ஹிழ்ர்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி குர்ஆனில் வந்துள்ள சம்பவத்தை தவிர்த்து பல
தவறான நம்பிக்கைகள் நமது சூபி தரீக்கத்து சகோதரர்களிடம் உள்ளது. இவர் ஒரு
"ஹயாத்து நபி ' என்றும் இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றும் பல
கட்டு கதைகளும் உள்ளன.
இது இவ்வாறு இருக்க……
இது இவ்வாறு இருக்க……
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவத்துக்குள் நூழைவோம்.
முதலில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏன் சந்திக்க நேர்ந்தது ?
பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து மூஸா (அலை) அவர்களிடம், உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள் (அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை என்றார்கள். அன்று வாழ்ந்தவர்களில் மூஸா (அலை) ம் தான் பூமியில் எல்லாம் அறிந்தவர் என்ற பதிலை கூறுகிறார்கள். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.
மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் என்ன கூறுகிறான் என்றால் :'அப்படியல்ல நம் அடியார் 'களிர்' உங்களை விட அறிந்தவராயிருக்கிறார்' என்று கூறினான்.
இதில் நாம் தெளிவாக பாடம் பெறுவது என்னவென்றால்:
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. மனிதர்களில் ஒருவருக்கு தெரியாத விடையம் இன்னுமொருவருக்கு அல்லாஹ் அறிவித்து கொடுத்து இருப்பான் என்பதாகும் எல்லவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதாகும். அவ்வாறு சொல்லாததால் தான் அல்லாஹ் மூஸா அலை அவர்களை கண்டித்தான்.
அடுத்த பாடம் நாம் பெறுவது என்னவென்றால் :
அல்லாஹ் இவ்வாறு கூறியதும் மூஸா(அலை ) அவர்கள் தனக்கு அவற்றை ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அறிந்ததை வஹி மூலம் கற்று தரும்படி கேட்க வில்லை மாறாக அவர்கள் கேட்டது அந்த நபர் எங்கு உள்ளார் நான் அவரிடம் சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள்.
இது ஒரு நல்ல பாடம் :
அறிவை நாம் தேடி செல்ல வேண்டும் அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரியே இப்பொது தொழில் நுட்பம் காரணாமாக குறைந்த காலத்தில் பல இடத்துக்கு பிரயாணம் செய்யும் வசதி உள்ளதால் கற்று கொள்வதும் முன்னைய காலத்தை விட பல மடங்கு இலகுவாக உள்ளது.
அடுத்து மூஸா (அலை ) அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை காண செல்கிறார்கள் அவர்களை காணும் முன் சில சம்பவம்கள் நடக்கிறது
அந்த சம்பவத்தின் பின் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள், இருவருக்கும் இடையில் உரையாடல் நடை பெறுகிறது இதை அல்லாஹ் கூறும் போது என்ன சொல்கிறான் என்றால்:
18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
அதாவது ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதை செய்ய உள்ளாரோ அதை அவர்களுக்கு அல்லாஹ் கற்று கொடுத்து விட்டான்,
அவராக எதையும் செய்ய வில்லை என்பதாகும்.
அத்துடன் மூஸா (அலை ) அவர்கள் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி கேட்டது :
18:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
இந்த குர்ஆண் வசனமும் கூறுவது ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் சில விடையத்தை செய்யுமாறு அறிவை கொடுத்துள்ளான் என்பதாகும். அது என்ன விடயம் என்ற அறிவுதான் மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த இடத்தில் நடக்கும் சம்பவத்தில் பொறுமை சோதிக்கப்படுகிறது அதாவது ஒருவருக்கு ஒரு விடயத்தில் முழுமையான அறிவு இருக்கும் போது அந்த குறிப்பிட்ட விடயத்தில் எந்த அறிவும் இல்லாத ஒருவர் கூடவே சென்றால் மற்றவர் அந்த விடையத்தை செய்யும் போது ஏன் ? செய்கிறார் என்ற கேள்வி எழுப்புவது மனித இயல்பு அதனால் தான் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்கிறார்கள் :
18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
தட்காலத்தில் கூட நாம் ஏகத்துவத்தை சொல்லும் போது நாம் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக கேட்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை எடுத்த எடுப்பில் எதிர்ப்பதை கூட பார்க்கலாம். எதையும் முழுமையாக அறிந்த பின் கேள்விகளை கேட்பது சிறந்தது.
ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சில விடையங்கள் செய்யப்போவதாகவும் அதட்கான காரணத்தை கடைசியாக கூறுவதாகவும் இடையில் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றும் சொன்னார்கள்.
முதலாவது சம்பவம் :
(ஸஹீஹ் புகாரியில் 122)
இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள்.
சுபஹானல்லாஹ், அல்லாஹ்வின் அறிவு எம்மாத்திரம் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடும் போது இந்த நல்லடியார்களின் அறிவு சிறு துளி.
அல்லாஹ் ஒருவனே எல்லாம் அறிந்தவன்.
அடுத்து இன்னுமொருவிடயம் நாம் எவ்வளவு கற்று அறிந்தாலும் நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பு இல்லாமல் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் போல் பேச்சில் பணிவு இருக்க வேண்டும்.
அடுத்து இந்த சம்பவத்தின் தொடரை பார்ப்போம்:
(சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து).
குர்ஆண்: 18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
இரண்டாவது சம்பவம்:
மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள்
மூன்றாவது சம்பவம்:
மீண்டும் இருவரும் (சமாதானமாய்) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.'
இந்த முதல் சம்பவத்தில் ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் மரக்கலத்தின் பலகையை உடைத்தார்கள் என்றால் அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக் கொண்டிருந்தான். அவன் இந்த மார்க்கலத்தை இந்த மக்களிடம் இருந்து அபகரிக்காமல் இருக்கவே அந்த செயலை செய்தார்கள்
(குர்ஆண் :18:79.) “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
இரண்டாவது அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில் அவன் இறை மறுப்பாளனாக இருந்தான். அவனுடைய தாய் தந்தையார் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தனர்'
(குர்ஆண் : 18:80.) “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(குர்ஆண் 18:81.)“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
மூன்றாவது சம்பவத்தின் காரணம் :
(குர்ஆண்18:82.) “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
மேல் கூறப்பட்ட மூன்று சம்பவங்களும் அவர்கள் அவரின் சொந்த விருப்பு வெறுப்பில் செய்ய வில்லை அத்தோடு மேல் கூறப்பட்ட சம்பவம் யாவும் தொழுகை, நோன்பு இபாதத் சம்பந்தப்பட்டவையும் அல்ல, இவை எல்லாம் உலக சம்பந்தப்பட்டவர்கள் ஆகும்
.
மரக்கலத்தை காப்பாற்றியதும், ஒரு சிறுவனை கொலை செய்து அவர்களின் பெற்றோரை காப்பாறியதும், சுவரை சரி செய்து அவர்களது சொத்தை காப்பாற்றியதும் உலக சம்பந்தப்பட்ட அறிவாகும்.
மார்க்க அறிவில் மேதை என்றால் இன்னுமொருவர் உலக அறிவில் மேதையாக இருப்பர் இந்த உலக அறிவும் ஒருவருக்கு அல்லாஹ் அருளி இருந்தால் அவன் சமூதாயத்துக்கு அதன் மூலம் நலவு செய்வானாக இருந்தால் அதுவும் அல்லாஹ் வழங்கிய அறிவே.
மார்க்க அறிவு மட்டும் அறிவு அல்ல அது அல்லாமல் உலக அறிவை பெறுதலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு அநீதிகளுக்கு குரல் கொடுப்பதும் இறைவன் நமக்கு கொடுத்த கல்விதான்.
அது போல் நம்மில் பலர் உலக அறிவை மட்டும் கற்று கொண்டு மார்க்க அறிவை புறக்கணித்து வாழ்கிறார்கள் அந்த அறிவு மட்டும் இருந்தாலும் மறுமையில் வெற்றி பெற முடியாது ஆகையால்
நமக்கு மார்க்க அறிவோடு உலக அறிவையும் தருவானாக என்று இரண்டு அறிவையும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன் )