"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மத்ஹபுக்கும் இமாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். “உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி” எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.
    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.

    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி “முஅத்தா முஹம்மது” என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் “இமாமுல் அஃலம்” எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.

    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.

இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
 ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
  நூல்கள் ஹிஜ்ரிநூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  9.ஜாமிஉல்ருமூஸ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  13.சல்பீ 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  14.பஹ்ரு ராயின் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  15.தன்வீர் அப்ஸார் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  16.தகீரா 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  17.துர்ருல் முக்தார் 11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
  18.ஃபதாவா ஆலம்கீரி 12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்
 இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள “ஃபதாவா ஆலம்கீரி” மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் “ஃபத்வா” (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.

    இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய “முஅத்தா மாலிகி” நூலுக்கு விளக்கம் தந்து “அவ்ஜஜுல் மஸாலிக்” என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் “முஹன்னஃபுல் மாலிகி” மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.

    எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.

    அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?
இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?

இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலச இங்கே கிளிக் செய்யவும்
நபியவர்களின் மத்ஹப் எது
    தெளிவு பெற இங்கே கிளிக் செய்யவும் 

கப்ரின் மேல் சாயக்கூடாது என்பதில் கப்ர் கட்ட ஆதாரம் உண்டா?

இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு தீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு
என்று கூறி அ்ஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

அந்தச் செய்தி இதுதான்.

حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ‏مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ

அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.    நூல் : அ்மத் 20934

கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.

எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.

பதில்

முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தி ஹாகிம் 6502, ஷர் மஆனில் ஆஸார் 2944 இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153

எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு போதும் நிறுவ முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?

பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.

நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.

எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, வயின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.

நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.

மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 5:3

வலிமார்(?)களின் கப்ருகள் இடிக்கப்பட வேண்டியவை

வலிமார்களின் கபுருகள் இடிக்கப்பபட வேண்டியவை அல்ல  மாறாக கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை என்ற கருத்தில் கப்ர் வணங்கி ஒருவர் ஒரு கட்டுரையை எழுதி அதில் ஆதாரம் என்ற பெயரில் பல தவறான, அபத்தமான வாதங்களையும் முன்வைத்திருந்தார்.
அதற்குரிய விளக்கத்தை கப்ர் வழிபாட்டை  நியாயப்படுத்த பின்வருமாறு வாதத்தை எழுப்புகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ர் கட்டப்படக் கூடாது, இடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக கப்ரை சீராக்கி, அழகாக்குமாறுதான் நமக்கு உத்தரவிடுகிறார்கள்.
عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ رواه مسلم
உயரமான எந்தக் கப்ரையும் அழகுபடுத்தாமல் விட்டு விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நபிமொழி)
இதனைத்தான் தவ்ஹீத்
கொள்கையில் இருப்பவர்கள் மாற்றி, மறைத்து கப்ர் கட்டப்படக் கூடாது. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ரை இடிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
உயரமான கப்ர்களைக் கண்டால் சீராக்க வேண்டும் என்ற மேற்கண்ட தீஸில் ஸவ்வா எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அழகுபடுத்தல், சீராக்குதல் என்பதுதான் பொருள். குர்ஆனில் இச்சொல் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் சீராக்குதல் என்ற பொருளில்தான் வருகிறது. எங்கேயும் இடித்தல் என்ற பொருளில் வரவேயில்லை.

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [البقرة : 28 ، 29
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.(அல்குர்ஆன் 2:29)

