"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள்

கபுருகளை வணங்காதீர்கள் என்று நாம் கூறும்போது ....வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறி

என்னுடைய ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள்

 என்று கபுரை வணங்கும் பரலேவிகள் ஒரு பலவீனமான ஹதீஸை காட்டுவார்கள் 
இவர்கள் காட்டும் ஆதாரத்தின் நிலையயும் அதற்கான பதில்களையும் அறிந்து கொள்வோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

 اطلبوا الحوائج الي ذوي الرحمة من امتي
 
 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.' (ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.)

பதில் 1

இது பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதில் இவர்களின் குட்டும் அம்பலமாகிறது.
இச்செய்தி இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் பைஹகீ, தப்ரானீயில் இல்லை. மாறாக இப்னு அஸாகிரின் தாரீகு திமிஷ்க் பாகம் 43 பக்கம் 5 மற்றும் இப்னு முன்தஹ் அவர்களின் மஜாலிஸ் பக் 33 உள்ளிட்ட நூல்களில் தான் இவர்கள் குறிப்பிடும் வாசகத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்செய்திகளில் உள்ள பலவீனத்தை அறியும் முன் இதற்கு இவர்கள் செய்த பொருள் சரியா? என்பதை பார்ப்போம்.

اطلبوا الحوائج الي ذوي الرحمة

என்ற வார்த்தைக்கு ரஹ்மத்தான கூட்டத்தார்களிடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று பொருள் செய்து ரஹ்மத்தான கூட்டத்தார் என்றால் அவர்கள் தான் வலீமார்கள், நாதாக்கள். அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என வியாக்கியானம் அளிக்கிறார்கள்.

இச்சொல்லுக்கான அர்த்தம் இதுவல்ல. இவர்கள் குறிப்பிடும் பொருளில் இச்செய்தி இல்லை.

மனிதர்களிடம் துஆ செய்வதைப் பற்றி இச்செய்தி பேசவில்லை. யாசகம், பொருளாதார உதவி கேட்பது பற்றித்தான் இச்செய்தியில் சொல்லப்படுகிறது. யாரிடம் யாசகம் கேட்கலாம் - யாரிடம் கேட்கக் கூடாது என்பதை தான் இச்செய்தி சொல்கிறது என்பதை அதன் முழுமையான மொழிபெயர்ப்பை அறியும் போது தெரியலாம்.

اطلبوا الحوائج إلى ذوي الرحمة من أمتي ترزقوا وتنجحوا فإن الله يقول رحمتي في ذوي الرحمة من عبادي ولا تطلبوا الحوائج عند القاسية قلوبهم فلا ترزقوا ولا تنجحوا

என் சமுதாயத்தில் உள்ள இரக்கமுடையோரிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள். அப்போது தான் உணவளிக்கப்படுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். எனது அருள் என் அடியார்களில் உள்ள இரக்கமுடையோருக்குத்தான் என்று அல்லாஹ் கூறியுள்ளான். கடின சித்தம் கொண்டோரிடம் தேவைகளைக் கேட்காதீர்கள். அவர்களிடம் கேட்டால் நீங்கள் உணவளிக்கப்பட மாட்டீர்கள். வெற்றியும் கிடைக்காது என நபிகள் நாயகம் கூறினார்கள்.

ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், அருள் என பல அர்த்தங்கள் உள்ளன.
ரஹ்மத் உடையோரிடம் கேட்டால் உணவு கிடைக்கும் என்றால் இந்த ரஹ்மத் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

இரக்கம் உள்ளவனிடம் யாசகம் கேட்டால் தான் அவன் எதையாவது தருவான். உண்ண உணவு கிடைக்கும்; கடுகடுப்பான நபர்களிடம் கேட்டால் அவர்கள் எதையும் தரமாட்டார்கள், உண்ண உணவும் கிடைக்காது என்றும் தான் இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே இது மனிதர்களிடம் யாசகம், பொருளாதார உதவி கேட்பதைப் பற்றித் தான் குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்.
மற்றபடி மனிதர்களிடம் துஆச் செய்து உங்கள் தேவைகளைக் கேளுங்கள் என்று இந்த பலவீனமான செய்தியில் (கூட) இல்லை.
ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லும் பொருளில் தான் இச்செய்தி உள்ளது என்றாலும் அப்போதும் இது ஏற்கப்படாது. காரணம் இது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இப்னு அஸாகிரின் அறிவிப்பில் கல்ஃப் பின் யஹ்யா என்பார் இடம் பெறுகிறார்.
الجرح والتعديل (3/ 372)

1697 - خلف بن يحيى الخراساني بخارى

وسألته عنه فقال: متروك الحديث كان كذابا لا يشتغل به ولا بحديثه
இவரை அபூஹாதம் அவர்கள் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர், பொய்யர், இவரும் இவரது ஹதீஸ்களும் கண்டு கொள்ளப்படாது என்று விமர்சித்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 3 பக்கம் 372

மேலும் இதில் இடம்பெறும் அலீ பின் தாஹிர் அல்குரஷீ என்பவரின் நம்பகத்தன்மை ஹதீஸ் கலை அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை.
இப்னு முன்தஹ் அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஹாரிஸ் என்பார் இடம்பெறுகிறார்.
இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று அறிஞர்களால் சந்தேகிக்கப்படுபவர் ஆவார்.

