"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

இமாம்களின் தீர்ப்பு கபுர் கட்ட ஆதாரமாகுமா?

இமாம்களின் தீர்ப்பு மார்க்க ஆதாரமாகுமா?

இந்தக் கப்ர் வணங்கிகள் கப்ர் தொடர்பான விவகாரத்திற்கு சில மத்ஹபு இமாம்களை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் செய்யும் மார்க்கத்திற்கு எதிரான பல அனாச்சாரங்களை மத்ஹபு இமாம்களே கண்டித்திருத்தும் அவற்றைக் கொஞ்சம் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அலட்சியம் செய்து விடுவார்கள். தங்கள் மனஇச்சைக்கு உகந்த விதத்திலோ அல்லது அதன் சாயலிலோ இமாம்கள் கருத்துக்களைக் கூறியிருந்தால் அப்போது மட்டும் இமாம்களின் மீதான பாசம் பொங்கி பீறிட்டு எழும்.


குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படையே தவிர இமாம்களின் விளக்கமோ, அவர்கள் ஹதீஸிற்கு இடும் தலைப்புகளோ இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஒரு போதும் அமையாது.

எனவே அந்த இமாம் இவ்வாறு கூறினார்? இந்த இமாம் இவ்வாறு தலைப்பிட்டுள்ளார்? என்றெல்லாம் பிதற்றுவது இவர்களின் வாதத்திற்கு எள் முனையளவும் உதவாது.

இமாம்கள் இடும் தலைப்புகளில் இஸ்லாத்தின் மூச்சு இல்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் தான் இஸ்லாத்தின் அடிநாதம் அச்சாரமிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இமாம்கள் சரியாகத்தான் தலைப்பிட்டுள்ளார்கள். இவர்கள் தான் அதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பிதற்றுகிறார்கள்.

இமாம்கள் இச்செய்தியை باب الأمر بتسوية القبر கப்ரை தகர்க்குமாறு அல்லது சமப்படுத்துமாறு கட்டளையிடும் பாடம் என்ற தலைப்பில் தான் கொண்டு வந்துள்ளார்கள்.

(ஸவ்வா என்பதன் பொருளைப் பற்றி முன்னர்  விளக்கியுள்ளோம். காண இங்கே கிளிக் செய்யவும் )

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்? என்பார்கள். அதுபோன்று ஸவ்வா என்றாலே அழகுபடுத்துதல் தான் பொருள் என்று கற்பனை செய்து கொண்டு அதன் கோணத்திலேயே இமாம்களின் தலைப்பை அணுகுவதே இவர்களின் இந்தக் கோளாறுக்கு மூல காரணமாகும்.

ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்தலாம் என்று இமாம் நவவீ அவர்கள் கூறிய கூற்றில் ஏதோ கப்ர் கட்ட ஆதாரம் இருக்கிறது என்றெண்ணியவர்கள் அதே நவவீ அவர்கள் தனது மின்ாஜ் எனும் நூலில் நேரடியாக கப்ர் கட்டுவது பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க தவறிவிட்டார்கள்.

منهاج الطالبين وعمدة المفتين - (1 / 85‏)

وَيُكْرَهُ تَجْصِيصُ الْقَبْرِ وَالْبِنَاءُ وَالْكِتَابَةُ عَلَيْهِ. وَلَوْ بُنِيَ فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ هُدِمَ.

கப்ரை பூசுவது, கட்டடம் எழுப்புவது அதன் மீது எழுதுவது ஆகியவை வெறுப்பிற்குரியாதாகும்.  மின்ாஜூத் தாலிபீன் 1 பக் 85

கப்ர் கட்டுவது வெறுப்பிற்குரியது என்று தெளிவாக தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

அத்தகைய நவவீ இமாம் அவர்கள் மண்ணறை ஒரு சாண் அளவு தரையிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏதோ கப்ரின் மேல் கட்டடம் எழுப்பலாம் என்று கூறியது போல் ஜோடனை செய்து மக்களிடம் பரப்புகிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய கடைந்தெடுத்த கயவர்கள் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

மேலும் மற்றுமொரு முக்கிய மதுகபு இமாம் அபூனிபா அவர்கள் கூறியதையும் பாருங்கள்.

