"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

வஸீலாவினால் மழை பெய்ததா ?

எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!

இறந்துவிட்ட நல்லடியார்களின் பொருட்டால் வஸீலா தேடலாம் என்று கூறுபவர்கள் அதற்குச் சான்றாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.
அனஸ்(ர­) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும்போது உமர்(ர­), அப்பாஸ்(ர­)லி அவர்கள் மூலம்(அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய் (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக! என்று உமர்(ரலி­) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

நூல் : புகாரி(1010, 3710)

இந்த ஹதீஸில் இறந்து போன நல்லடியார்களையோ அல்லது மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது அவர்களுக்கு எதிரான கருத்தாகவே அமைந்துள்ளது .
அதாவது, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர். எனவேதான், அவர்களுடைய காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அவர்கள் முன்னின்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். மேலும், அவர்கள்தான் அதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவார்கள்.
அவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள் யாரும் நபி(ஸல்) அவர்களை வஸீலாவாகக் கொள்ளவில்லை.
இவர்கள் வாதப்படி, இந்த ஹதீஸ் தான் வசீலா தேடுவ்வதற்கு ஆதாரம் என்றால், சஹாபாக்கள் அனைவரும், ரசூல் (ஸல்) அவர்கள் இறந்த பின்னரும் கூட அவர்களையே அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இதி­ருந்தே இறந்துவிட்டவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களை வஸீலாவாகக் கொள்ளக் கூடாது என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின் உமர்(ரலி­) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த உமர்(ர­லி) அவர்கள் அப்பாஸ்(ர­லி) அவர்களை முன்னிருத்தி இறைவனிடம் மழைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
அப்பாஸ்(ர­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினராக இருந்ததால் உமர்(ரலி­) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருடைய விஷயத்தில் தனக்கு இருந்த மரியாதையின் காரணமாக அவர்களை முன்னிருத்தி இருக்கலாம்.
நாம் சிறந்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தோம் என்றால் அப்பாஸ்(ர­) அவர்களை விட உமர்(ரலி­) அவர்கள் தான் சிறந்தவர்களாவார். ஆனால், உமர்(ர­) அவர்கள் முன்னிருத்தப்படவில்லை. இதி­ருந்தே மகான்களை வஸீலாவாகக் கொள்ளலாம் என்ற வாதம் தவிடு பொடியாகிறது.
இதி­ருந்தே இந்த செய்திக்கும் இறந்தவர்களையோ மகான்களையோ வஸீலாவாகக் கொள்ளலாம் என்பதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனவே, வசீலா என்றால் நல்லறங்கள் தானே தவிர, வேறெந்த மகான்களோ, இறந்து போன நல்லடியார்களோ இல்லை என்பதை அவர்கள் வைக்கும் ஆதாரங்கள் மூலமாகவே தெளிவாக அறியலாம்.
மேலும் சில பயனுள்ள கட்டுரைகள்

ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம் என்று மதுகபு சொல்கிறதா ?

‘ஷாபி’ மத்ஹபின் சட்ட நூல் என்று அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நூல் “இஆனா” இந்நூலில் ஒரு தவறான சட்டம் எழுதப்பட்டுள்ளது

“கொஞ்சமாகக் கஞ்சா அபின் சாப்பிடலாம்; ஆனால் பாமரர்களுக்கு இதை சொல்லக் கூடாது” (அதாவது ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம்)

ஆலிம்கள் கன்ஞா அடிக்கலாம் பொதுமக்களுக்கு சொல்லக் கூடாது. ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று
فتح المعين بشرح قرة العين بمهمات الدين  வரக்கூடிய சட்டம்.

وخرج بالشراب ما حرم من الجامدات فلا حد فيها وإن حرمت وأسكرت بل التعزير ككثير البنج والحشيشة والأفيون ويكره أكل يسير منها من غير قصد المداومة ويباح لحاجة التداوي   (فتح المعين بشرح قرة العين بمهمات الدين – (4 ஃ 156)
(قوله: ويكره أكل يسير منها) أي من هذه الثلاثة، والمراد باليسير أن لا يؤثر في العقل، ولو تخديرا وفتورا، وبالكثير ما يؤثر فيه كذلك، فيجوز تعاطي القليل مع الكراهة، ولا يحرم، ولكن يجب كتمه على العوام لئلا يتعاطوا كثيره ويعتقدوا أنه قليل    (إعانة الطالبين) ஜ4 ஃ177ஸ

என்று ‘இஆனா’ வில் உள்ளதாக நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இப்படியெல்லாம் பல நூல்களில் சில தவறுகள் காணப்படுவதால், பரிசீலனை செய்தே எதையும் ஏற்க வேண்டும் என்று உணர்த்தி இருந்தோம்.