நம்பகமானவர்கள் பெயரில் அரிதானவைகளைச் சொல்கிறார் என்று ஹாகிம் அவர்களும் பலவீனமானவர் என்று அபூஸூர்ஆ அவர்களும் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என்று அபூஹாதம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இன்னும் பல விமர்சன்ங்கள் இவர் மீது உள்ளது.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 496

அடுத்து இதில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் மர்வான் என்பவரையும் அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயி மற்றும் அபூஹாதம் அவர்களும் மதிப்பற்றவர் என்று ஸஃதீ, நம்பகமானவர் அல்ல என்று இப்னு மயீன் அவர்களும் இவரது செய்திகள் கண்டிப்பாக எழுதப்படாது என்று புகாரி அவர்களும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க தஹ்தீபுல் கமால் பாகம் 26 பக்கம் 392, 393


அந்தோ பரிதாபம்
கப்ர் வணங்கிகளின் நிலையைக் கண்டால் உண்மையில் பரிதாபமாகவே உள்ளது.
மிகவும் பலவீனமான செய்தியைக் கூட உள்ளதை உள்ளபடி கூறி தங்கள் கருத்தை நிலைநாட்ட இவர்களால் முடியவில்லை. மிகவும் பலவீனமான செய்தி, மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அதன் யதார்த்த அர்த்தத்தை மாற்றி தங்கள் சொந்தச் சரக்குகளை உள்ளே திணித்தால் மட்டுமே தங்கள் கருத்தை நிலைநாட்ட முடியும் எனும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கப்ர் வணக்கத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகம் அந்த இழிநிலைக்கும் இவர்களை இட்டுச்சென்று விட்டது என்பதை இது பளிச்சென்று காட்டுகிறது.

தப்ரானியில் என்ன உள்ளது?

இவர்கள் தப்ரானியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்கள் அல்லவா?
இவர்கள் குறிப்பிட்ட தப்ரானீயில் அபூஹூரைராவின் அறிவிப்பாக பின்வரும் வாசக அமைப்பில் உள்ளது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"اطْلُبُوا الْحَوَائِجَ إِلَى حِسَانِ الْوُجُوهِ".
அழகிய முகம் கொண்டவர்களிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள்.
தப்ரானீ பாகம் 19 பக்கம்  309

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அழகானவர்களிடம் துஆச் செய்யலாம், அழகற்றவர்களிடம் துஆச் செய்யக் கூடாது என்று கப்ர் வணங்கிகள் வாதிடுவார்கள் போலும். வாதிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இமாமைப் பள்ளியில் சேர்க்க அவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொன்னவர்கள் அவ்லியா என்றால் அவர் அழகாக இருக்க வேண்டும், அழகான அவ்லியாவிடம் தான் நாம் துஆச் செய்ய முடியும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்பட என்னவுள்ளது?

இந்தச் செய்தியின் பொருள் என்ன என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதுவும் பலவீனமான செய்தியே.

தப்ரானியின் அறிவிப்பில் தல்ஹா பின் அம்ர் இடம்பெறுகிறார்.
இவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று அஹ்மத் மற்றும் நஸாயி அவர்களும் இவர் ஒரு பொருட்டாக கருதப்பட மாட்டார் என்று புகாரி அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் ஹதீஸில் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார் என்று இப்றாஹீம் பின் யஃகூப் அவர்களும் விமர்சித்துள்ளனர்.
தஹ்தீபுல்  கமால் பாகம் 13 பக்கம் 427

ஜாபிர் (ரலி) அறிவிப்பு

இதே செய்தி  தமாமுர் ராஸி அவர்களின் ஃபவாயித் எனும் நூலில் ஜாபிர் (ரலி) அறிவிப்பாக உள்ளது.
இதில் இடம்பெறும் சுலைமான் பின் கராஸ் மற்றும் உமர் பின் சுஹ்பான் ஆகிய இரு அறிவிப்பாளர்களுமே பலவீனமானவர்கள் ஆவர். அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுலைமான் பின் கராஸை இப்னு அதீ, அபூஹாதம் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 23

அவரது அதிகமான செய்திகளில் தவறு உள்ளது என்று உகைலீ குறிப்பிடுகிறார்.
அல்லுஅஃபாஉ லில் உகைலீ பாகம் 2 பக்கம் 138

உமர் பின் சுஹ்பானை புகாரி மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.
தாரீகுல் கபீர் பாகம் 6 பக்கம் 165

அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 6 பக்கம் 116

தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில்
المعجم الأوسط (5/ 76)
قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم
எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
முஃஜமுல் அவ்ஸத் பாகம் 5 பக்கம் 76

