"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?


///////சிலர் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக் கூடாதென சொல்வதும் இந்த ஹதீஸைக் கொண்டு முறியடிக்கபடுகின்றது. ஏனெனில் ரஸுல் (صلى الله عليه وسلم ) அவர்கள் இங்கு நேரடியாகவே " யா உஹத் ! " (உஹதே ! ) என்றழைக்கின்றார்கள். அவ்விதம் " யா ரஸுலல்லாஹ் , யா வலிய்யல்லாஹ், யா முஹ்யத்தீன் " என்றழைப்பதில் எவ்வித குற்றமுமில்லை என்று இந்த ஹதீஸைக் கொண்டு இமாம்கள் ஆதாரம் எடுத்துள்ளார்கள்.//// ////
இப்படி போகிறது சமாதி வலிபாட்டினரின் வாதம் ..!!
நமக்குத் தெரிந்து இப்படி ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெறவில்லை. முஸ்லிமில், நபி (ஸல்) அவர்கள், உஹத் என்று அழைத்ததாக இல்லை. அதற்குப் பதிலாக ஹிரா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. 
அதே சமயம் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உஹுத்! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று சொன்னார்கள்.    அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3675, 3686

இதில் உஹதே (யா உஹத்) என்று இடம்பெறாமல், உஹத் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு நபி (ஸல்) அவர்கள், உஹதே என்று அழைத்திருந்தாலும் உஹத் மலையிடம் உதவி கேட்டு அழைக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் உஹதே என்று கூப்பிட்டதால் நாம் முஹ்யித்தீனே என்று கூப்பிடலாம் என்று வாதிடுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகும். இவர்களுக்குத் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் இருக்கின்றது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் உஹதை அழைத்ததாக ஆதாரம் காட்டும் இவர்கள் உஹதையே உதவிக்கு அழைக்கலாமே! அப்துல் காதிரை நபியவர்கள் அழைக்கவில்லை. உஹதைத் தான் அழைத்துள்ளார்கள். அப்படியானால் இருட்டில் அழைப்பதற்கு அப்துல் காதிரை விட உஹத் மலை மேலானதாகும் என்பது இவர்களின் வாதத்திலிருந்து புலப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் உஹதிடம் பேசியதால் உஹத் மலை செவியேற்கின்றது என்று இவர்கள் நம்புவதில்லை. ஆனால் செத்துப் போன முஹ்யித்தீன் செவியேற்பார் என்பதற்கு மட்டும் இதை ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் புரட்டு வாதத்தைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) உஹதைக் குறிப்பிட்டுப் பேசுவது இலக்கியமாகச் சொல்லப்பட்டதாகும். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,,, என்று சொன்னால் தென்றல் காற்றுக்குக் கேட்கும் ஆற்றல் இருக்கின்றது என்று நம்பி யாரும் சொல்வதில்லை. அருள்மிகு ரமளானே வருக என்று கூறுகின்றனர். இதனால் நாம் சொல்வதை ரமளான் கேட்கிறது என்று அர்த்தமில்லை. இவ்வாறு பேச்சு வழக்கில் சொல்லப்படுவதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் இங்கு உஹத் மலையிடம் பேசுகின்றார்கள்.

(ஏகத்துவம் டிசம்பர் 2012)
*********************************************************************************

இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?

சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர்,  சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் சிலவற்றிற்கு   சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.
மூன்றாவது ஆதாரம்?

"என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே'' என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 2:260)

/////இறந்த பறவைகளை அதன் பெயர் கூறி, மயிலே, புறாவே, கோழியே, காகமே என்று அழைத்ததால் ஷிர்க்கை எதிர்த்துப் போராடிய இப்ராஹீம் நபி ஷிர்க் வைத்து விட்டார் என்று கூறுவார்களா?///// 

இப்ராஹீம் நபி உதவி தேடும் நோக்கில் அழைக்கவில்லை; அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய அற்புதத்தைக் காண, அவனது கட்டளைப்படி அழைத்தார்கள் என பளிச்சென்று தெரியும் இந்த விஷயத்தை சம்பந்தமில்லாமல் பொருத்துகின்ற இவர்களின் புத்தியை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.

இப்ராஹீம் நபி செத்த பறவையை அழைத்துள்ளார்கள். சுலைமான் நபி உயிருள்ள பறவையை அழைத்துள்ளார்கள். இன்னும் பலவற்றையும் அழைத்துள்ளனர். இவை இறைத்தூதர் என்ற சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அழைத்ததாகும்.

இது இறைத்தூதர்களுக்கான சிறப்புத் தகுதி என்று இந்தக் கூறுகெட்டவர்களும் நினைப்பதால் தான் செத்துப் போன பறவைகளையும் பாம்பையும் பல்லியையும் உஹது மலையையும் இவர்கள் அழைப்பதில்லை. தாங்கள் எதை நம்பவில்லையோ அதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இங்கு அழைப்பவர்கள் உயர்வானவர்களாகவும், அழைக்கப்படுபவர்கள் ஆற்றல் குறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் அப்துல்காதிர் ஜீலானி செத்த பறவையைப் போன்றவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.