ஆனால்  அவர்கள் , ‘இஆனா’ என்ற நூலில் அவ்வாறு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆலிம்கள் கஞ்சா அடிக்கலாம்” என்று கூறப்படவே இல்லை என்று மறுக்கின்றார்.

நேரடியாக அவ்வாறு கூறப்படவில்லை. என்ற அவரது கூற்று ஏற்கத்தக்கதே! நாமும் , நேரடியாக அப்படிக் கூறப்பட்டிருப்பதாகக் கூறவில்லை. மறைமுகமாக அப்படிக் கூறப்பட்டுள்ளதாகவே கூட்டிக் காட்டுகிறோம்
நாம் எழுதிய வாசகத்தைக் கவனிக்கும் எவரும் இதை உணர முடியும்.

‘இஆனாவில் உள்ளதை அப்படியே மேற்கோள் குறிக்குள்(” “) உள்ளடக்கி விட்டு அதற்குப் பின் அடைப்புக் குறிக்குள் (அதாவது ஆலிம்கள் மட்டும் கஞ்சா அடிக்கலாம்) என்று இப்படி எழுதி இருந்தோம். அடைப்புக்குறிக்குள் போடப்படுவது நூலில் நேரடியாகக் கூறப்பட்டது அல்ல என்பதை யாவரும் அறிவர். மேலும் “அதாவது” என்ற விளக்கச் சொல்லையும், அதன் துவக்கத்தில் சேர்ந்திருந்தோம்.

மறைமுகமாகவும் இது கூறப்படவில்லை என்ற அவரது கூற்று சரியானதல்ல. நிச்சயமாக மறைமுகமாக இந்தக் கருத்து உணர்த்தப்படுகிறது.

“பாமர மக்களுக்கு இதை மறைப்பது வாஜிபு” என்றால் இதற்கு பொருள் என்ன? இது உணர்த்தும் கருத்து என்ன?
இந்தச் சட்டத்தை ஆலிம்கள் தங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன பொருள்?
சட்டம் என்பது எல்லோரும் தெரிந்து அதன்படி செயல் படுத்துவதற்குத் தானே! பொது மக்களுக்கச் சொல்லாது மறைக்க வேண்டும் என்று கூறினால், இந்தச் சட்டத்தை யார் செயல் படுத்த முடியும்?
கூடாது என்பது சட்டமானால், அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அல்லது அவரது கூற்றுப்படியும், அந்த வார்த்தையின் நேரடி மொழி பெயர்ப்புப்படியும், “மக்ரூஹுடன் கூடும்” என்றால் அதையாவது எல்லோருக்கும் சொல்ல வேண்டும். மார்க்கத்தின் சட்டம் அதுதான் என்று அவர்கள் கருதினால் அந்தச் சட்டத்தை ஒரு சாரார் மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு, பிறருக்குச் சொல்லக் கூடாது என்றால் அதற்கு நாம் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டதைத் தவிர வேறு என்ன பொருளிருக்க முடியும்?

“பாமரர்களுக்கு ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்” என்பதற்கான காரணத்தையும் அது நூலில் குறிப்பிடுகின்றார்கள். அதை மவ்லவி சாஹிப் அவர்களும் எழுத்தெழுதி இருக்கிறார்கள்.

பாமரர்களுக்கு இதைச் சொன்னால் கொஞ்சம் என்று எண்ணிக்கொண்டு அதிகமாகச் சாப்பிட்டு விடுவார்களாம். அதற்காகத் தான் பாமரர்களுக்குச் சொல்லக் கூடாதாம். மவ்லவி சாஹிப் அவர்களும் “இஆனாவில்” உள்ளதாக ஒப்புக் கொண்ட விஷயம் இது.

பாமரர்களுக்குச் சொன்னால், கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள் என்றால், கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு கொஞ்சமாகவே சாப்பிடக் கூடியவர்கள் யார்?
பாமரர்கள் தவிர மற்றவர்கள் தானே!
யார் இதை மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கிறார்களோ அவர்கள் தானே! எனவே மறைமுகமாக அந்தக் கருத்துக் கூறப்படவில்லை என்ற மவ்லவி சாஹிபின் கூற்று சரியானது அல்ல என்று கூறிக் கொள்கிறோம். அவரது அலசலை இத்துடன் நிறுத்திக் கொண்டால் நம்முடைய அலசலும் இத்துடன் நிறைவுபெற்றிருக்கும் ஆனால் அவர் அதே கட்டுரையில் இன்னொரு பிரச்சனையையும் எடுத்து வைக்கிறார்.