இச்செய்தியில் முஹம்மத் பின் மர்வான் என்பவர் இடம் பெறுகிறார். அவரது விமர்சனம் முந்தைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.
ميزان الاعتدال (4/ 219)
 موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى
كذبه أبو زرعة، وأبو حاتم.
وقال النسائي: ليس بثقة.
وقال الدارقطني وغيره: متروك.
قال الاسدي: فلم أعد إليه.
وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث.
وقال ابن عدى: كان يسرق الحديث.
இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரைப் பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 219

மேலும் இறுதியாகக் குறிப்பிட்ட இச்செய்தியில் இவர்கள் சொன்ன கருத்து எதுவுமில்லை. நாம் முன்னர் சொன்ன கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த பலவீனமான செய்தி அமைந்துள்ளது. அதாவது உணவோ பொருளாதார உதவியோ கேட்பதாக இருந்தால் இரக்கமுள்ளவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு தந்து வாழ்வளிப்பார்கள் என்று தான் இதன் பொருள் அமைந்துள்ளது.

இந்தச் செய்தியும் பல்வேறு வாசக மாற்றங்களுடன் வரும் இச்செய்தியின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
 -- onlinepj.in ---

-------------------------------------------------------------------------------
 حديث (اُطْلُبُوْا الْحَوَائِجَ إلى ذَوِي الرَّحْمَةِ ... ) 
"اُطْلُبُوْا الْحَوَائِجَ إلى ذَوِي الرَّحْمَةِ مِنْ أُمَّتِي تُرْزَقُوْنَ وَتَنْجَحُوْا، فَإنَّ اللهَ تَعَالىَ يَقُوْلُ: " رَحْمَتِي فِي ذَوِي الرَّحْمَةِ مِنْ عِبَادِي، وَلاَ تَطْلُبُوْا الحَوْائِجَ عِنَّدَ الْقَاسِيَةِ قُلُوْبُهُمْ، فَلاَ تُرْزَقُوْا وَلاَ تَنْجَحُوْا، فَإنَّ اللهَ تَعْالى يَقُوْلُ: إنَّ سُخْطِيَ فِيْهِمْ".

إسْنَادُهُ ضَعِيْفٌ جِدَّاً:

أَخْرَجَهُ العُقَيْلِيُّ فِي الضُّعَفَاءِ الكَبِيْرِ (1104)، مِنْ طَرِيقِ عَبْدِ الرَّحْمَنٍ السُّدِيِّ، عَنْ دَاوُدَ بْنِ أبِي هِنْدٍ، عَنْ أَبي نَضْرَةَ، عَنْ أبِي سَعِيْدٍ الخُدْرِيِّ، مَرْفُوْعَاً. وَمِنْ طَرِيْقِ السُّدِيِّ بهِ، 
أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي الأَوْسَطِ (4717)،
 وَالخَرَائِطِيُّ فِي مَكَارِمِ الأخْلاَقِ (532)،
وابْنُ حِبَّانَ فِي المَجْرُوْحِيْنَ (2/286)،
وَأبُونُعَيْمٍ فِي أخْبَارِ أصْبَهَانَ (2009)، 
وَفِي طَبِقَاتِ المُحَدِّثيْنَ بِأصْبَهَانَ (791)،
 وَابْنُ الجَوْزِيِّ فِي المَوْضُوْعَاتِ (2/158).
 وَإسْنَادُهُ ضَعِيْفٌ جِدَّاً، السُّدِيُّ، هُوَ: الصَغِيْرُ، وَاسْمُهُ: مُحَمَّدٌ بْنِ مَرْوَانَ، قَاَلَ البُخَارِيُّ:" سْكَتُوْا عَنْهُ، لاَ يُكْتَبُ حَدِيْثُهُ البَتَّةَ"،
 وَقَاْلَ أبُوحَاتِمٍ: " ذَاهِبُ الحَدِيْثِ، مَترُوْكُ الحَدِيْثِ، لايُكْتَبُ حَدِيْثُهُ". 
وَقَالَ ابْنُ حِبَّانَ: "رَوَى عَنْهُ العِرَاقُيُوْنَ، كَانَ مِمَنْ يَرْوِى المَوْضُوْعَاتِ عَنِ الأثْبَاتِ، لاَيحِلُّ كِتَابَةُ حَدِيْثِهِ إلاَّ عَلى جِهْةِ الاعْتِبَارِ، وَلاَ الاحْتِجَاجُ بِهِ بِحَالٍ مِنْ الأحْوَالِ". 
وَقَاْلَ الذَّهْبِيُّ:" تَرْكُوْهُ، وَاتَّهَمَهُ بَعْضُهُمْ بِالكَذِبِ"، 
(1).وَقَالَ الحَافِظُ فِي التَّقْرِيْبِ: " مُتَّهَمٌ بِالكَذِبِ"(8/125): وَقَالَ الهَيْثَمِيُّ فِي المَجْمَعِ


