி என்ற எந்த உறவும் இல்லை என்பன உள்ளிட்ட கடவுளின் தகுதிகளையும் இலக்கணங்களையும் வகுத்து வைத்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பிறமத சகோதரர்கள் கூட ஒப்பு கொள்கின்றனர்.

ஆனால் இஸ்லாமியனாகப் பிறந்த, அல்லாஹ்வின் அடிமை (அப்துல்லாஹ்) என்று பெயர் சூட்டிக் கொண்டு முஹைதீன் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி அடையும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை எள்ளளவும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் கணக்கிலடங்காதவை.

முஹைதீனின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார். யாருடைய ஆப்பிள் என்று தெரியவில்லை என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஓடி வரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்தாராம்.

அந்த மரத்தின் உரிமையாளரிடம் அதைச் சப்பிட்டதை ஹலாலாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார். அவர் என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் ஆக்குகிறேன். ஆனால் அவள் குருடி, ஊமை, நொண்டி, இரண்டு கையும் சூகை என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக் கூடாது. அதை ஹலாலாக்கி விடுங்கள்; அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார் எள்றார்களாம்.

திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தார். ஏனெனில் அழகென்றால் அழகு! அவ்வளவு அழகு!! ஒரு குறையும் இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படிச் சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார். என் தந்தை சொன்னது உண்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.

இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்காதிர் ஜிலானியாம். கடும் பசி நேரத்திலும் ஹராமான உணவை உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய் இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்? என்று கதை விடுகின்றனர் கப்ரு வணங்கிகள்.

சிந்தனையாளர்களே சிந்தித்துப் பாருங்கள் ஓர் ஆப்பிலுக்காக ஆற்றைக் கடந்தாராம் நம்பமுடிகிறதா? நம்பிக்கைக்குரிய நபிகளார் கூறுகிறார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 164(

2431- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள் . இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.  (நூல் புகாரி (2431)

மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக தெருவில் கிடக்கும் அற்பமான பொருளைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது நபிவழிக்கு மாற்றம் செய்கிறார் முஹைதீனின் தந்தை. இவர் எப்படி பரிசுத்த தந்தையாக இருப்பார்?

முஹைதீனைப் பற்றி முட்டாள் தனமான முன்னறிவிப்பு

ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை என் அன்பரும் அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுபசோபனம் கூறினார்கள் என்று கட்டுக் கதையை கட்டவிழ்த்து உள்ளனர்.

கேட்பவன் கேனயனாக இருந்தால் கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல் கேலியாக உள்ளது இந்தச் செய்தி.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பதாக இருந்தால் அண்ணலாரை, அவர் நேரில் கண்டிருக்க வேண்டும். அவர்களின் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் முஹைதீன் தந்தை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்ததுமில்லை. நபியவர்களை நேரில் கண்டதுமில்லை. பிறகு எப்படி அவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டிருப்பது சாத்தியமாகும். இது முற்றிலும் அப்பட்டமான பொய்யே!

எளிய மார்க்கத்தை ஏளனப்படுத்தியவர்

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கிச் சென்றார். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றைக் கொடுப்பார். அதை அணிந்து கொண்டே நாட்களைப் போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும். முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள்.

ஒரு வருடம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல் எதுவும் சாப்பிடாமல் தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் உளூவுடன் சுப்ஹ் தொழுகையையும் தொழுவார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு அருகிலுள்ள ஒரு துணியில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படிச் செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்போது  பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபுஹ் தொழுகையையும் தொழுவார்கள் என்று அடுக்கடுக்கான அபத்தங்களைப் மொழிகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹைதீன் அப்துல் காதிர் ஜிலானி துறவறம் மேற்கொண்டதாக உள்ளது. ஆனால் இஸ்லாம் துறவறத்தை அணுவளவும் அனுமதிக்கவே இல்லை.

ஏனெனில் இதனால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் பாழ்படுத்தப்படுகின்றன.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (4 / 129)

3470 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ قَالَ رَدَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;
துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்கு) அனுமதி அளித்திருந்தால் நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (முஸ்லிம் 2716)

நபி (ஸல்) அவர்களின் கூற்று மூலம் துறவறத்தை இஸ்லாம் தூர வீசுகின்றது எனப் புரியலாம்.

மேலும் முஹைதீன் ஆண்டவர் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதாகவும், ஓர் இரவு முழுவதும் ஒற்றைக் காலில் நின்று வணங்கியதாகவும் உள்ளது. இவரின் செயல் இறைத்தூதரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதைப் பின்வரும் பொன்மொழியில் காணலாம்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (6 / 242)

5052- حَدَّثَنَا مُوسَى ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ مُجَاهِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا فَتَقُولُ نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُذْ أَتَيْنَاهُ فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الْقَنِي بِهِ فَلَقِيتُهُ بَعْدُ فَقَالَ كَيْفَ تَصُومُ قَالَ كُلَّ يَوْمٍ قَالَ وَكَيْفَ تَخْتِمُ قَالَ كُلَّ لَيْلَةً قَالَ صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً وَاقْرَإِ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْجُمُعَةِ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمِ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ الْقُرْآنِ بِالنَّهَارِ وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ ، وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيةَ أَنْ يَتْرُكَ شَيْئًا فَارَقَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَيْهِ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவர் “நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்” என்றார்.