போதைப் பொருட்கள் ஹராம் என்றால் கஞ்சாவும், அபினும் ஹராமாகத் தானே இருக்க முடியும்?
மக்ரூஹுடன் கூடும் என்று எப்படி எழுதலாம்?
என்ற ஐயங்களை ‘பத்ஹுல் மூயீன்’ என்ற நூலை மேற்கோள் காட்டி, பின்வரும் கருத்தைக் கூறுகிறார்.

“புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸில் “போதை தரும் ஒவ்வொரு பானமும் ஹராம்” என்றே வந்துள்ளது. பானம் என்று ஹதீஸில் வந்துள்ளதால், பானத்தில் சேராத கஞ்சா அபின் போன்ற திடப்பொருள்கள் ஹராமாகாது. எனவே தான் மக்ரூஹ் என்று கூறுகின்றனர், என்ற கருத்தையும் அவர் தெரிவிக்கிறார்.

புகாரியிலும் முஸ்லிமுலும் இடம் பெற்றுள்ள பின் வரும் ஹதீஸில் போதை தரும் பானங்கள் ஒவ்வொன்றும் ஹராம் என்றே உள்ளது.

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் மவ்லவி சாஹிப் கூறுவதும், பத்ஹுல் முயீனில் உள்ளதாக அவர் கூறுவதும் ஏற்கத்தக்கதாக ஆகலாம். ஆனால், “முஸ்லிம்” நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பானங்கள் என்று குறிப்பிடப்படாமல் ஒவ்வொரு போதைப் பொருளும் ஹராம் என்றே வந்துள்ளது.

“போதை தரும் ஒவ்வொன்றும் மது தான். ஒவ்வொரு போதைப் பொருளும் ஹராம்தான்” என்று ஒவ்வொரு போதைப் பொருளையும் ஹராம் தான். என்று தானே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அபூதாவூதில் இடம் பெற்ற மற்றொரு ஹதீஸும் இதைத் தானே கூறுகின்றது.

இந்த ஹதீஸிலும் போதை தரும் ஒவ்வொன்றையும் தானே நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் போதை தரும் பொருட்கள், திடமானாலும், திரவமானாலும், கொஞ்சமானாலும், அதிகமானாலும் ஹராம் தான் என்பதே நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பாகும். நபி(ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமாக மக்ரூஹ் என்றோ , கூடும் என்றோ தீர்ப்பு வழங்க எவருக்கும் அதிகாரம் இல்லை

ஷிர்க் (இணைவைத்தல்) பரவியது எப்படி ?


பூமியில் எப்படி ஷிர்க் பரவியது என நீங்கள் சிந்தித்தால், நல்லடியார்கள் மீது கொண்ட அளவு கடந்த மரியாதையும், பக்தியும் அவர்களது அந்தஸ்துகளை பெரியளவிற்கு உயர்த்தியதுதான் இதற்குக் காரணம் என்பதை தெளிவாக உணர முடியும். நூஹ் (அலை)யின் சமுதாயத்தினர் அனைவரும் ஏகத்துவ வாதிகளாக இருந்தனர், அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காமல் அவனை மாத்திரம் வணங்கி வழிப்பட்டனர். பூமியில் எங்கும் அப்போது ஷிர்க் நிலைகொண்டு இருக்கவில்லை.

அவர்களிடையே ஐந்து நல்லடியார்கள் காணப்பட்டனர். அவர்கள், 'வுத், ஸுவாஉ, யஊஸ், யஊக், நஸ்ர்" அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள், மக்களுக்கு மார்க்கத்தை போதித்தார்கள். அவர்கள் இறந்து விட்ட பொழுது மக்கள் கவலை அடைந்தனர். வணக்க வழிபாடுகளை நமக்கு நினைவூட்டக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுமாறு நமக்கு ஏவக்கூடியவர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்று விட்டனர் எனக் கவலையோடு கூறினர்.