  "رَوْاهُ الطَّبَرَانِيُّ فِي الأَوْسَطِ، وَفِيْهِ مُحَمَّدٌ بْنِ مَرْوَانٍ السُّدِيُّ الصَغِيْرِ، وَهُوَ مَتْرُوْكٌ".
 وَأَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي مُسْنَدِ الشِّهَابِ (700)، وَتَمَّامٌ الرَّازِيِّ فِي الفَوَائِدِ (1090)، مِنْ طَرِيْقِ عَبْدِ الغَفْارِ بْنِ الحَسَنِ بْنِ دِينَارَ، عَنْ دَاوُد بْنِ أبِي هِنْدٍ، بِهِ وَقاْلَ: "تَفْرَّدَ بِهِ عَبْدُ الغَفارِ بْنِ الحَسَنِ بْنِ دِينَارَ، وَهُوَ غَرِيْبٌ".
 وَأَخْرَجَهُ ابْنِ سَمْعُوْنَ فِي الأمَالِيِّ (26)، مِنْ طَرِيْقِ مُحَمَّدٍ بْنِ سِنَان، عَنْ هَانِئ بْنِ المُتَوْكِّلِ، عَنْ عَبْدِ الملِكِ بْنِ الخَطَّابِ، عَنْ دَاوُد بْنِ أبي هِنْدٍ بِهِ. وَهُوَ ضَعِيْفٌ أيْضَاً، مُحمَّدٌ بْنِ سِنَان، ضَعِيْفٌ، كَمَا فِي التَّقَرِيْبِ (5936)، وَهَانِئ بْنِ المُتَوْكِّلِ، قَالَ ابْنُ حِبَّانَ فِي المَجْرُوْحِيْنَ (3/97): "لاَ يَجُوْزُ الاحْتِجَاجُ بِهِ بِحَالٍ". وَلَهُ شَاهِدٌ مِنْ حَدِيْثِ عَليِّ رَضِيَ اللهُ عَنْهُ،
 أَخْرَجَهُ الحَاكِمُ فِي المُسْتَدْرَكِ (8023)، مِنْ طَرِيْقِ حِبَّانَ بْنِ عَليِّ عَنْ سَعْدٍ بْنِ طَرِيْفٍ عَنْ الأصْبغِ بْنِ نَباتَةَ،عَنْهُ وَصَحَحَهُ، وَقَالَ الذَّهْبِيُّ:" الأصْبغُ وَاهٍ،وَحِبَّانَ ضَعَّفُوْهُ".وَانْظُر:تَخْرِيْجَ الإحْيَاءِ (3276)، وَمِيْزَانَ الاعْتِدَالِ (2/602) ، وَلِسَانَ المِيْزَانِ(2/104)،وَمَجْمَعَ الزَّوَائِدِ (8/195)، وَاللآلِئِ المَصْنُوْعَةِ (2/63)، وَتَنْزِيْهَ الشَّرِيْعَةِ (2/130)، وَتَذْكِرَةَ المَوْضُوْعَاتِ (1/61)، وَالفَوَائِدَ المَجْمُوْعَةِ (28)، وَ كَشْفَ الخْفَاءِ (1/140)، وَالسِّلْسِّلَةَ الضَّعِيْفَةِ (1577)، وَ ضَعِيْفَ الجَامِعِ (900).
-------------------------------------------------------------------------------------------------------------------- 

இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
  1. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  3. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?

தர்காவில் அடங்கியுள்ளவரகளிடம் உதவி தேடக்கூடாது என்று நாம் கூறும் பொழுது  /// அவுலியாக்களிடம் உதவி தேட கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் சுகயீனம் ஏற்பட்டால் டாக்டரிடம் போகிறீர்களே ...!!!! ///    என்று கப்ர் பக்தர்கள் ஒரு கேள்வியை கேட்பார்கள் 

உன்னையே வணங்குகிறோம்' என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து உன்னிடமே உதவி தேடுகிறோம்'
(வஇய்யாக நஸ்தயீன்) என்று மற்றொரு உறுதிமொழி எடுக்குமாறும் அல்லாஹ் நமக்குப் போதிக்கின்றான். அதனையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குவது அவசியமாகும். ஏனெனில் சில அறிவீனர்கள் இந்த உறுதிமொழியைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து பலதெய்வ வணக்கத்தை
நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன்னிடம் மட்டுமே உதவி தேடும்படி நமக்குக் கற்றுத் தருகிறான். ஆனால் நமதுவாழ்க் கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின்உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் صلى الله عليه وسلمஉட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

அப்படியானால் உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பது செயல்படுத்த முடியாததாகவே உள்ளது. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவி தேடுவது பாவம் என்றால் எந்த மனிதனும் இந்தப் பாவத்தைச் செய்யாமலில்லை. இப்படிப் போகிறது அந்த அறிவீனர்களின் சிந்தனை. இத்துடன்இவர்கள் நிறுத்திக் கொண்டார்களில்லை. ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து போய் விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று விரிகிறது இவர்களது சிந்தனை. இதன் காரணமாகவே இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பதன் சரியான பொருளை திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் நமக்கு விளக்குகின்றது.