حاشية رد المختار على الدر المختار - (2 / 237‏(

وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه ‏مسلم وغيره

அபூனிபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.  ரத்துல் முக்தார் பாகம் 2 பக் 237

இப்படி தங்கள் மனோஇச்சைக்குத் தகுந்த படி இமாம்களின் கூற்றை வளைக்கிறார்கள் எனில் இவர்களிடம் சத்தியம் இருக்குமா என்பதையும் இவர்கள் இமாம்களைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ள உண்மையுன்டா என்பதையும் நியாயவான்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு வேளை இவர்கள் கூறுவதைப் போலவே கப்ர் மீது கட்டடம் எழுப்பலாம் என்று அந்த இமாம்கள் கூறினால் கூட நாம் பின்பற்ற வேண்டியது வஹீ எனும் இறைச்செய்தி அருளப் பெற்ற அல்லாஹ்வின் தூதரைத் தானே தவிர இமாம்களை அல்ல என்பதை நினைவில் கொள்க.

மேலும் சில பதிவுகள் .....
  1. இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் ஸவ்வா என்றால் உடைத்தலா ? அழகு படுத்தலா ? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  2. நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?  அறிந்துகொள்ள  இங்கே கிளிக் செய்யவும் 
  3. மதுகப் வாதிகளே  பதில் தாருங்கள்  கேளிவியை  காண இங்கே கிளிக் செய்யவும் 
  4. குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  7. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  10. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  11. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  14. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  19. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  20. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  21.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  22. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
    செய்த்தானின் கொம்பு யார் என்பதை காண இங்கே கிளிக் செய்யவும் 
மேலும் சில பயனுள்ள கட்டுரைகள்

வஸீலாவினால் மழை பெய்ததா ?

எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!

இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.
அனஸ்(ர­) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது உமர்(ர­), அப்பாஸ்(ர­)லி அவர்கள் மூலம்(அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர்(ரலி­) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல் : புகாரி(1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான கருத்தாகவே அமைந்துள்ளது .
அதாவது, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள்தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.
அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி(ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை.
இவர்கள் வாதப்படி, இந்த ஹதீஸ் தான் வசீலா தேடுவ்வதற்கு ஆதாரம் என்றால், சஹாபாக்கள் அனைவரும், ரசூல் (ஸல்) அவர்கள் இறந்த பின்னரும் கூட அவர்களையே அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இதி­ருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலாவாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர்(ரலி­) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர்(ர­லி) அவர்கள் அப்பாஸ்(ர­லி) அவர்களை முன்னிருத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
அப்பாஸ்(ர­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர்(ரலி­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.
நாம் சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ்(ர­) அவர்களை விட உமர்(ரலி­) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர்(ர­) அவர்கள் முன்னிருத்தப்படவில்லை. இதி­ருந்தே மகான்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.
இதி­ருந்தே இந்த செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனவே, வசீலா என்றால் நல்லறங்கள் தானே தவிர, வேறெந்த மகான்களோ, இறந்து போன நல்லடியார்களோ இல்லை என்பதை அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் மூலமாகவே தெளிவாக அறியலாம்.
மேலும் சில பயனுள்ள கட்டுரைகள்

ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம் என்று மதுகபு சொல்கிறதா ?

‘ஷாபி’ மத்ஹபின் சட்ட நூல் என்று அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நூல் “இஆனா” இந்நூலில் ஒரு தவறான சட்டம் எழுதப்பட்டுள்ளது

“கொஞ்சமாகக் கஞ்சா அபின் சாப்பிடலாம்; ஆனால் பாமரர்களுக்கு இதை சொல்லக் கூடாது” (அதாவது ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம்)

ஆலிம்கள் கன்ஞா அடிக்கலாம் பொதுமக்களுக்கு சொல்லக் கூடாது. ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று
فتح المعين بشرح قرة العين بمهمات الدين  வரக்கூடிய சட்டம்.