அவ்வேளை ஷைத்தான் அச்சமுதாயத்தவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்த ஆரம்பித்தான். அவர்களின் உருவங்களை சிலை வடிவில் அமைத்து உங்களது மஸ்ஜித்களுக்கு அருகில் நிறுத்தினால் அவர்களைக் காணும்போது வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ஓர் புத்துணர்வு ஏற்படும் எனச் சொன்னான். அவர்கள் ஷைத்தானுக்கு வழிப்பட்டார்கள்,

சிலைகளைச் அடையாளச்சின்னங்களாக, வணக்க வழிபாடுகளுக்கும் நல்ல காரியங்களுக்கும் எடுத்தார்கள். உண்மையிலே அவர்கள் அதை பார்க்கும் போது வணக்க வழிபாடுகள் செலுத்துவதற்குரிய ஞாபகம் அவர்களுக்கு ஏற்பட்டது. பல வருடங்கள் கழிந்தன, அந்தத் தலைமுறையினர் உலகத்தை விட்டுச் சென்று விட்டனர். அதற்கு பின் அவர்களது சந்ததிகள் உருவானார்கள், அவர்களது மூதாதையர்கள் அச்சிலைகளைப் புகழ்வதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்;. எனவே அவர்களும் அதை கண்ணியப்படுத்தினார்கள், பெருமைப்படுத்தினார்கள் அவர்களுக்கு, அச்சிலைகள் நல்லடியார்கள் எனச் சொல்லப்பட்டிருந்தது.

அதன் பின் அவர்களது சந்ததிகள் உருவானார்கள் அவர்களுக்கு இப்லீஸ் கூறினான், 'உங்களுக்கு முன் சென்றவர்கள் இதை வணங்கி வந்தனர். உங்களுக்கு ஏதாவது இன்னல்கள் சோதனைகள் வரும்போதும், தேவைகள் ஏற்படும் போதும் அவைகளை நாடுங்கள் அவைகளிடம் உதவி தேடுங்கள் அவைகளை வணங்குங்கள் என்று கூறினான். நூஹ் (அலை) அவர்களை அவர்களுக்கு இறைத் தூதராக அனுப்பப்படும் வரை அச்சிலைகளை வணங்கினர்

அவர்கள் 950 வருடங்கள், அவர்களை ஏகத்துவத்தின் பால் அழைத்தார்கள். எனினும் சொற்பனமானவர்களேயன்றி ஏனையோர் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் சாபமும் கோபமும் இறை நிராகரிப்பாளர்கள் மீது இறங்கியது. அவர்களை 'தூபான்" எனும் பெரும் வெள்ளத்தைக் கொண்டு அல்லாஹ் அழித்தான். இது நூஹ் நபியின் சமூகத்துக் ஏற்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையாகும்;.

இப்றாஹிம் நபியின் சமுதாயத்தில் எவ்வாறு ஷிர்க் பரவியது?
அவர்கள் நட்சத்திரங்களையும், தாரகைகளையும் வணங்கி வழிப்பட்டார்கள். உலகை அவைகள் ஆட்சி செய்கின்றன என்றும், கஷ்டங்களை போக்கக்கூடியன எனவும், பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியன எனவும், தேவைகளை நிறைவேற்றக்கூடியது எனவும் நம்பிவந்தனர்.

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் உள்ள இடைத்தரகர்களாக நட்சத்திரங்களை அவர்கள் எண்ணி வந்தனர். நிச்சயமாக உலகத்தின் ஆட்சி அனைத்தும் அவைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நினைத்தனர். பின் அவர்கள் நட்சத்திரங்கள் மற்றும் வானவர்கள் வடிவில் சிலைகளை அமைத்தனர்.

இப்றாஹிம் நபியின் தந்தை சிலைகளை செய்து தனது பிள்ளைகளிடம் விற்று வருவதற்காகக் கொடுப்பார். இப்றாஹிமும் சிலைகளை விற்பதற்கு செல்லக்கூடியவராக இருந்தார், இப்றாஹிம்

நபி அதை விற்கும் போது 'உங்களுக்கு எந்தத்தீங்கோ நன்மையோ செய்ய முடியாத இச்சிலைகளை வாங்குபவர் யார்? என்று கூறி விற்பனைசெய்தார்கள்.

மேலும் 'இதை வாங்குபவருக்கு இது எந்தத்தீங்கும் பயனும் அளிக்காது" என்றும் சொல்வார்.

அவரது ஏனைய சகோதரர்கள் அனைத்து சிலைகளையும் விற்று விட்டு வருவார்கள். இப்றாஹீமோ கொண்டு சென்ற சிலைகளோடு மீண்டும் வருவார். பின் அவரது தந்தையையும், சமுதாயத்தையும், சத்தியத்தின் பால் அழைத்தார்கள்.

இந்தச் சிலைகள் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில்லை என்று எடுத்துக் கூறி ஏகத்துவத்தை நிலைநாட்டினார்கள். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. பின்னர் சிலைகளை உடைக்கிறார்கள், அதன் காரணமாக அவரை நெருப்பில் இட்டு எறிக்க முனைந்தனர், ஆனால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைப் பாதுகாத்தான்.