இன்னொருவர் நான் புலால் உண்ண மாட்டேன் என்றார் இன்னொருவர் நான் படுக்கையில் உறங்க மாட்டேன்“ என்றார். இதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றி விட்டு சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால் நான் {இரவில்} தொழுகிறேன்: உறங்கவும் செய்கிறேன் : நோன்பும் நோற்கிறேன்:நோன்பை விடவும் செய்கிறேன், பெண்களை மணந்தும் கொள்கிறேன். என்வழியை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். (புகாரி 5052)

ஒருவர் அயராது தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டோ, தொழுது கொண்டோ இருப்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் பக்தி பரவசமாகத் தெரியலாம். ஆனால் இது இஸ்லாத்தின் பார்வையில் நபிவழியை விட்டு துரத்தி அடிக்கும் பாரதூரமான காரியம்.

அரபி அல்லாத அஜமி

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ஆம் இரவன்று முஹைதீனின் கனவில் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தோன்றி “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்.“ எனக் கேட்டார்கள். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அப்துல் காதிர் {முஹைதீன்} “யா ரசூலல்லாஹ்!! நான் அரபி இல்லையே! அஜமிதானே “ எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபி மொழியில் பேசத் தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அண்ணல் நபி {ஸல்} அவர்கள் சிரித்த முகத்துடன் முஹைதீன் ஆண்டவரின் வாயை திறக்கச் சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலைத் துப்பினார்கள். அதற்குப் பிறகு முஹைதீன் ஆண்டவரின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத் தொடங்கியது என்று கதை அள்ளி வீசுகின்றனர்.

நபிகளாரிடம் நேரடியாகப் பாடம் பெற்ற நபித்தோழர்களுக்கு திருக்குர்ஆனை ஒதி அதில் உள்ள சட்டங்களை விளக்கி மார்க்கத்தைச் சொன்னார்களே தவிர, அவர்களின் வாய்களில் எச்சிலைத் துப்பி மார்க்க போதனைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. நபித்தோழர்களுக்கு இவ்வாறு செய்யாதவர்கள் கனவில் வந்து எச்சில் துப்பி மார்க்கத்தைப் போதிப்பார்களா?

மரணம்

முஹைதீன் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு குளித்துவிட்டு இஷா தொழுகையைத் தொழுதார்கள். நீண்ட நேரம் ஸுஜுதிலிருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தகாரர்களுக்கும், தன் முரீதுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள்.

ஸுஜுதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக, என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக“ என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது.

கடைசி நேரம் வந்து விட்டதை உணர்ந்த அவர் தன் வாயால் திருக்கலிமாவைக் கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோட தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள் என்று கதை நீண்டு செல்கிறது.

இவ்வுலகத்தில் மிகச் சிறந்தவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள்.  இந்த இறைத்தூதர்கள் இறந்த போது இது போன்று மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தனவா?. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தனவா?

இறைத்தூதர்களுக்கும் நபித்தோழர்களுக்கு இல்லாத சிறப்பு அப்துல் காதிர் ஜீலானிக்கு எப்படி வந்தது? இந்தக் கதைகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.

ஆலிம் பெருமக்கள்,

அவ்லியாக்களின் நேசகர்கள்,

போலி ஆசாமிகள்,

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டாண்டாய் வழிபடும் கப்ர் வணக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்..!!

இன்ஷா அல்லாஹ்

நன்றி ; தீன்குலப் பெண்மணி மார்ச்  2016


காய்ச்சலுக்கு இடமாற்றம்
https://shirkinethiri.blogspot.com/2021/11/6.html

கைக்குழந்தை நோற்ற நோன்பு
https://shirkinethiri.blogspot.com/2021/11/kai-kulandai-notra-nonpu.html

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்
https://shirkinethiri.blogspot.com/2021/11/abdulcaderum-shariyathum.html

அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்
https://shirkinethiri.blogspot.com/2021/11/4.html

மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/6_6.html

அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்த முஹ்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/7.html


சூம்பிய ஹம்மாதின் கை
https://shirkinethiri.blogspot.com/2021/11/8.html

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/9.html

கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கிய முஹ்யித்தின்அப்துல் காதிர் ஜீலானி

https://shirkinethiri.blogspot.com/2021/11/10.html

அப்துல் காதிர் ஜீலானி பார்த்தாலே நேர்வழி?
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post.html

அப்துல் காதிர் ஜீலானியிற்கு கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2021/11/11.html

கனவில் நடந்த கொலை!

https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_6.html

ஜின்னிடமிருந்து மீட்ட அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_16.html

எல்லா நேரமும் இரட்சகர் (?) அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_79.html

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர் அப்துல் காதிர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2021/11/11_6.html

பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது
https://shirkinethiri.blogspot.com/2021/11/blog-post_58.html