وخرج بالشراب ما حرم من الجامدات فلا حد فيها وإن حرمت وأسكرت بل التعزير ككثير البنج والحشيشة والأفيون ويكره أكل يسير منها من غير قصد المداومة ويباح لحاجة التداوي   (فتح المعين بشرح قرة العين بمهمات الدين – (4 ஃ 156)
(قوله: ويكره أكل يسير منها) أي من هذه الثلاثة، والمراد باليسير أن لا يؤثر في العقل، ولو تخديرا وفتورا، وبالكثير ما يؤثر فيه كذلك، فيجوز تعاطي القليل مع الكراهة، ولا يحرم، ولكن يجب كتمه على العوام لئلا يتعاطوا كثيره ويعتقدوا أنه قليل    (إعانة الطالبين) ஜ4 ஃ177ஸ

என்று ‘இஆனா’ வில் உள்ளதாக நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இப்படியெல்லாம் பல நூல்களில் சில தவறுகள் காணப்படுவதால், பரிசீலனை செய்தே எதையும் ஏற்க வேண்டும் என்று உணர்த்தி இருந்தோம்.

ஆனால்  அவர்கள் , ‘இஆனா’ என்ற நூலில் அவ்வாறு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆலிம்கள் கஞ்சா அடிக்கலாம்” என்று கூறப்படவே இல்லை என்று மறுக்கின்றார்.

நேரடியாக அவ்வாறு கூறப்படவில்லை. என்ற அவரது கூற்று ஏற்கத்தக்கதே! நாமும் , நேரடியாக அப்படிக் கூறப்பட்டிருப்பதாகக் கூறவில்லை. மறைமுகமாக அப்படிக் கூறப்பட்டுள்ளதாகவே கூட்டிக் காட்டுகிறோம்
நாம் எழுதிய வாசகத்தைக் கவனிக்கும் எவரும் இதை உணர முடியும்.

‘இஆனாவில் உள்ளதை அப்படியே மேற்கோள் குறிக்குள்(” “) உள்ளடக்கி விட்டு அதற்குப் பின் அடைப்புக் குறிக்குள் (அதாவது ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம்) என்று இப்படி எழுதி இருந்தோம். அடைப்புக்குறிக்குள் போடப்படுவது நூலில் நேரடியாகக் கூறப்பட்டது அல்ல என்பதை யாவரும் அறிவர். மேலும் “அதாவது” என்ற விளக்கச் சொல்லையும், அதன் துவக்கத்தில் சேர்ந்திருந்தோம்.

மறைமுகமாகவும் இது கூறப்படவில்லை என்ற அவரது கூற்று சரியானதல்ல. நிச்சயமாக மறைமுகமாக இந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.

“பாமர மக்களுக்கு இதை மறைப்பது வாஜிபு” என்றால் இதற்கு பொருள் என்ன? இது உணர்த்தும் கருத்து என்ன?
இந்தச் சட்டத்தை ஆலிம்கள் தங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன பொருள்?
சட்டம் என்பது எல்லோரும் தெரிந்து அதன்படி செயல் படுத்துவதற்குத் தானே! பொது மக்களுக்கச் சொல்லாது மறைக்க வேண்டும் என்று கூறினால், இந்தச் சட்டத்தை யார் செயல் படுத்த முடியும்?
கூடாது என்பது சட்டமானால், அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அல்லது அவரது கூற்றுப்படியும், அந்த வார்த்தையின் நேரடி மொழி பெயர்ப்புப்படியும், “மக்ரூஹுடன் கூடும்” என்றால் அதையாவது எல்லோருக்கும் சொல்ல வேண்டும். மார்க்கத்தின் சட்டம் அதுதான் என்று அவர்கள் கருதினால் அந்தச் சட்டத்தை ஒரு சாரார் மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு, பிறருக்குச் சொல்லக் கூடாது என்றால் அதற்கு நாம் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டதைத் தவிர வேறு என்ன பொருளிருக்க முடியும்?