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ [السجدة : 9]
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.(அல்குர்ஆன் 32:9)
உதாரணமாக இந்த இடங்களில் எல்லாம் ஸவ்வா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு இடித்தல் என்று பொருள் செய்யவே இயலாது. அப்படி பொருள் செய்தால் வசனத்தின் கருத்தே அனர்த்தமாகி விடும்.
எனவே உயரமான கப்ருகளைச் சீர்படுத்துமாறுதான் அலி அவர்களுக்கு நபிகள் நாயகம் உத்தரவிட்டுள்ளார்கள். இடிக்குமாறு உத்தரவிடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தவறாக பொருள் செய்து கப்ருகளை நபிகள் நாயகம் இடிக்கச் சொன்னார்கள் என்று கூறிவருகிறார்கள்.
பதில்:
இது தான் அவர்களின் மற்றுமொரு வாதமாகும். இதன் மூலம் சமாதி வழிபாட்டை மார்க்க அடிப்படையில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.
சவ்வா என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் தரைமட்டமாக்குதல் என்பது கிடையாது. சீர்படுத்துதல் என்பதுதான் பொருள். சீர்படுத்துதல் என்பதோடு எதைக் கூறுகிறோமோ அதைக் கவனித்து தான் சவ்வா என்பதற்கு பொருள் செய்ய வேண்டும்.
கிழிந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஆடையைத் தைக்க வேண்டும் என்பது அர்த்தம். உடைந்ததைச் சீர்படுத்துங்கள் என்றால் ஒட்டுவது என்று அர்த்தம். மேடாக உள்ளதை சீர்படுத்துவது என்றால் சமமாக்குதல் என்று அர்த்தம். பள்ளமாக இருப்பதை சீர்படுத்துதல் என்றால் உயர்த்துவது என்று அர்த்தம்.
எதுவும் கூறாமல் சீர்படுத்துங்கள் என்றால் அழகுபடுத்துங்கள் என்று பொருள். உயரமாக உள்ளதைச் சீர்படுத்து என்று கூறினால் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
இதனைப் பின்வரும் தீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ فَأَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رِدْفُهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجّ
َارِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا قَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ قُبُورُ الْمُشْرِكِينَ وَفِيهِ خَرِبٌ وَفِيهِ نَخْلٌ فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் "பனூ அம்ர் பின் அவ்ஃப்' என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாக தமது) வாட்களைத் தொங்கவிட்ட படி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி)தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் வாகனம் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கியது. தொழுகை நேரம் தம்மை வந்தடையும் இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி பணித்தார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். (அவர்கள் வந்தபோது), "பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்'' என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர். நான் உங்களிடம் கூறும் கீழ்க்கண்டவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணைவைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சில பேரீச்சை மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டனர்.
பள்ளிவாசலின் (கதவின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். "ரஜ்ஸ்' எனும் ஒரு வித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர்.
"இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே (மறுமையின் நன்மைகளுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முாஜிர்களுக்கும் நீ மன்னிப்பிப்பாயாக!''என்று நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அவர்களுடன் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) இருந்தார்கள்.நூல் :புகாரி - 428