யார் இந்த அப்துல் காதர் ஜீலானி
https://shirkinethiri.blogspot.com/2017/05/yaar-intha-abdul-cader.html

முஹைதீனும் முட்டாள்களும்
https://shirkinethiri.blogspot.com/2016/03/muhiyaddeenum-muttalkalum.html

அப்துல் காதிர் வர மாட்டார் , நிரூபிக்க நாங்கள் தயார்
https://shirkinethiri.blogspot.com/2015/10/abdulcader-varamattar-nirupikka-thayaar.html

யா முஹம்மத் என்று அழைத்தால் ஷிர்க்கா ?
https://shirkinethiri.blogspot.com/2015/10/yaa-muhiyaddeen-entru-alaikkalaama.html

முஹைய்யத்தீன் மெளலூதின்சி ன்ன துஆ
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-sinna-duvaa.html

மார்க்கம் மரணப் படுக்கையில்  உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே
https://shirkinethiri.blogspot.com/2021/11/5.html

அப்துல் காதிர் ஜீலானி  அவர்களுக்கு 
இடம் பிடித்துக் கொடுத்தவானவர்கள்
https://shirkinethiri.blogspot.com/2015/09/muhiyadden-maulood-part-01.html

நஜ்த் எங்கே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரணத்தின் பின்னர் தோன்றவிருக்கும் வழிகெட்ட பிரிவுகள் பற்றியும், குழப்பங்கள் பற்றியும் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். அந்தப்பிரிவில் ஹவாரிஜ்கள் எனப்படும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோர் பற்றித் தெளிவாகவும், ஏனைய பிரிவுகளும் சூசகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் வெறுத்ததைச் செய்து கொண்டு, , தான் தோன்றித்தனமாக மார்க்கத்தில் கப்று வணக்கத்தை உருவாக்கி, அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்து மதிப்பிடும் சுன்னத் ஜமாஅத் பெயர் தாங்கிகள் இந்தப்பிரிவில் உட்படுத்தப்பட வேண்டியவர்களே.
ஹுதைபா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நரக அழைப்பாளர்கள் பற்றிய நீண்ட ஹதீஸில் …

فَقُلْتُ هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا قَالَ نَعَمْ قَوْمٌ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا

அல்லாஹ்வின் தூதரே! இந்த நன்மைக்குப்பின் தீமை ஏற்படுமா எனக் கேட்டேன்? ஆம். நரகத்தின் வாயிலில் நின்று கொண்டு அழைக்கும் அழைப்பாளர்கள். அவர்களுக்கு யார் பதில் தருகின்றானோ அவனை அவர்கள் அதில் (நரகில்) தூக்கிப் போட்டுவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப்பற்றி எமக்கு வர்ணியுங்கள் எனக் கேட்டேன். ஆம். அவர்கள் நமது இனத்திலுள்ள ஒரு கூட்டம்தான். நமது மொழியே பேசுவார்கள், எனக் கூறினார்கள். (முஸ்லிம் 3434)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்றுகொண்டு, கிழக்குத் திசையை நோக்கித் தமது கையால் சைகை செய்து, "குழப்பம், இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

( புகாரி 5565. Book : 52)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَ
ّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ رواه البخاري

"இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!'' என்று நபி (ஸல்) அவர்கள்ன கூறினார்கள். மக்கள் (சிலர்), "எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!)'' என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்கு தான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்கு தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)   நூல் : புகாரி (1037)


குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும், குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘கிழக்கை நோக்கி சைகை செய்ததை ஈராக்கையும், அதைச்சூழவுள்ள பிரதேசத்தையுமே தெளிபடுத்துவதாக புகாரியின் விளக்கவுரை நூற்களான
பத்ஹுல்பாரி,
ஷரஹுல்பத்தால்

ஆகிய நூற்களில் முறையே இமாம்களான
இப்னுஹஜர்
அல்அஸ்கலானி,
இமாம் இப்னு பத்தால்
ஆகியோர் தமது விரிவுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

قال ابن حجر في فتح الباري..:.

قوله : ( رأس الكفر نحو المشرق ) في رواية الكشميهني " قبل المشرق " وهو بكسر القاف وفتح الموحدة أي من جهته , وفي ذلك إشارة إلى شدة كفر المجوس , لأن مملكة الفرس ومن أطاعهم من العرب كانت من جهة المشرق بالنسبة إلى المدينة ,
وكانوا في غاية القسوة والتكبر والتجبر ]
والفرس كانوا يحكمون نجد العراق ولم يكونوا أبداً في نجد الحجاز .


قال الإمام الخطابي (ت : 388) كما حكى عنه الحافظ ابن حجر (13/47) : نجد من جهة المشرق ، ومن كان بالمدينة كان نجده بادية العراق ونواحيها ، وهي مشرق أهل المدينة .ا.هـ.


وقال الحافظ (ت : 852) أيضا في الفتح (6/352) عند قول النبي صلى الله عليه وسلم " رأس الكفر نحو المشرق " : وفي ذلك إشارة إلى أن شدة كفر المجوس ، لأن مملكة الفرس ومن أطاعهم من العرب كانت من جهة المشرق بالنسبة إلى المدينة .ا.هـ.