(ஏகத்துவம் டிசம்பர் 2012)

*********************************************************************************
மேலும் சில பதிவுகள் ..
  1. ஹுனைப் ரலி நபிகளாரின் பொருட்டால் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  2. பிலால் ரலி கபுரை முத்தமிட்டாரா ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  3. அபு அய்யூப் அழ அன்சாரி கபுரை முத்தமிட்டாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  4. அவுலியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  5. ஒரு நல்லடியாருக்கு பல கபுருகள்..! காண  இங்கே கிளிக் செய்யவும் 
  6. சிலைகள் வேறு சமாதிகள் வேரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. முஷ்ரிக்குகள் அன்றும் இன்றும் .!அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  8. ஷிர்க் என்றால் என்ன ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  9. உணவளிக்கும் அதிகாரம் நபிகளாருக்கு உண்டா  ? தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. ஜியாரத்தின் இன்றைய நிலை என்ன ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  11. மதுகபுக்கும் இமாமுக்கும் தொடர்பு உண்டா  ?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  12. கபுரின் மேல் சாயக்கூடது என்பது கபூர் கட்ட ஆதாரமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  13. இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
  14. அப்துல்காதர் வரமாட்டார் நிரூபிக்க நாங்க தயார் .! சவாலை எதிர் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  15. நபிகளாருக்கு உதவி செய்த மூசா நபி ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  16. கேட்கமாட்டார்கள் என்றால் சலாம் சொல்வது ஏன்?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  17. அல்லாஹ் காட்டிய உதாரணம் தவறாகுமா?அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்  

யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே

சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் இறந்தோர்களை வணங்கும் கூட்டத்தினர்,  சம்பந்தமில்லாத சில குர்ஆன் வசனங்களையும் பொய்யான தகவல்களையும் கொண்டு வந்து இறந்தவர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூசாமல் எழுதியுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடும் சிலவற்றிற்கு   சரியான விளக்கத்தை அறிந்துகொள்வோம்.
நான்காவது ஆதாரம்?

//// திருக்குர்ஆனில் யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளான். மலைகளை அழைப்பது கூடும் என்று திருமறையும் நபிமொழியும் கூறும்போது திருக்குர்ஆனைச் சுமக்க மறுத்த மலைகளையே அழைக்க அனுமதியிருக்கும் போது, திருக்குர்ஆனாகவே வாழ்ந்த மாபெரும் இறைநேசச் செல்வரின் பெயர் கொண்டு அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? /// 

அல்லாஹ் மலைகளை அழைக்கின்றான்; அழைத்து, செய் என்று கட்டளையிடுகின்றான். மலைகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவை அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். இது ஓர் அதிகார உத்தரவு.

முஹ்யித்தீனை உதவி கேட்டு அழைக்கும் அழைப்பும் அல்லாஹ்வின் அழைப்பும் ஒன்றா? ஒருபோதும் ஒன்றாகாது.

வானம், நெருப்பு, மலை உள்ளிட்டவைகளை அல்லாஹ் அழைத்துள்ளான். இங்கே அழைக்கப்படுவது அற்பமாகவும் அழைப்பவன் உயர்வாகவும் இருக்கும் நிலை உள்ளது. அப்துல் காதிர் எங்களை விட அற்பமானவர் என்று இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்; அல்லாஹ்வை பின்பற்ற கூடாது. அதாவது அல்லாஹ் செய்வதையெல்லாம் நானும் செய்வேன் என்று கூறக்கூடாது. அது சாத்தியமும் இல்லை என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

அல்லாஹ் அழைப்பதால் நானும் அழைப்பேன் எனக் கூரும் இந்தக் கூறு கெட்டவர்கள், அல்லாஹ் சாப்பிடுவதில்லை என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பார்களா? அல்லாஹ் மலஜலம் கழிப்பதில்லை; எனவே நாங்களும் மலஜலம் கழிக்க மாட்டோம் என்பார்களா?

அல்லாஹ் தூங்குவதில்லை; அவனுக்கு எந்தப் பலவீனமும் இல்லை. நாங்களும் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என இந்தக் கபோதிகள் சொல்வார்களா?

அல்லாஹ் சாக மாட்டான். இவர்களும் சாக மாட்டார்களா? இவர்கள் வணங்கும் அப்துல் காதிரே செத்துப் போய் விட்டாரே!

அல்லாஹ் படைப்பவன். இவர்களும் அல்லாஹ்வைப் போல் படைக்கப் போகிறார்களா?

செத்துப் போன அப்துல் காதிரை இதுவரை அல்லாஹ்வுக்கு இணையாக்கி வந்தனர். இப்போது தங்களையே அல்லாஹ்வுக்கு இணையாக்கி அல்லாஹ் செய்ததை நான் செய்வேன் எனக் கூறுகின்றனர். இதிலிருந்து இவர்கள் எத்தகைய கேடுகெட்ட கொள்கையில் இருக்கின்றார்கள் என்பதை விளங்கலாம்.

அத்துடன், திருக்குர்ஆனை மறுத்த மலைகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் குர்ஆனை அல்லாஹ் மலைக்குக் கொடுத்து அது மறுத்ததாக இவர்களுக்கு வஹீ வந்ததா என்று தெரியவில்லை. அல்லாஹ் தனது திருமறையில் மலைகள் மறுத்ததாகக் கூறவில்லை.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன் 59:21)

குறிப்பு;
33:72 வசனத்தில் குர் ஆனை ஏற்க மலைகள் மறுத்ததாக சொல்லப்படவில்லை. மாறாக அமானிதத்தை மறுத்ததாகத் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த அமானிதம் எது என்பதை அறிய
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/446-manithan-sumantha-amanitham-ethu/

************************************************************************************
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
  1. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  3. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்