“பாமரர்களுக்கு ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்” என்பதற்கான காரணத்தையும் அது நூலில் குறிப்பிடுகின்றார்கள். அதை மவ்லவி சாஹிப் அவர்களும் எழுத்தெழுதி இருக்கிறார்கள்.

பாமரர்களுக்கு இதைச் சொன்னால் கொஞ்சம் என்று எண்ணிக்கொண்டு அதிகமாகச் சாப்பிட்டு விடுவார்களாம். அதற்காகத் தான் பாமரர்களுக்குச் சொல்லக் கூடாதாம். மவ்லவி சாஹிப் அவர்களும் “இஆனாவில்” உள்ளதாக ஒப்புக் கொண்ட விஷயம் இது.

பாமரர்களுக்குச் சொன்னால், கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள் என்றால், கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு கொஞ்சமாகவே சாப்பிடக் கூடியவர்கள் யார்?
பாமரர்கள் தவிர மற்றவர்கள் தானே!
யார் இதை மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கிறார்களோ அவர்கள் தானே! எனவே மறைமுகமாக அந்தக் கருத்துக் கூறப்படவில்லை என்ற மவ்லவி சாஹிபின் கூற்று சரியானது அல்ல என்று கூறிக் கொள்கிறோம். அவரது அலசலை இத்துடன் நிறுத்திக் கொண்டால் நம்முடைய அலசலும் இத்துடன் நிறைவுபெற்றிருக்கும் ஆனால் அவர் அதே கட்டுரையில் இன்னொரு பிரச்சனையையும் எடுத்து வைக்கிறார்.

போதைப் பொருட்கள் ஹராம் என்றால் கஞ்சாவும், அபினும் ஹராமாகத் தானே இருக்க முடியும்?
மக்ரூஹுடன் கூடும் என்று எப்படி எழுதலாம்?
என்ற ஐயங்களை ‘பத்ஹுல் மூயீன்’ என்ற நூலை மேற்கோள் காட்டி, பின்வரும் கருத்தைக் கூறுகிறார்.

“புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸில் “போதை தரும் ஒவ்வொரு பானமும் ஹராம்” என்றே வந்துள்ளது. பானம் என்று ஹதீஸில் வந்துள்ளதால், பானத்தில் சேராத கஞ்சா அபின் போன்ற திடப்பொருள்கள் ஹராமாகாது. எனவே தான் மக்ரூஹ் என்று கூறுகின்றனர், என்ற கருத்தையும் அவர் தெரிவிக்கிறார்.

புகாரியிலும் முஸ்லிமுலும் இடம் பெற்றுள்ள பின் வரும் ஹதீஸில் போதை தரும் பானங்கள் ஒவ்வொன்றும் ஹராம் என்றே உள்ளது.

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் மவ்லவி சாஹிப் கூறுவதும், பத்ஹுல் முயீனில் உள்ளதாக அவர் கூறுவதும் ஏற்கத்தக்கதாக ஆகலாம். ஆனால், “முஸ்லிம்” நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பானங்கள் என்று குறிப்பிடப்படாமல் ஒவ்வொரு போதைப் பொருளும் ஹராம் என்றே வந்துள்ளது.

“போதை தரும் ஒவ்வொன்றும் மது தான். ஒவ்வொரு போதைப் பொருளும் ஹராம்தான்” என்று ஒவ்வொரு போதைப் பொருளையும் ஹராம் தான். என்று தானே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அபூதாவூதில் இடம் பெற்ற மற்றொரு ஹதீஸும் இதைத் தானே கூறுகின்றது.

இந்த ஹதீஸிலும் போதை தரும் ஒவ்வொன்றையும் தானே நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் போதை தரும் பொருட்கள், திடமானாலும், திரவமானாலும், கொஞ்சமானாலும், அதிகமானாலும் ஹராம் தான் என்பதே நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பாகும். நபி(ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமாக மக்ரூஹ் என்றோ , கூடும் என்றோ தீர்ப்பு வழங்க எவருக்கும் அதிகாரம் இல்லை