قال ابن عبد البر في التمهيد : (1/279 ) (وبها يطلع قرن الشيطان قال أبو عمر دعاؤه صلى الله عليه وسلم للشام يعني لأهلها كتوقيته لأهل الشام الجحفة ولأهل اليمن يلملم علما منه بأن الشام سينتقل إليها الإسلام وكذلك وقت لأهل نجد قرنا يعني علما منه بأن العراق ستكون كذلك وهذا من أعلام نبوته صلى الله عليه وسلم) أ. هـ. وقال أيضا017/12): (في هذا الحديث علم من أعلام نبوة رسول الله صلى الله عليه وسلم لإخباره بالغيب عما يكون بعده والفتنة ههنا بمعنى الفتن فأخبر صلى الله عليه وسلم عن إقبال الفتن من ناحية المشرق وكذلك أكثر الفتن من المشرق انبعثت وبها كانت نحو الجمل وصفين وقتل الحسين وغير ذلك مما المطلوب ذكره مما كان بعد ذلك من الفتن بالعراق وخراسان إلى اليوم )


وقال الشيخ العلامة الألباني - رحمه الله - في تخريجه لكتاب فضائل الشام ودمشق لأبي الحسن الربعي (ص26) : فيستفاد من مجموع طرق الحديث أن المراد من نجد في رواية البخاري ليس هو الإقليم المعروف اليوم بهذا الاسم ، وإنما هو العراق ، وبذلك فسره الخطابي والحافظ ابن حجر العسقلاني ... وقد تحقق ما أنبأ به عليه السلام ، فإن كثيرا من الفتن الكبرى كان مصدرها العراق ... فالحديث من معجزاته صلى الله عليه وسلم وأعلام نبوته .ا.هـ.

ومن استقرأ التاريخ علم أن مصداق هذه الأحاديث قد وقع منذ زمن الصحابة ومن بعدهم فكان قتل عثمان رضي الله عنه على أيدي أهل العراق ومن ما لأهم من أجلاف أهل مصر ، ومن العراق ظهر الخوارج ، والشيعة ، والرافضة ، والباطنية ، والقدرية ، والجهمية ، والمعتزلة .
وعن ابن عباس رضي الله عنهما قال دعا النبي صلى الله عليه وسلم : اللهم بارك لنا في صاعنا ومدنا ، وبارك لنا في شامنا ويمننا . فقال رجل من القوم يا نبي الله وفي عراقنا . قال : إن بها قرن الشيطان ، وتهيج الفتن ، وإن الجفاء بالمشرق .



ஒட்டகப் போர், ஸிஃப்பீன் யுத்தம் போன்ற போர்கள் நடந்ததும் இஸ்லாத்தை அழிக்க புறப்பட்ட கவாரிஜ்கள் ஜஹ்மிய்யாக்கள், கத்ரிய்யாக்கள், ஜப்ரியாக்கள் தோன்றியதும் இந்த ஈராக் பகுதியில் தான். இந்த விளக்கங்களை இமாம் ஹாஃபிள் இப்னு ஹஜர் அவர்கள் ஃபதஹுல் பாரீ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னால் அமேரிக்காவின் தாக்குதலுக்குள்ளாகிய ஈராக் அமேரிக்காவால் வெற்றிகொள்ளப்பட்டு தற்போது அமேரிக்காவின் அடிமையாக இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் குண்டு வெடிப்புகள் நடந்து நாடே நிம்மதியின்றி அல்லோலப்படுகின்றது. கப்ர் வணக்கம் தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்கள் நிறைந்திருப்பதும் இந்த ஈராக் நாட்டில் தான்.

இணைவைப்புக் காரியங்களிலும் பித்அத்தான் அநாச்சாரங்களிலும் ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது என்பதை இந்த செய்தியின் மூலம் நபியவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

ஷீஆக்கள், இந்த சமுதாயத்தில் இஸ்லாம் என்ற பெயரால் கப்று வணக்கக் குப்ரை முதல் முதலில் அரங்கேற்றியவர்கள்
என்பதை கப்று வணங்கிகள் அறிந்திருப்பார்களோ, என்னவோ தெரியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இறாக் தேசத்திலுள்ள நஜ்தில் பல ‘பித்னா’க் (குழப்பங்)கள் தோன்றின. அங்குதான் நபியவர்களின் பேரப்பிள்ளை, அலி (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