நன்மையான காரியங்களிலும் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!''' (அல்குர்ஆன் 5:2) என்பதே அந்த வசனம்.

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

இறைவனே இவ்வாறு உதவிக் கொள்வதை அனுமதிப்பதால், உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்பது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வதையும் மனிதர்களை மனித நிலையில் வைத்து உதவி தேடுவதையும் மறுக்கும் விதத்தில் அருளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக மனிதனைஇறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதும் விதமாக உதவி தேடுவதை மட்டுமே இந்த வசனம்மறுக்கின்றது.

இறந்து போன நல்லடியார் ஒருவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர்இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம்கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை. எப்படி என்று விளக்கமாகக்காண்போம்.

ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும்
மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன.

''முதல் வித்தியாசம்''

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

இறந்து போனவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாகஇருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக்கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான். மறைவாக இருந்துகொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்து போனவக்கும் இவன் அளித்துவிடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

''இரண்டாவது வித்தியாசம்''

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

இறந்து போன நல்லடியாரை அணுகக் கூடியவனின் நம்பிக்கை இப்படி இல்லை. இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது'' என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

''மூன்றாவது வித்தியாசம்''

ஒரு மருத்துவரை அணுகும் போது இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது'' என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

இறந்து போன நல்லடியார் ஒருவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் அவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது
எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார்''
என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று நம்புகிறான். இறந்து போனவரின் கேட்கும் திறனோ இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

''நான்காவது வித்தியாசம்''

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

''ஐந்தாவது வித்தியாசம்''

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.
ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.
உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக்
குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போல் அமைந்துள்ளன
ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது. 

உன்னிடமே உதவி தேடுகிறோம்'' என்றால் எல்லாக் காரியங்களிலும் எவ்வித இயலாமையும் இல்லாதவன் என்ற நம்பிக்கையிலும், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அதைச் செவியுற்று நடவடிக்கை எடுக்கிறவன் என்ற நம்பிக்கையிலும், இறைவா! உன்னிடமே உதவி தேடுகிறோம் என்பதே அதன் பொருளாகும்.

****************************************************************************************


*******************************************************************************
‘தஆவுன்’ பரஸ்பர உதவியும் , அல்லாஹ்விடம் கேட்கும் இஸ்திஆனத் உதவியும் காண இங்கே கிளிக் செய்யவும் 
ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
சலாத்துன் நாரியா ?   வை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும் 
கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!! காண இங்கே கிளிக் செய்யவும் 

ஆமினா கண்ட அற்புத ஒளி. காண  இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்
அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

தஆவுன்’ பரஸ்பர உதவியும் , அல்லாஹ்விடம் கேட்கும் இஸ்திஆனத் உதவியும்

தர்கா, தரீக்கா   மவ்லவிகளின் இப்படிப்பட்ட அறிவீனமான வாதம் வருமாறு:


///// அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய ரப்பு; அவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிறவன் என்பதில் உங்களை விட எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இந்த அவுலியாக்களின் மூலம் தருகிறான் என்றே கூறுகிறோம். நம்முடைய தேவைகளுக்காக அவுலியாக்களிடம் உதவி தேடிச் செல்வது தவறு என்றால், நமது மருத்துவ தேவைக்காக டாக்டர்களிடம் உதவி தேடிச் செல்வதும் தவறுதான்; வழக்கு சம்பந்தமாக வக்கீல்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; கட்டிட தேவைக்காக பொறியாளர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; பணக்கஷ்டம் ஏற்பட்டால், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; இப்படிப்பல தரப்பட்ட நம்முடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம் உதவி தேடாமல் அல்லாஹ்விடம் மட்டுமா உதவி தேடுகிறோம்? இங்கெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை சரி கண்டு ஏற்கும் இவர்கள், அவுலியாக்களிடம் உதவி தேடுவதை மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அதை ஷிர்க்(இணை வைப்பு) என்கிறார்கள். நாங்கள் ஷிர்க் செய்கிறோமா? அல்லது அவர்களுக்குக் கிறுக்குப்பிடித்திருக்கிறதா? /////
என்று கேட்டு தங்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் தங்களின் சிந்தனையை இந்த  மவ்லவிகளிடம் கடன் கொடுத்து விட்டு, அல்லாஹ் 31:6-ல் கூறியுள்ளது போல், அவர்களின் அறிவில்லாத வீணான பேச்சுக்களை இறைவாக்காக ஏற்று, அதன்படிச் செயல்பட்டு, நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்கின்றனர்.