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி இருந்த இடத்தில் கப்ருகள் இருந்தன எனவும், சின்னஞ்சிறு சுவர்கள் இருந்தன எனவும், அதனைத் தரைமட்டமாக்கத் தான் நபி (ஸல்) அவர்கள் உத்தவிட்டார்கள் எனவும் வந்துள்ளது. இதில் தரைமட்டமாக்க சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குட்டிச்சுவரை அலங்காரப்படுத்துங்கள் என்று பொருள் செய்ய முடியுமா?
அதுபோலத்தான் கப்ருகளைச் சீர்படுத்துதல் என்பதன் பொருள்,
நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.
மேலும் ஸவ்வா என்று குர்ஆனில் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் அழகுபடுத்தல் என்பது தான் பொருள் எனும் கப்ர் வணங்கிகளின் வாதமும் முற்றிலும் தவறானதாகும்.
கீழ்க்காணும் வசனம் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]
(ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் "தம்மை பூமி விழுங்கி விடாதா?'' என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.(அல்குர்ஆன் 4:42)
மேற்கண்ட வசனத்திலும் சவ்வா என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பூமியில் எங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எ னப் பொருள் செய்ய முடியுமா?
எனவே சவ்வா என்பதற்கு, அது எதோடு சேர்ந்து வருகிறதோ அதைக் கவனித்தே பொருள் செய்ய வேண்டும்.
கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிற காரணத்தால் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரை சமமாக்க வேண்டும் என்பதுதான் இந்த ஹதீஸின் பொருள் என்பதை எளிதாக உணரலாம்.
கப்ர் கட்டுவது கூடாது; ஆனால் கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிப்பொருளுக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த தீஸுக்கு மட்டும்தான் இப்படி கிறுக்குத்தனமாக உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் தீஸ்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. கப்ரைக் கட்டக் கூடாது என்றால் கட்டலாம் என்று பொருள். பூசக் கூடாது என்றால் பூசலாம் என்று பொருள் என்று பதில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கப்ரின் மேல் சாயக்கூடாது என்பதில் கப்ர் கட்ட ஆதாரம் உண்டா?
இன்னொரு சாரார் கப்ர் கட்டுவதற்கு ஹதீஸ்களில் தெளிவான ஆதாரம் உண்டு என்று கூறி
அஹ்மதில் இடம்பெறும் ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.
அந்தச் செய்தி இதுதான்.
حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ أَنَّ ابْنَ حَزْمٍ إِمَّا عَمْرٌو وَإِمَّا عُمَارَةُ قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ فَقَالَ انْزِلْ عَنْ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ
அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்: நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபிகள் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நூல் : அ்மத் 20934
கப்ரின் மேல் சாயக்கூடாது என்று இச்செய்தியில் நபிகள் நாயகம் தடை செய்துள்ளார்கள். சாயும் அளவு கப்ர் கட்டப்பட்டு இருந்தால் தான் அதில் சாய்ந்து கொள்ளவோ அல்லது சாய்ந்து கொள்ளக் கூடாது என்று கூற முடியும்.
எனவே சாயக்கூடாது என்று தடுத்த நபிகள் நாயகம் சாயும் அளவு கப்ர் கட்டடம் கட்டப்பட்டுள்ளதைத் தடுக்கவில்லை. எனவே கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக அமைகின்றது.
இவ்வாறு ஒரு வாதம் எழுப்புகின்றனர்.
முதலில் இது ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தி ஹாகிம் 6502, ஷர் மஆனில் ஆஸார் 2944 இன்னும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு லீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
பார்க்க நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64,தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153
எனவே இதை ஆதாரமாக்க் கொண்டு கப்ரைக் கட்டலாம் என்பதை ஒரு பாேதும் நிருவமுடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ர் உயரமாக இல்லையா?
பரேலவிகள் நரகில் தள்ளும் தர்கா வழிபாட்டை சரிகாண நபிகள் நாயகம் மற்றும் சில நபித்தோழர்களின் கப்ர்கள் உயரமாக இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் கப்ரின் அமைப்பிற்கும் நபிகளாருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் இறந்து விட்ட பிறகு அவர்களின் கப்ரை ஒருவர் குறிப்பிட்ட அமைப்பில் அமைப்பதால் அதற்கு நபிகளாரின் அங்கீகாரமோ, இஸ்லாமிய மார்க்கத்தின் அங்கீகாரமோ உண்டு என்பதாகாது.
நபிகள் நாயகம் உயிருடன் உள்ளபோதே இஸ்லாமிய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. நபிகளாரின் இறப்பிற்குப் பிறகு நடக்கும் எந்தச் செயலும் இஸ்லாமாகாது.
எனவே கப்ர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதரின் போதனை என்ன என்பதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர நபிகளாரின் இறப்பிற்குப் பின் நடைபெற்ற, விஹியின் தொடர்பு இல்லாத ஏனைய மனிதர்கள் நபிகள் நாயகம் கப்ரை எப்படி அமைத்தார்கள் என்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவது அறிவீனத்தின் உச்சமாகும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் எப்படி உள்ளது என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் கவனிப்பு இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய விஷயம்.
மேலும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் கப்ரின் மேல் கட்டடம் கட்டுவது கூடாது என்று தெளிவாக தடை செய்வதால் நபிகளாரின் கப்ர் கட்டப்பட்டு இருந்தால் கூட அப்போதும் ஆதாரமாகாது.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 5:3
ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்தலாம் என்று இமாம் நவவீ அவர்கள் கூறிய கூற்றில் ஏதோ கப்ர் கட்ட ஆதாரம் இருக்கிறது என்றெண்ணியவர்கள் அதே நவவீ அவர்கள் தனது மின்ஹாஜ் எனும் நூலில் நேரடியாக கப்ர் கட்டுவது பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க தவறிவிட்டார்கள்.
منهاج الطالبين وعمدة المفتين - (1 / 85)
وَيُكْرَهُ تَجْصِيصُ الْقَبْرِ وَالْبِنَاءُ وَالْكِتَابَةُ عَلَيْهِ. وَلَوْ بُنِيَ فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ هُدِمَ.
கப்ரை பூசுவது, கட்டடம் எழுப்புவது அதன் மீது எழுதுவது ஆகியவை வெறுப்பிற்குரியாதாகும்.
மின்ஹாஜூத் தாலிபீன் 1 பக் 85

கப்ர் கட்டுவது வெறுப்பிற்குரியது என்று தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
அத்தகைய நவவீ இமாம் அவர்கள் மண்ணறை ஒரு சாண் அளவு தரையிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏதோ கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறியது போல் ஜோடனை செய்து மக்களிடம் பரப்புகிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கயவர்கள் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
மேலும் மற்றுமொரு முக்கிய மத்பு இமாம் அபூனிபா அவர்கள் கூறியதையும் பாருங்கள்.
حاشية رد المختار على الدر المختار - (2 / 237(
وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه مسلم وغيره
அபூனிபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.
ரத்துல் முக்தார் பாகம் 2 பக் 237

இப்படி தங்கள் மனோஇச்சைக்குத் தகுந்த படி இமாம்களின் கூற்றை வளைக்கிறார்கள் எனில் இவர்களிடம் சத்தியம் இருக்குமா என்பதையும் இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ள உண்மையுன்டா என்பதையும் நியாயவான்கள் சிந்திக்க வேண்டும்......
******************************************************************************

மேலும் சில பதிவுகள் .....


  1. இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. ஸவ்வா என்றால் உடைத்தலா ? அழகு படுத்தலா ? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  3. நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?  அறிந்துகொள்ள  இங்கே கிளிக் செய்யவும் 
  4. மதுகப் வாதிகளே  பதில் தாருங்கள்  கேளிவியை  காண இங்கே கிளிக் செய்யவும் 
  5. குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  7. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  10. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  12. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  15. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  19. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  20. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  21. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  22.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  23. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்