சில மனிதர்கள் இந்த நஜ்தை ஹிஜாஸிலு (சவுதியிலு)ள்ள நஜ்து என்று கருதுகிறார்கள். இறாக்கில் தோன்றிய அளவு ‘பித்னா’க்கள் ஹிஜாஸில் தோன்றவில்லை. ஆனால் ஹிஜாஸிலுள்ள நஜ்தில் தௌஹீத் தோன்றியது. உலகத்தார்கள் அனைவரையும் இந்தத் தௌஹீதுக்காகவே தான் அல்லாஹ் படைத்துள்ளான். இதனைப் பிரசாரம் செய்வதற்காகவே ரஸூல்மார்களை அனுப்பினான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சைகை செய்தது ஈராக்கையும், அதைச்சூழவுள்ள பிரதேசத்தை தான் என்பத சில ஹதீஸ்களை   வைத்தும் புரிந்து கொள்ளலாம்
ورد في صحيح مسلم :
[ حدثنا عبد الله بن عمر بن أبان وواصل بن عبد الأعلى وأحمد بن عمر الوكيعي واللفظ لابن أبان قالوا حدثنا ابن فضيل عن أبيه قال سمعت سالم بن عبد الله بن عمر يقول يا أهل العراق ما أسألكم عن الصغيرة وأركبكم للكبيرة سمعت أبي عبد الله بن عمر يقول : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الفتنة تجيء من هاهنا وأومأ بيده نحو المشرق من حيث يطلع قرنا الشيطان ، وأنتم يضرب بعضكم رقاب بعض ، وإنما قتل موسى الذي قتل من آل فرعون خطأ ، فقال الله عز وجل له " وقتلت نفساُ فنجيناك من الغم وفتناك فتونا " ]
موطأ مالك ج2/ص975


ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறுபாவத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பது வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிழக்குத்திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன்.
(இராக்வாசிகளே!) உங்களில் சிலர் சிலரது கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள். (அதைப் பற்றிக்கேட்டால் இறைத்தூதர் மூசா, ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைக் கொன்றதைச் சான்றாகக் கூறுவீர்கள்.) மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைத் தவறுதலாகவே கொன்றார்கள்.
எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம், "நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து நாம் காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்" (20:40) என்று கூறினான்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
( புகாரி5569. Book : 52 )

-----------------------------------------------------------------------------------------------------------------------

''நபி (ஸல்) அவர்கள், "கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (மறு பக்கமாக) வெலியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறி விடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்'' என்று சொன்னார்கள். "அவர்கலின் அடையாளம் என்ன?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மொட்டை போடுவது தான் (அவர்கüன் அடையாளம்)'' என்று பதில் சொன்னார்கள். ''அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 7562

இந்த ஹதீஸில் நடந்த சம்பவம் ஈராக்கையும் தை சூழவுள்ள பகுதியையுதான் என்பதை கீழே உள்ள ஹதீஸ் தெளிவு படுத்துகிறது
நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று கூறினார்கள்.
நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.( புகாரி 3610. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்)


கப்ரு வணங்கிகள் ஏகத்துவத்திற்கு எதிராக 
( புகாரி 5565. Book : 52)ஹதீஸைக் கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதிக்கு துஆச் செய்யாமல் விட்டுள்ளார்கள்.

இந்த நஜ்த் பகுதி என்பது தற்போதுள்ள ரியாத் எனவும் ரியாத் அரசு கப்ரு தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களை எதிர்க
க் கூடியது என்பதால் இதற்காக நபியவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் இவர்களின் இக்கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தங்களுடைய இஷ்டத்துக்கு தவறான விளக்கமளித்து தாங்கள் செய்யும் இணைவைப்புக் காரியங்களை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

இந்தச் செய்தியில் கூறப்படும் நஜ்த் என்பது எந்தப் பகுதி என்பதைச் சரியாக அறிந்து கொண்டால் இது அவர்களுக்கு எதிரான ஆதாரமாக இருப்பதை அறியலாம்.

click here to see   english version


**************************************************************

மேலும் சில பதிவுகள் ..

  1. ஹுனைப் ரலி நபிகளாரின் பொருட்டால் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  2. பிலால் ரலி கபுரை முத்தமிட்டாரா ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  3. அபு அய்யூப் அழ அன்சாரி கபுரை முத்தமிட்டாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  4. அவுலியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  5. ஒரு நல்லடியாருக்கு பல கபுருகள்..! காண  இங்கே கிளிக் செய்யவும் 
  6. சிலைகள் வேறு சமாதிகள் வேரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. முஷ்ரிக்குகள் அன்றும் இன்றும் .!அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  8. ஷிர்க் என்றால் என்ன ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  9. உணவளிக்கும் அதிகாரம் நபிகளாருக்கு உண்டா  ? தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. ஜியாரத்தின் இன்றைய நிலை என்ன ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  11. மதுகபுக்கும் இமாமுக்கும் தொடர்பு உண்டா  ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  12. கபுரின் மேல் சாயக்கூடது என்பது கபூர் கட்ட ஆதாரமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  13. இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  14. அப்துல்காதர் வரமாட்டார் நிரூபிக்க நாங்க தயார் .! சவாலை எதிர் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  15. நபிகளாருக்கு உதவி செய்த மூசா நபி ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  16. கேட்கமாட்டார்கள் என்றால் சலாம் சொல்வது ஏன்?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  17. அல்லாஹ் காட்டிய உதாரணம் தவறாகுமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  18. மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும்  ஒரு கொள்கை ஒப்பீடு கான இங்கே  கிளிக் செய்யவும் 
  19. இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?உமர் (ரலி ) முஹம்மதே முஹம்மதே என்று  அழைத்தார்களா கான இங்கே  கிளிக் செய்யவும் 
  20. கப்ருக்கு அறுத்துப் பலியிட்டு நேர்ச்சை செய்தல்  கான இங்கே  கிளிக் செய்யவும் 
  21. நாம் அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கின்றோம்  கான இங்கே  கிளிக் செய்யவும் 
  22. மஸ்ஜித் என்றால் என்ன ? கான இங்கே  கிளிக் செய்யவும் 
  23. நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா? கான இங்கே  கிளிக் செய்யவும் 
  24.  நபிமார்களின் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதா கான இங்கே  கிளிக் செய்யவும் 
  25. துல் குவைஸிரா' வின்  வாரிசுகள் யார்   என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் ஒரு கொள்கை ஒப்பீடு