இந்த  மவ்லவிகள் மனந்துணிந்து அறிந்த நிலையில் செய்யும் ஹிமாலயத்தவறு என்ன தெரியுமா? அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கக் கூடிய உதவியான “இஸ்திஆனத்” (பார்க்க அல்ஃபாத்திஹா 1:4) என்பதற்கும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் “தஆவுன்” (பார்க்க அல் மாயிதா 5:2) என்பதற்குமுள்ள ஹிமாலய வேறுபாட்டை தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிப்பதுதான்.
இதையும் அல்லாஹ் அல்குர்ஆன் அல்பகரா 2:75 -ல் “இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” என்றும், அல்குர்ஆன் பக்ரா 2:146 மற்றும் அன்ஆம் 6:20-ல் கூறுவதுபோல் சத்தியத்தை அறிவார்கள்; அறிந்த நிலைமையிலேயே அதை மறைப்பார்கள் என்றும் அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.

எனவே எமது இந்த விளக்கங்கள் இந்தப் புரோகித மவ்லவிகளின் உள்ளங்களில், அவர்கள் புரோகிதத்தில் நிலைத்திருக்கும் வரை, அதாவது மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் வரை கடுகளவும் மாற்றத்தை ஏற்படுத்தாது, இதை அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களே இந்த விளக்கங்களை நடு நிலையோடு படித்து சிந்தித்து விளங்கி நேர்வழி பெற முன் வரவேண்டும்.

சூரத்துல்ஃபாத்திஹா 1:4 -ல் காணப்படும் “இஸ்திஆனத்” என்ற உதவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி அல்ல; மேலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி நினையாபுரத்திலிருந்து கிடைப்பதாகும். அதற்குரிய காரணகாரியத்தைத் துள்ளியமாக அறிய முடியாது. இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும் அவர்கள் இறந்து போன அவுலியாக்களாக இருந்தாலும், உயிரோடிருப்பவர்களாக இருந்தாலும் கேட்க முடியாது. அது ஷிர்க்காகும்; இணை வைப்பாகும்.
அதற்கு மாறாக “தஆவுன்” என்ற உதவி உயிரோடிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்வதாகும். 5:2 இறைவாக்கைப் படித்துப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். இந்த உதவி காரண காரியங்களுடனேயே நிறைவேறும்.

உதாரணமாக.... ஒரு மருத்துவரிடம் சென்று நமது வியாதி பற்றி முறையிடுகிறோம். அவர் காது கொடுத்து கேட்கிறார். தனது சந்தேகங்களை வாய்திறந்து கேட்கிறார். பரிசோதனைக்கருவிகள் மூலம் பரிசோதித்து விளங்குகிறார். வியாதியை முடிவு செய்து மருந்து தருகிறார். அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். அவர் கொடுத்த மருந்தை அல்லது கடையில் வாங்கி அதைச் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் காரண காரியங்கள். இந்த மருத்துவரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று அவரிடம் வியாதியைச் சொல்லி வைத்தியம் செய்து கொள்கிறோம். நோயாளிகளில் இருவர் கூட ஒரே நேரத்தில் அவர்களின் வியாதி பற்றி முறையிட்டால், அவரால் அதைக் கேட்கவும் முடியாது; முறையாக விளங்கி மருந்து தரவும் முடியாது. இந்த நிலையில் ஏக காலத்தில் பலர் முறையிட்டால் அவரது நிலை என்னவாகும்? அதுபோல் அந்த மருத்துவர் நனடறாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நோயாளியின் குறைபாட்டைக் கேட்டு அதற்கு மருத்துவம் செய்ய முடியாது.

இந்த பலகீனங்கள் மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர் இதுபோல் உதவி செய்யும் அனைத்து மனிதர்களிடமும் காணப்படவே செய்யும். ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவி செய்தலின் நிலை இதுதான்.

இன்னும் ஓர் உதாரணம்:

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அவுலியாவை - இறைநேசரையே எடுத்துக் கொள்வோம். அவர் மக்களிடம் மிகமிக அதிகமாக அன்பு காட்டுகிறவர். தன்னிடம் வந்து யார் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பவர். மக்களுக்கு உதவி செய்வதையே தனது கொள்கையாகக் கொண்டவர். அப்படிப்பட்ட உயர்ந்த இறைநேசர்; அவரிடம் போய் முறையிட்டு உதவி தேடுகிறவர்கள் ஒவ்வொருவராக, தனித்தனியாக மட்டும் சென்று தான் உதவி கேட்க வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் உதவி கேட்டால், யாருடைய அழைப்பையும் அவரால் கேட்க முடியாது என்பதையும் இந்த மவ்லவிகள் மறுக்க முடியாது.

மேலும் அந்த அவுலியா - இறைநேசர் மரணிக்கவில்லை. சிறு மரணம் என்று சொல்லக்கூடிய கடுமையான உறக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் யாரும் கூட்டாக அல்ல தனியாக அவரது தலைமாட்டில் போய் நின்றுகொண்டு, தங்களுடைய கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அவுலியாவால் அவர்களில் இந்த தனி மனிதரது அழைப்பையேனும் செவியேற்று அவருக்கு வேண்டிய உதவியைச் செய்ய முடியுமா? நிச்சயமாக தூக்கத்தில் அவரால் உதவி செய்ய முடியாது என்பதையும் இந்த மவ்லவிகளால் மறுக்க முடியாது.