லா இலாஹ இல்லல்லாஹ்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை

இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும்.

இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர்.

குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது.

"அல்லாஹ்வும் ஒரு இறைவன்' எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம் களாகி விட முடியாது.

ஏனெனில் "அல்லாஹ்வும் ஒரு இறைவன்' என்பதில் மக்கா காஃபிர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை.

இதில் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களை விட அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற் குரிய இறைவன் - வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்ல எனும் சித்தாந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் ஆவர்.

இந்த அளவீட்டின் படி, குர்ஆன் வசன சான்றுகளின் துணை கொண்டு அலசினால் அதற்கான விடை மக்கா காஃபிர்களுக்கும், தமிழக முஸ்லிம் களில் அனேகமானவர்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதாகத்தான் உள்ளது.

இறைக் கோட்பாடு தொடர்பாக மக்கா காஃபிர்களின் கொள்கை என்னவாக இருந்ததோ அதையே தான் இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வோர் கொண்டிருக்கின்றனர்.

ஒப்பீடு: 1

வானம் பூமியைப் படைத்தது யார்?

வானம் பூமியைப் படைத்தது யார் என்று இன்றைக்கு உள்ள முஸ்லிம் களிடம் கேட்டால் அல்லாஹ் என்பார்கள். இதையே மக்கா காஃபிர்களும் சொன்னார்கள் என்கிறது திருக்குர்ஆன்.

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர் களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.   அல்குர்ஆன் 31:25

"வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். அப்படியாயின் "எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?'' அல்குர்ஆன் 29:61

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள்.   அல்குர்ஆன் 43:9

ஒப்பீடு: 2

மழையைத் தருபவன் யார்?

வானிலிருந்து மழையைப் பொழிவித்து, மக்களை இரட்சிப்பவன் யார் என்று கேட்டால் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கூட மாறுபட்ட பதில்கள் வெளிப்படலாம். ஆனால் மக்கா காஃபிர்கள் சந்தேமற அல்லாஹ் தான் மழையைப் பொழிவிக்கிறான் என்று உறுதியாக நம்பினார்கள்.

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.  அல்குர்ஆன் 29:63

மழையை இறக்குபவன் அல்லாஹ் தான் எனும் நம்பிக்கையில் முஸ்லிம்களுக்கு சற்றும் சளைக்காத வர்களாக மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பதை இவ்வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பீடு: 3

மனிதர்களைப் படைத்தவன் யார்?

இந்த வினாவிற்கு மக்கா காஃபிர்கள், இன்றைய முஸ்லிம்கள் ஆகிய இரு சாராரும் அளிக்கும் பதில் அல்லாஹ் என்பது தான்.

இதோ மக்கா காஃபிர்களிடம் அவர்களைப் படைத்தது யார் என்று வினவினால் அவர்களும் அல்லாஹ் என்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர் அல்குர்ஆன் 43:87

ஒப்பீடு: 4

பூமி யாருக்குச் சொந்தம்?

வானம், பூமியைப் படைத்தது மட்டுமின்றி அவற்றை நிர்வகிப் பவனும், அதற்கு உரிமை படைத் தோனும் அல்லாஹ்வே என்பதும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதிலும் இப்போதுள்ள முஸ்லிம்களுடன் ஒன்றுபடவே செய்கின்றனர்.

இதைப் பின்வரும் வசனத்தில் அறியலாம்.
"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! அல்குர்ஆன் 23:84, 85

ஒப்பீடு: 5

அர்ஷின் அதிபதி யார்?

அர்ஷ் என்றால் என்னவென்று சில முஸ்லிம்களே அறியாத நிலையில் உள்ளனர். ஆனால் அர்ஷின் அதிபதி யார் என்று முஹம்மது நபியவர்கள் மக்கா காஃபிர்களிடம் கேட்டால் அதற்கும் அவர்கள் அல்லாஹ் என்பார்களாம்.

"ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷின் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! அல்குர்ஆன் 23:86, 87

இவ்வசனத்தின் பிரகாரம் இப்போதுள்ள முஸ்லிம்களை விட சற்றுத் தெளிவு உள்ளவர்களாகவே மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது.

ஒப்பீடு: 6

பெரும் துன்பத்தைப் போக்குபவன் யார்?

மக்கா காஃபிர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தத் தகவல் நம்மில் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.

உலகில் தங்களுக்கு ஏற்படும் பேரிடரை, பெரும் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் மட்டுமே என்று மக்கா காஃபிர்கள் உறுதியாக நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை இன்றுள்ள முஸ்லிம்களிடம் கூட சற்று குறைவாகத் தான் பார்க்க முடிகிறது.

கல் தடுக்கி கீழே விழும்போது கூட, "அம்மா' என்றோ "முஹ்யித்தீனே' என்றோ அழைப்பவர்கள் நம்மில் அதிகம் உள்ளனர்.

அப்படியிருக்க பெரும் துன்பத்தின் போது மட்டும் இவர்களுக்கு அல்லாஹ்வா ஞாபகத்திற்கு வரப் போகிறான்?

இதோ இந்த விஷயத்தில் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடத் தெரிவிக்கின்றான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக் கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. அல்குர்ஆன் 31:32

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.அல்குர்ஆன் 29:65

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் (அவனைப்) புறக்கணிக் கிறீர்கள். மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.  அல்குர்ஆன் 17:67

ஒப்பீடு: 7

நம்பிக்கையின் உச்சம்

அல்லாஹ்வை பற்றிய மக்கா காஃபிர்களுடைய நம்பிக்கையின் உச்சமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

"பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!அல்குர்ஆன் 23:88, 89

எல்லாவற்றையும் அல்லாஹ்வே பாதுகாக்கிறான்

அல்லாஹ்வுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை

அனைத்து பொருளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

இவைகள் யாவும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

சுப்ஹானல்லாஹ்.

தமிழக முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி என்னென்ன நம்பிக்கைகள் உள்ளனவோ அவற்றில் பெரும்பாலானவை மக்கா காஃபிர்களிடம் இருந்துள்ளன.

சில விஷயங்களில் இன்றுள்ள முஸ்லிம்களை விட அதிகத் தெளிவு உள்ளவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

அப்படியிருந்தும் அவர்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. காஃபிர்களாகவே அடையாளப்படுத்துகிறான்.

திருக்குர்ஆனின் வழிநெடுக காஃபிர்களே, இறை மறுப்பாளர்களே என்று அல்லாஹ் அழைப்பது இந்த மக்களை நோக்கித் தான்.

அல்லாஹ்வைப் பற்றி பரவலான, அதிகமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருந்தும் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகளே என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டும் ஏன் இறைவன் அவர்களை முஸ்லிம் களாக ஏற்றுக் கொள்ளவில்லை?

இது தான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கியத் தருணமாகும்.

அல்லாஹ்வைப் பற்றிய பெரும் பாலான நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தும் அல்லாஹ்வுக்கு இணை உண்டு என அவர்கள் நம்பியது தான் அல்லாஹ் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காததற்கு முக்கியக் காரணமாகும்.

"காஃபிர்களே' என்று இம்மக்களை நோக்கி அல்லாஹ் அழைப்பதன் பின்னணியிலும் இதுவே உள்ளது.

பரிந்துரையை வேண்டுதல்

அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.

சில குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவைகளுக்கு அவர்கள் செலுத் தினார்கள். அவர்களிடம் பரிந்துரையை வேண்டினார்கள். ஆகவே தான் இறைவன் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமல் காஃபிர்கள் என்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங் களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங் களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!அல்குர்ஆன் 10:18

இதே ஒற்றுமை, காரணம் இப்போதுள்ள முஸ்லிம்களிடமும் உள்ளது.

இவர்களும் அவ்லியாக்கள் மகான்கள் என்று சிலரை (குட்டித் தெய்வங்கள்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களை இறைவனுக்கு இணையாக்குகின்றனர்.

அவர்களிடம் பிரார்த்தனை புரிகிறார்கள்; ஸஜ்தா செய்கின்றனர்; பரிந்துரையை வேண்டுகிறார்கள்.

ஏன் இவர்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், "நாங்கள் இவர்களை வணங்கவில்லை; இவர்கள் அல்லாஹ் விடம் எங்களை நெருக்கி வைப்பார்கள்; அதற்காகத்தான் இந்த வழிபாடு' என்கிறார்கள்.

இதே பதிலைத் தான் குட்டித் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கா காஃபிர்களும் கூறினார்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்க வில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 39:3

ஆக இணைவைப்பிலும் அதை நியாயப்படுத்தக் காரணம் கூறுவதிலும் கூட அப்படியே மக்கா காஃபிர்களை இந்த முஸ்லிம்கள் ஒத்துள்ளனர்.

இடைத்தரகர் ஏற்படுத்தல்

இறைவனை நெருங்க வேண்டு மானால் ஒரு இடைத்தரகர் தேவை என்ற நம்பிக்கை மக்கா காஃபிர்களிடம் இருந்தது.