இந்த நிலையில் அந்த அவுலியா பெரிய மெளத் என்ற நிரந்தர மரணத்தை அடைந்து, அவருக்காக ஜனசா தொழுகை தொழுது, குழி தோண்டி மண்ணுக்குள் அடக்கம் செய்த பின்னர், அந்தப் புதைகுழியின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு உதவி தேடினால் அவரது சடலத்தால் உதவி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதையும் மறுக்க முடியாது.

அப்படியானால் இந்த   மவ்லவிகள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு, மண்ணுக்கடியில் சென்றவர்களிடம் உதவி தேட முடியும் என்று கூறுவது எந்த அடிப்படையில்? தஆவுன் என்ற பரஸ்பர உதவி அடிப்படையிலா? அல்லது படைத்து, உணவளிதது, பாதுகாத்து வரும் எஜமானன் அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் இஸ்திஆனத் என்ற காரண காரியங்கள் காண முடியாத உதவியா? ஆம்! இந்த மூட   மவ்லவிகள், அவுலியாக் களுக்கும் தெய்வீக சக்தி இருக்கிறது. அத்துவைதம் என்ற மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக முடியும் என்ற இறைவனுக்கு இணை வைக்கும் (வஹ்தத்துல்வுஜூது) மூட நம்பிக்கையின் அடிப்படையில், ‘இஸ்திஆனத்’ என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் உதவியைத்தான் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அவுலியாக்களிடம் கேட்க மக்களைத் தூண்டிவருகின்றனர்.

அல்குர்அன் 18:102 -106 இறை எச்சரிக்கைகளின்படி இஸ்திஆனத் என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வெண்டிய உதவியை, அவுலியாக்களிடம் கேட்பதன் மூலம், இறந்து போன் அந்த அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக - உதவி செய்பவர்களாக நம்புவதன் மூலம் இறை நிராகரிப்பவர்களாகி - காஃபிர்களாகி நரகம் புகும் நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், தான தர்மம் இவை அனைத்தும் ஏற்கப்படாது. அவற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை. அவை அனைத்தும் வீணாகி விடும். நரகில் எறியப்படுவார்கள். அவர்களுக்காக நரகத்தைத் தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் தெளிவாக நேரடியாகவே இந்த 18:102 -10 வசனங்களில் கூறி எச்சரிக்கிறான்.

இந்த 18:102-106 இறைவாக்குகளை படித்துக்காட்டி தர்கா சடங்குகள் எவ்வளவு பெரிய பாராதூரமான கொடிய இணைவைக்கும் குற்றம் என்று சொன்னவுடன் இந்த  மவ்லவிகள் என்ன சொல்லி மக்களை ஏமாற்றவார்கள் தெரியுமா?

இந்த 18:102 இறைவாக்கு “நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா”? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல; காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர். சுய சிந்தனையற்ற முஸ்லிம்களும், இவர்களின் இந்த நயவஞ்சகக் கூற்றை அப்படியே நம்பி, கத்தம், ஃபாத்திஹா, கூடு, கொடி, கந்தூரி, மீலாது, மெளலூது, யாகுத்பா, ஸலாத்து நாரியா என்ற நெருப்பு(நரக) ஸலவாத் இத்தியாதி, இத்தியாதி என நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டு சடங்குகளை பக்தி சிரத்தையோடு செய்து வருகின்றனர்.

இந்த   மவ்லவிகளின் கூற்றுப்படியே, அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள், அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள் என்று சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை) ஆகிய சிறப்புக்குரிய இரண்டு நபிமார்களின் நேரடி வாரிசுகளாகும். அவர்கள், எந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை நம்மைப் பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அந்த நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகள். எங்கள் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும், முஸ்லிம்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் உண்மையான அவுலியாக்களை - இறைநேசர்களை (இவர்கள் அவுலியாக்களாக்கியுள்ள குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான், பீடி மஸ்தான், பீங்காட்டப்பா போன்றவர்களையும், கழுதைகளையும், கட்டைகளையும் அல்ல) தங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களிடம் உதவி தேடி வந்தனர். இந்த உண்மையை 10:18, 39:3 இறைவாக்குகளைப் பொருள் அறிந்து படித்து விளங்குகிறவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். தங்களை முஸ்லிம்கள் என்றும், தங்களின் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட குறைஷ்களை அல்லாஹ் காஃபிர் - நிராகரிப்பாளர்கள் என்று ஏன் கூறுகிறான்?

அப்படி நாம் சிந்தித்து விளங்கினால் நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது தங்களை முஸ்லிம்கள் என்றும், இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் அடியாளர்களான அவுலியாக்களைத் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடையீட்டாளர்களாக (MEDIATOR) அவர்களிடம் உதவி கோரினால் அல்லது அவர்களின் பொருட்டால் கேட்டால், அவர்கள் நிராகரிப்பாளர்களாக - காஃபிர்களாக ஆகிறார்கள். நரகத்திற்குரியவர்களாக ஆகிறார்கள். இதையே அல்குர்ஆன் 18:102 -106 இறைவாக்குகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

தன்னை முஸ்லிம் என்றும் இஸ்லாம் என்ற நேரிய மார்க்கத்தை மட்டுமே பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உண்மை முஸ்லிம் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அவுலியாக்களை ஒருபோதும் கொண்டு புகுத்தமாட்டார். உங்கள் பிடரி நரம்பைவிட நான் உங்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறேன்; என்னிடமே உதவி தேடுங்கள் ‘இஸ்திஆனத்’ (பார்க்க அல்குர்ஆன் 1:4, 50:16, 2:45,153) என்று அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணிக்காமல், அவற்றை மதித்து தன்னுடைய எந்தத் தேவையாக இருந்தாலும் அதை அல்லாஹ்விடமே முறையிடுவார். உலகக் காரியங்களில் இடைத்தரகர்களைப் பிடித்து குறுக்கு வழிகளில் - தவறான வழிகளில் லஞ்சம் கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்வது போல், அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றுவது போல், அவுலியாக்களிடம் உதவி தேடி உண்டியலில் லஞ்சமாகக் காசை போட்டு குறுக்கு வழியில் படைத்த அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியும் என்று குருட்டுத்தனமாக நினைக்க மாட்டார்.

மனிதர்களுக்கிடையே இடம்பெறும் ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவிக்கும், அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கும் இஸ்திஆனத் என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், அல்லது அல்லாஹ் 2:146, 6:20 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல் அவர்கள் பெற்ற குழந்தையை அறிவதுபோல் நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும் இந்த  மவ்லவிகள்.

நாங்கள்தான் அரபி கற்ற மேதைகள்; எங்களுக்குத்தான் குர்ஆன், ஹதீஸ் தெளிவாக விளங்கும் எனத் தம்பட்டம் அடிக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்ற மவ்லவிகள் ்இஸ்திஆனத்’ என்ற உதவிக்கும் ‘தஆவுன்’ என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பிதற்றுகிறார்களா? அல்லது நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளுகிறார்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹிஜ்ரி 400 க்குப்பிறகே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டன; அதன்பின்னர் ஹிஜ்ரி 600 வாக்கில் தரீக்காக்கள் கற்பனை செய்யப்பட்டன. அதன்பின்னரே அதாவது ஹஜ்ரி 600க்குப் பிறகே இந்த தர்கா - சமாதிச் சடங்குகள் அனைத்தும் முஸ்லிம்களிடையே அரங்கேறின. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அதாவது ஹிஜ்ரி 11க்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் புதிதாகச் சேர்க்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக நெற்றியடியாக 5:3, 7:3, 3:19,85, 33:21,36,66,67,68 இறை வாக்குகள் கூறிக்கொண்டிருக்க இத்தனை குர்ஆன் வசனங்களையும் நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் முறையிடுவதாக 25:30-ல் உள்ளபடி அப்பட்டமாகப் புறக்கணித்துவிட்டு தங்கள் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் கூறி (பார்க்க 31:6) மக்களை வழிகெடுக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சுமார் 200 தலைமுறைகளுக்குப் பிறகே தோன்றிய தர்கா -சமாதி சடங்குகளை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றால் இவர்களது முடிவும் இவர்களைப் பின்பற்றிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம் மக்களின் நிலையும் அல்லாஹ் 2:159-162, 18:102-106,33:36,66,67,68 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல், அல்லாஹ்வின் வாக்குகள் நிறைவேறுமா? இல்லையா? என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

---- an najaath.com ---

*********************************************************************************

டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
ஃபாத்திமியீன்களின் ஆட்சி காலத்தில் தான் மௌலூது ஆரம்பிக்கப்பட்டதா  அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்

மௌலூதும் கேலியும் கிண்டலும் காண இங்கே கிளிக் செய்யவும்

முஹைய்யத்தீன் மெளலூதின்  சின்ன துஆ  காண இங்கே கிளிக் செய்யவும்

அபூலஹப் கொண்டாடிய மீலாது விழா மவ்லிது காண இங்கே கிளிக் செய்யவும்

நபிகள் நாயகத்தை புகழ்வது தவறா?  பதிலை காண இங்கே கிளிக் செய்யவும் 
ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 02  காண இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லூத் மறுப்புக்கான  காரணத்தை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
சலாத்துன் நாரியா ?   வை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா காண இங்கே கிளிக் செய்யவும் 
கிருஸ்மஸ் கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!! காண இங்கே கிளிக் செய்யவும் 

ஆமினா கண்ட அற்புத ஒளி. காண  இங்கே கிளிக் செய்யவும் 
மவ்லிதை ஏன் தூக்கி எறிந்து விட வேண்டும் அறிந்திட  இங்கே கிளிக் செய்யவும்

அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்