அதனால் தான் அல்லாஹ் அம்மக்களிடம் நான் நெருக்கமாகவே இருக்கிறேன். என்னை நெருங்க எந்த இடைத்தரகரும் தேவையில்லை என்று அறிவிப்புச் செய்கிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன் 2:186

தர்காவை வழிபடும் முஸ்லிம் களிடமும் மக்கா காஃபிர்களின் இந்த நம்பிக்கை உள்ளது. அல்லாஹ்வை நாம் நேரடியாக நெருங்க முடியாது. அவ்லியாக்கள், மகான்களின் பரிந்துரை தேவை என்று முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். தர்ஹா வழிபாட்டைக் கூட இறைவனை நெருங்குவதற்காகவே செய்கிறோம் என்று பிதற்றுகின்றனர்.

சிலை வழிபாடு

மக்கா காஃபிர்களிடம் சிலை வழிபாடு இருந்தது. பொய்யான கற்பனைக் கதாபாத்திரங்களை கற்சிலைகளாக வடித்து அவற்றை இணை தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர்.

கஃபாவினுள்ளே பல நபிமார் களின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா?  உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அல்குர்ஆன் 53:20-23

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1601, 3352, 4289,

மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாடும் இப்போதுள்ள முஸ்லிம்களிடம் தன்மை மாறாமல் அப்படியே, நிறையவே உள்ளது.

பல இடங்களில் கற்பனை பாத்திரங்களைச் சொல்லி அவற்றின் பெயரில் அடக்கத்தலங்கள், தர்காக்கள். சில இடங்களில் நல்லடியார்கள், மகான்கள் என்று சொல்லி அவர்களின் பெயரில் பள்ளிவாசலிலேயே சமாதிகள். அவற்றின் மேல் போர்வை கள், பூமாலைகள், சந்தனங்கள், ஊதுபத்திகள், அவற்றுக்கு முன் ஸஜ்தா செய்வது, பிரார்த்தனை புரிவது என மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாட்டிற்கும் இந்த முஸ்லிம்களிடம் கொஞ்சமும் குறைவில்லை.

கூத்து, கும்மாளம்

வணக்கம் என்ற பெயரில் சீட்டியடிப்பது, கும்மாளமிடுவது என்பன போன்ற காரியங்களில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று குர்ஆன் சொல்கின்றது.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)  அல்குர்ஆன் 8:35

தர்காவை வழிபடும் முஸ்லிம்களும் வணக்கம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றனர்; கும்மாளமிடுகின்றனர்.

இருட்டு திக்ர், ராத்திபு ஜல்ஸாக்களில் இவர்கள் போடும் ஜல்சா ஆட்டம் உலகம் அறிந்த ஒன்றே!

வணக்கம் என்கிற பெயரில் அவர்களாவது கைதட்டினர்; சீட்டி எழுப்பினர். இவர்களோ இசைக் கருவிகளை வைத்து இசைக்கின்றனர்.

இறை நம்பிக்கையில் இவர்களை அவர்கள் மிஞ்சினார்கள்.

கூத்தடிப்பதில் அவர்களை இவர்கள் மிஞ்சுகிறார்கள். என்னவொரு போட்டா போட்டி?

அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வின் பெயர்களைத் திரித்துக் கூறும் பாவச் செயலில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டார்கள் என்றும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அல்குர்ஆன் 7:180

இன்றைய முஸ்லிம்கள் அதற்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போன்று இதிலும் மல்லுக் கட்டிக்கொண்டு ஈடுபடுகின்றனர்.

அல்லாஹ்வின் அழகான பெயர்களை அநியாயத்திற்கு சிதைத்து சின்னாபின்னாமாக்கும் கண்டனத்திற்குரிய பாவத்தை மக்கா காஃபிர்களைப் போலவே இவர்களும் அரங்கேற்றுகிறார்கள்.

அல்லாஹ் என்பதை ஹூஹூ என்றும் அஹ் அஹ் என்றும் இன்னும் பல பெயர்களை, பலவாறாக திரித்துக் கூறி அதையும் வணக்கம் என்று சொல்லித் திரிகின்றனர்.

இப்படி இறை நம்பிக்கை, வழிபாடு என எல்லாவற்றிலும் மக்கா காஃபிர் களைப் பிரதிபலிக்கும் இவர்கள் யார்?

அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பிக் கொண்டே இத்தகைய காரியங்களில் ஈடுபட்ட அவர்கள் காஃபிர்கள் என்றால்...

அதைத் தங்கள் வாழ்வில் அப்படியே ஒத்திருக்கும் இவர்கள் மட்டும் முஸ்லிம்களா?

இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே செயல்பாடு, ஒரே வழிபாடு.

ஆனால் அவர்கள் காஃபிர்கள், இவர்கள் முஸ்லிம்கள் என்றால் இது எப்படி நியாயம்?

நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஒப்பீடுகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்.

இன்னின்ன செயல்பாடுகளைக் கொண்டிருந்த மக்கா வாழ் மக்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக் காமல் காஃபிர்கள் என பகிரங்க அறிவிப்புச் செய்கிறான் எனில் அவர்களது நிலையை ஒத்திருக்கும் முஸ்லிம்களுக்கும் இறைவனின் தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம்.
ஏகத்துவம் 2016/02
R. அப்துல் கரீம் misc